லக்பிம
முன்னதாக சுமதி நியூஸ்பேப்பர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் என்று அறியப்பட்ட லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் சிங்கள நாளிதழ் லக்பிம மற்றும் ஞாயிறு லக்பிம ஆகிய பத்திரிகைகளை வெளியிடுகிறது. லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின்ஒரு துணைக் கம்பனியாக அதன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட் காதாரப்பராமரிப்பு, பதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், நிகழ்ச்சி முகாமைத்துவம், பைன் டைனிங் மற்றும் சினிமாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் துணைக் கம்பனிகளைக் கொண்டுள்ள ஒரு வர்த்தகக் குழுமமாகும். திலங்க சுமதிபாலவினால தாபிக்கப்பட்ட சுமதி நியூஸ்பேப்பர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் 1994 இல் ஞாயிறு பத்திரிகையை வெளியிடத் தொடங்கியது. அது 1.47 வீத வாசர்களைக் கொண்டுள்ளது. வாராந்த பத்திரிகைகுள்ள மிக உயர்ந்த கிராக்கி காரணமாக லக்பிம பத்திரிகை 0.25 வீத வாசகர்களைக் கொண்ட லக்பிம நாளிதழை 2000ஆம் ஆண்டு வெளியிடத் தொடங்கியது. எனினும், ஞாயிறு லக்பிமவும் லக்பிம நாளிதழும் இரண்டு வெவ்வேறு பத்திரிகையாசிரியர் குழுக்களினால் வெளியிடப்படுவதோடு, இரண்டு வெவ்வேறு பத்திரிகைகளாக செயற்படுகின்றன. மேலும், ஆங்கிலம் பேசும் வாசகரகளின தேவையைப் பூரத்தி செயவற்கு லக்பிம 2007 இல் லக்பிம நியூஸ் என்ற ஒரு ஆங்கில வாரப்பத்திரிகையை வெளியிடத் தொடங்கியது. தற்போது, லக்பிம நாளிதழும் ஞாயிறு லக்பிமவும் உள்நாட்டு, வெளிநாட்டுரூபவ் விளையாட்டு மற்றும் களிப்பூட்டல் செய்திகளை வெளியிடுகின்றன. ஞாயிறு லக்பிம குடும்பப் பெண்கள் மற்றும் இளம் முதியோர் ஆகியோரை இலக்கு வைக்கும் றெஜினா உள்ளிட்ட பல சிறு பத்திரிகைகளையும் வெளியிடுகின்றது. அரசியலில் முழுமையாகக் கவனஞ் செலுத்துமுகமாக திலங்க லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவர் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்ததோடு 2010 அககம்பனியின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் விலகிக்கொண்டார். திலங்கவின் மூத்த சகோதரர் உனவட்டுவகே ஜகத் பிரிய அனுர சுமதிபால அக்கம்பனியின் தலைவர் பதவியையும் முகாமைத்துவப் பணிப்பாளர் பதவியையும் ஏற்றார். தற்போது அக்கம்பனி ஜகத் மறறம் அவரது தாயார் வடு ஆராச்சிகே மிலினா சுமதிபால ஆகியோருக்குச் சொந்தமாக உள்ளது. மிலினா 2016 டிசெம்பரில்; காலமானபோதிலும், அக்கம்பனி அவரது பங்குகளை இன்னும் அவரது பெயரிலேயே வைத்திருக்கிறது. ஜகத்தும் அவரது மனைவி சமந்தா குமாரி சுமதிபாலவும் தற்போது லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
நுகர்வோர் வீதம்
1.62%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசியம்
உள்ளடக்கத்தின் வகை
கட்டணம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
லக்பிம நியூஸ்பேப்பேர்ஸ் (பிரைவெட்) லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
தகவல் பொதுவில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்க வில்லை
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
ஞாயிறு லக்பிம 1994லும் லக்பிம தினப்பதிப்பு 2000ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டன
நிறுவுனரின் ஈடுபாடுகள்
திலங்க சுமதிபால என்றும் அறியப்படும் உடுவட்டுவகே ஜனத் பிரிய திலங்க சுமதிபால ஒரு பாராளுமன்ற
உறுப்பினராவார். அவர் 1994 இல் சுமதி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டைத் தாபித்தார். இக்கம்பனி
2008 இல் லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் என்று பெயர் மாற்றப்பட்டது. தனது அரசியல்
வாழ்க்கையை மேம்படுத்துமுகமாக அவர், லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளர்
சபையிலிருந்தும் அதன் தலைவர் பதவியிலிருந்தும் 2010 இல் இராஜிநாமாச் செய்தார். முன்னர் பின்வரும் பதவிகளை வகித்தமைக்காக அவர் நன்கறியப்பட்டவராக உள்ளார்: இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகர், முன்னாள் திறன்விருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி பிரதி அசைச்சர் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மற்றம் இலங்கைப் பத்திரிகைச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்.
