கிருஷ்ணமூர்த்தி குடும்பம்
கிறிஸ்னமூரத்தி குடும்பம் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் 20.63
வீதத்திற்குக் கூட்டாக சொந்தக்காரராக உள்ளது. கே.ஆர். ரவீந்திரன் என்றும் குறிப்பிடப்படும் கிறிஸ்னமூர்த்தி
ரட்னம் ரவீந்திரன் 15.22 வீத பங்குகளகை கொண்டிருப்பதோடு பிறிண்டகெயார் பிஎல்சீ இன் இணை ஸ்தாபகரும்
முகாமைத்துவ பணிப்பாளருமாவார். ரவீந்திரனுக்கு அச்சு மற்றும் பொதியிடல் கைத்தொழிலில் நாற்பது வருட
அனுபவம் உண்டு. மேலும் 2015 – 2016 காலப்பகுதியில் ரவீந்திரன் ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற
நிறுவனமான சர்வதேச றொட்டரி கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய முதலாவது இலங்கையரானார். முன்னதாக ரவீந்திரன் சர்வதேச றொட்டரி கழகத்தின் பணிப்பாளராகவும் பொருளாளராகவும் றொட்டரி மன்றத்தின் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் ஆற்றிய நற்பணிகளுக்காக அவருக்கு றொட்டரி மன்றத்தின் விருது இளம் பிள்ளை வாதமற்ற ஓர் உலகு என்பதற்காக சிறப்பு சேவை விருது மற்றும் சேவை விருது ஆகியன வழங்கப்பபட்டன. ரவீந்திரன் இலங்கையில் மிகப்பெரிய போதைப் பொருள் போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனமான இலங்கை போதைப்பொருள் எதிர்ப்புச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவருமாவார். 2017 இல் இலங்கை அரசாஙகத்தினால் அவருக்கு சிகாமணி விருது வழங்கப்பட்டது.
ரவீந்திரன் வானதி ரவீந்திரனை திருமணஞ் செய்தார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரவீந்திரனின் மகன் கிறிஸ்னா ரவீந்திரன் தற்போது பிறிண்ட்கெயார் பிஎல்சியில் பொது முகாமையாளராகப் பணியாற்றுவதோடு
எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் 0.68 வீத பங்குகளைக் கொண்டிருக்கிறார்.
ரவீந்திரன் பிறிண்ட்கெயார் இந்தியா (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் வெரோன் மீடியா சேவிசஸ் (பிறைவேட்)
லிமிட்டெட் ஆகியவற்றில் ஒரு பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
.
கிறிஸ்னமூர்த்தி ரட்னம் ரவீந்திரனின் சகோதரராகிய மனோ கிறஸ்னமூர்த்தி மனோகரன் எக்ஸ்பிறஸ்
நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் 4.42 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரராவார்
என்பதோடு தற்போது பிறிண்ட்கெயார் இந்தியா (பிறைவேட்) லிமிட்டெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளராகப்
பணியாற்றுகிறார். அவர் வெரோன் மீடியா சேவிசஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் ஜிஎம்ஐ சௌத் ஏசியா
(பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றின் ஒரு பணிப்பாளருமாவார்.
வியாபாரம்
அச்சிடல், பொதியிடல்
ப்ரின்கேர் பி எல் சி
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
கிருஷ்ணமூர்த்தி ரட்ணம் ரவீந்திரன் - பிரிண்ட்கேர் பி எல் சி யின் இணை ஸ்தாபகர், முகாமைத்துவ பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி. 2015 – 2016 காலப்பகுதியில் ரவீந்திரன் ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற
நிறுவனமான சர்வதேச றொட்டரி கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய முதலாவது இலங்கையரானார். முன்னதாக ரவீந்திரன் சர்வதேச றொட்டரி கழகத்தின் பணிப்பாளராகவும் பொருளாளராகவும் றொட்டரி மன்றத்தின் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கிருஷ்ணா ரவீந்திரன் - பிறிண்ட்கெயார் பிஎல்சியில் பொது முகாமையாளராகப் பணியாற்றுவதோடு
பிறிண்ட்கெயார் இந்தியா (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் வெரோன் மீடியா சேவிசஸ் (பிறைவேட்)
லிமிட்டெட் ஆகியவற்றில் ஒரு பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
மனோ கிருஷ்ணமூர்த்தி மனோகரன் - ரவீந்திரனின் சகோதரர். பிறிண்ட்கெயார் இந்தியா (பிறைவேட்) லிமிட்டெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளராகப்
பணியாற்றுகிறார். அவர் வெரோன் மீடியா சேவிசஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் ஜிஎம்ஐ சௌத் ஏசியா
(பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றின் ஒரு பணிப்பாளருமாவார்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
வீரகேசரி பத்திரிகை மற்றும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின்
உத்தியோகபூர்வ வலைத்தளம் அப்பத்திரிகையின் ஸதாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவன கட்டமைப்பு ஆகியனபற்றிய எவ்வித விபரங்களையும் தருவதில்லை. எனவே, இரணடாம் நிலை மூலங்களும் கம்பனியினால் வழங்கப்பட்ட பதில்களும் இவ்வாராய்ச்சி நடைமுறையின்போது உசாத்துணைகளாகப் பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டேர்ன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அவை வீரகேசரியின் வார மஞ்சரி மற்றும் நாளிதழ் ஆகியவற்றின் தொகையாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பதிலளித்தது.