உதயசூரியன்
ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் இனால் வெளியிடப்படும் உதயசூரியன் மலையகத்தில் உள்ள
மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தமிழ் மொழியில் வெளிவரும் ஒரு வாரப் பத்திரிகையாகும். அதன் செய்தி வழங்கல் பிரதானமாக பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கை முறை, அரசியல் விவகாரங்கள் மற்றும் போராட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் 59.99 வீத பங்குகளைக் கொண்டு ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டில் மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. உதயசூரியன் ஓர் உத்தியோகபூர்வ வலைத் தளத்தைக் கொண்டிருக்காத அதேவேளை, முகநூல் பக்கத்தின் வாயிலாக அவர்கள் இணையத்தில் இயங்குகின்றனர்.
நுகர்வோர் வீதம்
0.79%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசியம்
உள்ளடக்கத்தின் வகை
கட்டணம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
வீரா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
கோரிக்கையின் அடிப்படையில் தகவல் வெளிப்படுத்தல்
வாக்களிக்கும் உரிமை
பங்குதாரர்கள் மாத்திரம் வாக்களிக்கமுடியும்
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2010
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட் லிமிட்டட்) தினக்குரல் மற்றும் உதயசூரியன் பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிடுகின்றது. இந்நிறுவனம், வீரகேசரி பத்திரிகையைப் பிரசுரிக்கும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டடின் கீழ் செயற்படுகின்றது.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
முருகேசு செந்தில்நாதன் - இவர், ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டடின் அதிகூடிய பங்குதாரராகிய எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் (சிலோன) (பிரைவெட்) லிமிட்டடின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவார். பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியுயர்வு பெற முன்னர், இவர், இந்நிறுவனத்தின் வியாபார அபிவிருத்தி முகாமையாளராக செயற்பட்டார். இவருக்கு, மத்திய மாகாணக் கல்வி அமைச்சினால் 'சாகித்யா' (இலக்கிய) விருது வழங்கப்பட்டது.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
பாரதி ராஜேன்றகுமார் - இவர், உதயசூரியன் பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியராக செயற்படுகின்றார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
பொன்னுசாமி கேசவராஜா ஏசியன் மீடியா பப்பிளிகேஷன் பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளராகவுள்ளார். இவர், செல்லையா பொன்னுசாமி - வீரலட்சுமியின் புதல்வர்.
தொடர்பு
Asian Media Publications (Pvt) Limited
No. 68, Ellie House Road, Colombo 15
Tel: +94 11 777 8754, + 94 11 7778 764
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
உதயசூரியன் பத்திரிகைக்கு ஓர் உத்தியோகபூர்வ வலைத்தளம் இல்லை. எனினும், ஒரு முகநூல் பக்கத்தையே பேணுகின்றது. எனவே தகவல்கள் சம்பந்தப்பட்ட முகநூல் பக்கம், ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் இனால் வழங்கப்பட்ட பதில் ஆகியவற்றிலிருந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அக்கம்பனியைத் தொடர்புகொண்டும் பெற்றுக்கொள்ளப்பட்டன. பங்குதாரர்கள் பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெறப்பட்டன. கிடைக்கக் கூடிய மிக அண்மையத் தரவுகள் 2018 ஆம் ஆண்டிற்கானதாகும். 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 25 ஆம் திகதி பதிலளித்தது.