திலங்க ஒரு வர்த்தக ஜம்பவானாகிய யு.டப்ளியு சுமதிபால மற்றும் கொடை வள்ளல் மிலினா சுமதிபால ஆகியோரின் இளைய மகனாவார். யு.டப்ளியு சுமதிபால லகபிம நியூஸ்பேப்பர்ஸின் தாய்க் கம்பனியான சுமதி குளோபல் கொண்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் ஸ்தாபகராக உள்ள அதேவேளை, மிலினா சுமதிபால அவரது கணவர் காலமானதன்பின்னர் அதன் தலைவராகப் பணியாற்றினார். திலங்கவிற்கு ஜகத் சுமதிபால என்ற ஒரு சகோதரரரும் ஐந்து சகோதரிகளும் உள்ளனர். ஜகத் தற்போது சுமதி குளோபல் கொண்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவராகவும் லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெடடின் CEO மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் இருக்கிறார்.
லக்பிம நியூஸ்பேப்பர்ஸ்விற்கு மேலதிகமாக, திலங்க உலகளாவிய சந்தைகள் மற்றும் இலங்கையில் மருத்துவ பட்டியல் ஆகியவற்றில்கவனத்தைச் செலுத்தும் ஒரு நடைமுறை வெளி வழங்கல் சேவையான BPO சேர்விஸஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டையும் கூட்டிணைத்தார். அச்சிடுதல் மற்றும் கிராபிக்ஸ் ஆகிய கலைகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஒரு நவீன நிறுவனமான இன்கிரின் அச்சு நிறுவகத்தையும் தாபித்தார்.
திலங்க இலங்கை பத்திரிகைச் சங்கத்தின் தாபக உறுப்பினர்களுள் ஒருவரும், சர்வதேச விளம்பர சங்கத்தின் இலங்கைப் பிரிவின் முன்னாள் தலைவரும், தொலைபேசி வழிகாட்டிகளை அச்சிடுவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒரு கம்பனியான NAPCO (பிறைவேட்) லிமிட்டெட்டின் முன்னாள் தலைவருமாவார்; 2002 முதல் 2004 வரை திலங்க இலங்கையில் மிகப்பெரிய பொது கோட்டட் கம்பனிகளுள் ஒன்றான இலங்கை டெலிகொம் மற்றும் இலங்கையில் 2 வது மிகப்பெரிய நடமாடல் தெலைத்தொடர்பு கம்பனியான மொபிடெல் ஆகிவற்றின் தலைவராகவும் பணியாற்றினார்.
திலங்க தற்போது இலங்கை கிறிக்கட் சபையின் தலைவராகப் பணியாற்றுகிறார். அவர் இலங்கைக் கிறிக்கட்
கட்டுப்பாட்டுச்சபை மற்றும் ஆசிய கிறிக்கட் சபை ஆகியவற்றின் முன்னாள் தலைவரும், ஆசிய கிறிக்கட் குழுவின்
தலைவரும், சர்வதச கிறிக்கட் பேரவையின் (ICC). முன்னாள் பணிப்பாளருமாவார்.
