சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு
1979 ஏப்பிரல் 15 ஆந் திகதி ஒலிபரப்பைத் தொடங்கிய சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ஐரிஎன்)இலங்கையில் முன்னோடி தொலைக்காட்சி அலைவரிசையாகக் கருதப்படுகிறது. இவ் அலைவரிசைக்கு ஆரம்பத்தில் சொந்தக்காரராக இருந்த கம்பனியான ஐரிஎன் லிமிட்டட் 1979 ஏப்பிரலில் ஒரு தனியார் துறை கம்பனியாக தனது நடவடிக்கைகளைத் தொடங்கிய போதிலும், அது 1979 யூன் மாத 39/4 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் தேசியமயமயமாக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான ஒரு புதுக்கம்பனியாக அது இணைக்கப்பட்டதிலிருந்து அதன் 9,500,000 பங்குகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் திறைசேரிச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. இவ் அமைப்பு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகார வரம்பின் கீழ் வருகின்றது. ஐரிஎன் பிரதானமாக சிங்களமொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்கின்றது. அதன் சகோதர அலைவரிசையான வசந்தம் ரிவி தனது நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்புச் செய்கின்றது. 2017 ஆம் ஆண்டில் ஐரிஎன் 7.0 வீதமான பார்வையாளர் அடைவைக் கொண்டிருந்தது. அது ஒரு இருபது மணித்தியாலம் கொண்ட அட்டவணையின் அடிப்படையில் ஒளிபரப்புச் செய்வதோடு, செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், கல்வி நிகழ்ச்சிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரதானமாக சினிமா படங்கள் மற்றும் நாடகங்களை கொண்டிருக்கும் இறக்குதி செய்யப்பட்ட ஆங்கில மொழி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புச் செய்கின்றது.
தற்போது சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய இரு துறைகளை நிர்வகிக்கின்றது. சிங்கள மொழி தொலைக்காட்சி ஐ ரி என் அலைவரிசை 7 வீத பார்வையாளர்களையும், தமிழ் மொழி மூல தொலைக்காட்சி வசந்தம் 2 .4 வீத பார்வையாளர்களையும் கொண்டுள்ளது. ஐ ரி என் வானொலி 0 . 48 வீத நேயர்களையும், வசந்தம் எவ் எம் 1.6 வீத நேயர்களையும் கொண்டுள்ளன. பிரைம் தொலைக்காட்சி மற்றும் பிரைம் வானொலி என்பன செயல்பட்ட போதும், அவை 2011 ல் நிறுத்தப்பட்டன.
வியாபார வடிவம்
அரசுடையது
சட்ட வடிவம்
பொது நிறுவனம்
வியாபாரத்துறை
தொலைக்காட்சி, வானொலி சேவை
தனி உரிமையாளர்
திறைசேரியின் செயலாளர் சுயாதீன தொலைக்காட்சியின் 100 வீத பங்குகளை வைத்துள்ளார். இது நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் வருகின்றது.
