சிலோன் நியூஸ்பேப்பேர்ஸ் பிரைவேட் லிமிட்டட்
சிலோன் நியூஸ்பெபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் அலெஸ் குடும்பத்திற்கு சொந்தமான வெளியீட்டு நிறுவனம். டிரான் அலெஸ் இந் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். 2011 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிலோன் டுடே நியூஸ்பெபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆங்கில பத்திரிகையாகிய சிலோன் டுடே பத்திரிகையை மற்றும் சிங்கள மொழி மவ்பிம பத்திரிகையை வெளியிடுகின்றது.
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
வியாபாரத்துறை
அச்சிடுதல், வெளியிடுதல்
தனி உரிமையாளர்
ஏனைய அச்சு நிறுவனங்கள்
சிலோன் டுடே (0.11%)
ஏனைய இணைய வெளியீடுகள்
http://www.mawbima.lk/
https://www.ceylontoday.lk/
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2011
நிறுவுனரின் ஈடுபாடுகள்
டிரான் அலெஸ் என்றும் குறிப்பிடப்படும் டிரான்பிரசன்ன கிறிஸ்டோபர் அலெஸ் 2005 இல் தனது செயற்பாட்டைத்
தொடக்கி விரைவில் மூடப்பட்ட ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் கீழ் 2006 ஆம் ஆண்டு
முதலில் மௌபிமவைத் தொடக்கினார். மௌபிமவின் வெளியீடு சிலோன் நியூஸ்பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின்
கீழ் 2011 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கியது.
டிரான் சிலோன் நியூஸ்பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஸ்தாபகரும் CEO உம் ஆவார். அவர் ஜனநாயக தேசிய
முன்னணியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினதும்
புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி அதிகார சபையினதும் (RADA) முன்னாள் தலைவருமாவார். 1988 இல் தொடர்பாடல்
வியாபார உபகரண (பிறைவேட்) லிமிட்டெட்டையும் 2005 ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டடையும்;
2011 இல்சிலோன் நியூஸ்பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டடையும் தொடக்கிய டிரான் ஒரு பிரபல வர்த்தகருமாவார்.
அலெஸ்சின் ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் முன்னைய அரசாங்கத்தினால் குறைகூறப்பட்டது. இது இவ்வெளியீட்டு நிலையம் மூடப்ப்படுவதற்கும்; பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் அலெஸும்
அப்பத்திரகையின் பல ஊழியர்களும் தடுத்து வைக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எல்லைகளற்ற நிருபர்கள், சுதந்திர ஊடக இயக்கம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன அரசாங்கத்தின் இச் செயல்களைக் கண்டித்தன.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
Ceylon Newspapers (Pvt) Limited
No. 101, Rosmead Place, Colombo 7
General: +94 117 566 566
Email : mbnews@ceylonnewspapers.lk
வரி / அடையாள இலக்கம்
PV8097
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
டி சி க தேவதந்திரியாராச்சிலகே - பணிப்பாளர் சபை உறுப்பினர்.
டிரான் பிரசன்ன கிறிஸ்டோபர் அலெஸ் - பணிப்பாளர் சபை உறுப்பினர், ஸ்தாபகர், CEO மற்றும் பங்காளர் - சிலோன் நியூஸ்பேப்பேர்ஸ் பிரைவேட் லிமிட்டட்
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
சிலோன் டுடே நியூபேபேர்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லை. அத்துடன், நிறுவனத்தின் பத்திரிகையினுடைய உத்தியோகபூர்வ இணையத்தளம் நிறுவனத்தின் ஸ்தாபகர், பணிப்பாளர் சபை மற்றும் நிறுவன கட்டமைப்பு பற்றிய எந்த தகவலையும் வழங்கவில்லை. அதனால், ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு, பங்காளர்கள் மற்றும் பணிப்பாளர் சபை பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த, இரண்டாம்தர தகவல் மூலங்களையும், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளையும் பயன்படுத்தியது. சிலோன் டுடே நியூபேபேர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் லிங்க்டின் முகக்குறிப்பு விபரம், இதன் ஆரம்பித்த வருடத்தை குறிப்பிடுகின்றது. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி சிலோன் டுடே நியூபேபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.