This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/12/12 at 18:04
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

குறியீடு

ஊடக பார்வையாளர்களின் செறிவு

முடிவு: அதிக ஆபத்து

இலங்கையின் ஊடக தளங்களில் பாவனையாளர்களின் பங்களிப்பினை அடிப்படையாகக் கொண்டு பார்வையாளர்கள் மற்றும் வாசகர்களின் செறிவினை மதிப்பிட இந்த சுட்டி முயல்கின்றது. இலங்கையின் ஊடக சந்தையில் முன்னணியில் உள்ள நான்கு உரிமையாளர்களை பயன்படுத்தி இந்த செறிவூ அளவிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான கந்தர் லங்கா மார்க்கெட் ரிசர்ச் பீரோ (எல்.எம்.ஆர்.பி) வழங்கிய பார்வையாளர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை ஆகியவற்றில் பார்வையாளர்களின் பங்குகளின் மொத்த மதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏன்?

தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகைத் துறையில் பார்வையாளர்களின் அதிக செறிவு காரணமாக இலங்கையின் ஊடக பன்முகத்தன்மைக்கு அதிக ஆபத்து என இந்த சுட்டி மதிப்பிடுகின்றது.

தொலைக்காட்சி

இலங்கையின் தொலைக்காட்சி சந்தையானது அதிக பார்வையாளர் செறிவினைக் கொண்டது. இங்கு நான்கு உரிமையாளர்கள் 77 சதவீதமான பார்வையாளர்களுக்கு சேவைகளை வழங்குகின்றனர். இதில் முன்னணியில் ராஜமகேந்திரன் குடும்பத்தினருக்குச் சொந்தமான கப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் விளங்குகின்றது. கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று தொலைக்காட்சி நிலையங்கள் இலங்கையின் 22.2 சதவீத பாவனையாளர்களுக்கு சேவைகளை வழங்குகின்றன. இதற்கு அடுத்ததாக திலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னான்டோவிற்கு சொந்தமான பவர் ஹவுஸ் விளங்குகின்றது. இரண்டு தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் 19.8 வீதமான பார்வையாளர்களுக்கு சேவைகள் கிடைக்கின்றது. இதேநேரம், ரெய்னர் சில்வாவின் வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒரேயொரு தொலைக்காட்சி நிலையம் மூலம் 18.1 வீத பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. அரசாங்கத்திடம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் கீழ் நான்கு தொலைக்காட்சி நிலையங்கள் இயங்குகின்றன. இவை மூலம், அரசாங்கம் 16.9 வீத பார்வையாளர்களை சென்றடைகின்றது.

தொலைக்காட்சி பார்வையாளர்களின் செறிவு  77 % 
ராஜமகேந்திரன் குடும்பம் 22.22 % கப்பிட்டல் மஹாராஜா நிறுவனம்: 
சிரச தொலைக்காட்சி (15.4 % ), 
சக்தி தொலைக்காட்சி (6.1 %),  
டிவி 1 (0.7 %)
திலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னான்டோ 19.8% பவர் ஹவுஸ்:
தெரண தொலைக்காட்சி (19.5 %), 
அத தெரண 24 / 7 (0.3  %)
ரெய்னர் சில்வா 18.1% ஏ.பி.சி: ஹிரு தொலைக்காட்சி (18.1 %)
அரசாங்கம் 16.9%எஸ்.எல்.ஆர்.சி மற்றும் ஐ.ரி.என்:
ரூபவாஹினி (4.3  %), 
ஐ / நேத்ரா (3.2  %)
ஐ.ரி.என்  (7 % ), 
வசந்தம் தொலைக்காட்சி (2.4 %)

வானொலி

இலங்கையின் வானொலி சந்தையில் 50க்கும் மேற்பட்ட ஒலிபரப்பு நிலையங்கள் இருக்கின்ற போதும், நான்கு உரிமையாளர்கள் மாத்திரமே 74.45 வீதமான நேயர்களைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் சந்தையில் அபாய நிலை காணப்படுகின்றது. ரெய்னர் சில்வாவுக்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சந்தையில் முதல் நிலையில் உள்ளது. சன்ரைஸ் வானொலி குழுமம் என ஆரம்பிக்கப்பட்ட போதும், ஒலிபரப்புத்துறையில் தொடரும் வெற்றியினால் இது தொடர்ந்தும் சில்வாவின் பார்வையின் கீழ் உள்ளது. வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள 5 வானொலி நிலையங்கள் 24.72 வீதமான நேயர்களைக் கொண்டுள்ளன. அதற்கு அடுத்ததாக கப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் 5 ஒலிபரப்பு நிலையங்களைக் கொண்டுள்ளதுடன், 22.76 வீதமான நேயர்களைக் கொண்டுள்ளது. திலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னான்டோவிற்கு சொந்தமான பவர் ஹவூஸ் ஒரேயொரு ஒலிபரப்பு நிலையமான 'எஃப்.எம் தெரண" வைக் கொண்டுள்ள போதும், 14.31 வீதமான நேயர்கiளைக் கொண்டுள்ளது. அதேபோன்று நிஹால் செனவிரத்ன எபாவிற்கு சொந்தமான அசெட் வானொலி ஒரெயொரு ஒலிபரப்பு நிலையத்தைக் கொண்டுள்ள போதும் 12.66 வீதமான நேயர்களைக் கொண்டுள்ளது.

