பொருளாதாரம்
21.4 மில்லியன் மக்கள் தொகையும் 2017 ஆம் ஆண்டில் 4065 அமெரிக்க டொலர் தலா உள்நாட்டு மொத்த உற்பத்தியும் கொண்ட இலங்கை குறை நடுத்தர வருமானமீட்டும் நாடாக இனங்காணப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஆயுத முரண்பாடு முடிவுற்றதிலிருந்து நாட்டின் பொருளாதராம் ஆண்டொன்றிற்கு சராசரியாக 5.8% த்தில் வளர்ச்சியுற்றது. பொருளாதாரம் கிராமிய அடிப்படையிலான பொருளாதாரத்திலிருந்து உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு நகர பொருளதாரமாக மாற்றமடைந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டிற்கென நிர்ணயிக்கப்பட்ட மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகளை (MDG) தாண்டி இலங்கை அதே ஆண்டில் மானுட அபிவிருத்திச் சுட்டியில் 73 வது இடத்தில் இருந்தது.
இலங்கையின் பொருளாதாரத்திற்கான ஊடக பங்களிப்பு தொடர்பாக தகவல்கள் குறைவாக உள்ளன. காலா கால அச்சு வெளியீடொன்றை இலங்கையில் ஆரம்பிப்பது எளிதானகவிருக்க, ஆரம்பித்தல் கட்டணங்கள் இல்லாமை அல்லது தாபிக்கப்பட்டதன் பின்னர் அப்புதிய அச்சுத் ஊடக நிறுவனங்கள்;மீதான வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இந்நிலையங்கள் வர்த்தக உறுதித்ததன்மைப் பிரச்சினைகளில் அவதியுற நேரிடுகிறது. நாட்டிலுள்ள பெரும்பாலான ஊடக நிலையங்கள் செயற்பாட்டு நட்டத்தில் இயங்குகின்ற அதேவேளை, அரச மற்றும் தனியார் துறைகளில் வெளிப்படைத் தன்மையின்மையானது இதனை உறுதிப்படுத்தக்கொள்வதை சிரமமானதாக்கியுள்ளது. இச் செயற்பாட்டு சிரமங்கள் வழக்கமாக வரியிடல் கொள்கை மற்றும் விளம்பர கைத்தொழிலின் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் விளைவாகவே எழுகின்னறன. பல வருடங்களாக, பத்திரிகைத் தாள்களின் அதிக விலை, பல்வேறு இறக்குமதி வரிகள் மற்றும் தமது இயக்கத்தை பாதிக்கும் வேறு வரிகள் முதலிய பிரச்சினைகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
ஊடக நிறுவனங்களுக்கு அக்கைத்தொழிலுக்கென ஏதேனும் விசேட வரிச் சலுகைகள் கிடைப்பதில்லை என்பதோடு, பத்திரிகைத் தாள், அச்சிடும் மை அல்லது ஒலிபரப்பு உபகரணங்கள்மீது முன்னுரிமை இறக்குமதி வரிகள் எதுவும் கிடையாது. எனினும், அரசுக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்கள் அத்தகைய பொருட்களுக்கான விசேட இறக்குமதி வரிச் சலுகைகளிலிருந்து அவ்வப்போது பயனடைகின்றன.
இலங்கையில் அச்சு மற்றும் ஒலிபரப்பு ஊடகங்களுக்கு விளம்பரம் மிகப்பெரிய வருமான மூலமாகத் திகழ்கிறது.; ஊடகங்களில் இலங்கையின் மொத்த விளம்பரம் 2014 ஆம் ஆண்டு அண்ணளவாக இல. ரூபா 77 பில்லியன் என(USD $ 477 mn) நீல்சன் (இலங்கை) மதிப்பிட்டுள்ளார். விளம்பர பொருளாதாரத்தின் ஏறத்தாழ 70% ஐ கட்டுப்படுத்தும் அரசுதான் தனியொரு மிகப்பெரிய விளமபரதாரராவார். அவற்றின் விற்பனை அல்லது வாசகர் எண்ணிக்கை நிலை எவ்வாறிருப்பினும், அரசுக்குச் சொந்தமான அச்சு மற்றும் ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு வரலாற்று ரீதியாக அரச விளம்பரங்களின் கணிசமானதொரு பங்கு கிடைக்கப்பெற்றுள்ளது. முன்னைய அரசாங்கதில் அரசியல்வாதிகளை அல்லது அரசியல் கருத்திட்டங்களை ஊக்குவிக்க அரச நிதிகளைப் பயன்படுத்துதல் முன்னர் கண்டிராத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் தெரிவு செய்யப்பட்டபின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வழக்கத்தை நிறுத்திவிடுமாறு அரச நிறுவனங்களுக்கு ஆணையிட்டார். முன்னதாக, அரசாங்கத்தை எதிர்க்கும் எந்த தனியார் ஊடக நிறுவனமும் அரச விளம்பரப்படுத்தலை இழந்து, ஒர் உறுதியான நிறுவனமாக தனது இருப்பை ஆபத்திற்குள்ளாக்கிக்கொள்ளும் இடரை எதிர்நோக்கவேண்டியிருந்தது. ஆகையால், பெரும்பாலான தனியார் ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்திற்குச் சார்பாக செயற்பட ஊக்குவிக்கப்பட்டன.
மூலம்
Nielsen. Advertising Expenditure- Gain Insight into Ad Spend
Retrieved from Nielsen on 25 July 2018.
Secretariat for Media Reforms. Rebuilding Public Trust- An assessment of the media industry and profession in Sri Lanka. (2016).
Retrieved from Media Support on 25 July 2018.
World Bank in Sri Lanka. Overview.
Retrieved from the World Bank on 25 July 2018.