மவ்பிம
மௌபிம உள்நாட்டு, சர்வதேச, விளையாட்டு மற்றும் களிப்பூட்டல் செய்திகளை வழங்கும் ஒரு பிரபல நாளாந்த மற்றும் வாராந்த (மௌபிம – ஞாயிறு பதிப்பு) சிங்கள மொழி பத்திரிiயாகும.அது ஜனநாயக தேசிய முன்னணின்
ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சிலோன் டூடே ஆங்கில மொழிப் பத்திகையை நிறுவியவருமான டிரான் அலெஸ் இனால் தாபிக்கப்பட்டது. இஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டின்கீழ் 2006 இப்பத்திரிகையை ஆரம்பித்தபோது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினால் அதற்கெதிராக புலமைச் சொத்து வழக்கொன்று தொடுக்கப்பட்டது. அக் கட்சி 1950 இல் அதே பெயரில் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக கொண்டிருந்ததென வாதிட்டது. எனினும், பத்து வருடங்களாக இக்கட்சிப் பத்திரிகை வெளியிடப்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையிலும் மனுதாரர் வெல்விட்ட ஆராச்சிகே தர்மதாச அப்பத்திரிகையின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் அல்ல என்ற அடிப்படையிலும் உயர் நீதிமன்றம் இம்மனுவை இடைநிறுத்தியது. பின்னர் மனுதாரர் அம்மனுவை வாபஸ்பெற்றுக்கொண்டார். அது வெளியிடப்பட்ட காலப்பகுதியில் மௌபிமவின் ஆசிரியர்பீடம் மற்றும் உரித்தாண்மை நலன்கள் தொடர்பாக, ஒரு சில அரசியல்வாதிகளினால் கேள்வி எழுப்பப்பட்டது. எடுத்துக்காட்டாக, மௌபிம முன்னைய அரசாங்கம்மீதான அதன் வெளிப்படையான விமர்சனத்திற்காக குறைகூறப்பட்டது. அதன் பத்திரிகையாளர்களும் பத்திகையாசிரியரும் விசாரணை செய்யப்பட்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இது இப்பபத்திரிகை 2007 இல் மூடப்படுவதற்கு இட்டுச் சென்றது. எல்லைகளற்ற
நிருபர்கள், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல ஊடகம் தொடர்புபட்ட குழுக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தன. மௌபிம சிலோன்நியூஸ் பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டின்கீழ் 2011 இல் வெளியீட்டை மீண்டும் தொடங்கியது. 2014 இல், தற்போதைய பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய இப்பத்திரிகையின் ஆசிரியர்கள் வேண்டுமென்றே
அவதூறு உள்ளடக்கங்களை வெளியிடுகின்றரெனக் கூறி அதற்கெதிராக வழக்கொன்று தொடுத்தார். தற்போதைய
பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இப்பத்திகைக்கெதிராக அதேபோன்ற
வழக்கொன்றை தொடுத்து, 2018 அதனை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
நுகர்வோர் வீதம்
4.26%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசியம்
உள்ளடக்கத்தின் வகை
கட்டணம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
சிலோன் நியூஸ்பேப்பேர்ஸ் பிரைவேட் லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
தகவல் பொதுவில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது
வாக்களிக்கும் உரிமை
பங்குதாரர்கள் வாய்மொழியாகவும், கைகளைத் தூக்குவதன் மூலமும் வாக்களிக்கின்றனர். ஒரு முகாமையாளர் ஒரு வாக்கையே அளிக்கமுடியும்
குழுமம் / தனி உரிமையாளர்
சிலோன் டுடே மற்றும் மவ்பிம பத்திரிகைகளை வெளியிடும் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனம் அலெஸ் குடும்பத்திற்கு சொந்தமானது. டிரான் அலெஸ் என அழைக்கப்படும் டிரான் பிரசன்ன கிறிஸ்டோபர் அலெஸ் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைவர். ஜனநாயக தேசிய முன்னணியின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர் டிரான். சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு அதிகாரசபையின் முன்னாள் தலைவராக டிரான் இருந்துள்ளார். 1988 ஆம் ஆண்டில் கொமியூனிக்கேஷன் பிஸினஸ் ஈக்குயிப்மென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை ஆரம்பித்தார். 2005 இல் ஸ்டான்டர்ட் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் 2011 இல் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களையும் ஆரம்பித்தார். டிரான் பிரபல வர்த்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அலெஸ்சின் ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் முன்னைய அரசாங்கத்தினால் குறைகூறப்பட்டது. இது இவ்வெளியீட்டு நிலையம் மூடப்ப்படுவதற்கும்; பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் அலெஸும்
அப்பத்திரகையின் பல ஊழியர்களும் தடுத்து வைக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எல்லைகளற்ற நிருபர்கள், சுதந்திர ஊடக இயக்கம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன அரசாங்கத்தின் இச் செயல்களைக் கண்டித்தன.
