டான் தொலைக்காட்சி

வரையறுக்கப்பட்ட அஸ்க் மீடியா குகநாதன் சபாபதி சுப்பையாவினால் 2008 ம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்டது. இது பல தமிழ் மொழி அலைவரிசைகளை செயல்படுத்துகின்றது. டான் நியூஸ், டான் தமிழ் ஒளி, டான் மியூசிக் எச் டி, யாழ் ரிவி, கல்வி ரிவி, ஓம் ரி வி, ஹோலி மேரி ரிவி மற்றும் பிறை ரி வி என்பன. இவை யாழ்ப்பாணம், கொழும்பு, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கின்றன.
நுகர்வோர் வீதம்
தரவுகள் கிடைக்கவில்லை.
உரிமையாண்மையின் வகை
தனியார்
பிராந்திய உள்ளடக்கம்
வரையறுக்கப்பட்ட ஆஸ்க் ஊடக நிறுவனம்
உள்ளடக்கத்தின் வகை
பிராந்திய / சர்வதேச
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
வரையறுக்கப்பட்ட ஆஸ்க் ஊடக நிறுவனம்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
13563
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் வேண்டுகோளின் பின் கிடைக்கின்றன
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2008
நிறுவுனரின் ஈடுபாடுகள்
எஸ். குகநாதன் என்றும் அறியப்படும் குகநாதன் சபாபதி சுப்பையாதான் டான் டிவி க்கு சொந்தக்காரரான ஆஸ்க் மீடியா பிரைவேட் டிமிட்டடின் ஸ்தாபகரும் CEO ம் உரிமையாளரும் ஆவார். அவர் 80 களின் பிற்பகுதியில் பிரான்சுக்கு குடி பெயர்ந்து அங்கு வாராந்த செய்திப் பத்திரிகையான பாரிஸ் ஈழநாடு பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு முன்னர் வட மாகாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் உப பத்திரிகை ஆசிரியராக இருந்தார். 90 களின் பிற்பகுதியில் பிரான்சைத் தளமாகக் கொண்ட முதலாவது தமிழ் மொழி தொலைக்காட்சி நிலையத்தைத் தொடங்குவதில் துணையாகவிருந்தார். அன்றிலிருந்து அவர் குறைந்தது வேறு நான்கு ஊடகக் கம்பனிகளில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்: டிஷ் ஏசியா லிமிட்டட் (2002 ஓகஸ்ட் 30 முதல் 2007 ஜுன் 26 வரை), டிஷ் இன்டர்நேஷனல் லிமிட்டட் (2003 மார்ச் 11 முதல் 2006 ஜுன் 13 வரை), டிஷ் ஏஷியா நெட்வேக் யூரோ லிமிட்டட் (2003 ஜுன் ௧௩ முதல் 2006 ஏப்ரல் 11 வரை), மற்றும், ரெமினிசன்ட் ரெலிவிஷன் (யூரோப்) லிமிட்டட் (2000 செப்டெம்பர்; 22 முதல் 2003 ஜுலை 22 வரை). இக் கம்பனிகள் தற்போது செயற்படாதபோதிலும், அவை ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
எஸ். குகநாதன் என்றும் அறியப்படும் குகநாதன் சபாபதி சுப்பையாதான் டான் டிவி க்கு சொந்தக்காரரான ஆஸ்க்
மீடியா பிரைவேட் டிமிட்டடின் ஸ்தாபகரும் CEO ம் உரிமையாளரும் ஆவார்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
தரவுகள் கிடைக்கவில்லை
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து - கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான அறிக்கையின்படி ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து நிறுவனத்தின் ஒரே பங்குதாரராகவும் ஆஸ்க் மீடியா (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் வியாபார நிறைவேற்று அதிகாரியாகவும் 2008 ம் ஆண்டு ஜூலை 22 ம் திகதி நியமிக்கப்பட்டார். இவர் எஸ். குகநாதனின் மனைவியின் மாமா. இவர் தற்போது உயிருடன் இல்லை. #
லீ ஷின் மே - 2013 மார்ச் மாதம் 21 ம் திகதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தொடர்பு
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தரவுகள் மீதான தகவல்கள்
டான் டிவி மற்றும் ஆஸ்க் மீடியா (பிரைவெட்) லிமிட்டட் தொடர்பாக மிகக் குறைவான தகவல்களே கிடைக்கக்கூடியதாக உள்ளது. டான் டிவியின் உத்தியோகபூர்வ வலைத்தளம் அலைவரிசைகளின் பட்டியல் ஒன்றை வழங்குகின்றது. எனவே, இவ் அலைவரிசையின் உரித்தான்மை பற்றிய விபரங்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. இறுதி வருடாந்த ரிட்டன் ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து என்பவரே அதன் ஒரேயொரு பங்குதாரராக பட்டியலிட்டுள்ளபோதிலும், எஸ் குகநாதனைத் தொடர்புகொண்டதன்பேரில் MOM ஆய்வுக்குழு ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து இப்போது அதன் உரிமையாளர் அல்ல என்று அறிந்துகொண்டது. ஆகையால், தற்போது அதன் உரிமையாளர் டான் டிவி யின் ஸ்தாபகரான எஸ். குகநாதன் ஆவார். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 25 ஆந் திகதி ஏஎஸ்கே மீடியா (பிறைவேட்) லிமிடேட்டை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. குகநாதனுடனான ஒரு தொலைபேசி உரையாடலின்போது, அக் கம்பனி தாபிக்கப்பட்ட காலத்தில் தான் பிரெஞ் பிரசா உரிமையை கொண்டிருந்தமையினால், அவருக்க இலங்கையில் ஒரு ஊடக நிறுவனத்தை சொந்தமாக ஸ்தாபிக்க முடியவில்லை எனக் கூறப்பட்டது. குகநாதன் தற்போது இரட்டை பிரஜா உரிமையை கொண்டிருக்கின்றார்.