சிலுமின
சிலுமின அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனமான எஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டினால் (ANCL லேக் ஹவுஸ்) வெளியிடப்படும் ஒரு சிங்கள மொழி பத்திரிகையாகும். 1930 தனது வெளியீட்டைத் தொடங்கிய இப்பத்திரிகை தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், விளையாட்டு, வர்த்தகம் மற்றும் நிதி ஆகிய விடயங்களில் செய்திகளை வழங்குகிறது. 2017 ஆம் ஆண்டிற்கு இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் நடத்தப்பட்ட வாசகர் பற்றிய ஆய்வின்படிரூபவ் இப் பத்திரிகை 1.10 வீத வாசகர்களைக் கொண்டிருக்கிறது. அதன் நாளிதழான தினமின 0.42 வீத வாசகர்களைக் கொண்டிருக்கிறது.
நுகர்வோர் வீதம்
2.65%
உரிமையாண்மையின் வகை
அரசுடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசியம்
உள்ளடக்கத்தின் வகை
சிலுமின அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனமான எஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டினால் (ANCL லேக் ஹவுஸ்) வெளியிடப்படும் ஒரு சிங்கள மொழி பத்திரிகையாகும். 1930 தனது வெளியீட்டைத் தொடங்கிய இப்பத்திரிகை தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
அசோசியேட்டட் நியூஸ்பேப்பேர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டட் (லேக் ஹவுஸ்)
உரிமையாண்மைக் கட்டமைப்பு
தகவல் பொதுவில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது
குழுமம் / தனி உரிமையாளர்
தரவுகள் கிடைக்க வில்லை
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்குச் சொந்தமான பொது நம்பிக்கைப் பொறுப்பு 1922ம் ஆண்டு 1ம் இலக்க பொது நம்பிக்கைப் பொறுப்புச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. இது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின்கீழ் உள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பாராளுமன்றத்தில் 1961ம் ஆண்டு 28ம் இலக்கக் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இது .இலங்கையின் தேசிய எண்ணெய் மற்றும் வாயு நிறுவனமாக விளங்குகின்றது
1.75
இலங்கை வரையறுக்கப்பட்ட கப்பல் கூட்டுத்தாபனம் 1971ம் ஆண்டு 11ம் இலக்கக் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும், 1992ல் தான் அரசாங்கத்தின் முழு உடைமையானது.
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1930
நிறுவுனரின் ஈடுபாடுகள்
டீ.ஆர். விஜேவர்தன என்றும் குறிப்பிடப்படும் டொன் ரிச்சட் விஜேவர்தன லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை தாபித்து இலங்iகையின் சுதந்திர போராட்ட இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். அவர் இலங்கை தேசிய சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் 1913இல் அரசியல் அரங்கில் பிரவேசித்தார். 1914 இல்,
விஜேவர்தன தனது சகோதரனோடு சேர்ந்து ஒரு சிங்கள மொழிப் பத்திரிகையான தினமினவை பெற்றுக் கொண்டதோடு, அதன்பின்னர் ஆங்கில மொழி நாளிதழான த சிலனீஸ் பத்திகையைக் கையேற்று, அதனை 'சிலோன் டெயிலி நியூஸ்' என்று பெயர் மாற்றினார். இதனைத் தொடரந்து ஒரு தமிழ் மொழி நாளிதழான தினகரன் வெளியிடப்பட்டது. 1926 இல், இப் பத்திரிகைகள் அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டின் (ANCL) கீழ் வலுப்படுத்தப்பட்டன. இந்நிறுனம் தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமாக உள்ளதோடு, டெயிலி நியூஸ், தினமின, தினகரன், றேசா, சண்டே ஒப்சேவர், சிலுமின மற்றும் வார மஞ்சரி என்ற ஏழு பத்திரிகைகளை வெளியிடுகிறது.
பின்வரும் பிரபல பேராளர்கள் விஜேவர்தனவிற்கு உறவினர்களாவர்:
ரஞ்சித் விஜேவர்தன டீ.ஆர். விஜேவர்தனவின் மகனும் விஜேய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபகரும் அதன்
CEO வுமாவார்.
ருவான் விஜேவர்தன டீ.ஆர். விஜேவர்தனவின் பேரனும் தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமாவார்.
ரணில் விக்கிரமசிங்கவும் டீ.ஆர். விஜேவர்தனவின் பேரனாவார். அவர் இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரியும் ஐதேக இன் தலைவருமாவார். ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரர் ஷான் விக்கிரமசிங்க ஒரு ஊடக கம்பனியான டெல்சான நெட்வேர்க் (பிறைவேட்) லிமிட்டெட்டின் (TNL) தலைவராவார்.
உப்பாலி விஜேவர்தன டீ. ஆர். விஜேவர்தனவின் மருமகன் என்பதோடு, உப்பாலி நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபகருமாவார்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
கிறிசாந்த குரே என்றும் குறிப்பிடப்படும் கிறிசாந்த பிரசாந்த குரே அஸ்சோசியேட்டட நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டின்( லேக் ஹவுஸ் என்றும் குறிப்பிடப்படும் ANCL) தற்போதைய தலைவராவார். முன்னதாக
அவர் செலிங்கோ குழுமம், ரிச்சட் பீறிஸ் குழுமம் மற்றும் அக்கம்பனியின் தொலைக்காட்சி மற்றும் வானொலி
நிலையங்களில் ஒளிபரப்பட்ட செய்திகளை மேற்பார்வை செய்த கெப்பிட்டல் மஹாராஜா ஓர்கனைசேஷன் லிமிட்டெட் ஆகியவற்றில் நிறைவேற்றுப் பதவிகள் வகித்தார். ரிச்சட் பீறிஸ் குழுமத்தின்கீழ் ரிவிரெச ஊடக கூட்டுத்தாபன (பிறைவேற்) லிமிட்டெட்டை நிறுவுவதில் அவர் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுவதோடு,அதில் ஸ்தாபக பணிப்பாளராகவும் CEO வாகவும் பணியாற்றினார். த நேஷன் மற்றும் ரிவிர பத்திரிகைகள் அவரது
வழிகாட்டலின்கீழ் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், ரிவிர 2017 இல் அதன் ஆங்கில மொழிப் பத்திகையான த
நேஷனின் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
சமிந்த வாரியகொட
தொடர்பு
Associated Newspapers of Ceylon Limited
No. 35, D.R. Wijewardena Mawatha, Colombo 10
General: 011 2 429 429, 011 2 421 181, 011 2 331 181
Email: info@lakehouse.lk
Website: www.silumina.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்திடமிருந்து (LMRB)
பெற்றுக்கொள்ளப்பட்டன. அது சிலுமின ( வாரப் பத்திரிகை) மற்றும் தினமன ( நாளிதழ்) ஆகியவற்றின் மொத்தத்
தொகையாகும். புங்குதாரர்பற்றிய தகவல்கள் கம்பனினக் பதிவாளர் திணை;க்களத்தில் இருக்கும் வருடாந்த
ரிட்டேர்ன்களிலிருந்து பெறப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி எஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.