வானொலி நேயர்களின் செறிவு: 74.45 %
ரெய்னர் சில்வா: 24.72 %ஏ.பி.சி: ஹிரு  எஃப்.எம்(10.31% ), சூரியன்  எஃப்.எம்(9.47 %), ஷா   எஃப்.எம்(3.93 %), கோல்ட்  எஃப்.எம்(0.69 %), சன்  எஃப்.எம்(0.32 %)
ராஜமகேந்திரன் குடும்பம்: 22.76 %கப்பிட்டல் மஹாராஜா நிறுவனம்: சிரச எஃப்.எம்(12.88 %),  சக்தி எஃப்.எம்(5.94 %), வை எஃப்.எம்(3.7 %), 
யெஸ் எஃப்.எம்(0.2 %), லெஜன்ட்ஸ் எஃப்.எம்(0.04 %)
திலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னான்டோ: 14.31%பவர் ஹவூஸ்: ஃஎப்.எம் தெரண(14.31 %)
 அசெட் வானொலி ஒலிபரப்பு நிலையம்: நெத் எஃப்.எம்(12.66 %)  

 அசெட் வானொலி ஒலிபரப்பு நிலையம்: நெத் எஃப்.எம்(12.66 %)  

 

பத்திரிகை

இலங்கையின் பத்திரிகைத் துறை பாரியதும், பழமையானதும் மட்டுமன்றி 80 க்கும் அதிகமான பிரசுரங்களைக் கொண்டுள்ளது. இருந்தபோதும் பத்திரிகைத் துறையையும் முக்கியமான நான்கு உரிமையாளர்கள் மாத்திரமே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இவர்களிடம் 75.45 வீதமான வாசகர்கள் உள்ளனர். விஜேவர்த்தன குடும்பத்திற்கு சொந்தமான விஜய பத்திரகை சந்தையில்  முன்னணியில் உள்ளது. 17 பிரசுரங்கள் மூலம் அச்சுத் துறையில் 47.18 வீதமான வாசகர்களைக் கொண்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான பத்திரிகை ஸ்தாபனமான லேக் ஹவூஸ் என அழைக்கப்படும் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (ஏ.என்.சி.எல்) 9.83  வீதமான  வாசகர்களைக் கொண்டுள்ளது. வெல்கம குடும்பத்திற்கு சொந்தமான உபாலி பத்திரிகை 10 வீதமான வாசகர்களைக் கொண்டுள்ளது. அலெஸ் குடும்பத்திற்கு சொந்தமான சிலோன் நியூஸ்பேப்பர்ஸ், நான்கு பிரசுரங்கள் மூலம் 8.44 வீத வாசகர்களைக் கொண்டுள்ளது. முதல் 3 முக்கிய பிரசுர நிறுவனங்களான விஜய பத்திரிகை, ஏ.என்.சி.எல் மற்றும் உபாலி பத்திரிகை ஆரம்பத்தில் விஜேவர்த்தன குடும்பத்தினால் நிறுவப்பட்டதுடன், அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனினும், ஏ.என்.சி.எல் 1972 ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டதுடன், விஜேவர்த்தன குடும்பத்தின் சில உறுப்பினர்கள் இன்றும் அந்த நிறுவனத்தில் குறைந்த அளவிலான பங்குகளைக் கொண்டுள்ளனர்.

பத்திரிகை வாசகர்களின் செறிவு: 75.45 %
விஜய பத்திரிகை: 47.18%
விஜேவர்த்தன குடும்பம்
லேக் ஹவூஸ்: 9.83%
அரசாங்கம்
உபாலி: 10%
வெல்கம குடும்பம்
சிலோன் நியூஸ்பேப்பர்ஸ்: 8.44%
அலெஸ் குடும்பம்
ஞாயிறு லங்காதீப(27.15%), லங்காதீப(5.26%), விஜய(5.95%) சிறிகதா (3.47%), சன்டே ரைம்ஸ் (1.27%), அத (1.19%), விஜே (1.03%), டெய்லி மிரர்(0.55%), டெய்லி குவூ (0.08%), வீக் என்ட் குவூ (0.14%), தருணய (0.31%) தேஷய சன்டே(0.22%), தமிழ் மிரர்(0.17%), பரிகானக (0.23%), LW (0.07%), புழு (0.05%), Hi! (0.02%), ஈஸி கையிட் 
(0.02%) 
சன்டே ஒப்சேவர்(2.18%), சிலுமின(1.92%), தினமின (0.73%), தருனி (1.71%), டெய்லி நியூஸ் (0.57 %), தினகரன் (0.27%), தினகரன் வாரமஞ்சரி(0.36 %)இ ஆரோக்யா
 (0.11%), சரசவிய (0.17%), புதுசரண
 (0.89%), மஞ்சு (0.31%), சுபசெத
 (0.21%), சித்மின(0.14%), மிஹித்ரு
(0.17%), வண்ண வானவில்(0.09%)
திவயின சன்டே(6.88%), திவயின டெய்லி
(1.25%), சன்டே ஐலன்ட்(0.57%), தி ஐலன்ட் (0.13%), நவலிய (0.27%), விதுசர (0.90%)
மௌபிம சன்டே (7.09%), மௌபிம டெய்லி (0.87%), சிலோன் ருடே சன்டே எடிஷன் (0.37%), சிலோன் ருடே(0.11%)
குறைவுநடுத்தரம் அதிகம் 
தொலைக்காட்சியில் பார்வையாளர் செறிவு  (கிடையாக)

சதவீதம்: 77 %

ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் குறைவான பார்வையாளர்களைக் கொண்டிருந்தால் ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் 49 வீதத்திற்கும் இடையிலான பார்வையாளர்களைக் கொண்டிருந்தால்ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 50 வீதத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருந்தால் 
வானொலி நேயர்கள் செறிவு  (கிடையாக)

சதவீதம்: 74.45 %

ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் குறைவான நேயர்களைக் கொண்டிருந்தால் ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் 49 வீதத்திற்கும் இடையிலான நேயர்களைக் கொண்டிருந்தால் ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 50 வீதத்திற்கும் மேற்பட்ட நேயர்களைக் கொண்டிருந்தால்

பத்திரிகைகளில் வாசகர்களின் செறிவு (கிடையாக) 

சதவீதம்: 75.45%

ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் குறைவான வாசகர்களைக் கொண்டிருந்தால்ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் 49 வீதத்திற்கும் இடையிலான வாசகர்களைக் கொண்டிருந்தால் ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாசகர்களைக் கொண்டிருந்தால்

Print readership data: NDMS Sri Lanka (Sep-Dec) 2017 Kantar LMRB
Radio listenership data: RAP (Jan-Nov) 2017 Kantar LMRB
TV viewership data: PMS 2017 Kantar LMRB

