நிஹால் செனவிரத்ன எப்பா
நிஹால் செனவிரத்ன எப்பா, அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் CEO, பணிப்பாளர், மற்றும் பங்குதாரர். இதன் மற்றைய பங்குதாரர் ஈ பி ஏ ஹோல்டிங்ஸ் லிமிடெட். இவர் அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 38.67 வீத பங்குகளை வைத்துள்ளார். ஈ பி ஏ ஹோல்டிங்ஸ் லிமிடெட் 61.33 வீத பங்குகளை வைத்துள்ளது. எப்படியிருப்பினும் நிஹால்தான் ஈ பி ஏ ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தனிப் பங்காளர். ஆக, அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட்டின் தனி உரிமையாளர். 2011 ல், நிஹால் மற்றும் நெத் எவ் எம் இன் பணிப்பாளர் மில்ரோய் பீரிஸ் ஆகியோர், லெக் ஏசியா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சங்க காஞ்சனா வாசலா லியனகே ஆகியோருக்கு எதிராக தங்களை அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளராக வர இடையூறு விளைவித்ததாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிஹால் செனவிரத்ன எப்பா, இலங்கையின் வெளிநாட்டு கொள்கை பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். இவர் இலங்கையின் இளம் வணிகர் அமைப்பின் இரு அங்கத்தவர்.
வியாபாரம்
சேவைகள்
எப்பா ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிடெட் (100%)
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
நிறுவன உரிமையாளர் பற்றுய தகவல்கள் குறைவாகவே காணப்படுகின்றது. நிறுவன பங்குதாரர்களின் விபரங்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலுள்ள ஆண்டு வருமான பட்டியலிலிருந்து பெறப்பட்டன. 2017 ம் ஆண்டு பிந்திக்கிடைத்த தரவாகும். 2018 ஜனவரி 25 ல் MOM குழுவினர் அசெட் ரேடியோ ப்ரொட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் தகவல் கோரியது. அனால், நிறுவனம் பதில் தரவில்லை.