திலங்க விக்டர் ஹெரோல்ட விக்கிரமரத்னவின் மகளான சமதார சாமமால விமலரதனவை திருமணம் செயதுளளார்.; விக்டர் எலெரிக்ஸ் ஐஸ்கிறீம் (பிறைவேட்) லிமிட்டெடடின் முகாமைத்துவப் பணிப்பாளராவார். சமதார 2016 இல் சுமதி குளோபல் கொன்சிலிடேடட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளராகப் பணியாற்றினார்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
ஜகத் சுமதிபால என்றும் குறிப்பிடப்படும் உடவட்டுவகே ஜகத் பிரிய அனுர சுமதிபால லக்பிம நியூஸ்பேப்பர்ஸ்
(பிறைவேட்) லிமிட்டெட்டினதும் அதன் தாய்க் கம்பனியான சுமதி குளோபல் கொன்சிலிடேடட் (பிறைவேட்)
லிமிட்டெட்டினதும் தற்போதைய CEO மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராகும். அவர் ஒரு வர்த்தக ஜம்பவானாகிய
யு.டப்ளியு சுமதிபால மற்றும் கொடை வள்ளல் மிலினா சுமதிபால ஆகியோரின் மூத்த மகனாவார். ஜகத் அவரது
தாயரின் மரணத்தின் பின்னர் 2017 இல் சுமதி குளோபல் கொன்சிலிடேடட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவராக
கடமையேற்றார். அவர் லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் 50 வீத பங்குகளைக்
கொண்டிருக்கிறார்.
சுமதி குளோபல் கொன்சிலிடேடட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவர் என்ற வகையில் ஜகத் அச்சிடுதல், வர்த்தக
அச்சிடுதல், சுகாதாரப்பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விருந்தோம்பல்ஃகளிப்பூட்டல், வலு
மற்றும் சினிமாக் கைத்தொழில் ஆகிய துறைகளிலான 12 துணைக் கம்பனிகளுக்குப் பொறுப்பாக உளளார்.
அவரது வர்த்தக பொறுப்பு முய்ற்சிகளைத் தவிர, ஜகத் 2006 முதல் 2014 வரை அகில இலங்கை பௌத்த காங்கிரசின்
கௌரவத் தலைவராக பணியாற்றியதோடு, 2018 இல் மீண்டும் அதன் கௌரவத் தலைவராக தெரிவு
செய்யப்பட்டார். ஜகத் உலக பௌத்த பெலோசிப்பின் உப தலைவராகவும் பௌத்த கற்கைகளுக்கான நாகானந்த
சர்வதேச நிறுவகத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், பணிப்பாளராகவும் உள்ளார். ஜகத் இலங்கை பில்லியட்ஸ்
மற்றும் ஸ்னூக்கர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் உப போசகருமாவார்.