ஊடக சந்தை செறிவு

முடிவு : தரவுகள் இல்லை

இந்த சுட்டி, நிறுவனங்களின் அல்லது குழுக்களின் பொருளாதார சக்தியை விளக்கும் சந்தையின் பங்கை அடிப்படையாகக் கொண்டு ஊடக உரிம செறிவை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் உள்ள நான்கு பெரிய உரிமையாளர்களின் சந்தை பங்குகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் ஒவ்வொரு ஊடகத்துக்குமான செறிவு அளவிடப்படுகிறது

இலங்கை நிறுவன பதிவாளர் திணைக்களம் சில நிறுவனங்களுக்கான நிதியியல் தகவல்களை வழங்கிய போதிலும், ஊடகச் சந்தை முழுமைக்குமான எந்தவொரு நிதித் தகவலும் கிடைக்கவில்லை. எனவே, ஆய்வு செய்த நிறுவனங்களுக்கான சந்தை பங்கீடு தெரியாத நிலையில் உள்ளது. அதன் காரணமாக சந்தை பங்கு அடிப்படையில் ஊடக உரிமையின் செறிவினைக் கணக்கிட முடியாதுள்ளது. ஊடக உரிம கண்காணிப்பு குழுவின் (MOM) ஆய்வு முறையின் பிரகாரம், பார்வையாளர்களின் தரவு  கிடைத்து வருமானம் அல்லது சந்தை பங்குகள் தொடர்பான தரவுகள் கிடைக்காத போது, சந்தை பங்கு தரவுகள் ஆய்விலிருந்து விலக்கப்பட்டுள்ளன. அதாவது, தரவுகள் பார்வையாளர்களின் தரவின் அடிப்படையில் மாத்திரமே இருக்கும். வருமானம் குறித்த தரவுகள் கட்டாயமற்றதாக கருதப்படுகிறது.

குறைவுநடுத்தரம்அதிகம்
தொலைக்காட்சி ஊடக சந்தையின் செறிவு: இந்த சுட்டி தொலைக்காட்சித் துறையில் உரிம செறிவினை மதிப்பிட முயல்கின்றது.
சதவீதம்: மதிப்பிடப்படவில்லை
ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் குறைவான சந்தைப் பங்கை கொண்டிருந்தால்ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் 49 வீதத்திற்கும் இடையிலான சந்தைப் பங்கை கொண்டிருந்தால் ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 50 வீதத்திற்கும் மேற்பட்ட சந்தைப் பங்கை கொண்டிருந்தால்
வானொலியில் ஊடக சந்தையின் செறிவு: இந்த சுட்டி வானொலித் துறையில் உரிம செறிவினை மதிப்பிட முயல்கின்றது.
சதவீதம்: மதிப்பிடப்படவில்லை
ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் குறைவான சந்தைப் பங்கை கொண்டிருந்தால்ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் 49 வீதத்திற்கும் இடையிலான சந்தைப் பங்கை கொண்டிருந்தால் ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 50 வீதத்திற்கும் மேற்பட்ட சந்தைப் பங்கை கொண்டிருந்தால்
பத்திரிகையில் ஊடக சந்தையின் செறிவு: இந்த சுட்டி பத்திரிகைத் துறையில் உரிம செறிவினை மதிப்பிட முயல்கின்றது.
சதவீதம்: மதிப்பிடப்படவில்லை
ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் குறைவான சந்தைப் பங்கை கொண்டிருந்தால்ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் 49 வீதத்திற்கும் இடையிலான சந்தைப் பங்கை கொண்டிருந்தால் ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 50 வீதத்திற்கும் மேற்பட்ட சந்தைப் பங்கை கொண்டிருந்தால்
இணைய செய்தி வழங்குனர்களின் ஊடக சந்தையின் செறிவு 
சதவீதம்: மதிப்பிடப்படவில்லை
ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் குறைவான சந்தைப் பங்கை கொண்டிருந்தால்ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 25 வீதத்திற்கும் 49 வீதத்திற்கும் இடையிலான சந்தைப் பங்கை கொண்டிருந்தால் ஒரு நாட்டில் நான்கு முக்கிய உரிமையாளர்கள் (முதல் நான்கு) 50 வீதத்திற்கும் மேற்பட்ட சந்தைப் பங்கை கொண்டிருந்தால்

ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு நடைமுறைகள்: ஊடக உரிமையாண்மை செறிவு

முடிவு: அதிக ஆபத்து

ஊடக உரிமையாண்மைச் செறிவு மற்றும் / அல்லது வேறு ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு எதிராக ஏற்கனவே காணப்படும் ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு நடைமுறைகள் (துறை சார்ந்த மற்றும் / அல்லது போட்டிச் சட்டம்) மற்றும் அவை சரியான வகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து இந்த சுட்டி மதிப்பிடுகின்றது.

ஏன்? 

இலங்கையின் சட்ட கட்டமைப்பானது ஊடகங்களில் காணப்படும் செறிவுத்தன்மை மற்றும் ஏகபோகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட சட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. சந்தையில் போட்டித் தன்மைக்கு எதிரான நடத்தைகளை இனங்காணும் பிற சட்டங்களும் உரிம செறிவுக்கான வரையறைகளை விளக்கவோ அல்லது வரையறுக்கவோ இல்லை. எனவே, இலங்கையில் உள்ள ஊடகச் சட்டங்கள் தொலைக்காட்சிஇ, அச்சு, வானொலி அல்லது இணைய துறைகளில் உரிமச் செறிவைக் கட்டுப்படுத்த அனுமதி உரிமம்,  பார்வையாளர் பங்கு, நாளொன்றில் விற்பனையாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கை, பங்கு மூலதனம், வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் வருமானம் ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட அளவுகோல்கள் அல்லது வரம்புகளைக் கொண்டிருக்கவில்லை.

