ராஜமகேந்திரன் குடும்பம்
கெப்பிட்டல் மஹாராஜா மற்றும் அதன் அனைத்து துணை நிறுவனங்களும் ராஜமகேந்திரன் குடும்பத்திற்கு சொந்தமானது. கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் ஸ்தாபர்களில் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரம் அவர்களின் மகன் ராஜேந்திரம் ராஜமகேந்திரன். ஆர்.ராஜமகேந்திரன் சிறிய அளவிலான பங்குகளை மாத்திரமே கெப்பிட்டல் மஹாராஜாவில் நேரடியாகக் கொண்டுள்ள போதும், அவரும் அவரது மகன் சசிதரன் ராஜமகேந்திரனும் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மூலமாக நிறுவனத்தின் பங்குகளை தக்க வைத்துள்ளனர். கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் ஆர்.ராஜமகேந்திரன் 79.95 வீதமான பங்குகளையும், சசிதரன் ராஜமகேந்திரன் 20.05 வீதமான பங்குகளையும் கொண்டுள்ளனர். கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தில் 1.10 வீதமான நேரடிப் பங்குகளைக் கொண்டுள்ளது. கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டுள்ள எஸ் - லோன் இன்டஸ்ரியல் பிளாஸ்ரிக்ஸ், எஸ்-லோன் லங்கா, ஹரிசன்ஸ், ஐ.சி.எல் மார்க்கெட்டிங் மற்றும் ஏ.எவ் ஜோன்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் உட்பட பல நிறுவனங்களின் பங்குகளை கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் தன்வசம் கொண்டுள்ளது. கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் உட்பட பல நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ள சசிதரன் ராஜமகேந்திரன் கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக உள்ளார். குடும்பத்தில் உள்ள மேலும் பலரும் நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர். ராஜந்திரம் ராஜமகேந்திரனின் மனைவி குழுமத்தின் ஒரு நிறுவனமான ரூமர்ஸ் அழகுநிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக உள்ளார். இதேவேளை, ராஜமகேந்திரனின் மகள் அஞ்சலி ராஜமகேந்திரன் குழுமப் பணிப்பாளராக உள்ளார். ராஜேந்திரம் மஹாராஜா மற்றும் பத்மா மஹாராஜாவின் மகன் பிரதீப் மஹாராஜாவும் குழுமப் பணிப்பாளராக உள்ளார்.
வியாபாரம்
பிளாஸ்டிக்ஸ்
எஸ் லோன் லங்கா (பிரைவெட்) லிமிடெட்
எஸ் லோன் இண்டஸ்ட்ரியல் லங்கா (பிரைவெட்) லிமிடெட்
எஸ் லோன் லியர் லங்கா (பிரைவெட்) லிமிடெட்
பி ஈ ப்ளஸ் (பிரைவெட்) லிமிடெட்
தேயிலை
ஜோன்ஸ் எஸ்ப்போர்ட்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிடெட்
ஹரிசன்ஸ் கொழும்பு (பிரைவெட்) லிமிடெட்
ரசாயனம்
ஹரிசன்ஸ் கெமிக்கல் (பிரைவெட்) லிமிடெட்
ஹர்க்ரோஸ் கெமிக்கல் (பிரைவெட்) லிமிடெட்
பொதியிடல்
ரூபிளைன் லிமிடெட்
இலத்திரனியல்
கேவில்டன் எலெக்ட்ரிக்கல் ப்ரொடக்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
பர்சனல் கேர்
ஐ சி எல் மாக்கெட்டிங் (பிரைவெட்) லிமிடெட்
இன்டெர்னசனல் கொஸ்மெட்டிக்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
ஐ சி ரி
கொம்பியூட்டர் சிஸ்டெம்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
சேவை
ஹரிசன்ஸ் ஷிப்பிங் (பிரைவெட்) லிமிடெட்
கனிக் கிரியேஷன்ஸ் இன்டெர்னஷனல் (பிரைவெட்) லிமிடெட்
ப்ரொஜெக்ட்
த மகாராஜா ஓர்கனைசேஷன் (ப்ரொஜெக்ட்) லிமிடெட்
என்டெர்டெய்ன்மெண்ட்
ஸ்டெய்ன் ஸ்டூடியோஸ்
மகாராஜா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
அக்குரியஸ் (பிரைவெட்) லிமிடெட்
தெரியவில்லை
கப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
டோசன் கப்பிட்டல் லிமிடெட்
ஜோன்ஸ் ஓவர்சீஸ் லிமிடெட்
மகாராஜா
முகாமைத்துவம்
மகாராஜா இன்ஸ்டிடியூட் ஒவ் மேனேஜ்மென்ட் (பிரைவெட்) லிமிடெட்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
ராஜேந்திரம் ராஜமகேந்திரன் - கெப்பிட்டல் மகாராஜா ஒகனைசேஷன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் உரிமையாளர். இவர், சசிதரன் ராஜமகேந்திரனுடன் இணைந்து கெப்பிட்டல் மகாராஜா ஒகனைசேஷன் லிமிடெட்டின் பங்குதாரரான ஏனைய நிறுவனங்களின் உரிமையாளராகவுள்ளார். ராஜேந்திரம் ராஜமகேந்திரன் மஹாராஜா குழுமத்தின் பல நிறுவனங்களின் பணிப்பாளராகவுள்ளார்.
சசிதரன் ராஜமகேந்திரன் - ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மகன் - கெப்பிட்டல் மகாராஜா ஒகனைசேஷன் லிமிடெட்டின் பணிப்பாளர். பணிப்பாளர் - டப்லைன் லிமிடெட் மற்றும் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட். கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் இவருக்கும் ராஜேந்திரம் ராஜமகேந்திரனுக்கும் சொந்தமானது.
அருண் பிரதீப் மகாராஜா - ராஜேந்திரன் மகாராஜாவின் மகன், ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மருமகன். கெப்பிட்டல் மகாராஜா ஒகனைசேஷன் லிமிடெட் மற்றும் இலங்கை மேச்சன்ட் வங்கியின் (MBSL) பணிப்பாளர்.
அஞ்சலி சுஜாதா ராஜேந்திரன் - ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மகள். கெப்பிட்டல் மகாராஜா ஒகனைசேஷன் லிமிடெட்டின் பணிப்பாளர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் இணையதளங்கள் இவைகளின் நிறுவன கட்டமைப்புக்கள் பற்றிய விபரங்களை அதிகம் வெளியிடவில்லை. தலைவர் ராஜேந்திரம் ராஜமஹேந்திரன் சில இடங்களில், கிளி மகாராஜா அல்லது ஆர் ராஜமஹேந்திரன் என அழைக்கப்படுகின்றார். இப்பெயர்கள் வெவ்வேறான எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. நிறுவன பங்குதாரர்களின் விபரங்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலுள்ள ஆண்டு வருமான பட்டியலிலிருந்து பெறப்பட்டன. 2017 ம் ஆண்டு பிந்திக்கிடைத்த தரவாகும். 2018 ஜனவரி 20 ல் MOM குழு நிறுவனத்திடம் தகவல் கோரியது. அனால், நிறுவனம் பதில் தரவில்லை.