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2006
நிறுவுனரின் ஈடுபாடுகள்
டிரான் அலெஸ் என்றும் குறிப்பிடப்படும் டிரான்பிரசன்ன கிறிஸ்டோபர் அலெஸ் 2005 இல் தனது செயற்பாட்டைத்
தொடக்கி விரைவில் மூடப்பட்ட ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் கீழ் 2006 ஆம் ஆண்டு
முதலில் மௌபிமவைத் தொடக்கினார். மௌபிமவின் வெளியீடு சிலோன் நியூஸ்பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின்
கீழ் 2011 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கியது.
டிரான்பிரசன்ன கிறிஸ்டோபர் அலெஸ் சிலோன் நியூஸ்பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஸ்தாபகரும் CEO உம் ஆவார். அவர் ஜனநாயக தேசிய முன்னணியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினதும் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி அதிகார சபையினதும் (RADA) முன்னாள் தலைவருமாவார். 1988 இல் தொடர்பாடல் வியாபார உபகரண (பிறைவேட்) லிமிட்டெட்டையும் 2005 ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டடையும்; 2011 இல்சிலோன் நியூஸ்பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டடையும் தொடக்கிய டிரான் ஒரு பிரபல வர்த்தகருமாவார்.
அலெஸ்சின் ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் முன்னைய அரசாங்கத்தினால் குறைகூறப்பட்டது. இது இவ்வெளியீட்டு நிலையம் மூடப்ப்படுவதற்கும்; பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் அலெஸும்
அப்பத்திரகையின் பல ஊழியர்களும் தடுத்து வைக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எல்லைகளற்ற நிருபர்கள், சுதந்திர ஊடக இயக்கம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன அரசாங்கத்தின் இச் செயல்களைக் கண்டித்தன.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
டிரான்பிரசன்ன கிறிஸ்டோபர் அலெஸ் சிலோன் நியூஸ்பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஸ்தாபகரும் CEO உம் ஆவார். அவர் ஜனநாயக தேசிய முன்னணியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினதும் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி அதிகார சபையினதும் (RADA) முன்னாள் தலைவருமாவார். 1988 இல் தொடர்பாடல் வியாபார உபகரண (பிறைவேட்) லிமிட்டெட்டையும் 2005 ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டடையும்; 2011 இல்சிலோன் நியூஸ்பேப்பஸ் (பிரைவேட்) லிமிட்டட்டடையும் தொடக்கிய டிரான் ஒரு பிரபல வர்த்தகருமாவார்.