அச்சு

அச்சு ஊடகத்திற்கான இலங்கை பத்திரிகை ஸ்தபானத்தின் சட்டம் 1973 ஆம் ஆண்டின் ஐந்தாவது இலக்க சட்டம் மற்றும் இலத்திரனியல் ஒலிபரப்புகளுக்கான இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 1991 ஆம் ஆண்டின் 25 ஆவது இலக்க சட்டம் ஊடக செறிவு மற்றும் ஏகபோகத்தை தடுக்கும் குறிக்கோள்களைக் கொண்டுள்ள போதும், இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெளிவாக  விளக்கவில்லை. உரிமையாளர் பற்றிய ஆய்வு மற்றும் செய்தித்தாள்களின் நிதி கட்டமைப்பு உட்பட, ஏகபோகம் அல்லது பத்திரிகைகளின் உரிமச் செறிவு தொடர்பில் ஆய்வூ செய்வதற்கு பத்திரிகை ஸ்தாபனம் அதிகாரம் உள்ளது. மேலும் இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது. இது தவிர்த்து, ஏகபோகங்கள் மற்றும் உரிமச் செறிவு தொடர்பில் சட்டத்தில் வேறு குறிப்புகள் இல்லை. குறிப்பாக, ஏகபோகங்களை வரையறுக்க அல்லது செறிவூட்டலில் உச்ச வரம்புகளை அமைப்பது, பங்குதாரர்களின் பங்குகளை கட்டுப்படுத்துவது, பத்திரிகை நிறுவனங்களை கட்டுப்படுத்தும் விதிகள் போன்றவற்றில் தெளிவான விளக்கங்கள் இல்லை.

தொலைக்காட்சி மற்றும் வானொலி

இலத்திரனியல் ஊடகத்தைப் பொறுத்தவரை, உதாரணமாக வானொலி, தொலைக்காட்சிகளுக்கான அனுமதி உரிமங்களை இரண்டு கட்டமாக பெற்றுக்கொள்ள வேண்டும். முதலாவது, ஒலிபரப்பு நிலையங்களை இயக்க வேண்டுமானால் முறையே அவற்றுக்கான அனுமதி உரிமங்களை அளிக்கும் அமைப்புக்கள், குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவது, அலைவரிசைகள் மற்றும் ஒலிபரப்பு உபகரணங்களை இயக்க வேண்டுமானால் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRC) அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள் முறையே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ( SLBC) 1974 ஆம் ஆண்டின் ஐந்தாம் இலக்கச் சட்டத்தின் 44 ஆம் பிரிவு மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தின் 28 ஆம் பிரிவின் பிரகாரம் வெகுசன ஊடக அமைச்சிடம் இருந்தும் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், ஏகபோகம் மற்றும் ஊடக உரிமச் செறிவு தொடர்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டங்களில் குறிப்பிடப்படவில்லை.

தொலைத்தொடர்புகள் சட்டத்தின் 17 ஆவது பிரிவு  உரிமங்கள் வழங்கப்படுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து விளக்குகின்றது. இந்த விதிமுறைகளும், நிபந்தனைகளும் தொலைத்தொடர்புகள் சட்டத்தின் நான்காம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைதொடர்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களிடையே பயனுள்ள போட்டியைப் பராமரிப்பது மற்றும் ஊக்குவிப்பதற்கான நோக்கத்தை உள்ளடக்கியது. இந்த விதிமுறை தவிர, ஏகபோகம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கிடையே உரிம அடர்த்தியைக் கட்டுப்படுத்துவதற்கான வேறு எந்த சட்டங்களும் இல்லை.

போட்டி அதிகார சபை

நுகர்வோரைப் பாதுகாக்கவும், போட்டித்தன்மையைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்கச் சட்டத்திலும் ஏகபோகங்கள், செறிவு மற்றும் நிறுவனங்களின் இணைப்பு குறித்து எந்தவித தகவல்களும் இல்லை. இலங்கையில் போட்டித்தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு உள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் 35 ஆவது பிரிவின் போட்டித்தன்மை குறித்தான விளக்கத்தில் குறிப்பாக செறிவு குறித்து எதுவூம் தெரிவிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக இலங்கையில் பொருட்களின் உற்பத்தி, விநியோகித்தல் அல்லது கையகப்படுத்துதல் தொடர்பில் அல்லது இலங்கையில் சேவைகளை வழங்குதல் அல்லது பெறுதல் தொடர்பில் போட்டியினைச் சிதைப்பது அல்லது தடுப்பது குறித்து ஆராய்கின்றது. 

மேலும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுக்களான தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்து ஆதாரங்கள் எவையும் இல்லை. இதன் காரணமாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டங்கள் ஊடகத் துறையில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது கேள்விக்குறியாகின்றது. மேலும், பணத்தை செலுத்துவதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் நுகர்வோருக்கே பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டம் செல்லுபடியாகும். பத்திரிகையைப் பொறுத்தவரையில் பணத்தைக் கொடுத்து கொள்வனவு செய்யப்படுகின்ற போதும், இது வானொலிக்கோ அல்லது தொலைக்காட்சிக்கோ தேவைப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டம் தரத்தில் அதிக கவனம் செலுத்துவதுடன், பாவனையாளர்களுக்கு தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றது. மாறாக பாவனையாளர்களுக்கு விருப்பமான, தெரிவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை. எனவே பாவனையாளர் அதிகார சபையினால் இந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாத காரணத்தினால் திருத்தி அமைக்கப்பட வேண்டும். போட்டித்தன்மையை பாதுகாப்பதற்கு ஏகபோகத்திற்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு நடைமுறை புள்ளிகள்:
20க்கு இரண்டு புள்ளிகள்: அதிக ஆபத்து (10 %). 
1 = ஊடகம் சார்ந்த கட்டுப்பாடு / அதிகாரம்
0.5 = போட்டி தொடர்பான கட்டுப்பாடு / அதிகாரம்

தொலைக்காட்சிவிபரம்ஆம்இல்லைNAMD

இலங்கையில் உள்ள ஊடகச் சட்டங்கள் தொலைக்காட்சி, அச்சு, வானொலி அல்லது இணைய துறைகளில் உரிமச் செறிவைக் கட்டுப்படுத்த (அனுமதி உரிமம், பார்வையாளர் பங்கு, நாளொன்றில் விற்பனையாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கை, பங்கு மூலதனம், வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் வருமானம்) ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட அளவுகோல்கள் அல்லது உச்ச வரம்புகளைக் கொண்டிருக்கின்றனவா? 

