தினக்குரல்
தினக்குரல் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவேட்) லிமிட்டெட்டினால் நிருவகிக்கப்படும் ஒரு தமிழ் பத்திரிகையாகும. அது, கொழும்பு நகரிலிருந்து தின மற்றும் வாரப த்திரிகைகளை வெளியிடுகிறது. இப் பத்திரிகைசெய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய விடயங்களில் செய்திகளைத்தருகின்றது. மேலும், இக் கம்பனி யாழ் தினக்குரல் என அழைக்கப்படும் இன்னொரு நாளிதழை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடுகிறது. இதனிடையே அதன் வெளியீடான உதய சூரியன் இலங்கையின் மலையகப் பகுதியில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. புதன் கிழமைகளில் ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஜுனியர் ஸ்டார் என்ற தலைப்பில் ஓர் ஆங்கில மொழி இலவச இணைப்பை வழங்குகிறது. இவற்றைத் தவிர, இக் கம்பனி அழகி என்ற தலைப்பிலான ஒரு சஞ்சிகையை வாரம் இரு முறையும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சைகளுக்கு முன்னர் கல்விக் குரல் என்ற பெயரில் ஒரு கல்வி இலவச இணைப்பையும் வெளியிடுகிறது.
நுகர்வோர் வீதம்
1.02%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசியம்
உள்ளடக்கத்தின் வகை
கட்டணம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
வீரா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
கோரிக்கையின் அடிப்படையில் தகவல் வெளிப்படுத்தல்
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1997
நிறுவுனரின் ஈடுபாடுகள்
செல்லையா பொன்னுசாமி - தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர். இவர், ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டடின் பகுதிப் பங்குதாரராகிய வீரா ஹோல்டிங்ஸ் இந்நிறுவனத்தின் 76 வீத பங்குகளைக் கொண்டுள்ளார்
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
பொன்னுசாமி கேசவராஜா ஏசியன் மீடியா பப்பிளிகேஷன் பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளராகவுள்ளார். இவர், செல்லையா பொன்னுசாமி - வீரலட்சுமியின் புதல்வர்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
ஆர். பி ஹரன் தினக்குரல் தின பத்திரிகையின் பிரதான பத்திரிகையாசிரியர்
பிரபாகர் - தினக்குரல் வாரப் பத்திரிகையின் பிரதான பத்திரிகையாசிரியர்
ஏனைய முக்கிய நபர்கள்
குமார் நடேசன் என அறியப்படும் சிவகுமார் நடேசன் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் அதன் மிகப்பெரிய பங்குதாரராகவுள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் (சிலோன்); (பிரைவெட்); லிமிட்டட் ஆகியவற்றின் பங்குதாரராகவுள்ளார்.
தொடர்பு
Asian Media Publications (Pvt) Limited
No. 68, Ellie House Road, Colombo 15
Tel: +94 11 777 8754, + 94 11 7778 764
Website: thinakkural.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
தினக்குரல் பத்திரிகை மற்றும் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட் ஆகிய நிறுவனத்தினுடைய ஸ்தாபிப்பு தொடர்பான வெளிப்படையான தகவல்கள் இந்நிறுவனங்களின் சமூக ஊடகங்களில் காணப்படவில்லை. உரிமையாண்மை தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டன. இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து (LMRB) தினக்குரலின் வாசகர் எண்ணிக்கை பற்றிய 2017ம் ஆண்டிற்குரிய தகவல்கள் பெறப்பட்டன. ஜுலை மாதம் 20ம் திகதி 2018 அன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாண்மை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர், ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டை அணுகிய நிலையில், அந்நிறுவனம் 25 ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2018 அன்று பதிலளித்தது.