அலெஸ் குடும்பம்
சிலோன் டுடே மற்றும் மவ்பிம பத்திரிகைகளை வெளியிடும் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனம் அலெஸ் குடும்பத்திற்கு சொந்தமானது. டிரான் அலெஸ் என அழைக்கப்படும் டிரான் பிரசன்ன கிறிஸ்டோபர் அலெஸ் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைவர். அவர் 49.99 வீதமான பங்குகளை வைத்துள்ளார். ஜனநாயக தேசிய முன்னணியின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர் டிரான். அப்போஜி ஹோல்டிங்ஸ் மீதமுள்ள 49.99 வீத பங்குகளைக் கொண்டுள்ளது. அப்போஜி ஹால்டிங்ஸ் இலங்கையின் பெருநிறுவனங்களுக்கு வியாபார ரீதியிலான தீர்வுகளை வழங்கும் நிறுவனம். தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, சக்தி மற்றும் ஆற்றல், கட்டிடத்துறை என பலதுறைகளில் அவர்கள் சேவைகளை வழங்குகின்றனர். அப்போஜி ஹோல்டிங்ஸ் டிரான் மற்றும் அவரது சகோதரர் ரமந்த அலெஸ் ஆகியோருக்குச் சொந்தமானது. அவர்கள் இருவரும் 50 வீத சரிசம பங்குகளைக் கொண்டுள்ளார்கள். எனினும், டிரானுடைய சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் அப்போஜி ஹோல்டிங்ஸ் இணைந்த பங்குகளை கருதும் போது சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தில் டிரான் 75 வீதமான பங்குகளைக் கொண்டுள்ளார். சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு அதிகாரசபையின் முன்னாள் தலைவராக டிரான் இருந்துள்ளார். 1988 ஆம் ஆண்டில் கொமியூனிக்கேஷன் பிஸினஸ் ஈக்குயிப்மென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை ஆரம்பித்தார். 2005 இல் ஸ்டான்டர்ட் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் 2011 இல் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களையும் ஆரம்பித்தார். டிரான் பிரபல வர்த்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய ஸ்டார்ண்டர்ட் நியூஸ்பேப்பர் நிறுவனம் முன்னாள் அரசாங்கத்தின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானதுடன், பத்திரிகை நிறுவனமும் மூடப்பட்டது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் அலெஸ் மற்றும் பத்திரிகை ஊழியர்கள் தடுத்துவைக்கப்பட்டனர். எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் கிரௌன்ட்வியூஸ் உட்பட ஊடகத் தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
வியாபாரம்
கல்வி
கெட்வெய் குரூப்
சேவை
அபோஜி ஹோல்டிங்ஸ்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
ரமந்த அலெஸ் - டிரான் அலெஸின் மகன். அபோஜி ஹோல்டிங்சின் நிறைவேற்று பணிப்பாளர். இதில் இவர் 50 வீத பங்குகளை வைத்துள்ளார்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
சிலோன் நியூஸ்பெபேர்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லை. உத்தியோகபூர்வ செய்தித்தளம் இதன் ஸ்தாபகர், பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் உள்ளது நிறுவன அமைப்பு பற்றிய தரவுகளை வெளியிடவில்லை. பொதுவில் காணப்படும் இரண்டாம்தர தகவல் மூலங்கள் இங்கு பயன்படுத்தப்பட்டன. தகவல்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்தும் பெறப்பட்டன. 2018 ஜனவரி 20 ல் MOM குழு நிறுவனத்திடம் தகவல் கோரியது. அனால், நிறுவனம் பதில் தரவில்லை.