லங்கா சீ நியூஸ்
லங்கா சீ நியூஸ் இணையதளத்தளமானது அரசியல் சார்ந்த, சாராத செய்திகளை வெளியிடும் சிங்களமொழி இணையதளத்தளமாகும். இதன் உரிமையாளர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட முடியாத நிலையில் உள்ளபோதும், ஆய்வுகளும் ஊடக அறிக்கைகளும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேசிய விடுதலை முன்னணியி தலைவராகவும் உள்ள விமல் வீரவன்ச லங்கா சீ நியூஸ் இணையதளத்தின் உரிமையாண்மையோடு தொடர்புள்ளதாக உறுதிப்படுத்துகின்றன. 2015 ஜனவரியிலிருந்து 2017 நவம்பர் வரை இணையதளங்கள் தடைசெய்யப்பட்டன. இவை தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை தீர்மானிக்க, கிரவுண்ட் வியூஸ் பத்திரிகை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தது. அவ்வாறு, பெறப்பட்ட தகவல்களின்படி தடைசெய்யப்பட்ட 14 இணையதளத்தளங்களில் லங்கா சீ நியூஸ் உட்பட 4 இணையதளத்தளங்கள் பிழையான தகவல்களைப் பிரசுரித்ததாகவும், ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நுகர்வோர் வீதம்
தரவுகள் கிடைக்கவில்லை
உரிமையாண்மையின் வகை
தனியார்
பிராந்திய உள்ளடக்கம்
சர்வதேசம்
உள்ளடக்கத்தின் வகை
இலவசம்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
தரவுகள் கிடைக்கவில்லை
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்கவில்லை
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
தரவுகள் கிடைக்கவில்லை
நிறுவுனர்
தரவுகள் கிடைக்கவில்லை
நிறுவுனரின் ஈடுபாடுகள்
தரவுகள் கிடைக்கவில்லை
பிரதான நிறைவேற்று அதிகாரி
தரவுகள் கிடைக்கவில்லை
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
தரவுகள் கிடைக்கவில்லை
பிரதம செய்தியாசிரியர்
தரவுகள் கிடைக்கவில்லை
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
தரவுகள் கிடைக்கவில்லை
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
விமல் வீரவன்ச தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேசிய விடுதலை முன்னணியி தலைவராகவும் உள்ளார். இதற்கு முன்னர், இவர் இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்துள்ளார். பாராளுமன்றத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் நிலையான அபிவிருத்தி, சூழலும் இயற்கை மூலங்களும் மற்றும் அமைச்சுசார் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் பங்கெடுக்கின்றார். ஆய்வுகளும் ஊடக அறிக்கைகளும், இவரை லங்கா சீ நியூஸ் இணையதளத்தின் உரிமையாளர் அல்லது அவ் இணையதளத்தின் மிக நெருங்கிய நபர் என உறுதிப்படுத்துகின்றன. இருந்தபோதும், MOM ஆய்வுக் குழுவினர் விமல் வீரவன்சவிற்கும் அவ் இணையதளத்திற்கும் இடையே நேரடியான தொடர்பை கண்டுகொள்ள முடியவில்லை.
தொடர்பு
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
லங்கா சி நியூஸ் அதன் ஸ்தாபகர், ஆரம்பிக்கப்பட்ட வருடம், உரிமையாளர் விபரம் மற்றும் தொடர்பு விபரங்கள் குறித்து எந்த வித தகவல்களையும் வழங்கவில்லை. இதன் காரணமாக இரண்டாம் நிலை ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. பல செய்தி இணையங்கள் மற்றும் வலைப்பதிவு பக்கங்கள் விமல் வீரவன்ச உரிமையாளர் என தெரிவிக்கின்றன. எனினும் இந்த ஆதாரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. லங்கா சி நியூஸின் உரிமையாளர் யார் என்பது குறித்த கலந்துரையாடல்களுக்கு ஆதாரமாக ஊடக உரிம கண்காணிப்பு குழு இரண்டு கல்விசார் வெளியீடுகள் மற்றும் இரண்டு செய்தி அறிக்கைகளை மேற்கோள் காட்டுகின்றது. எழுத்தாளரும், பேராசிரியருமான நிரா விக்கிரமசிங்க குறித்த இணையத்தளத்தின் உரிமையாளர் விமல் வீரவன்ச எனக் குறிப்பிடுகின்றார். இதேவேளை, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறித்த இணையத்தளம் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடுகின்றார். அரசுக்குச் சொந்தமான சன்டே ஒப்சேவர் பத்திரிகை, லங்கா சி நியூஸ் விமல் வீரவன்சவிற்கு சொந்தமானதுடன் அவரே இயக்குவதாகவும் தெரிவிக்கின்றது. இதேவேளை, சன்டே டைம்ஸ், குறித்த இணையம் விமல் வீரவன்சவினால் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது என குறிப்பிடுகின்றது. நம்பகத்தன்மை அன்ற தகவல்களினால் உரிமையாளர் யார் என்பதை ஊடக உரிம கண்காணிப்பு குழுவினால் வெளிப்படுத்த முடியவில்லை.
ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்
Sri Lanka in the Modern Age: A History by Nira Wickramasinghe (2014), Google Books, Accessed on 3 October 2018