வீரகேசரி
எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டடிற்குச் சொந்தமான வீரகேசரி, இலங்கையில் மிக அதிகமான வாசர்களைக் கொண்ட மிகப் பழமைவாய்ந்த தமிழ் மொழி ய்திப்பத்திரிகையாகும். நாளாந்த மற்றும்வாராந்த வீரகேசரிப் பத்தரிகைகள் உள்நாட்டுச் செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, வர்த்தகம், வெளிநாட்டுச் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் ஆகிய தலைப்புகளில் செய்திகளை வெளியிடுவதோடு, முறையே 0.93 மற்றும் 3.67 வீதமான வாககர்களைச் சென்றடைகின்றன. எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டட் கலைக்கேசரி, சுகவாழ்வு, வண்ணவானவில், மெட்றோ நியூஸ், விடிவெள்ளி, சூரியகாந்தி, டெயிலி எக்ஸ்பிறஸ், (ஆங்கிலம்), வீக்லி எக்ஸ்பிறஸ் (ஆங்கிலம்) மற்றும் மித்திரன் ஆகிய பத்திரிகைகளையும் கொண்டுள்ளது. சூரியகாந்தி முக்கியமாக இலங்கையின் மலையகம் தொடர்பான செய்திகளைத் தருகிறது. இதனிடையே, விடிவெள்ளி முஸ்லிம்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. தினக்குரலும் உதயசூரியனும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டடிற்குப் பகுதியளவு சொந்தமான பத்திரிகைகளாகும். ஆங்கில மொழிப் பத்திரிகைகளான டெயிலி எக்ஸ்பிறஸ் மற்றும் வீக்லி எக்ஸ்பிறஸ் மற்றும் தமிழ் மொழிப் பத்திரிகையான தழிழ் டைம்ஸ் ஆகியன வெளிநாடுகளில் வெளியாகின்றன. தமிழ் டைம்ஸ் கட்டாரில் வெளியிடப்படுகின்றது. இது பஹ்ரேனிலும் கிடைக்கிறது.
நுகர்வோர் வீதம்
4.6%
உரிமையாண்மையின் வகை
தனியாருடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசியம்
உள்ளடக்கத்தின் வகை
கட்டணம்
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
கோரிக்கையின் அடிப்படையில் தகவல் வெளிப்படுத்தல்
வாக்களிக்கும் உரிமை
பங்குதாரர்கள் மாத்திரம் வாக்களிக்கமுடியும்
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
ஞாயிறு வீரகேசரி 1930லும் வீரகேசரி தினப்பதிப்பு 1947லும் ஆரம்பிக்கப்பட்டன
நிறுவுனரின் ஈடுபாடுகள்
பி.பி.ஆர் சுப்பிரமணியம் செட்டியார் இந்தியாவின் தமிழ் நாடு ஆவனிப்பட்டி கிராமத்திலிருந்து வந்த ஒரு
தொழில்முயற்சியாளரும் பத்திகையாளருமாவார். இந்தியாவிலிருந்து பிரித்தானிய கொலனியான இலங்கைக்கு வந்து இந்தியத் தொழிலாளர்களின் நிலைமையை கண்ட அவர் அவர்களுக்கு நீதியையும் சமத்துவத்தையும் மேம்படுத்துவதற்காக ஒரு செய்திப் பத்திரிகையை தாபிக்கத் தீர்மானித்தார். எனவே, 1930 இல் சுப்பிரமணியம் வீரகேசரியைத் தாபித்து அதன் பிரதம பத்திரிகையாசிரியராகப் பணியாற்றினார். மேலும், சுப்பிரமணியம் மலேசியாவில் இறப்பர் தோட்டங்களைத் தாபித்ததோடு, சிங்கப்பூரில் காணி சொத்துகளில் முதலீடு செய்தார்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
முருகேசு செந்தில்நாதன் - இவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியுயர்வு பெற முன்னர், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டடின் வியாபார அபிவிருத்தி முகாமையாளராக செயற்பட்டார். இவருக்கு, மத்திய மாகாணக் கல்வி அமைச்சினால் 'சாகித்யா' (இலக்கிய) விருது வழங்கப்பட்டது
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
எஸ். ஸ்ரீகஜன் - வீரகேசரி தினப்பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியராக செயற்படுகின்றார். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும், செயலளராகவும் பொருளாளராகவும் செயற்பட்டுள்ளார்
ஆர். பிரபாகன் - வீரகேசரி ஞாயிறு பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியராக செயற்படுகின்றார். இவர், 2012ல் Editors’ Guild of Sri Lanka வின் பொருளாளராக செயற்பட்டுள்ளார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
குமார் நடேசன் என அறியப்படும் சிவகுமார் நடேசன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தற்போதைய தலைவராகவுள்ளதுடன் இலங்கை பத்திரிகைக் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அத்தடன், இவர் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். நடேசன், ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் (சிலோன்) (பிரைவெட்); லிமிட்டட் ஆகியவற்றின் பணிப்பாளராகவுமுள்ளார்.
தொடர்பு
Express Newspapers (Ceylon) (Pvt) Limited
No. 185, Grandpass Road, Colombo 14
Tel: +94 11 732 2700, +94 11 732 2777
Website: www.virakesari.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
| | http://www.ft.lk/article/29322/Virakesari-marks-80-years-in-print | Virakesari marks 80 years in print by the Daily FT (2011), Accessed on 20 September 2018 # | | http://srilankabrief.org/2017/01/virakesari-calls-for-jallikattu-type-world-wide-struggle-to-promote-sri-lankan-tamil-cause/ | Virakesari calls for Jallikattu type worldwide struggle to promote Sri Lankan Tamil Cause by Sri Lanka Brief (2017), Accessed on 20 September 2018
ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்
வீரகேசரி பத்திரிகை மற்றும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின்
உத்தியோகபூர்வ வலைத்தளம் அப்பத்திரிகையின் ஸ்தாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவன கட்டமைப்பு ஆகியனபற்றிய எவ்வித விபரங்களையும் தருவதில்லை. எனவே, இரணடாம் நிலை மூலங்களும் கம்பனியினால் வழங்கப்பட்ட பதில்களும் இவ்வாராய்ச்சி நடைமுறையின்போது உசாத்துணைகளாகப் பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டேர்ன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அவை வீரகேசரியின் வார மஞ்சரி மற்றும் நாளிதழ் ஆகியவற்றின் தொகையாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட 20 ஆம் திகதி பதிலளித்தது.