தொலைக்காட்சித் துறையில் உரிமச்  செறிவு மற்றும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எதிராக ஏற்கனவே உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து (துறை சார்ந்த) இந்தக் கேள்வி ஆராய்கின்றது.

 

  0

தொலைக்காட்சித் துறை உச்ச வரம்புகளை பின்பற்றுகின்றதா என்பதை கண்காணிக்கும் மற்றும் புகார்களை கேட்கும் நிர்வாக அமைப்பு அல்லது நீதி அமைப்பு காணப்படுகின்றதா? (உதாரணமாக ஊடகம் மற்றும் அல்லது போட்டி அதிகார சபை)

வானொலி மற்றும் ஊடகத் துறையில் ஊடக உரிமச் செறிவை ஒழுங்குபடுத்த சட்டம் / விதிகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி முறையை வழங்குகின்றதா என இது ஆராய்கின்றது. 

 0.5

  

உச்ச வரம்புகளை மதிக்காவிட்டால், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த அமைப்பிற்கு சட்டம் அதிகாரங்களை வழங்கியூள்ளதா?   

சட்டமானது துறை சார் அமைப்புக்களுக்கு தடைகளை விதிக்க அனுமதிக்கின்றதா என ஆராய்கின்றது. உதாரணமாக,

- மேலதிக உரிமங்களை வழங்க மறுத்தல்
- இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைவது அல்லது கொள்வனவு  செய்யப்படுவதை தடுத்தல் 
- மூன்றாம் தரப்பு நிரலாக்கங்களை கேட்டறிதல்
- பிற ஊடகத் துறைகளில் உரிமங்கள் மற்றும் செயற்பாடுகளை விட்டுக்கொடுத்தல் 
- நிறுவனத்தை விற்பனை செய்தல் / மூடுதல்   

 

  0

  

அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவை முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா? 

ஊடக உரிமச் செறிவு மற்றும் தொலைக்காட்சித் துறையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எதிரான துறை சார் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றனவா என இந்த சுட்டி ஆராய்கின்றது.     

குறைந்த ஆபத்து: 
குறித்த அதிகாரசபை அனைத்து சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துகின்றது. 

நடுத்தர ஆபத்து: 
அதிகாரசபையின் அதிகாரங்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எப்பொழுதும் பயன்படுத்தப்படவில்லை.
X
மொத்தம்

0.5

பத்திரிகைவிபரம்விபரம்இல்லைஆம்/இல்லைMD
இலங்கையில் உள்ள ஊடகச் சட்டங்கள் தொலைக்காட்சி, அச்சு, வானொலி அல்லது இணைய துறைகளில் உரிம செறிவைக் கட்டுப்படுத்த (அனுமதி உரிமம், பார்வையாளர் பங்கு, நாளொன்றில் விற்பனையாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கை, பங்கு மூலதனம், வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் வருமானம்) ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட அளவுகோல்கள் அல்லது உச்ச வரம்புகளைக் கொண்டிருக்கின்றனவா? பத்திரிகைத் துறையில் உரிம செறிவு மற்றும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எதிராக ஏற்கனவே உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து (துறை சார்ந்த) இந்தக் கேள்வி ஆராய்கின்றது.

 

  0

 

பத்திரிகைத் துறை உச்ச வரம்புகளை பின்பற்றுகின்றதா என்பதை கண்காணிக்கும் மற்றும் புகார்களை கேட்கும் நிர்வாக அமைப்பு அல்லது நீதி அமைப்பு காணப்படுகின்றதா? (உதாரணமாக ஊடகம் மற்றும் /  போட்டி அதிகார சபை) 

ஊடக உரிமச் செறிவை ஒழுங்குபடுத்த சட்டம் / விதிகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி முறையை வழங்குகின்றதா என இது ஆராய்கின்றது. 

 0.5

  

உச்ச வரம்புகளை மதிக்காவிட்டால், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த அமைப்பிற்கு சட்டம் அதிகாரங்களை வழங்கியுள்ளதா?

சட்டமானது துறை சார் அமைப்புக்களுக்கு தடைகளை விதிக்க அனுமதிக்கின்றதா என ஆராய்கின்றது. உதாரணமாக,
- மேலதிக உரிமங்களை வழங்க மறுத்தல்
- இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைவது அல்லது கொள்வனவவு செய்யப்படுவதை தடுத்தல் 
- மூன்றாம் தரப்பு நிரலாக்கங்களை கேட்டறிதல்
- பிற ஊடகத் துறைகளில் உரிமங்கள் மற்றும் செயற்பாடுகளை விட்டுக்கொடுத்தல் 
- நிறுவனத்தை விற்பனை செய்தல்/மூடுதல்

 

  0

  

அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவை முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா?  ஊடக உரிமச் செறிவு மற்றும் அச்சுத் துறையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எதிரான துறை சார் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றனவா என இந்த சுட்டி ஆராய்கின்றது குறைந்த ஆபத்து: 
குறித்த அதிகாரசபை அனைத்து சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துகின்றது. 
நடுத்தர ஆபத்து: 
அதிகாரசபையின் அதிகாரங்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எப்பொழுதும் பயன்படுத்தப்படவில்லை.
X
மொத்தம்

0.5

வானொலிவிபரம்ஆம்இல்லைஆம்/இல்லைMD

இலங்கையில் உள்ள ஊடகச் சட்டங்கள் தொலைக்காட்சி, அச்சு, வானொலி அல்லது இணைய துறைகளில் உரிமச் செறிவைக் கட்டுப்படுத்த (அனுமதி உரிமம், பார்வையாளர் பங்கு, நாளொன்றில் விற்பனையாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கை, பங்கு மூலதனம், வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் வருமானம்) ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட அளவூகோல்கள் அல்லது உச்ச வரம்புகளைக் கொண்டிருக்கின்றதா?

வானொலித் துறையில் உரிமச் செறிவு மற்றும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எதிராக ஏற்கனவே உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து (துறை சார்ந்த) இந்தக் கேள்வி ஆராய்கின்றது.

