This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/12/09 at 13:56
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

அரசியல்

இலங்கை  1948 ஆம் ஆண்டு பிரித்தானியரிடமிருந்து சுதநதிரம் பெற்ற ஒரு பாராளுமன்ற ஜனநாயகமாகும்.  எனினும், 1972 ஆம் ஆண்டுவரை,  அது ஐக்கிய இராச்சியத்தின்  பாராளுமன்றக் கட்டமைப்பைப் பிரதிபலிக்கும் ஒரு  டொமினியன் அந்தஸ்துடைய  அரசாகவே இயங்கியது.  நாட்டின் தற்போதைய அரசாங்கக் கட்டமைப்பின் பெரும்பகுதி  இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசைத்  தாபித்த  1978  ஆண்டு அரசியலமைப்பில்  விளக்கபபட்டுளள்ன. 

இலங்கையின்   ஆட்சிக் கட்டமைப்பினுள்  மத்திய அரசாங்கம்  பாராளுமன்றத்தினாலும்  ஓர் அமைசச்சரவையினாலும் வழிநடத்தபப்டுகின்றது.  தற்போது,  பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; அமைச்சரவை  42 உறுப்பினர்களைக் கொண்டமைந்துள்ளது. இதனிடையே, மாகாண சபைகளும்  உள்ளுர் அதிகார சபைகளும்  உப தேசிய மட்டத்தில்  பரவலாக்கப்பட்ட அல்லது பகிர்ந்தளிக்கப்பட்ட  அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றன. 

ஒரு முக்கிய ஜனாதிபதித் தேர்தலாகக் கருதப்பட்ட  தேர்தலில்  மைத்திரிபால சிறிசேன  2015 இல்  நாட்டின்  ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 'நல்லாட்சி' என்ற கருவூலத்தை அடிப்படையாகக்கொண்டு  அவருடைய அரசாங்கம்  முன்னைய ஆட்சியிலிருந்து  ஒரு  கணிசமான மாறுபட்டை  ஏற்படுத்த  சித்தங் கொண்டிருந்தது.  குறிப்பாக,  அவரது தேர்தல் விஞ்ஞானபனம்    அரச ஊடகம்  ஆளும் கட்சிக்கு  ஒரு  பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்துவதன்மூலம்  ஊடகம் 'ஒரு  சமனான சேவையை' வழங்குவதற்கான  ஒரு பின்புலத்தை  ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தது. பல பத்திரிகையாளர் கடத்தல்கள் மற்றும் ஊடக அச்சுறுத்தல் சம்பவங்கள்  முன்னயை  அரசாங்கத்தில் நிரம்பிக் காணப்பட்டமையினால் இதற்கு பொதுவான  நன்னம்பிக்கை உணர்வு  கிடைத்ததது. 

எப்படி இருந்த போதிலும், அரசுக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்கள், அரசியல்மயப்படுத்தப்பட்ட செய்திகளை அல்லது ஆளும்தரப்பினர் கூறும் விடயங்களைப் பிரசுரிப்பதற்கு எதிராக விமர்சனங்களை எதிர்கொண்டன.உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்புள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினுடையவை எனக் கூறப்படும் தொழிற்ச்சங்கங்களால் அரச ஊடக நிறுவனங்கள் 2018 ஒக்டோபர் 26 அன்று திடீரென கைப்பற்றப்பட்டன. இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவியிலிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள், நாடாளுமன்றத்தை நவம்பர் 14 ம் திகதிவரை ஒத்திவைக்கும் வர்த்தமானியை 4ம் திகதி வெளியிட்டதுடன் நவம்பர் 9 ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஜனாதிபதியின் நாடாளுமன்றக்  கலைப்பு சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் டிசம்பர் 13 அன்று ஏகமனதாக தீர்ப்பளித்தது. டிசம்பர் 16ம் திகதி, ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்தார். அத்துடன்,51 நாள் அரசியல் நெருக்கடி நிறைவுக்கு வந்தது.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கையின் பத்திரிகை சுதந்திரம்  உலக  பத்திரிகை சுதந்திர சுட்டியல்  24 இடங்கள் முன்னேறியது.  2015 இல்,  நாடு இச்சுட்டியில் 141 ஆம் இடம் வகித்தது. இன்று,  அது 131 இடம் பெற்றுள்ளது.

அரசுககுச் சொந்தமான  ஊடக நிறுவனமெனும் எண்ணக்ககரு    இந்நாட்டில் முற்றிலும் புதியதொன்றல்ல. உதாரணமாக, ஓர் உள்நாடடு  வெளியீட்டு நிறுவனமான  த அசோசியேட்டட்  நியுஸ்பேப்பர்ஸ் ஒப்  சிலோன்  1873 இல்  தேசிமயமாக்கப்பட்டது.  இன்றுகூட,  லேக் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இந்நிறுவனம்  அரச  உரித்தாண்மையின்கீழ்தான் உள்ளது. 

தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்கள்  எப்போதும்  அரசியல் செல்வாககிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதில்லை.   அரசியல்ரீதியாக செல்சவாக்குமிக்க  குடும்பங்களுககுச் சொந்தமான  வானொலி மற்றும் அச்சு வெளியீடுகள் உள்ளன.    செய்திப் பத்திரிகைகள் மற்றும்  ஒலிபரப்பு  நிறுவனங்கள்  அரசியலவாதிகளோடு வெளிப்டையாக தொடர்புபட்டதாக இல்லாமலிருக்கக்கூடும்.  எனினும்,  அவற்றின் தாய்க் கம்பனிகள் அரசியல்ரீதியாக செல்வாக்குமிக்க  தனிநபர்களின் நெருங்கிய  உறவினர்களுக்குச் சொந்தமானதாக அல்லது  அவர்களால் முகாமைத்துவப்படுத்தப்படுவதாக இருக்கும்.

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