This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/28 at 21:58
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

வரலாறு

இலங்கையின்  ஊடக  உரித்தாண்மையின், குறிப்பாக அரச ஊடக உரித்தாண்மையின் வரலாறானது,  ஊடக உரித்தாண்மை மற்றும்  உள்ளடக்கம் மீதான  காலனித்துவக் கட்டுப்பாட்டிற்கான ஒரு பதிற்செயற்பாடாக லங்காலோக்க மற்றும்  இலங்கைப் பாதுகாவலன்  முதலிய  சிங்கள மற்றும் தமிழ்  பத்திரிகைகள் தொடங்கிய  பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதி வரை பழமையானதாகும். சுதந்திர இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்  காலப்போக்கில்  அப்போதைய சிலோன் என்ற இலங்கையை  1948 இல்  டொமினியன் அந்தஸ்து பெறுவதற்கு இட்டுச் சென்றன.  1972 இல்,  சிலோன்  ஒரு குடியரசாகி  தனது பெயரை இலங்கை என்று மாற்றிக்கொண்டது.  சுதந்திரத்தின் பின்னர்,  சிங்களத்திலும் தமிழிலும் செய்தி  வழங்கும் ஊடக  நிறுவனங்கள்  அதிகரித்துள்ளன.  காலனித்துவ ஆட்சியாளர்களின்  ஊடக உரித்தாண்மை விமர்சிக்கப்பட்டபோதிலும், சுதந்திரத்திற்குப் பிந்திய அரசாங்கமும்  ஊடகத்தின்மீதான கட்டுப்பாட்டில்  அதேபோன்ற  அரச உரித்தாண்மை  முறைகளையே பின்பற்றியுள்ளது.   

ஊடக சந்தையை ஏகபோகமாக்கி அரசாங்கம்  1960களிலிருந்தே  பிரதான ஊடக நிறுவனங்களை தேசியமயமாக்குவதைநோக்கி முயற்சிகளை மேற்கொண்டது. ஊடகம்மீதான அரச கட்டுப்பாட்டின் போக்கு  1987 இல்  மக்கள் விடுதலை முன்னணி (JVP) என்ற  இடதுசாரி கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது  கிளர்ச்சி  மற்றும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும்  (LTTE) அரசுக்குமிடையிலான  ஆயுதப்  போராட்டம்  ஆகியவற்றினால் ஊடக உரித்தாண்மை என்ற நிலையிலிருந்து  ஒழுங்குவிதிகள் என்ற நிலைக்கு மாற்றமுற்றது. தஈவிபு களினால்  13 அரச படையினர்  கொல்லப்பட்டதனால்  இவ்விரு படைகளுக்குமிடையே  ஆயுத மோதல்  1983 ஜூலை யில் ஆரம்பித்தது. எனினும் இதற்கு முன்னர்  சிங்கள சார்பு மற்றும் தமிழ்சார்பு அரசியல்வாதிகளிடையே 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் அடங்கலாக பல கருத்து முரண்பாடுகள் நிலவின. 26 ஆண்டுகால மிருகத்தனமான ஒரு வன்முறை காலப்பகுதிக்குப்பின்னர் தஈவிபு  2009 மே மாதம்   அரசாங்கத்தினால் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது.  இக்காலப்பகுதியில்  ஊடகத் தனியார்மயப்படுத்தலை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை,  மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியும்  தஈவிபு வுடனான ஆயுத மோதலும்  கூடிய அரச ஓழுங்குவிதிகளுக்கான தேவையை நியாயப்படுத்தும்  சந்தர்ப்பங்களாகின. 

'நல்லாட்சி' என்ற ஆணையோடு  அரசியல் அரங்கில் பிரவேசித்த  தற்போதைய அரசாங்கம்  ஊடாக சுதந்திரம்  உள்ளிட்ட  அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  எனினும்,  உரித்தாண்மை மற்றும் கருத்துக்களின்; பன்மைத்துவமும்  யுத்ததிற்குப் பிந்திய  சூழலிலும்  ஒரு பொருத்தமான  கரிசனையாகவே  உள்ளது.