 

  0

 

வானொலித் துறை உச்ச வரம்புகளை பின்பற்றுகின்றதா என்பதை கண்காணிக்கும் மற்றும் புகார்களை கேட்கும் நிர்வாக அமைப்பு அல்லது நீதி அமைப்பு காணப்படுகின்றதா? (உதாரணமாக ஊடகம் மற்றும்/அல்லது போட்டி அதிகார சபை)    

வானொலி மற்றும் ஊடகத் துறையில் ஊடக உரிம செறிவை ஒழுங்குபடுத்த சட்டம் /விதிகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி முறையை வழங்குகின்றதா என இது ஆராய்கின்றது.  

 0.5

  

உச்ச வரம்புகளை மதிக்காவிட்டால், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த அமைப்பிற்கு சட்டம் அதிகாரங்களை வழங்கியூள்ளதா?

சட்டமானது துறை சார் அமைப்புக்களுக்கு தடைகளை விதிக்க அனுமதிக்கின்றதா என ஆராய்கின்றது. உதாரணமாக,
- மேலதிக உரிமங்களை வழங்க மறுத்தல்
- இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைவது அல்லது கொள்வனவூ செய்யப்படுவதை தடுத்தல் 
- மூன்றாம் தரப்பு நிரலாக்கங்களை கேட்டறிதல்
- பிற ஊடகத் துறைகளில் உரிமங்கள் மற்றும் செயற்பாடுகளை விட்டுக்கொடுத்தல் 
- நிறுவனத்தை விற்பனை செய்தல்.

 

  0

  

அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவை முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா?

ஊடக உரிமச் செறிவு மற்றும் வானொலித் துறையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எதிரான துறை சார் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றனவா  என இந்த சுட்டி ஆராய்கின்றது.   

குறைந்த ஆபத்து: 
குறித்த அதிகாரசபை அனைத்து சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துகின்றது. 

நடுத்தர ஆபத்து: 
அதிகாரசபையின் அதிகாரங்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எப்பொழுதும் பயன்படுத்தப்படவில்லை. 
0
மொத்தம் 

0.5

இணையம்விபரம்ஆம்இல்லைஆம்/இல்லைMD
இலங்கையில் உள்ள ஊடகச் சட்டங்கள் தொலைக்காட்சி, அச்சு, வானொலி அல்லது இணைய துறைகளில் உரிம செறிவைக் கட்டுப்படுத்த (அனுமதி உரிமம், பார்வையாளர் பங்கு, நாளொன்றில் விற்பனையாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கை, பங்கு மூலதனம், வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் வருமானம்) ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட அளவுகோல்கள் அல்லது உச்ச வரம்புகளைக் கொண்டிருக்கின்றனவா? இணையத் துறையில் உரிமச் செறிவு மற்றும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எதிராக ஏற்கனவே உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து (துறை சார்ந்த) இந்தக் கேள்வி ஆராய்கின்றது.  

 

  0

 

இணையத் துறை உச்ச வரம்புகளை பின்பற்றுகின்றதா என்பதை கண்காணிக்கும் மற்றும் புகார்களை கேட்கும் நிர்வாக அமைப்பு அல்லது நீதி அமைப்பு காணப்படுகின்றதா? (உதாரணமாக ஊடகம் மற்றும்/அல்லது போட்டி அதிகார சபை) ஊடக உரிமச் செறிவை ஒழுங்குபடுத்த சட்டம் / விதிகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி முறையை வழங்குகின்றதா என இது ஆராய்கின்றது.      

 0.5

  
உச்ச வரம்புகளை மதிக்காவிட்டால், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த அமைப்பிற்கு சட்டம் அதிகாரங்களை வழங்கியுள்ளதா? 

சட்டமானது துறை சார் அமைப்புக்களுக்கு தடைகளை விதிக்க அனுமதிக்கின்றதா என ஆராய்கின்றது. உதாரணமாக,
- மேலதிக உரிமங்களை வழங்க மறுத்தல்
- இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைவது அல்லது கொள்வனவூ செய்யப்படுவதை தடுத்தல் 
- மூன்றாம் தரப்பு நிரலாக்கங்களை கேட்டறிதல்
- பிற ஊடகத் துறைகளில் உரிமங்கள் மற்றும் செயற்பாடுகளை விட்டுக்கொடுத்தல் 
- நிறுவனத்தை விற்பனை செய்தல்/மூடுதல். 

 

  

அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவை முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா? ஊடக உரிமச் செறிவு மற்றும் இணையத் துறையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எதிரான துறை சார் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றதா என இந்த சுட்டி ஆராய்கின்றது. குறைந்த ஆபத்து: 
குறித்த அதிகாரசபை அனைத்து சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துகின்றது. 
நடுத்தர ஆபத்து: 
அதிகாரசபையின் அதிகாரங்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எப்பொழுதும் பயன்படுத்தப்படவில்லை.
X
உயர் ஆபத்து: 
அதிகாரசபை எப்பொழுதும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவது இல்லை. 
மொத்தம் 

0.5

பல்- ஊடக உரிமச் செறிவு

முடிவு: அதிக ஆபத்து

ஊடகத்தின் பல்வேறு துறைகளில் - தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி மற்றும் பிற ஊடகங்களில் - உரிமச் செறிவை மதிப்பிடுவதே இந்த சுட்டியின் நோக்கமாகும். பல் - ஊடக உரிமச்  செறிவு என்பது தனிநபரோ அல்லது நிறுவனமோ ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடகங்களில், உதாரணமாக தொலைக்காட்சி, வானொலி, மற்றும் அச்சுத்துறையில் செயல்படுவதாகும். முன்னணியில் உள்ள எட்டு ஊடக நிறுவனங்களின் சந்தை பங்குகளை சேர்ப்பதன் மூலம் பல் ஊடகச் செறிவு அளவிடப்படுகிறது. இந்த விடயத்தில், சந்தை பங்குகளின் நிதித் தரவுகள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி சந்தையில் பார்வையாளர்களின் பங்குகள் அடிப்படையில் பல் ஊடக உரிமம் கணக்கிடப்பட்டுள்ளது. இணைய ஊடகங்களுக்கான பார்வையாளர் தரவூகளும் கிடைக்கவில்லை. இதன் முடிவுகள் பல் ஊடகத் துறையில் பொருளாதார வலிமையை வெளிப்படுத்துவன அல்ல, மாறாக அனைத்து ஊடக வகைகளையும் கருத்தில் கொண்டால் பொதுமக்களின் செல்வாக்கினை வெளிப்படுத்துகின்றது.

