இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
இவ்வலைவரிசை 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தபனச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தினால் உத்தியோபூர்வமாகத் தாபிக்கப்பட்டது. ரூபவாஹினியின் முதலாவது தலைவரான மாப்பாதுங்க ஜேம்ஸ் பெரேரா இவ்வலைவரிசையின் ஸ்தாபகராகக் கௌரவிக்கப்படுகிரார். 1992 ல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் தொலைக்காட்சி சேவையில் முதலீட்டு செய்ய தனியாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது. 1982 ம் ஆண்டு 6 ம் இழக்க சட்டத்தின் கீழ் தனியார் தொலைக்காட்சி சேவைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இன் நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினம், தொலைக்காட்சி சேவை வழங்குநராகவும், ஏனைய தொலைக்காட்சி, சேவைகளை ஒழுங்குபடுத்தும் செயல்பாட்டையும் மேற்கொண்டது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அணைத்து பணிப்பாளர்களும் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நியமிக்கப்பட்டனர்.
தற்போது, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், ரூபவாஹினி, ஐ அலைவரிசை, நேத்ரா அலைவரிசை ஆகிய மூன்று தொலைக்காட்சி சேவைகளை நிர்வகிக்கின்றது.
சிங்கள மொழி ரூபவாஹினி அலைவரிசை, 4.3 வீத பார்வையாளர்களை கொண்டுள்ளது. ஐ அலைவரிசை, நேத்ரா அலைவரிசை ஆகியன, 3.2 வீத பார்வையாளர்களை கொண்டுள்ளன. என் ரிவி என்ற ஆங்கில அலைவரிசை 2009 லிருந்து 2015 வரை செயல்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்டது.
வியாபார வடிவம்
அரசுடையது
சட்ட வடிவம்
Public Enterprise/ Commerical Corporation
வியாபாரத்துறை
வானொலி சேவை
தனி உரிமையாளர்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் வருகின்றது.
இவ் அமைச்சு தகவல் திணைக்களம், சுயாதீன தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், அசோசியேட்டட் நியூஸ்பெபேர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட் இலங்கை பத்திரிகை சங்கம் என்பவற்றை மேல்பார்வை செய்கின்றது.
ஏனைய இணைய வெளியீடுகள்
http://www.rupavahini.lk/
http://www.channeleye.lk/
http://www.nethratv.lk/
ஊடக வியாபாரம்
ஊடக வியாபாரம்
தொலைக்காட்சி ஒளிபரப்பு | ரூபவாஹினி அலைவரிசை (100%) #
தொலைக்காட்சி ஒளிபரப்பு | ஐ / நேத்ரா அலைவரிசை (100%)
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1982
நிறுவுனரின் ஈடுபாடுகள்
1982 ம் ஆண்டு 6 ம் இலக்க ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் அரசாங்கம் ஸ்தாபித்தது
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
Sri Lanka Rupavahini Corporation
No. 2204, Torrington Square, Colombo 7
General: +94 11 250 1050, +94 11 599 506
Fax: +94 11 258 0929
Email: rupavahini@yahoo.com
Website: www.rupavahini.lk
வரி / அடையாள இலக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
14 Mio. $ / 2.139 Mio. LKR
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
-1.2 Mio. $ / -196 Mio. LKR
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
நவாஸ் மொஹமட் - செயல்பட்டு பணிப்பாளர் - இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
சாரங்க விஜேரத்ன - பொது முகாமையாளர், - பணிப்பாளர் சபை உறுப்பினர்-இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
சிதேன்ரா சேனாரத்ன - தலைவர் - தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் , பணிப்பாளர் சபை உறுப்பினர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
சித்தி மொஹமட் பாரூக் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக 2017 ல் நியமிக்கப்பட்டார். ஊடகத்துறையில் ஒரு வணிகராக இவர் வர்ணிக்கப்பட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைய முன்னர், இவர், பான் ஏசியா வங்கியின் CEO வாக பணியாற்றியுள்ளார். இவர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நிறுவன முகாமைத்துவம் பற்றிய மிகக் குறைவான தரவுகளே பதியப்பட்டுள்ளன. இதனால் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடாக தரவுகள் பெறப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான பாவனையாளர் பற்றிய தரவுகள் இலங்கைச் சந்தை ஆராய்ச்சிப் பணியகத்திடமிருந்து (LMRB) பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை. நிதி பெறுமதிகள் மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி கணிக்கப்பட்டன. (1 அமெ. டொலர் = ரூபா152,45).