ஜகத் சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளராகப் பணியாற்றும் சமந்தா
குமாரி கருனாரதன என்பவரைத் திருமணம் செய்துள்ளார். சமந்தா ACBC யின் மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான தேசியப் போரவையின் உப தலைவராகவும் தலைவராகவும் பணியாற்றினார். அவர்களின் மூத்த மகன் சூட சுமதிபால சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டில் வர்த்தக மூலோபாயங்கள் மற்றும் அபிவிருத்திக்கான பணிப்பாளராக தற்போது பணியாற்றுகிறார்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
சம்பத் தேசப்பிரிய – லக்பிம தினப்பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியராக செயற்படுகின்றார்
திஸ்ஸ பிரேமசிறி - லக்பிம ஞாயிறு பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியராக செயற்படுகின்றார். இவர், லக்பிம நியூஸ்பேப்பேர்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் திரைப்பட விமர்சகராகவும் செயற்படுகின்றார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
தர்மசிறி திலகவர்தன பண்டார – துணைப் பிரதம செய்தியாசிரியர் - லக்பிம தினசரி பத்திரிகை
தொடர்பு
Lakbima Newspapers (Pvt) Limited
No. 445/1, Sirimavo Bandaranaike Mawatha, Colombo 14
General: +94 11 242 6000, +94 11 242 6025
Fax: +94 11 234 3408
Email: info@lakbima.lk, daily@lakbima.news.lk
Website: www.lakbima.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
லக்பிம பத்திரிகையின் உத்தியோகபூர் வலைத்தளம் அக்கம்பனியின் உரித்தாண்மைக் கட்டமைப்பு, பணிப்பாளர்கள் மற்றும் அதன் வரலாறு தொடர்பான எவ்வித விபரங்களையும் வழங்கவில்லை. இதனிடையே, சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் வலைத்தளம் 2016 லிருந்து இற்றைப்படுத்தப்படவில்லை. ஆகையால், பகிரங்கமாகக் கிடைக்கும் இரண்டாம்நிலை மூலங்கள் உசாவப்பட்டன. எனினும், முக்கிய நபர்கள் பற்றிய தகவல்கள் அவர்களது பகிரங்கமாகக் கிடைக்கும் தனிப்பட்ட வலைத்தளங்களிலிருந்து பெறறுக்கொள்ளப்பட்டன. இதனிடையே, லக்பிம பத்திரிகையின் வார மற்றும் தினப் பத்திரிகைகளின் மொத்தத தொகையாகிய 2017 ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக் கொள்ளப்பட்டன. மிலினா சுமதிபால காலமானதன்பின்னர் அவரது பங்குகள் தொடர்பில் சொத்துக்களின் கைமாற்றல் பிரிவு அல்லது விதி தொடர்பான தகவல்கள இல்லாமை இக்கம்பனியின் தற்போதைய உரித்தாண்மைபற்றி பரீசிலிக்கும்போது ஒரு பிரச்சினையாக உள்ளது. கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கபபட்ட 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, மிலினா சுதமதிபால தற்போது ஒரு பங்குதாரராக குறிப்பிடப்பட்டுள்ளார். எனினும், மிலினா சுமதிபால ௨௦௧௬ டிசெம்பரில் காலமாகிவிட்டார். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 25 ஆம் திகதி லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்
லக்பிம பத்திரிகையின் உத்தியோகபூர் வலைத்தளம் அக்கம்பனியின் உரித்தாண்மைக் கட்டமைப்பு, பணிப்பாளர்கள் மற்றும் அதன் வரலாறு தொடர்பான எவ்வித விபரங்களையும் வழங்கவில்லை. இதனிடையே, சுமதி குளோபல் கொன்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் வலைத்தளம் 2016 லிருந்து இற்றைப்படுத்தப்படவில்லை. ஆகையால், பகிரங்கமாகக் கிடைக்கும் இரண்டாம்நிலை மூலங்கள் உசாவப்பட்டன. எனினும், முக்கிய நபர்கள் பற்றிய தகவல்கள் அவர்களது பகிரங்கமாகக் கிடைக்கும் தனிப்பட்ட வலைத்தளங்களிலிருந்து பெறறுக்கொள்ளப்பட்டன. இதனிடையே, லக்பிம பத்திரிகையின் வார மற்றும் தினப் பத்திரிகைகளின் மொத்தத தொகையாகிய 2017 ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக் கொள்ளப்பட்டன. மிலினா சுமதிபால காலமானதன்பின்னர் அவரது பங்குகள் தொடர்பில் சொத்துக்களின் கைமாற்றல் பிரிவு அல்லது விதி தொடர்பான தகவல்கள இல்லாமை இக்கம்பனியின் தற்போதைய உரித்தாண்மைபற்றி பரீசிலிக்கும்போது ஒரு பிரச்சினையாக உள்ளது. கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கபபட்ட 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, மிலினா சுதமதிபால தற்போது ஒரு பங்குதாரராக குறிப்பிடப்பட்டுள்ளார். எனினும், மிலினா சுமதிபால ௨௦௧௬ டிசெம்பரில் காலமாகிவிட்டார். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 25 ஆம் திகதி லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.