சரவணபவன் குடும்பம்
தமிழில் வெளியாகும் உதயன் மற்றும் சுடர் ஒளி பத்திரிகைகளை வெளியிடும் நியூ உதயன் பத்திரிகை
சரவணபவன் குடும்பத்திற்கு சொந்தமானது. எனினும் 2018 ஆம் ஆண்டில் சுடர் ஒளி பத்திரிகை
வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. ஈஸ்வரபாதம் சரவணபவன் அல்லது ஈ.சரவணபவன் நியூ உதயன்
பத்திரிகையின் ஸ்தாபகத் தலைவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும்
உள்ளார். தற்போது, 92.31 வீதமான பஙகுகளைக் கொண்டுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில்
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு, பொருhளாதார அபிவிருத்தி பற்றிய
துறைசார் மேற்பார்வைக் குழு, சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் பற்றிய துறைசார்
மேற்பார்வைக் குழு, சமூக வலுவூட்டல் மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய
நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழுவில் சரவணபவன்
பங்கேற்றுள்ளார். ஈ.சரவணபவனின் மனைவி யசோதை சரவணபவனுக்கு 7.69 வீதமான பங்குகள் உள்ளது. தற்போது அவர் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக உள்ளார். அதேவேளை,
அவர்களுடைய மகள் லக்ஷ்மி சரவணபவன் நிறுவனத்தின் பணிப்பாளராக 2016 டிசம்பர் 20 ஆம் திகதி
நியமிக்கப்பட்டார். அன்றைய தினமே துணை முகாமைத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
நிறுவனத்தின் பணிப்பாளர்களாக சரவணபவன் குடும்பம் மாத்திரமே உள்ளது.
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
ஈஸ்வரபாதம் சரவணபவன் - வரையறுக்கப்பட்ட புதிய உதயன் வெளியீட்டகத்தின் ஸ்தாபகர், ஆரம்ப தலைவர். இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். 92 . 31 வீத வாக்குகளை வைத்துள்ளார். நிறுவன பணிப்பாளர் சபையின் உறுப்பினர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
நியூ உதயன் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட்டிற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லை.உதயன் நியூஸ்பெபேர்ஸ் இன் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதன் ஸ்தாபகர், பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் உள்ளது நிறுவன அமைப்பு பற்றிய தரவுகளை வெளியிடவில்லை. பொதுவில் காணப்படும் இரண்டாம்தர தகவல் மூலங்கள் இங்கு பயன்படுத்தப்பட்டன. தகவல்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்தும் பெறப்பட்டன.