This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/09/13 at 21:49
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

சக்தி தொலைக்காட்சி

சக்தி ரிவி 1998 இல் ஒளிபரப்பைத் தொடங்கியது. இலங்கையின் மிகப்பெரிய குழுமமான த கெப்பிட்டல் மகாராஜா ஓகனைஸ்ஷேன் லிமிட்டட்டின் ஓர் அங்கமான எம்ரிவி அலைவரிசை லிமிட்டட்டின் தமிழ் அலைவரிசையாகும். சிங்களமொழி அலைவரிசையான சிரச ரிவியும் சிங்கள மற்றும் ஆங்கில இருமொழி அலைவரிசையான ரிவி 1 ம் சக்தி ரிவியின் சகோதர அலைவரிசைகளாகும். அது ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுள் களிப்பூட்டல், விளையாட்டு, நடப்பு விவகாரங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் ஆகியன அடங்குகின்றன. சக்தி ரிவியில் ஒளிபரப்பப்படும் களிப்பூட்டல் நிகழ்ச்சிகளுள் பெரும்பாலானவை இந்தியாவின் சன் ரிவி மற்றும் விஜய் ரிவி யில் இருந்து பெறப்படுபவையாகும். மேலும், சக்தி ரிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் யூப் ரிவி ஊடாக இணையத்தில் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. 2009 ஆம் ஆண்டின் ஆரம்பக் காலத்தில் யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் எம்ரிவி அலைவரிசை பிரைவேட் லிமிட்டட் மற்றும் எம்பிசி நெட்வேர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகியவற்றின் வளாகங்கள் அந்நிறுவனங்களின் பணியாளர்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்ததாகவும் பிரதான கட்டுப்பாட்டு அறையை சேதப்படுத்தியதாகவும் கூறப்படும் ஆயுதமேந்திய நபர்களினால் தாக்கப்பட்டன. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவாகிய கிரவுண்ட் வீவ்ஸ்ரூபவ் ப்ரீடம் ஹவுஸ் மற்றும் எல்லைகளற்ற அறிக்கையாளர்கள் (RSF) ஆகியோர் அரசாங்கத்தோடு இணைந்த குழுக்களினால் இத்தாக்குதல் வழிநடத்தப்பட்டதாக கருதினர். எனினும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அத்தகைய குற்றச்சாட்டுக்களை மறுதளித்தார். 2013 ஆம் ஆண்டில் தற்போதைய நிதி மற்றும் வெகுசனஊடக அமைச்சர் மங்கள சமரவீர கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மாத்தறையில் நடைபெற்ற ஒரு இனமோதல் பற்றிய ஒளிபரப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களக்கு ஆத்திரமூட்டியது என்ற காரணத்தின் பேரில் அதன் தலைவரான ஆர்.ராஜமகேந்திரனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றைத் தொடுத்தார். எனினும், மாத்தறை நீதவான் நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. எம்ரிவி அலைவரிசை மற்றும் எம்பிசி நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டட் ஆகியவற்றின் வளாகங்கள் இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பட்டதைத் தொடர்ந்து 2018 ஏப்பிரல் மாதத்தில் பட்டாசுகள் கொழுத்தி தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

6.1%

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

எம் ரிவி சனல் (பிரைவெட்) லிமிட்டட்

உள்ளடக்கத்தின் வகை

தேசிய

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

வரையறுக்கப்பட்ட கபிட்டல் மகாராஜா நிறுவனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

13558

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் பொதுவில் கிடைக்கின்றன

குழுமம் / தனி உரிமையாளர்

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

Free-to-air terrestrial

நிறுவுனர்

இலவசம் சேவை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

ராஜேந்திரம் மகாராஜா மற்றும் ராஜேந்திரம் ராஜ மகேந்திரன் ஆகியோர் சிரச டிவி யின் ஸ்தாபகர்களும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன ஸ்தாபகர்களுள் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகன்களுமாவர். ராஜேந்திரம் மகாராஜா 'வட்டி' என்ற சொந்த இலச்சினையைக் கொண்ட ஒரு தொழில்முயற்சியாளரும் ஹில்ட்டன் ஓட்டலின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியவருமான பத்மா மகாராஜாவை மணமுடித்தார். அவர் 2016 ஆம் ஆண்டில் காலமானார். ராஜேந்திரம் ராஜமகேந்திரன் கனிஸ் ராஜேந்திரத்தை மணமுடித்தார். அவர் இந்நிறுவனத்தின் கீழ்வரும் ஒரு கம்பனியான ரியுமஸ் சலூனின் ஊநுழு ஆவர். இவ் இரு சகோதரர்களும் இந்நிறுவனத்தைப் பொறுப்பேற்ற அதேவேளை ராஜேந்திரம் மகேந்திரராஜா காலப்போக்கில் ஓய்வு பெற்றார். 2018 இல் ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மகன் சசீந்திரன் ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையேரூபவ் ராஜமகேந்திரனின் மகள் அஞ்சலி ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். ராஜேந்திரம்; மகாராஜா மற்றும் பத்மா மகேந்திரன் தம்பதிகளின் மகனாகிய பிரதீப் மகாராஜாவும் இந்நிறுவனத்தில் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். 2015 இல் பிரதீப் மகாராஜா இலங்கை மேர்சண்ட் வங்கியின் (MBSL) பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

