பத்திரிகை
நாட்டின் மிகப்பழைய ஊடகமாக அச்சு ஊடகம் விளங்குகின்றது. தற்போது இலங்கையில் 20 க்கும் மேற்பட்ட தினசரி பத்திரிகைகளும், சுமார் 50 வார மற்றும் 30 மாதாந்த வெளியீடுகளும் உள்ளன.
நாட்டில் 100 க்கும் மேற்பட்ட அச்சிடப்பட்ட பிரசுரங்கள் இருந்தும், வாசகர்களின் பங்களிப்பு நான்கு செய்தி நிறுவனங்களிடையே மையப்படுத்தப்பட்டுள்ளது: விஜய பத்திரிகைகள் லிமிடெட் அசோசியேட்டட் பத்திரிகைகள் சிலோன் லிமிடெட் (ANCL/லேக் ஹவுஸ்) மற்றும் உபாலி செய்தி பத்திரிகை (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சிலோன் பத்திரிகைகள் (பிரைவேட்) லிமிடெட். ANCL ஒரு அரசுக்குச் சொந்தமான ஊடக அமைப்பாகும், மற்றொன்று தனிப்பட்ட முறையில் சொந்தமாக உள்ளது. அதில் ஒன்று அரசுக்குச் சொந்தமான ஊடக அமைப்பாக இருக்கும் நிலையில் மற்ற மூன்றும் தனியாருக்கு சொந்தமானதாக உள்ளன.பத்திரிகைகள் பதிவு செய்ய மற்றும் செய்தித்தாள் உள்ளடக்கத்தை கண்காணிக்கும் அதிகாரத்தை அரசு1973 ஆம் ஆண்டின்,சட்ட இலக்கம் 5 ன் கீழ் நிறுவப்பட்ட இலங்கை பத்திரிகை பேரவையின் (SLPC) மூலம் பெற்றுக்கொண்டமையால், அரசு அச்சுத்துறையின் உரிமையாளாராகவும் அதை கட்டுப்படுத்தும் ஒரு சக்தியாகவும் செயலாருக்கிறது.