This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/20 at 06:07
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

தெரண தொலைக்காட்சி

இலங்கையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு கைத்தொழிலுக்கு ஒரு புதிய பிரவேசமான தெரண டிவி 2005 இல் ஒளிபரப்பைத் தொடங்கியது. LMRB ஆய்வின்படி, 2017 இல் தெரண டிவி தான் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசையாகும். அதன் ஆரம்ப கட்டங்களில் 5 மணித்தியால நிகழ்ச்சிகளையே இவ் அலைவரிசை நடாத்தியது. தற்போது தெரண டிவி சிங்களமொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. இந்நிகழ்ச்சிகளுள் செய்திகள், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் சமய நிகழ்ச்சிகள் ஆகியன அடங்குகின்றன. தெரண டிவி பவர் ஹவுஸ் லிமிட்டட் நிறுவனத்தின் ஒரு துணை கம்பனியான தெரண மக்ரோ என்டடேய்மண்ட் (பிரைவேட்) லிமிட்டட்டினால் நிருவகிக்கப்படுகின்றது. இணை ஸ்தாபகர்களான ஜயவீர மற்றும் வருணி அமுனுகம ஆகியோர் பவர் ஹவுஸ் லிமிட்டட்டின் பெரும்பான்மையான பங்குகளைக்   கொண்டிருக்கின்றனர்.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

19.50%

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

தெரண மக்ரோ என்டெர்டெய்ன்மெண்ட் (பிரைவெட்) லிமிட்டட்

உள்ளடக்கத்தின் வகை

தேசிய

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

பவர் ஹவுஸ் லிமிடெட்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

13551

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

குழுமம் / தனி உரிமையாளர்

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

Free to air

நிறுவுனர்

இலவசம் சேவை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

பிரபல தொழில்முயற்சியாளர் டிலித் ஜயவர்தன மற்றும் விஞ்ஞான, தொழிலநுட்ப, ஆராய்ச்சி, திறன் விருத்தி, வாழ்க்கைத் தெரிழில் பயிற்சி மற்றும் கண்டிய மரபுரிமை அமைச்சர் சரத் அமனுகமவின் மகளான வருனி அமுனுகம பெர்ணான்டோ ஆகியோர் பவர் ஹவுஸ் லிமிட்டெட்டிறகுச் சொந்தமான தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட்டை கூட்டாக தாபிததனர். தற்போது, தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட் தெரன டீவீ யையும் எப்எம் தெரனவையும் பராமரிக்கின்றது. டிலித்தும் வருனியும் ஆரம்பத்தில் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் எனும் விளம்பர நிறுவனத்தோடு தமது வர்த்தக முயற்சியைத் தொடங்கினர். 1993 இல் தாபிக்கப்பட்ட இந்நிறுவனம் நாட்டின் முதலாவது உள்நாட்டு விளம்பர நிறுவனமாக உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டுரூபவ் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேட்பினை ஆதரிக்கும் பிரசார இயக்கத்தை நடத்தியமைக்காக பிரசித்தமடைந்தது. ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தைத் தாபித்து, டிலித்தும் வருனியும் 2003 இல் கூட்டிணைக்கப்பட்டு முன்னதாக பவர் ஹவுஸ் (பிறைவேட்) லிமிட்டெட் என்று அழைக்கப்பட்ட பவர் ஹவுஸ் லிமிட்டெட் மற்றும் 2008 இல் கூட்டிணைக்கப்பட்ட தெரன மெக்றோ எண்டர்டெயின்மெண்ட் (பிறைவேட்) லிமிடடெட் போன்ற ஊடகத்தோடு தொடர்புபட்ட வேறு பல வியாபார முயற்சிகளையும் தொடங்கினர். அவரது துணைக்கம்பனிகளில் ஒன்றான இமேஜ்வைஸ் இவ் ஓட்டலின் கணிசமான பங்குகளளைக் கொள்வனவு செய்தபின்னர், ஜயவீர 2010 ஓகஸ்ட் மாதம் றீப்கோம்பர் நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஒக்டோபரில், றீப்கோம்பர் சைட்ரஸ் லெசர் பிஎல்சீ ஆக மீள் பெயரிடப்பட்டதோடு, தற்போது மூன்று இடங்களில் – ஹிக்கடுவ, வஸ்கடுவ மற்றும் கொழும்பு – ஹோட்டல்களைக் கொண்டிருக்கிறது. ஜயவீர இன்று சைட்ரஸ் லெசர் பிஎல்சீ நிறுவனத்தில் ஒரு பணிப்பாளராக இருக்கிறார். 2001 இல், ஜயவீரவும் இன்னமொரு பிரபல வர்த்தகரான நிமல் பெரேராவும் ஜோர்ஜ் ஸ்டூவர்ட் எண்ட் கம்பனி லிமிட்டெட்டின் கிட்டத்தட்ட 43 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்தபின்னர் அதன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டனர். பணிப்பாளர் சபையின் தலைவராக அல்லது ஓர் உறுப்பினராக இருக்கும் ஜயவீர தற்போது ஜோர்ஜ் ஸ்டூவர்ட் குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார். இது ஒரு நிதிக் கம்பனியையும் – ஜோர்ஜ் ஸ்டூவர்ட் பினேன்ஸ் லிமிட்டெட் - உள்ளடக்குகிறது. 2015 இல்ரூபவ் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குக் கொடுக்கல் வாங்கலில் நிலவியாதாகக் கூறப்படும் ஒழுங்கீனறங்கள் தொடர்பாக டிலித் ஜயவீர, நாலக்க கொடஹேவ, வருனி அமுனுகம மற்றும் ஆனந்தராஜா அமரசேக்கர ஆகியோரின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஒரு விசாரணைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்; அங்கீகரம் வழங்கியது. அத்தகைய கோரிக்கைகள் மேலெழுந்த பின்னர், ஜயவீர தற்போதைய பிதம மந்திரியின் சகோதரரும் டெல்சான் நெட்வேர்க் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவருமான சான் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வழக்குத்தொடரப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். விக்கிரமசிங்கவின் தொலைக்காட்சி அலைவரிசையாகிய டீஎன்எல் ஜயவீரவுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்புச் செய்தது என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே இச் எச்சரிக்கையை விடுத்தார். விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இவ் வழக்குத் தொடுத்தல் கைவிடப்பட்டது. விக்கிரமசிங்கவின் மகள் இஷானியும் ஜயவீரவின் ட்ரயட் (பிரைவேட்) லிமிட்டட்டின் செயற்பாடுகளின் முன்னர் மிகநெருக்கமாகத் தொடர்புபட்டிருந்தார். இதே ஆண்டில் ஜயவீரவின் சட்டத்தரணிகள் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன லிமிட்டட்டின் தலைவரான ஆர்.ராஜமகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர். ராஜமகேந்திரனின் தொலைக்காட்சி நிறுவனமான சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படும் அவதூறு கூற்றுக்களுக்கு எதிராக ரூபா 2 மில்லியன் (அ.டொலர் சுமார் 12 ,500) கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் ராஜமகேந்திரனின் வழக்கறிஞர்களும் ஜயவீர அவ்வழக்கைத் தொடரப் போவதானால் ரூபா 20 பில்லியன் (அ.டொலர் சுமார் 125 மில்லியன்) நட்டஈடு கோரி எதிர்வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

