சில்வா குடும்பம்
ரெய்ன சில்வா இலங்கையின் ஒளிபரப்புத்துறையில் ஒரு பிரபலமான வர்த்தகராவார். அவர் நாட்டில் வானொலி வலையமைப்புகளின் மிகப் பெரியவற்றுள் ஒன்றாக விளங்கும் ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு கீழ் உள்ள ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டின் தலைவராவார். இவர் ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவேட்) லிமிட்டட்டின் பங்குகளை வைத்துள்ளார். அத்துடன் சிங்கப்பூரின் நவநாகரிக அடையாளமான ரஓல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள வைட் லோட்டஸ் பஷன் (பிரைவேட்) லிமிட்டட்டின் பங்குகளையும் வைத்துள்ளார். ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவேட்) லிமிட்டட், ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதின் தனிஉடைமையாகும். இதற்கு முன்னர், ரெய்ன சில்வா, சர்வதேச விளம்பர ஸ்தாபனத்தின் இலங்கை கிளையின் தலைவராக பணியாற்றினார்.
வியாபாரம்
வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பு
வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (100%)
http://ஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிடெட் (99. 9%)
நவ நாகரிக உடை
வைட் லோட்டஸ் பஷன்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
இணையதள வடிவமைப்பு
லோட்டஸ் டெக்னாலஜிஸ் (பிரைவெட்) லிமிடெட்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
விசென்ட் சில்வா - ரெய்னர் சில்வாவின் சகோதரர். ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி.
டிலினி சில்வா - ரெய்னர் சில்வாவின் இளைய சகோதரி. முகாமைத்துவ பணிப்பாளர் - வைட் லோட்டஸ் பஷன் பிரைவேட் லிமிடெட்.
துமிந்த சில்வா - ரெய்னர் சில்வாவின் சகோதரர். துமிந்த சில்வா, மறைந்ந பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். 2018 ம் ஆண்டு 11 ம் திகதி உச்ச நீதிமன்றம் துமிந்த சில்வாவினால் செய்யப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மேல் முறையீடு செய்தார்
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
ரெய்ன சில்வா பற்றிய அதிகமான தகவல்கள் ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மற்றும் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டின்உத்தியோகபூர்வ இணையதளங்களில் இருந்து பெறப்பட்டன.
நிறுவன பங்குதாரர்களின் விபரங்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலுள்ள ஆண்டு வருமான பட்டியலிலிருந்து பெறப்பட்டன. 2017 ம் ஆண்டு பிந்திக்கிடைத்த தரவாகும். 2018 ஜனவரி 20 ல் MOM குழுவினர் நிறுவனத்திடம் தகவல் கோரியது. அனால், நிறுவனம் பதில் தரவில்லை.