வரையறுக்கப்பட்ட ஆஸ்க் ஊடக நிறுவனம்
வரையறுக்கப்பட்ட அஸ்க் மீடியா, குகநாதன் சபாபதி சுப்பையாவினால் 2008 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந் நிறுவனம் செய்மதி டான் நியூஸ், டான் தமிழ் ஒளி, டான் மியூசிக் எச் டி, யாழ் ரி வி, கல்வி ரி வி, ஓம் ரி வி, ஹோலி மேரி ரிவி மற்றும் பிறை ரி வி. போன்ற தொலைக்காட்சிககளை ஒளிபரப்புகின்றது.
இத் தொலைக்காட்சிகள் யாழ்ப்பாணம் கொழும்பு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் செயல்படுத்தப்படுகின்றன. ஜேம்ஸ் தாஸ் சவரிமுத்து ஆரம்ப உரிமையாளராக பதிவிடப்பட்டுள்ளபோதும், குகநாதன் சபாபதி சுப்பையா வரையறுக்கப்பட்ட அஸ்க் மீடியாவின் தற்போதைய உரிமையாளர் ஆவர்.
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்
வியாபாரத்துறை
தொலைக்காட்சி சேவை
தனி உரிமையாளர்
ஏனைய தொலைக்காட்சி நிலையங்கள்
டான் நியூஸ்
டான் தமிழ் ஒளி
டான் மியூசிக் எச் டி
யாழ் ரிவி
கல்வி ரிவி
ஓம் ரி வி
ஹோலி மேரி ரிவி
பிறை ரி வி
ஏனைய இணைய வெளியீடுகள்
http://www.dantv.tv/
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2008
நிறுவுனரின் ஈடுபாடுகள்
எஸ். குகநாதன் என்றும் அறியப்படும் குகநாதன் சபாபதி சுப்பையாதான் டான் டிவி க்கு சொந்தக்காரரான ஆஸ்க்
மீடியா பிரைவேட்லிமிட்டடின் ஸ்தாபகரும் CEO ம் உரிமையாளரும் ஆவார். அவர் 80 களின் பிற்பகுதியில்
பிரான்சுக்கு குடி பெயர்ந்து அங்கு வாராந்த செய்திப் பத்திரிகையான பாரிஸ் ஈழநாடு பத்திரிகையை
ஆரம்பிப்பதற்கு முன்னர் வட மாகாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் உப பத்திரிகை ஆசிரியராக இருந்தார். 90 களின் பிற்பகுதியில் பிரான்சைத் தளமாகக் கொண்ட முதலாவது தமிழ் மொழி தொலைக்காட்சி நிலையத்தைத் தொடங்குவதில் துணையாகவிருந்தார். அன்றிலிருந்து அவர் குறைந்தது வேறு நான்கு ஊடகக் கம்பனிகளில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்: டிஷ் ஏசியா லிமிட்டட் (2002 ஓகஸ்ட் 30 முதல் 2007 ஜுன் 26 வரை), டிஷ் இன்டர்நேஷனல் லிமிட்டட் (2003 மார்ச் 11 முதல் 2006 ஜுன் 13 வரை), டிஷ் ஏஷியா நெட்வேக் யூரோ லிமிட்டட் (2003 ஜுன் 13 முதல் 2006 ஏப்ரல் 11 வரை), மற்றும், ரெமினிசன்ட் ரெலிவிஷன் (யூரோப்) லிமிட்டட் (2000 செப்டெம்பர் 22 முதல் 2003 ஜுலை 22 வரை). இக் கம்பனிகள் தற்போது செயற்படாதபோதிலும், அவை ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
வரி / அடையாள இலக்கம்
PV65262
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
எஸ். குகநாதன் என்றும் அறியப்படும் குகநாதன் சபாபதி சுப்பையா டான் டிவி க்கு சொந்தக்காரரான ஆஸ்க்
மீடியா பிரைவேட் டிமிட்டடின் ஸ்தாபகரும் CEO ம் உரிமையாளரும் ஆவார்.
ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து - கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான அறிக்கையின்படி ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து நிறுவனத்தின் ஒரே பங்குதாரராகவும் ஆஸ்க் மீடியா (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் வியாபார நிறைவேற்று அதிகாரியாகவும் 2008 ம் ஆண்டு ஜூலை 22 ம் திகதி நியமிக்கப்பட்டார். இவர் எஸ். குகநாதனின் மனைவியின் மாமா. இவர் தற்போது உயிருடன் இல்லை.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
ஆஸ்க் மீடியா பிரைவேட் லிமிட்டின் 100 வீத பங்குகளையும் சவரிமுத்துவே வைத்திருப்பதாக பதிவுகள் காட்டுகின்றபோதும், நிறுவனத்துடன் தொலைபேசியில் உரையாடியபோது இதன் ஸ்தாபகர் குகநாதன் சபாபதி சுப்பையாவே தற்போதைய உரிமையாளர் என் விளக்கமளிக்கப்பட்டது. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 25 ஆந் திகதி ஆஸ்க் மீடியா பிரைவேட் லிமிட்டட்டினை அணுகியது. அனால் அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிகவில்லை.