This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/28 at 23:03
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

நியூஸ் இணையத்தளம்

நியூஸ் . எல் கே 1997 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தளம். தற்போது இவ் இணையத்தளம் சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் செயல்படுகின்றது. இவ் இணையத்தளம், ஸ்ரீ லங்கா மொபிடெல் மற்றும் டயலொக் ஆகியவற்றுடன் இணைந்து குறுஞ்செய்தி ஊடாக உடனடிச் செய்திச் சேவையை வழங்குகின்றது. அரசியல், தற்போதைய நிலைவரங்கள், உலக வணிகம், விளையாட்டு, கலாச்சார மற்றும் பயணம் சார் விடயங்கள், மாகாண மட்டச் செய்திகள், மற்றும் அமைச்சரவை முடிவுகளை இச் செய்தித் தளம் பிரசுரிக்கின்றது. இச் செய்தித் தளம் அடிப்படையில், அரசாங்க நடவடிக்கைகள் சார்ந்த தகவல்களை வழ

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

தரவுகள் கிடைக்கவில்லை

உரிமையாண்மையின் வகை

அரசுக்குச் சொந்தமானது

பிராந்திய உள்ளடக்கம்

சர்வதேசம்

உள்ளடக்கத்தின் வகை

இலவசம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

நியூஸ். எல் கே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் தளம். அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது. இது, பாராளுமன்ற மறு சீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் உருவாக்கப்பட்டது. நிதி மற்றும் ஊடக அமைச்சினால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பவற்றையும் மேல்பார்வை செய்கின்றது.

தனி உரிமையாளர்

விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1997

நிறுவுனரின் ஈடுபாடுகள்

அரசாங்க தகவல் திணைக்களம் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சிநால் உருவாக்கப்பட்டது. திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி அரசாங்கத் தகவல்களையும் செய்திகளையும் ஊடகங்களுக்கு வழங்கும் அதேவேளை, இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

சுதர்ஷன குணவர்தன அரசாங்க தகவல் திணைக்களதின் தற்போதைய பணிப்பாளராக பணியாற்றுகின்றார். இதற்கு முன்னர் இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் குழுவின் அங்கத்தவராகவும் பணியாற்றியுள்ளார். பொதுச் சேவைக்கு வர முன்னர் இவர் ஜனநாயகத்திற்கான இணைந்த உரிமை தற்போது என்ற சிவில் சமூக அமைப்பை நிறுவினார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

பிரபாத் ரத்நாயக்க நியூஸ். எல் கே யை மேல்பார்வை செய்யும் செய்தி ஊடகப் பிரிவின் தலைவராகவுள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

எம் ஏ ஹசன் நிறுவனப் பணிப்பாளராகவுள்ளார்.

தொடர்பு

Department of Government Information

No. 163, Kirulapona Avenue, Colombo 5

Tel: +94 11 251 5759

Fax: +94112512861

E-mail: editor@news.lk

Website: www.news.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

நியூஸ். எல் கே இணையத்தளம் செயல்பட்டு அமைப்பு முறை சார்ந்த போதிய தகவல்களை வெளியிடவில்லை. அதனால் இரண்டாம் தர தகவல் மூலங்கள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்கள் நேரடியாக நியூஸ். எல் கே உடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தப்பட்டன.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