மடவா மடவல நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி. இவர் பவர் ஹவுஸ் நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக பட்டியலிடப்பட்டுள்ளார்

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

லக்சிறி விக்ரமகே பதில் தலைவர் மற்றும் பணிப்பாளர். தெரண மக்ரோ என்டடெய்ன்மென்ட் பிரைவெட்) லிமிட்டடை தாய் நிறுவனமாகக்கொண்ட பவர் ஹவுஸ் (பிரைவெட்) லிமிட்டடின் 2 வீத பங்குதாரராகவுள்ளார்.

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

Derana Macroentertainment (Pvt) Limited No. 320, T.B. Jaya Mawatha, Level 4, Colombo 10 Tel: +945300800, +945300700 Fax: +942506226 Website: http://derana.lk

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தரவுகள் மீதான தகவல்கள்

இலங்கையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு கைத்தொழிலுக்கு ஒரு புதிய பிரவேசமான தெரண டிவி 2005 இல் ஒளிபரப்பைத் தொடங்கியது. LMRB ஆய்வின்படி, 2017 இல் தெரண டிவி தான் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசையாகும். அதன் ஆரம்ப கட்டங்களில் 5 மணித்தியால நிகழ்ச்சிகளையே இவ் அலைவரிசை நடாத்தியது. தற்போது தெரண டிவி சிங்களமொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. இந்நிகழ்ச்சிகளுள் செய்திகள்ரூபவ் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் சமய நிகழ்ச்சிகள் ஆகியன அடங்குகின்றன. தெரண டிவி பவர் ஹவுஸ் லிமிட்டட் நிறுவனத்தின் ஒரு துணை கம்பனியான தெரண மக்ரோ என்டடேய்மண்ட் (பிரைவேட்) லிமிட்டட்டினால் நிருவகிக்கப்படுகின்றது. இணை ஸ்தாபகர்களான ஜயவீர மற்றும் வருணி அமுனுகம ஆகியோர் பவர் ஹவுஸ் லிமிட்டட்டின் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டிருக்கின்றனர்.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