விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டட்
![விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டட்](/uploads/_processed_/1/e/csm_13561-1360_company_import_174843a9a2.png)
விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டட் (முன்னர்- விஜய பப்ளிகேஷன்ஸ் லிமிட்டட்) 1979 ம் ஆண்டு
ரஞ்சித் சுஜீவ விஜேவர்தனவினால் ஸ்தாபிக்கப்பட்டது. இவர் மிகப் பிரபலமான ஊடக நிறுவன உரிமையாளர் டீ . ஆர் விஜேவர்தனவின் மகன். லங்காதீப இணையதளத்தை நடத்தும் விஜய நியூஸ்பெபேர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர். ஆனந்தி பாலசிங்கம் வைத்திருக்கும் இந் நிறுவனத்தின் பங்குகள் தவிர்ந்த ஏனைய பங்குகள் அனைத்தும் விஜேவர்தன குடும்பத்திற்கு சொந்தமானது. ரஞ்சித் சுஜீவ விஜேவர்தன அறியப்படும் அசோசியேட்டட் நியூஸ் பேர்ப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட் நிறுவனத்தின் (இது இவரது தந்தையின் நிறுவனம். இது 1973 ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது) தலைவராக பணியாற்றியுள்ளார். விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டட் சிங்கள தமிழ் ஆங்கில மொழி பத்திரிகைகளை வெளியிடுகின்றது. இரிதா லங்காதீப (1986), சண்ட டைம்ஸ் (1987), லங்கா தீப (1991), டெய்லி மிரர் (1999). இந் நிறுவனத்தின் ஏனைய வெளியீடுகள்: அத, பிழிந்து, டெய்லி பைனான்சியல் டைம்ஸ், கோ: கைஸ் ஒன்லி, ஹாய்!!, லங்கா வுமன், மிரர் ஸ்போர்ட்ஸ், பரிகனக, சிரிக்கத்த, தமிழ் மிரர், தருணய, விஜய் மற்றும் விஜய.
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
வியாபாரத்துறை
வெளியிடுதல்; தொலைக்காட்சி; வீடு வாங்கல் விற்றல்; சுற்றுலாத்துறை; பணியாளர் இணைப்பு சேவை
தனி உரிமையாளர்
ஏனைய அச்சு நிறுவனங்கள்
டெய்லி மிரர் (0.55%)
டெய்லி பைனான்சியல் (டெய்லி FT) (0.08%)
சிரிகதா (3.47%)
தருணயா (0.31%)
தேஷய (ஞாயிறு வெளியீடு) (0.22%)
விஜயா (5.95%)
பிலிந்து (தரவுகள் காணப்படவில்லை)
தமிழ் மிரர் (0.17%)
விஜெய் (1.03%)
கோ (கைஸ் ஒன்லி) (தரவுகள் காணப்படவில்லை)
ஹாய்! மகசின் (0.02%)
எல்.டபிள்யு (லங்கா வுமன்) (0.07%)
பரிகனக (0.23%)
ஈஸி கைட் (0.02%)
விஜய பிரைலி (தரவுகள் காணப்படவில்லை)
ஏனைய தொலைக்காட்சி நிலையங்கள்
ஹாய் ரி வி (தரவுகள் கிடைக்கவில்லை)
ஏனைய இணைய வெளியீடுகள்
dailymirror.lk
middleeast.lankadeepa.lk
saaravita.lk
ft.lk
ada.lk
sundaytimes.lk
kelimandala.lk
life.lk
hitv.lk
tamilmirror.lk
deshaya.lk
mirrorcitizen.lk
timesjobs.lk
mirroredu.lk
hitad.lklw.lk
educationtimes.lk
wijeya.lk
Tara.edu.lk
wedo.lk
வியாபாரம்
அச்சிடல், வெளியிடல்
ஸ்டாம்போர்ட் லெய்க் (பிரைவெட்) லிமிடெட்
லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
ரியல் எஸ்டேட் எல் எச் பிளான்டேஷன் (பிரைவெட்) லிமிடெட்
சுற்றுலாத்துறை
ரான்வெளி ஹொலிடேய் வில்லேஜ் லிமிடெட்
சாரதி டூர்ஸ் லிமிடெட்
மனிதவலு ஆள்சேர்ப்பு ஆலோசனை
சாரதி லிமிடெட்
தொழிநுட்பம்
விஜய கிராபிக்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1979
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ரன்ஜித் விஜேவர்தன என்றும் அழைக்கப்படும் ரன்ஜித் சுஜீவ விஜேவர்தன அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்(லேக் ஹவுஸ் என்றும் அறியப்படும் ANCL) 1973 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தினால் தேசியமயமாக்கப்பபடுவதற்கு முன்னர் 1926 இல் அதனை நிறுவியவரான இலங்கை ஊடக உரிமையாளர் டீ.ஆர். விஜேவர்தனவின் மகனாவார். ரஞ்சித் விஜய நியூஸ்பேப்பரஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபக தலைவராக செயற்படுவதோடுரூபவ் அதன் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருப்பவராகவும் உள்ளார். இக் கம்பனி விஜய பப்ளிகேஷன்ஸ் லிமிட்டெட் என்ற பெயரில் 1979 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதெனினும், 1986 லில் அது ஞாயிறு லங்காதீப வார பத்திரிகையையும் அதன் பின்னர் 1991 இல் லங்காதீப நாளிதழையும் வெளியிடத் தொடங்கியது. ரன்ஜித் ANCL இல் 0.57வீத பங்குகளையும் கொண்டிருக்கிறார். விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் தலைவர் பதவியை வகிப்பது மாத்திரமின்றி, ரன்ஜித் லேக்ஹவுஸ் பிறிண்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் லிமிட்டெட்டில் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும், லேக்ஹவுஸ் புக் ஷொப் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும், எல்எச் பிளாண்டேஷன் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும், ரன்வெளி ஹெலிடே வில்லேஜ் லிமிட்டெட்டில் தலைவராகவும், சாரதி லிமிட்டெட்டில் தலைவராகவும், ஸ்டேம்போட் லேக் (பிறைவேட்) லிமிட்டெட்டில் தலைவராகவும், விஜய கிராபிக் லிமிட்டெட்டில் தலைவராகவும் அத்துடன் இலங்கை பத்திரிகைச் சங்கத்தில் தலைவாராகவும் இருக்கிறார். ரஞ்சித் புரூயஅடன்பேக் எண்ட் கோ (சிலோன்) லிமிட்டெட்டினதும் ஆர்.எஸ். பிறிண்டெக் (பிறைவேட) லிமிட்டெட்டினதும் தலைவராகவும் உள்ளார்.
உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் ஸ்தாபகரான உபாலி விஜேவர்தன ரஞ்சித்தின் மாமனாவார். இதனிடையே இலங்கையின் தற்போதைய பிரதமந்திரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக) தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க ரஞ்சித்தின் மருமகனாவார்.
ரஞ்சித் விஜேவர்தன இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகவிருந்த டீ. எஸ் சேனாநாயக்கவின் பேத்தியான ரஞ்சித் நீலா சேனாநாயக்கவை மணமுடித்தார். ரஞ்சித்தின் ஏனைய குறிப்பிடத்தகுந்த குடும்ப உறுப்பினர்களுள் இலங்கையின் இரண்டாவது பிரதம மந்திரியான டட்லி சேனாநாயக்க (மாமனார்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க ஆகியோர் அடங்குவர். ரஞ்சித்திற்கு தற்போதைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் விஜேவர்தன குழுமத்தோடு இணைந்துள்ள ஒரு கம்பனியான லேக் ஹவுஸ் பிறிண்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் லிமிட்டெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சுஜான் விஜேவர்தன அடங்கலாக மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
Wijeya Newspapers Limited
No. 08, Hunupitiya Cross Road, Colombo 2
General: +9411 247 9479, +9411 231 4714
Fax: +94 11 244 8323
Website: wijeyanewspapers.lk
வரி / அடையாள இலக்கம்
104081486-7000
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
ரஞ்சித் விஜேயவர்தன என்றும் குறிப்பிடப்படும் ரஞ்சித் சுஜீவ ஜேயவர்தனதான் விஜேய பத்திரிகை லிமிட்டெட்டின் தலைவராவார் என்பதோடு அக்கம்பனியில் 89.99 வீத பங்குகளுக்குச் சொநதக்காரராவார். அவர் இலங்கைப் பத்திரிகைச் சங்கத்தின் தற்போதைய தலைவராவார். WNL இல் பங்குகளைக் கொண்டிருப்பதற்கு மேலதிமாக ரஞ்சித் அரசுக்குச் சொந்தமான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில்(ANCL) 0.57 வீத பங்குகளையும் கொண்டிருக்கிறார்.
சுஜான் விஜயவர்தன என்று குறிப்பிடப்படும் பராக்கிரம சுஜான் விஜயவர்தன விஜேய நியூஸ்பேப்பர் லிமிட்டெட்டில்
(WNL) பிரதி தலைவராக பணியாற்றுவதோடு அக் கம்பனியின் 10 வீத பங்குகளைக் கொண்டிருக்கிறார்.
எல் ஜயவர்தன - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர் - விஜேய நியூஸ்பேப்பர் லிமிட்டெட்.
சிறிசேன ரணசிங்க - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர் - விஜேய நியூஸ்பேப்பர் லிமிட்டெட்.
டல்சின் விஷ்ராஜித் குணதுங்க - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர் - விஜேய நியூஸ்பேப்பர் லிமிட்டெட்.
களு ஆராச்சிகே டொன் ரன்தேவ் சனா சமரசிங்க - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர் - விஜேய நியூஸ்பேப்பர் லிமிட்டெட்
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
விஜய நியூஸ்பேபேர்ஸ் லிமிடெட் மற்றும் அதன் வெளியீட்டகங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் அவற்றின் நிறுவன கட்டமைப்பு பற்றிய தகவல்களையோ முக்கிய நபர்கள் பற்றிய தகவல்களையோ கொண்டிருக்கவில்லை. ஆகவே இரண்டாம் தர தகவல் மூலங்களிலிருந்தும், நிறுவனம் வழங்கிய தகவல்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. நிறுவன கட்டமைப்பு பற்றிய தகவல்கள், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் மீள் உறுதிசெய்யப்பட்டன. கிடைக்கும் மிக அண்மைய தகவல் 2017 ஆம் ஆண்டுக்குரியதாகும். இருந்தபோதும், கம்பனிகள் பதிவாளர் திணைக்களம், தனிநபர் விபரங்களை பேணாதவகையில், விஜய நியூஸ்பேபேர்ஸ் லிமிடெட் உடன் இணைந்த நிறுவனங்களை இனம்காண முடியாதுள்ளது. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு 2018 ஆகஸ்ட் 17 ல் பதிலளித்தது.