அலெஸ்சின் ஸ்டேண்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் முன்னைய அரசாங்கத்தினால் குறைகூறப்பட்டது. இது இவ்வெளியீட்டு நிலையம் மூடப்ப்படுவதற்கும்; பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் அலெஸும்
அப்பத்திரகையின் பல ஊழியர்களும் தடுத்து வைக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எல்லைகளற்ற நிருபர்கள், சுதந்திர ஊடக இயக்கம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன அரசாங்கத்தின் இச் செயல்களைக் கண்டித்தன.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
பென்னட் ரூபசிங்க அதன் தற்போதைய பிரதான பத்திரிகையாசிரியரும் முன்னாள் லங்கா-ஈ- நியூஸ்சின்
பத்திரிகையாசிரியருமாவார். இவர் ஒரு தீத் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒரு மனிதனை அச்சுறுத்தியதாக 2011 இல்
கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரது கைது சர்வதேச மன்னிப்புச் சபையினால் பரவலாக விமர்சிக்கப்பட்து. லங்கா-ஈ- நியூஸ் முன்னைய அரசாங்கத்தினாலும் தற்போதைய அரசாங்கத்தினாலும் முடக்கப்பட்ட ஒரு வலைத்தளமாகும். அதன் அலுவலகத்திற்கு 2011 இல் தீ மூட்டப்பட்டதோடு, அதன் ஊழியர்கள் தமது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
ரமந்த அலெஸ் - நிறைவேற்று அதிகாரி – சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டட். அத்துடன், அதன் தாய் நிறுவனமான அப்பொஜீ ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட். சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டடின் 49.99 வீதப் பங்குகளைக் கொண்டுள்ளது. ரமந்த, சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் மற்றும் அப்பொஜீ ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின் ஸ்தாபகரும் உரமையாளருமான ரிரான் அலெசின் மகன் ஆவார்
தொடர்பு
Ceylon Newspapers (Pvt) Limited
No. 101, Rosmead Place, Colombo 7.
General: +94 117 566 566
Editorial : +94 117 566 502, +94 117 566 506, +94 117 566 527
Email : mbnews@ceylonnewspapers.lk
Website: mawbima.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
| | https://ifex.org//sri_lanka/2007/03/29/mawbima_and_sunday_standard_newspapers/ | “Mawbima” and “Sunday Standard” closed by government pressure by IFEX (2007), Accessed on 7 August 2018 # | | https://www.bbc.com/sinhala/news/story/2007/03/printable/070328_mawbima_closed.shtml / | Mawbima suspends publication by BBC Sinhala (2007), Accessed on 7 August 2018 # | | https://www.newsfirst.lk/2014/04/01/karu-jayasuriya-demands1-billion-mawbima-newspaper/ | Karu Jayasuriya demands 1 billion from the Mawbima newspaper by News First (2014), Accessed on 11 August 2018
ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்
மௌபிமவின் உத்தியோகபூர்வ வலைத்தளம் அதன் தாபகர், பணிப்பாளர் சபை அல்லது நிறுவனக் கட்டமைப்பு பற்றி எவ்விதத் தகவலும் வழங்குவதில்லை. அக்கம்பனி 2006 இலும் 2011 இலும் எக்கம்பனியின் இப்பத்திகை எந்த
கம்பனிகளின்கீழ் வெளியிடப்பட்டதோ அவ்விரு கம்பனிகள் பற்றி எதுவும் குறிப்பிடவிலை;லை. சிலோன்
நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் லிங்க்ட் இன் புறொபைல் அக்கம்பனியின் தாபக வருடத்தை 2011 என
காட்டுகிறது. இது மௌபிம அதன் வெளியீட்டை மீண்டும் தொடக்கிய ஆண்டாகும். மேலும், சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டிற்கு ஓர் உத்தியோகபூர்வ வலைத்தளம் இல்லை.எனவே, வெளிப்படையாக கிடைக்கும் இரண்டாமநிலை மூலங்கள் உசாவப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள்
கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. உரித்தாண்மை மற்றும் பணிப்பாளர் சபை தொடர்பாக கிடைக்கக்கூடியதாக உள்ள மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டுக்குரியவை ஆகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக்கம்பனியின் தகவல்களை முறையாகக்கோரி, 2018 ஜூலை 20 ஆம் திகதி சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக்கம்பனி அவ்வேண்டுகோளிற்கு செவிசாய்க்கவில்லை. MOM குழு 2018 செப்டெம்பர் 19 ஆம் திகதி சிலோன் டுடே பத்திரிகையின் இரண்டு பத்திரிகையாசிரியர்களை சந்தித்தது. அவர்கள் இலங்கையில் ஊடக உரித்தாண்மை, ஊடக கைத்தொழிலில் தொடர்புகள் மற்றும் அத்துறை பற்றிய விளக்கம் தொடர்பான தகவல்களை வழங்கி உதவினர். 2017 ஆம் ஆண்டுக்கான வாசகர் தொகை பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்திடமிருந்து(LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அது திவயின பத்திரிகையில் வாராந்த மற்றும் நாளாந்த வெளியீடுகளின் தொகையாகும்.