உபாலி நியூஸ்பேப்பேர்ஸ் (பிரைவெட்) லிமிட்டட்
இது 1978 ம் ஆண்டு, ஆங்கில மொழி பத்திரிக்கையாகிய த ஐலண்ட் பத்திரிகை, சிங்கள மொழி பத்திரிகை திவயின பத்திரிகையை வெளியிடும் உபாலி நியூஸ்பெபேர்ஸ் பிரைவேட் லிமிடெட்டினால் உருவாக்கப்பட்டது. 1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, திவயின இரிதா சங்கரஹய மற்றும் சண்டே ஐலண்ட் ஆகியன 1981 ஆண்டே தொடங்கப்பட்டன. மேற்படி பத்திரிகைகளின் தினசரி வெளியீடுகள் 1983 ஆண்டு தொடங்கப்பட்டன. உபாலி விஜேவர்தன, மலேசியாவிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் வரும்போது காணாமல்போன நிலையில், அவர் இறந்துவிட்டதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர் இறந்தபின், மொத்த நிறுவன உரிமையும் அவரின் மனைவி லக்ஷ்மி ரத்வத்த வெல்கமவின் பெயரிற்கு மாற்றப்பட்டது.
தாய் நிறுவனம்
உபாலி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
வியாபாரத்துறை
வெளியிடுதல்; விமான சேவை; பயணம்; உணவு மற்றும் குளிர்பானங்கள்
தனி உரிமையாளர்
ஏனைய அச்சு நிறுவனங்கள்
தி ஐலண்ட் (0.13%)
சண்டே ஐலண்ட் (0.57%)
ரெஜினா (0.25%)
ஏனைய இணைய வெளியீடுகள்
https://www.island.lk/
https://www.divaina.com/
வியாபாரம்
நுகர்வோருக்கான தயாரிப்பு
உபாலி கொன்சுமர் ப்ராடக்ட் (100%)
வாகன வணிகம்
உபாலி மோட்டார் கம்பெனி (100%)
பயணம்
உபாலி ட்ரவல்ஸ் (4%)
இனிப்பு தின்பண்டங்கள்
சிலோன் சொக்கொலேட் (85%)
கூட்டுறவு நிறுவன சேவை
உபாலி மேனேஜ்மேண்ட் சேவிசெஸ் (100%)
விமான போக்குவரத்து
உபாலி ஏவியேஷன் சேவிசெஸ் (100%)
ஏர் கண்டிஷனிங் சேவை
உபாலி ஏர் கண்டிஷனிங் சேவிசெஸ் (100%)
நிதி
உபாலி இன்வெட்மெண்ட்ஸ் (100%)
உணவு மற்றும் குடிபானம்
உபாலி புட் அன்ட் பேவரேஜ்ஸ் (69%)
வெளியிடல்
உபாலி பப்ளிஷஸ் (100%)
சேவைகள்
உபாலி இன்டெப்ரைஸ் (79%)
விவசாயம்
உபாலி நேஸரீஸ் (23%)
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1978
நிறுவுனரின் ஈடுபாடுகள்
உபாலி விஜேவர்தன 1978 இல் உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டைத் தாபித்தார். 1981 இல் இக்கம்பனி திவயின மற்றும் ஐலண்ட் பத்திரிகைகளின் ஞாயிறு பதிப்பை ஆரம்பித்தது. உபாலியின் குடும்பத்திற்கு நாட்டின் ஊடகத் துறையுடன் மிக நெருக்கமாக தொடர்புபட்ட ஒரு நீண்ட வரலாறு உண்டு. உதாரணமாக உபாலியின் ஒன்றுவிட்ட சகோதரர் ரஞ்சித் விஜேவர்தன விஜே நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டை தாபித்ததோடு அதன் தற்போதைய தலைவராகவும் பணியாற்றுகிறார். 1983 இல் அவரது தனிப்பட்ட ஜெட் விமானம் மலேசியாவிலிருந்து சொந்த நாட்டை நோக்கி வந்த பயணத்தில் புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமற் போனபோது அவர் இறந்துவிட்டதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
Divaina Newspapers
No. 223, Bloemendhal Road, Colombo 13
Email: divaina@unl.upali.lk
Tel: +94 11 249 9750, +94 11 234 5243
Website: divaina.com/daily/
வரி / அடையாள இலக்கம்
PV8654
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
லக்மணி ரத்வத்த - அதி கூடிய பங்குகளை வைத்துள்ளவர். உபாலி பத்திரிகை குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைந்த Dr சீவாலி ரத்வத்தயின் புதல்வி.
நிமல் வீரசிறி வெல்கம - உபாலி பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர், பணிப்பாளர், லக்மணி ரத்வத்தயின் கணவர்.
அனுலா ஆட்டிகல - பணிப்பாளர் சபை உறுப்பினர்.
சுதமிக்க கெமிடா ஆட்டிகல - வியாபார ஊக்குவிப்பு பணிப்பாளர்
ஜூலியஸ் அசோகா டியூக் லைனரோல்லே - பணிப்பாளர் சபை உறுப்பினர்.
லஹிரு குணசேகர - பணிப்பாளர் சபை உறுப்பினர்.
தெஹிவலகே அந்தோணி லக்ஷ்மன் பெரேரா - பணிப்பாளர் சபை உறுப்பினர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
பங்குகள் பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருந்து பெறப்பட்டவை. உபாலி இன்வெட்மென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தொகுதி பங்காளர்களாகவுள்ள ஏனைய இணை நிறுவனங்களும் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் ஒன்றாக பதியப்பட்டுள்ளன. இந் நிறுவனங்கள் தங்களுக்கென இணையதளங்களை கொண்டிராத நிலையில், இவை எவ்வாறான தொழிலில் ஈடுபடுகின்றன என்பது தெளிவற்றதாகவுள்ளது.