This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/12/09 at 15:30
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

சக்தி எவ் எம்

வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் துணை நிறுவனமான எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் தமிழ் மொழி வானொலிச் சேவையாகும். சிரச எவ் எம் இதன் சிங்கள சேவையாகும் இதன் சகோதர வானொலிகளாக ஆங்கிலத்தில் ஜெஸ் எவ் எம் மற்றும் லெஜெண்ட்ஸ் எவ் எம். அதேவேளை சிங்கள தமிழ் இளையோர் சேவையாக வை எவ் எம் என்பன, கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன. 24 மணி நேரம் இயங்கும் இச்சேவை இசை நேரடி செய்தி விவாத நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

5.94%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசிய

உள்ளடக்கத்தின் வகை

இலவச ஒலிபரப்பு

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

வரையறுக்கப்பட்ட கபிட்டல் மகாராஜா நிறுவனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

சக்தி எவ் எம், எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடினால் நிர்வகிக்கப்படுகின்றது. சிரச எவ் எம் தமது துணை நிறுவனமென எம் பி சி தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. கப்பிட்டல் மஹாராஜா கூட்டமைப்பு நிறுவனத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள இரண்டு நிறுவனங்களான கப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் 94 .56 வீத பங்குகளையும் விஷன் லங்கா (பிரைவெட்) லிமிட்டட் 5 .43 வீத பங்குகளையும் தம்வசம் கொண்டுள்ளன. இதேவேளை கப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் விஷன் லங்கா (பிரைவெட்) லிமிட்டடின் 28 .6 வீத பங்குகளைக் கொண்டுள்ளன. கப்பிட்டல் மஹாராஜா கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவரான ஆர். ராஜமஹேந்திரன் கப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் 79 .95 வீத பங்குகளைக் கொண்டுள்ள அதேவேளை அவரின் மகன் சசிதரன் ராஜமஹேந்திரன் 20 .05 பங்குகளைக் கொண்டுள்ளார்.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

தனி உரிமையாளர்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1998

நிறுவுனரின் ஈடுபாடுகள்

ராஜேந்திரம் மகாராஜா மற்றும் ராஜேந்திரம் ராஜ மகேந்திரன் ஆகியோர் சிரச டிவி யின் ஸ்தாபகர்களும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன ஸ்தாபகர்களுள் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகன்களுமாவர். ராஜேந்திரம் மகாராஜா 'வட்டி' என்ற சொந்த இலச்சினையைக் கொண்ட ஒரு தொழில்முயற்சியாளரும் ஹில்ட்டன் ஓட்டலின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியவருமான பத்மா மகாராஜாவை மணமுடித்தார். அவர் 2016 ஆம் ஆண்டில் காலமானார். ராஜேந்திரம் ராஜமகேந்திரன் கனிஸ் ராஜேந்திரத்தை மணமுடித்தார். அவர் இந்நிறுவனத்தின் கீழ்வரும் ஒரு கம்பனியான ரியுமஸ் சலூனின் ஊநுழு ஆவர். இவ் இரு சகோதரர்களும் இந்நிறுவனத்தைப் பொறுப்பேற்ற அதேவேளை ராஜேந்திரம் மகேந்திரராஜா காலப்போக்கில் ஓய்வு பெற்றார். 2018 இல் ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மகன் சசீந்திரன் ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையேரூபவ் ராஜமகேந்திரனின் மகள் அஞ்சலி ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். ராஜேந்திரம்; மகாராஜா மற்றும் பத்மா மகேந்திரன் தம்பதிகளின் மகனாகிய பிரதீப் மகாராஜாவும் இந்நிறுவனத்தில் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். 2015 இல் பிரதீப் மகாராஜா இலங்கை மேர்சண்ட் வங்கியின் (MBSL) பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

லக்ஷ்மி ஜயசிங்க தற்போதைய எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், இதற்கு முன்னர், வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தகவல் மற்றும் வியாபாரத் துறையின் பணிப்பாளராகவும், எம்ரிவி எம்பிசி நிறுவனங்களின் விற்பனைப் பணிப்பாளராகவும், முகாமையாளராகவும், ஓ எல் ஈ ஸ்பிரிங் பொட்லெர்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் முக்கிய கணக்கு மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

ஆர். பி. அபர்ணா சுதன் 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சக்தி எவ் எம் வானொலியின் தற்போதைய தலைவராக பணியாறுகின்றார். சக்தி எவ் எம் வானொலியில் இணைய முன்னர், சூரியன் வானொலி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியுள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

சாந்தி பகிரதன் எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் குழுப் பணிப்பாளராகவுள்ளதுடன் ஸ்ரெய்ன் கலையகத்தின் தலைவராகவும் உள்ளார். இவ்விரு நிறுவனங்களும் வரையறுக்கப்பட்ட கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக மகாராஜா நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவிக்கிறது. இவர், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களான பிபிசி யுகே, ஸ்ரார் நெற்வேக் இந்தியா, ஃபொக்ஸ் மற்றும் வோர்நர் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். ஆசிய – பசுபிக் ஒலிபரப்பு அமைப்பின் செயற்படும் உறுப்பினராகவுள்ள இவர், ரேடியோ வேர்க்கங் பார்டியின் தலைவராக செயற்படுகிறார். ஊடகத்துறைக்குள் நுழைய முன்னர், இங்கிலாந்தில் பீ அன்ட் ஜீ, ரெக்கிற் னெட் கோல்மன் மற்றும் இந்தியாவில் பெப்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

தொடர்பு

MBC/ MTV Channels (Pvt) Limited

45/3, Braybrook Place, Colombo-02

Tel: +9411 2851371

Email: radio@sirasafm.sirasa.com

Website: shakthifm.com

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

சக்தி எவ் எம் மற்றும் எம் பி சி நெற்வேக்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஸ்தாபகர் மற்றும் நிறுவன அமைப்பு பற்றிய தகவல்கள் காணப்படவில்லை. பதிலாக நிகழ்ச்சி நிரல் மற்றும் தொடர்பு கொள்ளும் விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ் அலைவரிசைத் தொடர்பான மேலும் தகவல்களைப் பெற்றுக்
கொள்வதற்கு இரண்டாம் நிலை மூலங்கள் தேவைப்படுகின்றன. தொலைபேசி அழைப்புகளினூடாக இவ் அலைவரிசைத் தொடர்பு கொண்டதன் பேரில் குறிப்பிடப்பட்ட முக்கிய தனிநபர்கள் இன்னும் தமது பதவிகளை வகிப்பது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தாபகர் வழக்கமாக ஆர்.ராஜமகேந்திரன் மற்றும் கிளி மகாராஜா என்று இரண்டு பெயர்களில் குறிப்பிடப்படுகிறார். இப்பெயர்களும் அக்குறிப்பிடப்பட்ட அறிக்கைகளில் வெவ்வேறு விதமாக எழுதப்படுகின்றன. தற்போதைய பங்குதாரர்கள் தொடர்பான விபரங்கள் கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி கெப்பிட்டல் மகாராஜா லிமிட்டட்டை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