சன்டே ரைம்ஸ்
த சண்டே டைம்ஸ் (த டிவி டைம்ஸ்), பண்டே டைம்ஸ், மிரர் மெகசின், ஹிட் அட் மற்றும் எஸ்டி அப்பொயின்மென்ட்ஸ் ஆகிய ஐந்து இலவச இணைப்புகளை உள்ளடக்கி ஆங்கில மொழியில் வெளியிடப்படும் ஒரு வாரப் பத்திரிகையாகும். அது டெய்லி மிரர் மற்றும் டெய்லி பினான்சியல் டைம்ஸ் போன்ற பல ஆங்கில மொழி பத்திரிகைகளையும் வெளியிடும் விஜய நியூஸ்பேப்பஸ் லிமிட்டடினால் 1997இல் முதன் முதலாக வெளியிடப்பட்டது. இந் நிறுவனத்தின் சிங்கள மொழி வெளியீடுகளுள் லங்காதீப, இரிதா (ஞாயிறு) லங்காதீப மற்றும் தருனய ஆகியன அடங்கும். இதனிடையே அதன் தமிழ் மொழி வெளியீடுகளுள் தமிழ் மிரர், பினான்சியல் டைம்ஸ் நாளிதழ் மற்றும் வார இதழ் மற்றும் விஜய் ஆகியன அடங்குகின்றன. த சண்டே டைம்ஸ் .73 வீத வாசகர்களைக் கொண்டிருக்கையில், அதன் நாளிதழான டெய்லி மிரர் 0.31 வீத வாசகர்களைக் கொண்டிருக்கிறது.
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபகராக இருப்பதோடு, ரஞ்ஜித் விஜேவர்தன இந் நிறுவனத்தின் தலைவர்
மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் இருக்கிறார். உபாலி விஜேவர்தனவினால் தாபிக்கப்பட்ட உபாலி
நியூஸ்பேப்பஸ் லிமிட்டடோடு சேர்ந்து விஜய நியூஸ்பேப்பஸ் லிமிட்டட் இலங்கை அச்சு ஊடகத்தில் கணிசமானதோர் இடத்தை பிடித்துள்ளது.
நுகர்வோர் வீதம்
0.88%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசியம்
உள்ளடக்கத்தின் வகை
கட்டணம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
கோரிக்கையின் அடிப்படையில் தகவல் வெளிப்படுத்தல்
வாக்களிக்கும் உரிமை
இந் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமையானது பங்காளர்கள் வைத்திருக்கும் பங்குகளின் அளவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ரஞ்சித் விஜேவர்த்தன – 89.99 வீதம், சுஜான் விஜேவர்த்தன - 10 வீதம், ருவான் விஜேவர்தன – 0.0002 வீதம், இருசி நீலா புலத்சிங்கள – 0.0002 வீதம், ரஞ்சினி நீலா விஜேவர்த்தன – 0.00023 வீதம், சாரதி லிமிடட் - 0.0002 வீதம், ஆனந்தி பாலசிங்கம் - 0.0002 வீதம்
குழுமம் / தனி உரிமையாளர்
ரஞ்சித் விஜேயவர்தன என்றும் குறிப்பிடப்படும் ரஞ்சித் சுஜீவ ஜேயவர்தனதான் விஜேய பத்திரிகை லிமிட்டெட்டின் தலைவராவார் என்பதோடு அக்கம்பனியில் 89.99 வீத பங்குகளுக்குச் சொநதக்காரராவார். அவர் இலங்கைப் பத்திரிகைச் சங்கத்தின் தற்போதைய தலைவராவார். WNL இல் பங்குகளைக் கொண்டிருப்பதற்கு மேலதிமாக ரஞ்சித் அரசுக்குச் சொந்தமான எஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் 0.57 வீத பங்குகளையும் கொண்டிருக்கிறார். #
இருஷி நீலா புளத்சிங்கள (கன்னிப் பெயர் விஜேவர்தன) WNL இனால் நிருவகிக்கப்படும் ஓர் ஆங்கில மொழி பத்திரிகையான டெய்லி மிரரில் ஒரு துணை பத்திரிகை ஆசிரியராகவும் சிறப்பம்சங்கள் பத்திரிகையாசிரியராகவும் செயல்படுகிறார். ரஜனி சேனாநாயக்க என்றும் எழுதப்படும் ரஜினி நீலா சேனநாயக்க ரஞ்சித்தின் மனைவி என்பதோடு, WNL இல் 0.002 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். #
