விஜேவர்தன குடும்பம்

விஜேவர்தன குடும்பம் இலங்கையின் ஊடக துறையில் மிக நீண்ட வரலாற்றை கொண்டது. 1926 ல் அசோசியேட்டட் நியூஸ் பேர்ப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட் (ஏ.என்.சி.எல்) நிறுவனத்தை ஆரம்பித்த டி. ஆர் விஜேவர்தனவின் காலத்திலிருந்து இந்த வரலாறு ஆரம்பித்தது. இவர் இலங்கை சுதந்திர இயக்கத்தின் முக்கியஸ்தராக கருதப்படுகின்றார். இவரது மகன் ரஞ்சித் விஜேயவர்தன என்றும் குறிப்பிடப்படும் ரஞ்சித் சுஜீவ விஜேயவர்தனதான் விஜேய பத்திரிகை லிமிட்டெட்டின் தலைவராவார். இவர் முன்னர், அசோசியேட்டட் நியூஸ் பேர்ப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட் (ஏ.என்.சி.எல்) 1973 ல் தேசியமயமாக்கப்படும்வரை அதன் தலைவராக இருந்தார். இவரின் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் பதவிகளில் இருக்கிறார்கள். உதாரணமாக, தற்போதைய இலங்கையின் பிரதமர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க. இவர் ரஞ்சித் விஜேயவர்தனவின் மருமகன். தற்போதைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, ரஞ்சித் விஜேயவர்தனவின் மகன். இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன ரஞ்சித் விஜேயவர்தனவின் மருமகன்.
வியாபாரம்
அச்சிடல், வெளியிடல்
ஸ்டாம்போர்ட் லெய்க் (பிரைவெட்) லிமிடெட்
லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
ரியல் எஸ்டேட் எல் எச் பிளான்டேஷன் (பிரைவெட்) லிமிடெட்
சுற்றுலாத்துறை
ரான்வெளி ஹொலிடேய் வில்லேஜ் லிமிடெட்
சாரதி டூர்ஸ் லிமிடெட்
மனிதவலு ஆள்சேர்ப்பு ஆலோசனை
சாரதி டூர்ஸ் லிமிடெட்
தொழிநுட்பம்
விஜய கிராபிக்ஸ் (பிரைவெட்) லிமிடெட்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
ரஞ்சித் சுஜிவ விஜேவர்தன அல்லது ரஞ்சித் விஜேவர்தன என் அறியப்படும் இவர் விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் தலைவராக செயற்படுகின்றார். இவர் இந்த நிறுவனத்தின் 89.99 வீத பங்குகளை வைத்துள்ளார். இவர் தற்போது இலங்கை பத்திரிகை சமூகத்தின் தலைவராகவும் செயற்படுகின்றார். அத்துடன், அசோசியேட்டட் நியூஸ்பெபேர்ஸ் சிலோன் லிமிடெட்டின் 0 .57 வீத பங்குகளை வைத்துள்ளார்.
பராக்கிரம சுஜான் விஜேவர்த்தன – (சுஜான் விஜேவர்த்தன என அறிய்படுபவர்) விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் உப தலைவராவுள்ளதுடன் இந் நிறுவனத்தின் 10 வீத பங்குகளின் உரிமையாளர்
டினேந்திரா ருவான் விஜேவர்த்தன – (ருவான் விஜேவர்த்தன என அறிய்படுபவர்) சுஜான் விஜேவர்த்தனவின் சகோதரர். தற்போதைய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர். இவர், விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் தலைவரின் ஆலோசகராகவும் தனிப்பட்ட உதவியாளராகவும் செயற்படுகின்றார். இவர், விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் 0.002 வீத பங்குகளின் உரிமையாளர்
ரஞ்சினி நீலா சேனநாயக்க (ரஞ்சினி சேனநாயக்க) ரஞ்சித்தின் மனைவி. இவர் விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் 0 .002 வீத பங்குகளை வைத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க - ரஞ்சித் விஜேவர்தனவின் மருமகன். தற்போதைய இலங்கை பிரதமர்.
ஷான் விக்ரமசிங்க - ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர். தலைவர் - டெல்ஷான் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
விஜய நியூஸ்பெபேர்ஸ் லிமிடெட்டின் உரிமையாண்மை பற்றிய தகவல்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டன. விஜய நியூஸ்பெபேர்ஸ் லிமிடெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தனிநபர்கள் பற்றிய தகவல்கள் அதிகம் காணப்படாத காரணத்தால், இரண்டாம்தர தகவல் மூலங்கள் பயன்படுத்தப்பட்டன. 2018 ஜூலை 20 ல் MOM குழுவினர் விஜய நியூஸ்பெபேர்ஸ் லிமிடெட்டிடம் தகவல் கோரியது, நிறுவனமும் 2018 ஆகஸ்ட்17 ல் பதிலளித்திருந்தது.