This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/28 at 11:23
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

நியூ உதயன் பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட்

நியூ உதயன் பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட்

இலங்கையின் வட பகுதியில் தமிழ் பத்திரிகை துறையில் முக்கியமான பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றாக உதயன் பத்திரிகை விளங்குகின்றது. இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 1986 ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை ஸ்தாபிக்கப்பட்டது. பலமுறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும், தொடர்ந்தும் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்தது. ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முக்கியமாக யாழ்ப்பாணம் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலும் உதயன் பத்திரிகை மாத்திரமே நாளாந்த வெளியீடுகளை தொடர்ந்திருக்கின்றது. இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களை இலக்காக கொண்டு இந்த நிறுவனத்தின் கீழ் உதயன் மற்றும் சுடர் ஒளி என இரண்டு பத்திரிகைகள் வெளிவந்தன. எனினும், சுடர் ஒளி தனது நடவடிக்கைகளை 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிறுத்திக் கொண்டது. லங்கா மார்க்கெட் ரிசேர்ச் பியூரோ (LMRB) மேற்கொண்ட கணக்கெடுப்பின் பிரகாரம் உதயன் 1.03 சதவீதம் வாசகர்களைக் கொண்டுள்ளது. தற்போது நியூ உதயன் நிறுவனம் சரவணபவன் குடும்பத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நிறுவனத்தின் 92.31 வீதமான பங்குகளை வைத்திருக்கின்றார். அவரது மனைவி யசோதை சரவணபவன் மீதமுள்ள 7.69 வீதமான பங்குகளை வைத்திருக்கின்றார். அவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கின்றார். அவர்களுடைய மகள் லக்ஷ்மி சரவணபவன் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி நிறுவனத்தின் இயக்குனர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார். அதே நாளில், அவர் துணை நிர்வாக இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் மூவருமே நிறுவனத்தின் பணிப்பாளர்களாக உள்ளனர். யசோதை சரவணபவனின் சகோதரன் நடேசபிள்ளை வித்தியாதரன் உதயன் மற்றும் சுடர் ஒளி பத்திரிகைகளின் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2009 ஆம் ஆண்டில் வித்தியாதரன் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், வித்தியாதரன் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவான இராணுவ துணைக்குழுக்களினால் அச்சுறுத்தப்பட்டும், கடத்தப்பட்டும் உள்ளார். உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது முதல் 37 தடவைகள் அதன் அலுவலகம் தாக்கப்பட்டதாக 2013 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்டுள்ளது. உதயன் பத்திரிகையின் ஊழியர்களான ராஜரத்தினம் ரஞ்சித்குமார், பாஸ்டியன் ஜோர்ஜ் சகாயதாசன் (சுரேஷ்குமார் என அறியப்பட்டவர்) சதாசிவம் பாஸ்கரன் மற்றும் செல்வராஜா ராஜிவர்ணம் உட்பட பலர் கொல்லப்பட்டனர். மேலும், ஞானசுந்தரம் குகநாதன் உட்பட பலர் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகினர். 2007 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட வடிவேலு நிர்மல்ராஜின் நிலைமை இதுவரை தெரியவில்லை. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னரும், 2013 ஆம் ஆண்டில் உதயன் பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் கிரௌன்ட்வியூஸ் உட்பட ஊடகத் தொடர்புடைய பல அமைப்புக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இலங்கை இராணுவம் உட்பட அரச அமைப்புக்கள் உதயன் பத்திரிகை உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளன. இலங்கை இராணுவத்தினர் மீது அவதூறு சுமத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாகக் கூறி 2013 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம் உதயன் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. அத்துடன், தேசிய பாதுகாப்பு சபை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல 2013 இல் உதயன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளக வேலை எனத் தெரிவித்திருந்தார்.

பிரதான விடயங்கள்

வியாபார வடிவம்

தனியாருடையது

சட்ட வடிவம்

வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்

வியாபாரத்துறை

வெளியிடுதல்

உரிமையாண்மை

தனி உரிமையாளர்

ஊடக நிறுவனங்கள்
Other Media Outlets

ஏனைய அச்சு நிறுவனங்கள்

ஞாயிறு சுடர் ஒளி (0.13%)

ஏனைய இணைய வெளியீடுகள்

https://newuthayan.com/

விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1986

நிறுவுனரின் ஈடுபாடுகள்

ஈஸ்வரபாதம் சரவணபவன், உதயன் பத்திரிகையின் ஸ்தாபகத் தலைவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். தற்போது, 92.31 வீதமான பஙகுகளைக் கொண்டுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு, பொருளாதார அபிவிருத்தி பற்றிய
துறைசார் மேற்பார்வைக் குழு, சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் பற்றிய துறைசார்
மேற்பார்வைக் குழு, சமூக வலுவூட்டல் மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய
நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிவுக் குழுவில் சரவணபவன்
பங்கேற்றுள்ளார்.

தொழிலாளர்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தொடர்பு

New Uthayan Publications (Pvt) Limited

No.361, Kasthuriyar Road, Jaffna

General: +94 21 567 9944

Fax: +94 21 222 9944

Web: newuthayan.com

வரி / அடையாள இலக்கம்

PV13725

நிதிசார் தகவல்கள்

வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

முகாமைத்துவம்

நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்

ஈ. சரவணபவன் என்றும் குறிப்பிடப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர். புதிய உதயன் வெளியீட்டு (பிறைவேட்) லிமிட்டெட்டின் ஸ்தாபகரும் தலைவருமாவார். அவர் தற்போது புதிய உதயன் வெளியீட்டு (பிறைவேட்) லிமிட்டெட்டில் 92.31 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். பாராளுமன்றத்தில் சரவணபவன் ஒழுக்கம் மற்றும் சிறப்புரிமைகள் மீதான பொறுப்புக்குழு, சுகாதாரம் மற்றும் மனித நலனோம்புகை மற்றும் சமூக வலுவூட்டல்மீதான பொறுப்புக் குழு பேண்தகு அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பாராளுமன்றத் தெரிகுழு ஆகியவற்றில் சம்பந்தப்பட்டுள்ளார்.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

புதிய உதயன் வெளியீட்டு (வரையறுக்கப்பட்ட) லிமிட்டெட்டிற்கு ஓர் உத்தியோகபூர்வ வலைத்தளம் இல்லை. உத்தியோகபூர்வ பத்திரிகை வலைத்தளப் பக்கம் அதன் தாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவனக் கட்டமைப்பு பற்றிய எவ்வித தகவல்களையும் வழங்குவதில்லை. ஆகையால், பகிரங்கமாகக் கிடைக்கும் இரண்டாம் நிலை மூலங்கள் மற்றும் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஆகியன உசாவப்பட்டன. கிடைக்கக்கூடியதாகவுள்ள மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டுக்குரியவையாகும். அவ்வப்போது ஒருசில தனிமனிதர்களின் பெயர்கள் எழுதப்படும் விதம் வேறுபட்டுக் காணப்படுகிறது. எடுத்துக் காட்டாக CEO வின் பெயர் யசோதா சரவணபவன் அல்லது அதற்கு மாற்றீடாக யசோதை சரவணபவன் என்று எழுதப்படுகிறது. அதேபோன்று ஈஸ்வரபாதத்தின் பெயர் ஈஸ்வர பாதம் என்று எழுதப்படுகிறது. பங்குதாரர்கள் பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெறப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 25 ஆம் திகதி புதிய உதயன் வெளியீட்டு (வரையறுக்கப்பட்ட) லிமிட்டெட்டை அணுகியபோதும் அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