லக்பிம நியூஸ்பேப்பேர்ஸ் (பிரைவெட்) லிமிட்டட்

முன்னதாக சுமதி நியூஸ்பேப்பர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் என்று அறியப்பட்ட லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் சிங்கள நாளிதழ் லக்பிம மற்றும் ஞாயிறு லக்பிம ஆகிய பத்திரிகைகளை வெளியிடுகிறது. லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் ஒரு துணைக் கம்பனியாக அதன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட் காதாரப்பராமரிப்பு, பதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், நிகழ்ச்சி முகாமைத்துவம், பைன் டைனிங் மற்றும் சினிமாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் துணைக் கம்பனிகளைக் கொண்டுள்ள ஒரு வர்த்தகக் குழுமமாகும். திலங்க சுமதிபாலவினால தாபிக்கப்பட்ட சுமதி நியூஸ்பேப்பர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் 1994 இல் ஞாயிறு பத்திரிகையை வெளியிடத் தொடங்கியது. அது 1.47 வீத வாசகர்களைக் கொண்டுள்ளது.
வாராந்த பத்திரிகைகுள்ள மிக உயர்ந்த கிராக்கி காரணமாக லக்பிம பத்திரிகை 0.25 வீத வாசகர்களைக் கொண்ட லக்பிம நாளிதழை 2000ஆம் ஆண்டு வெளியிடத் தொடங்கியது. எனினும், ஞாயிறு லக்பிமவும் லக்பிம நாளிதழும் இரண்டு வௌ;வேறு பததிரிகையாசிரியர் குழுக்களினால் வெளியிடப்படுவதோடு, இரண்டு வௌ;வேறு பத்திரிகைகளாக செயற்படுகின்றன. மேலும், ஆங்கிலம் பேசும் வாசகரகளன் தேவையைப் பூரத்தி செய்வதற்கு லக்பிம 2007 இல் லக்பிம நியூஸ் என்ற ஒரு ஆங்கில வாரப்பத்திரிகையை வெளியிடத் தொடங்கியது. தற்போது, லக்பிம நாளிதழும் ஞாயிறு லக்பிமவும் உள்நாட்டு, வெளிநாட்டு, விiளாட்டு மற்றும் களிப்பூட்டல் செய்திகளை வெளியிடுகின்றன. ஞாயிறு லக்பிம குடும்பப் பெண்கள் மற்றும் இளையோர், முதியோர் ஆகியோரை இலக்கு வைக்கும் றெஜினா உள்ளிட்ட பல சிறு பத்திரிகைகளையும் வெளியிடுகின்றது.
அரசியலில் முழுமையாகக் கவனஞ் செலுத்துமுகமாக திலங்க லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவர் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்ததோடு 2010 அக்கம்பனியின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் விலகிக்கொண்டார். திலங்கவின் சகோதரர் உனவட்டுவகே ஜகத் பிரிய அனுர சுமதிபால அக்கம்பனியின் தலைவர் பதவியையும் முகாமைத்துவப் பணிப்பாளர் பதவியையும் ஏற்றார். தற்போது அக்கம்பனி ஜகத் மற்றம் அவரது தாயார் வடு ஆராச்சிகே மிலினா சுமதிபால ஆகியோருக்குச் சொந்தமாக உள்ளது. மிலினா 2016 டிசெம்பரில்; காலமானபோதிலும், அக்கம்பனி அவரது பங்குகளை இன்னும் அவரது பெயரிலேயே வைத்திருக்கிறது. ஜகத்தும் அவரது மனைவி சமந்தா குமாரி சுமதிபாலவும் தற்போது லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
வியாபாரத்துறை
வெளியிடுதல்
தனி உரிமையாளர்
ஏனைய அச்சு நிறுவனங்கள்
ரெஜினா (0.25%)
சமதுரா
ஏனைய இணைய வெளியீடுகள்
https://www.lakbima.lk/
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1994
நிறுவுனரின் ஈடுபாடுகள்
திலங்க சுமதிபால என்றும் அறியப்படும் உடுவட்டுவகே ஜனத் பிரிய திலங்க சுமதிபால ஒரு பாராளுமன்ற
உறுப்பினராவார். அவர் 1994 இல் சுமதி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டைத் தாபித்தார். இக்கம்பனி
2008 இல் லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் என்று பெயர் மாற்றப்பட்டது. தனது அரசியல்
வாழ்க்கையை மேம்படுத்துமுகமாக அவர், லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளர்
சபையிலிருந்தும் அதன் தலைவர் பதவியிலிருந்தும் 2010 இல் இராஜிநாமாச் செய்தார். முன்னர் பின்வரும் பதவிகளை வகித்தமைக்காக அவர் நன்கறியப்பட்டவராக உள்ளார்: இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகர், முன்னாள் திறன்விருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி பிரதி அசைச்சர் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மற்றம் இலங்கைப் பத்திரிகைச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
Lakbima Newspapers (Pvt) Limited
No. 445/1, Sirimavo Bandaranaike Mawatha, Colombo 14
General: +94 11 242 6000, +94 11 242 6025
Fax: +94 11 234 3408
Email: info@lakbima.lk, daily@lakbima.news.lk
Website: www.lakbima.lk
வரி / அடையாள இலக்கம்
PV971
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
திலங்க சுமதிபால என்றும் அறியப்படும் உடுவட்டுவகே ஜகத் பிரிய திலங்க சுமதிபால லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றின் தற்போதைய தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி, மற்றும் பணிப்பாளர்.
சமந்தா குமாரி கருணாரத்ன - ஜகத்தின் மனைவி. சுமதி குளோபல் கொண்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளர். லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளர் சபை உறுப்பினர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
லக்பிம நியூபேபேர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அதன் உரிமையாண்மை தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களையே வழங்குகின்றது. அதேவேளை, இரண்டாம்தர தகவல் மூலங்கள், இதன் உரிமையாண்மை தொடர்பான போதுமான தகவல்களை வழங்கவில்லை. பங்குதாரர் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. கிடைக்கும் மிக அண்மைய தகவல் 2017 ஆம் ஆண்டுக்குரியதாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி லக்பிம நியூபேபேர்ஸ் இந்நிறுவனத்தை அணுகியபோதும் அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.