ஏனைய வானொலி நிலையங்கள்
ஐ ரி என் எவ் எம் (0.48%)
வசந்தம் எவ் எம் (1.6%)
ஏனைய இணைய வெளியீடுகள்
http://www.itntv.lk/
http://www.vasantham.lk/
http://www.itnfm.lk/
http://www.vasanthamfm.lk/
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1979
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ஷான் விக்கிரமசிங்க எஸ்மன்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்கிரமசிங்க (கன்னிப்பெயர் விஜயவர்த்தன)
ஆகியோரின் மூத்தமகனாவார். இலங்கையின் தற்போதைய பிரதமந்திரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக)
தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவரது சகோதரராவார். ஷான் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பை (ஐரிஎன்) 1979 இல் ஸ்தாபித்தார். அக்காலத்தில் ஐரிஎன் தான் நாட்டில் இருந்த முதலாவது தனியார் தொலைக்காட்சி நிலையமாகுமென கூறப்படுகிறது. ஷானின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கையின் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாவார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் 1979 ஆம் ஆண்டு ஐரிஎன் அரசாங்கத்திற்குச் சொந்தமானதொரு சொத்தாக மாற்றப்பட்டது. ஷானுடைய தாய்வழி பாட்டனார் டி.ஆர்.விஜேவர்த்தன பின்னாளில் அசோசியேட்டட் நியுஸ் பேப்பர் ஒப் சிலோன் லிமிட்டட் (ANCL) ஆக மாறிய லேக் ஹவுஸ் பத்திரிகை குழுமத்தை தாபித்தார். தற்போது ஷான் ரிஎன்எல் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் வானொலி நிலையம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான டெல்ஷான் நெட்வேர்க்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
The Independent Television Network Limited
Wickramasinghepura, Battaramulla 10120
Tel: +94-11-2774424
Website: www.itn.lk
வரி / அடையாள இலக்கம்
N(PBS/CGB) 119
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
9.37 Mio $ / 1,429 Mio. LKR
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
-1.88 Mio. $ / - 287 Mio. LKR
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
சந்தான திலகரத்ன - சுயாதீன தொலைக்காட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி. சீன சர்வதேச வானொலியின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இணையமுன்னர், இவர், சத் எவ் எம் இல் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
விமல் ஸ்ரீகுமார கெட்டிப்பியராச்சி - சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்
அரந்தர கண்கணாமலகே டொன் டிமால் தனஞ்சய அரந்தர - சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்
விக்ரமசூரிய மஹாமலிமைப்பே நளின் அசங்க அப்போரோ - சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்
மெத்சிறி ஹேமகுமார காரியவம்ச பரணவிதான - லாதெரணவின் முன்னாள் தலைவர். BOC ட்ராவெல்ஸின் ஸ்ரீ லங்கா மற்றும் சீ னோர் பவுண்டேஷன் லிமிடெட்டின் தற்போதைய தலைவர்.
அப்புஹாமிலப்பே சுபாஷ் ப்ரியங்கர பின்னபோல - ஸ்தாபகர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி - ஸ்டோர்புக்
செலினா துலாஞ்சலி பீரிஸ் - முன்னாள் பிரதி பணிப்பாளர் - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், முன்னாள் ஆலோசகர் - UNIDO. தற்போதைய வணிக அபிவிருத்தி பணிப்பாளர் - செலின்
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு லிமிட்டட்டின் (ஐரிஎன்) உரித்தாண்மைக் கட்டமைப்பு அதன் வலைத்தளத்தில் தெளிவாக விபரிக்கப்படாததோடு, தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஆன சந்தன திலக்கரத்ன தொடர்பாக மிகக் குறைந்தளவு தகவல்களையே கொண்டிருக்கிறது. இதனிடையே அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை 2016 செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து 2017 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை 2015 சனவரியில் நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான விளம்பரங்களில் பல நடைமுறை ஒழுங்கீனங்கள் செய்யப்பட்டிருந்தன என்று வெளிப்படுத்தியது. உதாரணமாக ரூபா 101, 773, 058 /- பெறுமதியான ஒளிபரப்பு விளம்பரங்கள் ஒரு குறிப்பிட்ட சனாதிபதி பிரசாரத்திற்கு ஊக்குவிப்பளிப்பதற்காக கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் இவ் அலைவரிசையினால் ஊக்குவிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட சனாதிபதி தேர்தல் பிரசாரத்தை இவ் அறிக்கை வெளிப்படுத்தவில்லை. #
ஐரிஎன் இன் பங்குதாரர் கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. கிடைக்கும் மிக அண்மைய தகவல் 2017 ஆம் ஆண்டுக்குரியதாகும். மாற்றீடாக 2017 ஆம் ஆண்டிற்கான பாவனையாளர் பற்றிய தரவுகள் இலங்கைச் சந்தை ஆராய்ச்சிப் பணியகத்திடமிருந்து (LMRB) பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு லிமிட்டட்டை (ஐரிஎன்) அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.