1979 இல் தாபிக்கப்பட்ட சாரதி லிமிட்டட் ரஞ்சித் மற்றும் ரஜினி விஜேவர்தன ஆகியோருக்குச் சொந்தமான ஓர் ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனமாகும். தற்போது இக்கம்பனி WNL இல் 0.002 வீத பங்குகளைக் கொண்டிருக்கிறது. அனந்தி பாலசிங்கம் எஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பரஸ் ஒப் சிலோன் லிமிட்டெட்டினால் வெளியிடப்படும் தினகரன் நாளிதழ் மற்றும் வாராந்த சஞ்சிகை ஆகியவற்றின் பிரதி பத்திகையாசிரியராகவும் வியாபர
பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றினார். 2008 இல், சாரதி லிமிட்டின் ஒரு சொத்து முகாமையாளரராக அனந்தி நியமிக்கப்பட்டதோடு WNL இன் ஒரு பங்குதாரராகவும் இருக்கிறார்.
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1996
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ரன்ஜித் விஜேவர்தன என்றும் அழைக்கப்படும் ரன்ஜித் சுஜீவ விஜேவர்தன அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்(லேக் ஹவுஸ் என்றும் அறியப்படும் ANCL) 1973 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தினால் தேசியமயமாக்கப்பபடுவதற்கு முன்னர் 1926 இல் அதனை நிறுவியவரான இலங்கை ஊடக உரிமையாளர் டீ.ஆர். விஜேவர்தனவின் மகனாவார். ரஞ்சித் விஜய நியூஸ்பேப்பரஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபக தலைவராக செயற்படுவதோடுரூபவ் அதன் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருப்பவராகவும் உள்ளார். இக் கம்பனி விஜய பப்ளிகேஷன்ஸ் லிமிட்டெட் என்ற பெயரில் 1979 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதெனினும், 1986 லில் அது ஞாயிறு லங்காதீப வார பத்திரிகையையும் அதன் பின்னர் 9991 இல் லங்காதீப நாளிதழையும் வெளியிடத் தொடங்கியது. ரன்ஜித் ANCL இல் 0.57வீத பங்குகளையும் கொண்டிருக்கிறார். விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் தலைவர் பதவியை வகிப்பது மாத்திரமின்றி, ரன்ஜித் லேக்ஹவுஸ் பிறிண்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் லிமிட்டெட்டில் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும், லேக்ஹவுஸ் புக்ஷொப் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும், எல்எச் பிளாண்டேஷன் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும், ரன்வெளி ஹெலிடே வில்லேஜ் லிமிட்டெட்டில் தலைவராகவும், சாரதி லிமிட்டெட்டில் தலைவராகவும், ஸ்டேம்போட் லேக் (பிறைவேட்) லிமிட்டெட்டில் தலைவராகவும், விஜய கிராபிக் லிமிட்டெட்டில் தலைவராகவும் அத்துடன் இலங்கை பத்திரிகைச் சங்கத்தில் தலைவாராகவும் இருக்கிறார். ரஞ்சித் புரூயஅடன்பேக் எண்ட் கம். (சிலோன்) லிமிட்டெட்டினதும் ஆர்.எஸ். பிறிண்டெக் (பிறைவேட) லிமிட்டெட்டினதும் தலைவராகவும் உள்ளார்.
உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் ஸ்தாபகரான உப்பாலி விஜேவர்தன ரஞ்சித்தின் மாமனாவார். இதனிடையே இலங்கையின் தற்போதைய பிரதமந்திரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக) தலைவருமாகிய ரனில் விக்கிரமசிங்க ரஞ்சித்தின் மருமகனாவார்.
ரஞ்சித் விஜேவர்தன இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகவிருந்த டீ. எஸ் சேனாநாயக்கவின் பேத்தியான ரஞ்சித் நீலா சேனாநாயக்கவை மணமுடித்தார். ரஞ்சித்தின் ஏனைய குறிப்பிடத்தகுந்த குடும்ப உறுப்பினர்களுள் இலங்கையின் இரண்டாவது பிரதம மந்திரியான டட்லி சேனாநாயக்க (மாமனார்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க ஆகியோர் அடங்குவர். ரஞ்சித்திற்கு தற்போதைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் விஜேவர்தன குழுமத்தோடு இணைந்துள்ள ஒரு கம்பனியான லேக் ஹவுஸ் பிறிண்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் லிமிட்டெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சுஜான் விஜேவர்தன அடங்கலாக மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
ரஞ்சித் சுஜிவ விஜேவர்தன, லங்காதீப பத்திரிகையைப் பிரசுரிக்கும்விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் தலைவராக செயற்படுகின்றார் (மேலும் படிக்க மேலே பார்க்கவும்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
சிங்க ரணதுங்க - இவர், சன்டே ரைம்ஸ் பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியராக செயற்படுகின்றார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
பராக்கிரம சுஜான் விஜேவர்த்தன – (சுஜான் விஜேவர்த்தன என அறிய்படுபவர்) விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் உப தலைவராவுள்ளதுடன் இந் நிறுவனத்தின் 10 வீத பங்குகளின் உரிமையாளர்
டினேந்திரா ருவான் விஜேவர்த்தன – (ருவான் விஜேவர்த்தன என அறிய்படுபவர்) சுஜான் விஜேவர்த்தனவின் சகோதரர். தற்போதைய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர். இவர், விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் தலைவரின் ஆலோசகராகவும் தனிப்பட்ட உதவியாளராகவும் செயற்படுகின்றார். இவர், விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் 0.002 வீத பங்குகளின் உரிமையாளர்
தொடர்பு
Wijeya Newspapers Limited
No. 08, Hunupitiya Cross Road, Colombo 2
Editor (Print) contact: +94 112 331276
Timesonline team contact: +94 112479341
Email: editor@sundaytimes.wnl.lk, timesonline@sundaytimes.wnl.lk
Website: www.sundaytimes.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஸ்தாபக வருடம் பற்றிய விபரம் அந் நிறுவனத்தின் முகநூல் பக்கத்திலிருந்து
பெறப்பட்டது. இதனிடையே, சண்டே டைம்ஸ் பததிரிகையின் உத்தியோகபூர்வ வலைத்தளம் ஒரு செய்திப் பக்கமாக மட்டுமே செயற்படுகிறது. எனவே, இந் நிறுவனம் மற்றும் அதன் முக்கிய நபர்கள் பற்றிய தகவல்கள் இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி விஜய நியூஸ்பேப்பஸ் லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 17 ஆம் திகதி பதிலளித்தது. கிடைக்கப்பபெற்ற பதிலிலிருந்து வழங்கப்பட்ட சந்தை பங்குவீதத்தை (75%) கணிப்பிட்டு அறிந்துகொண்டமைக்கு பயன்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இக்குழுவிற்கு இல்லாததால் குழுவினால் அவ் வீதத்தை பயன்படுத்த முடியாதிருந்தது. எனினும், நிறுவன கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் கம்பனியினால் வழங்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டதோடு, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017ஆம் ஆண்டுக்கான வாசகர் தொகை பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்திடமிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அது, சண்டே டைம்ஸ் மற்றும் டெய்லி மிரர் பத்திரிகைகளின் மொத்தத் தொகையாகும்.