சுசாரா டினால் - எம் ரி வி சனல் (பிரைவெட்) லிமிடெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி. முன்னர் சிரச தொலைக்காட்சியின் தலைவராக செயற்பட்டுள்ளார். இவர் கம்பஹா மாவட்டத்தில் மேல் மாகாணசபை தேர்தலில் 2014 ல் போட்டியிட்டார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

ஜி வி பிரகாஷ் அலைவரிசையில் தலைவர்

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

நேற்றா வீரசிங்க - கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் ஊடகத்துறையின் தலைவர். இவர் நிறுவனத்தின் குழுப் பணிப்பாளர். இந்நிறுவனத்தைச் சேர்ந்த நோர்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் மற்றும் றோயல் ஜோர்டானியன் ஆகிய இரண்டு விமான சேவை செயல்பட்டு நிறுவனங்களின் தலைமைப் பணியை ஆற்றியுள்ளார். அத்துடன் கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் வெற்றிகரமான வர்த்தக நிறுவனமான எஸ் லோன் லங்கா வின் தலைமைப் பணியை ஆற்றியுள்ளார்.

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

MBC/ MTV Channels (Pvt) Limited 45/3, Braybrook Place, Colombo-02 Tel : +94112851371 Website: shakthitv.lk

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தரவுகள் மீதான தகவல்கள்

சக்தி ரிவி 1998 இல் ஒளிபரப்பைத் தொடங்கியது. இலங்கையின் மிகப்பெரிய குழுமமான த கெப்பிட்டல் மகாராஜா
ஓகனைஸ்ஷேன் லிமிட்டட்டின் ஓர் அங்கமான எம்ரிவி அலைவரிசை லிமிட்டட்டின் தமிழ் அலைவரிசையாகும். சிங்களமொழி அலைவரிசையான சிரச ரிவியும் சிங்கள மற்றும் ஆங்கில இருமொழி அலைவரிசையான ரிவி 1 ம் சக்தி ரிவியின் சகோதர அலைவரிசைகளாகும். அது ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுள் களிப்பூட்டல், விளையாட்டு, நடப்பு விவகாரங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் ஆகியன அடங்குகின்றன. சக்தி ரிவியில் ஒளிபரப்பப்படும்
களிப்பூட்டல் நிகழ்ச்சிகளுள் பெரும்பாலானவை இந்தியாவின் சன் ரிவி மற்றும் விஜய் ரிவி யில் இருந்து
பெறப்படுபவையாகும். மேலும், சக்தி ரிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் யூப் ரிவி ஊடாக இணையத்தில்
கிடைக்கக் கூடியதாகவுள்ளன.

2009 ஆம் ஆண்டின் ஆரம்பக் காலத்தில் யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் எம்ரிவி அலைவரிசை பிரைவேட் லிமிட்டட் மற்றும் எம்பிசி நெட்வேர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகியவற்றின் வளாகங்கள் அந்நிறுவனங்களின் பணியாளர்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்ததாகவும் பிரதான கட்டுப்பாட்டு அறையை சேதப்படுத்தியதாகவும் கூறப்படும் ஆயுதமேந்திய நபர்களினால் தாக்கப்பட்டன. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவாகிய கிரவுண்ட் வீவ்ஸ்ரூபவ் ப்ரீடம் ஹவுஸ் மற்றும் எல்லைகளற்ற அறிக்கையாளர்கள் (RSF) ஆகியோர் அரசாங்கத்தோடு இணைந்த குழுக்களினால் இத்தாக்குதல் வழிநடத்தப்பட்டதாக கருதினர். எனினும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அத்தகைய குற்றச்சாட்டுக்களை மறுதளித்தார். 2013 ஆம் ஆண்டில் தற்போதைய நிதி மற்றும் வெகுசனஊடக அமைச்சர் மங்கள சமரவீர கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மாத்தறையில் நடைபெற்ற ஒரு இனமோதல் பற்றிய ஒளிபரப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களக்கு ஆத்திரமூட்டியது என்ற காரணத்தின் பேரில் அதன் தலைவரான ஆர்.ராஜமகேந்திரனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றைத் தொடுத்தார். எனினும், மாத்தறை நீதவான் நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. எம்ரிவி அலைவரிசை மற்றும் எம்பிசி நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டட் ஆகியவற்றின் வளாகங்கள் இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பட்டதைத் தொடர்ந்து 2018 ஏப்பிரல் மாதத்தில் பட்டாசுகள் கொழுத்தி தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