பொறுப்புக்கூறல்: 
பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுவது கடினம், சிலவற்றை ஒப்பிட முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். உதாரணமாக, தரவு சரியானது என்ற போதும் ஒரு பத்திரிகை விற்பனையின் எண்ணிக்கைகள், ஒன்லைன் கிளிக் மற்றும் தொலைக்காட்சி மதிப்பீடுகள் போன்ற அளவீடுகளை எவ்வாறு ஒரு ஒருங்கிணைந்த சுட்டியில் இணைக்க முடியூம்? ஊடக ஆய்வுகள் மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனங்களில், இந்த இக்கட்டான சூழ்நிலைகள் குறித்து பேசப்பட்ட போதும் அது இதுவரைக்கும் தீர்க்கப்படவில்லை. அதனை தீர்க்கும் வழிகளை கண்டறிந்து விட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை. எவ்வாறாயினும், எமது முறைகள் சில  பல் ஊடக செறிவுகளின் போக்குகளை குறிக்கவும், இந்த முடிவுக்கு எப்படி வந்தோம் என்பதை வெளிப்படைத்தன்மை மற்றும் விளக்கங்களை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏன்?
அனைத்து ஊடக துறைகளிலும் (தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை மற்றும் இணையம்) அதிக வருமானம் ஈட்டும் முதல் 8 நிறுவனங்களை நிதி குறித்த தரவுகள் இல்லாத காரணத்தினால் எங்களால் கண்டறிய முடியவில்லை. அதற்குப் பதிலாக, இந்த சுட்டி பாவனையாளர்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் முன்வைக்கப்படும் முடிவுகள் பல்வேறு ஊடக துறைகளில் பொருளாதார வலிமையைக் குறிக்கவில்லை, மாறாக பொதுமக்களின் செல்வாக்கினை வெளிப்படுத்துகின்றன. 
பார்வையாளர்கள் பங்குகளை அடிப்படையாகக் கொண்டு தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகைத் துறையில் உள்ள முக்கிய 8 நிறுவனங்களை ஊடக உரிம கண்காணிப்பு குழு (MOM ) கண்டறிந்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஊடக உரிமையாளர்களில் பலரும் இணைய பதிப்புக்களை கொண்டுள்ளனர். எனினும், தற்போது இணையத்தை பயன்படுத்துபவர்கள் குறித்த தரவுகள் இல்லாத காரணத்தினால், அவர்களின் இணைய பதிப்புக்களின் வாசகர்களைக்  கண்டறிய முடியவில்லை. ஊடக உரிமையாளர்கள் மேலதிகமாக இணைய பதிப்புக்களை வைத்திருக்கும் போது, உண்மையான வாசகர்கள் பங்கு கண்டறிந்த தரவுகளை விட அதிகமாகவே இருக்கும். எனவே, வழங்கப்பட்டுள்ள தரவுகள் முழுமையான பார்வையாக இருக்காது. அல்லது உண்மையான பார்வையாளர்கள் பங்கு மற்றும் இந்த உரிமையாளர்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள மதிப்பீடு சற்றுக் குறைவாகவே மதிப்பிடப்பட்டு இருக்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 8 நிறுவனங்களும் 5 துறைகளிலும் செயல்படவில்லை. எட்டில் ஐந்து உரிமையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடகத்துறையில் செயல்பட்டு வருகின்றனர். தொலைக்காட்சி மற்றும் வானொலித்துறையில் முன்னணியில் உள்ள முதல் 3 நிறுவன உரிமையாளர்களும் ஒன்று என்பதனால் இலங்கையில் பல் - ஊடக உரிமச் செறிவு உயர்வாகவே உள்ளது. மேலதிகமாக, முன்னணியில் உள்ள முதல் 8 உரிமையாளர்களும் 81.47 வீதமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளனர். கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம், இது ராஜமகேந்திரன் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. தொலைக்காட்சி மற்றும் வானொலித் துறையில் செயல்படுவதுடன், இரண்டு சந்தைகளிலும் முதல் நான்கு இடங்களில் உள்ளது. இது 29.19 வீதமான பாவனையாளர்களை தொலைக்காட்சி மற்றும் வானொலித் துறையில் கொண்டுள்ளது. இலங்கையில் இணைய ஊடகம் தொடர்பான தரவூகள் கிடைக்காத காரணத்தினால் இணையம் ஊடாக அவர்களின் பார்வையாளர்கள் தொடர்பான தரவூகளை எங்களால் கண்டறிய முடியவில்லை.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 8 நிறுவனங்களும் 5 துறைகளிலும் செயல்படவில்லை. எட்டில் ஐந்து உரிமையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடகத்துறையில் செயல்பட்டு வருகின்றனர். தொலைக்காட்சி மற்றும் வானொலித்துறையில் முன்னணியில் உள்ள முதல் 3 நிறுவன உரிமையாளர்களும் ஒன்று என்பதனால் இலங்கையில் பல் - ஊடக உரிமச் செறிவு உயர்வாகவே உள்ளது. மேலதிகமாக, முன்னணியில் உள்ள முதல் 8 உரிமையாளர்களும் 81.47 வீதமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளனர். 

  • கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம், இது ராஜமகேந்திரன் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. தொலைக்காட்சி மற்றும் வானொலித் துறையில் செயல்படுவதுடன், இரண்டு சந்தைகளிலும் முதல் நான்கு இடங்களில் உள்ளது. இது 29.19 வீதமான பாவனையாளர்களை தொலைக்காட்சி மற்றும் வானொலித் துறையில் கொண்டுள்ளது. இலங்கையில் இணைய ஊடகம் தொடர்பான தரவூகள் கிடைக்காத காரணத்தினால் இணையம் ஊடாக அவர்களின் பார்வையாளர்கள் தொடர்பான தரவூகளை எங்களால் கண்டறிய முடியவில்லை.
  • வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இது ரெய்னர் சில்வாவிற்கு சொந்தமானது. வானொலித் துறையில் முன்னணியில் திகழ்வதுடன், ஒரேயொரு பிரபல்யமான தொலைக்காட்சி அலைவரிசையையும் கொண்டுள்ளது. வானொலித் துறையில் முதல்வனாக திகழ்வதுடன், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் 26.48 வீத பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. 
  • பவர் ஹவூஸ், திலித் ஜயவீர மற்றும் வருணி பெர்னான்டோவிற்கு சொந்தமானது. ஒரு சில நிலையங்களைக் கொண்டுள்ள போதும் தொலைக்காட்சி மற்றும் வானொலி சந்தையில் அதிக எண்ணிக்கையிலான நேயர்களைக் கொண்டுள்ளது. 23.44 வீதமான பார்வையாளர் பங்குகளைக் கொண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், இவர்கள் அச்சுத் துறையில் கால் பதித்தனர். எனினும், வாசகர்களின் தரவுகள் இதுவரையில் கிடைக்கவில்லை.
  • அரசாங்கம், அமைச்சர் மங்கள சமரவீரவின் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இது வருகின்றது. அரசாங்கம் மாத்திரமே பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் என நான்கு ஊடக துறைகளிலும் செயற்பட்டு வருகிறது. பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் 22.04 வீதமான பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.
  • விஜய பத்திரிகை, இது விஜயவர்த்தன குடும்பத்திற்கு சொந்தமானது. இது பத்திரிகை மற்றும் இணைய பிரசுரங்களை கொண்டுள்ளதுடன்இ,21.56 வீதமான வாசகர்களைக் கொண்டுள்ளது.
  • ஈ.ஏ.பி நிறுவனம், இந்த நிறுவனம் அண்மையில் (ஜுன் 2018) பென் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இது அலெக்சிஸ் இந்திரஜித் லொவெல்ஸ் மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட புளு சமிட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. புளு சமிட் நிறுவனமானது லைக்கா மொபைல் உரிமையாளர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு சொந்தமான போர்த்துக்கல்லைத் தளமாகக் கொண்ட பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்நஷனல் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். ஈ.ஏ.பி நிறுவனமானது தொலைக்காட்சி மற்றும் வானொலித் துறையில் செயல்படுவதுடன், 10.61 வீதமான பாவனையாளர்களைக் கொண்டது.
  • அசெட் றேடியோ பிராட்காஸ்டிங், இது நிஹால் செனவிரத் எபாவிற்கு சொந்தமானது. வானொலித் துறையில் மாத்திரம் செயற்படுவதுடன், 5.49 வீதமான நேயர்களைக் கொண்டுள்ளது.
  • உபாலி, இது வெல்கம குடும்பத்திற்கு சொந்தமானது. பத்திரிகை துறையில் மாத்திரம் செயல்படுவதுடன், 4.57 வீதமான வாசிகர்களைக் கொண்டுள்ளது.
குறைவுநடுத்தரம்அதிகம்
சதவீதம்: 81.47 %
ஒரு நாட்டிற்குள் 8 முக்கிய உரிமையாளர்கள் (முதல் 8) பல்வேறு ஊடகங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான சந்தைப் பங்கை கொண்டிருந்தால்ஒரு நாட்டிற்குள் 8 முக்கிய உரிமையாளர்கள் (முதல் 8) பல்வேறு ஊடகங்களிலும் 50க்கும் 69 வீதத்திற்கும் இடைப்பட்ட சந்தைப் பங்கை கொண்டிருந்தால்

ஒரு நாட்டிற்குள் 8 முக்கிய உரிமையாளர்கள் (முதல் 8) பல்வேறு ஊடகங்களிலும் 70 வீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கை கொண்டிருந்தால் 

மேலதிக தகவல்கள்:
பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பார்வையாளர்களின் பங்குகள் நாட்டில் உள்ள ஊடக நுகர்வு பழக்கங்களின் அடிப்படையில் எடை போடப்பட்டுள்ளன: பத்திரிகை 45.7 %, தொலைக்காட்சி 87%, வானொலி 43.40%. இந்த மூன்றின் கூட்டுத்தொகையூம் 100 ஐ விட அதிகமாக உள்ளது. எனவே இதன் மூன்றின் கூட்டுத்தொகையான 176 வீதமே மதிப்பீடுகளுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. முன்னணியில் உள்ள 8 உரிமையாளர்களுக்கு உள்ள பாவனையாளர் பங்குகளின் கூட்டுத்தொகை 176 வீதத்திற்கு அமைவாகவே கணக்கிடப்பட்டுள்ளது.

மூலம்: 

Radio listenership data: RAP (Jan-Nov) 2017 Kantar LMRB
Print readership data: NDMS Sri Lanka (Sep-Dec) 2017 Kantar LMRB
TV viewership data: PMS 2017 Kantar LMRB
MOM Cross-Media Ownership computation

ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு நடைமுறைகள்: பல் ஊடக உரிமச் செறிவு

முடிவு: அதிக ஆபத்து

பல்வேறு ஊடக வகைகளுக்கு இடையே (பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம்) உள்ள பல் ஊடக உரிம செறிவுக்கு எதிராக காணப்படும் ஒழுங்கமைப்பு பாதுகாப்பு நடைமுறைகள் (துறை சார்ந்த மற்றும் / அல்லது போட்டியிடல் சட்டம்) மற்றும் அவற்றின் அமுலாக்கம் தொடர்பில் இந்த சுட்டி மதிப்பிடுகின்றது. உரிமம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் உச்சவரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் வித்தியாசப்படுவதால், 'அதிகம்" என்பது உங்கள் நாட்டிலுள்ள தரங்களுக்கு அமைவாகவும், உள்நாட்டு சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சவரம்பினை அடிப்படையாகவும் கொண்டு மதிப்பிடப்படவேண்டும்.

ஏன்
பல் ஊடக உரிமத்துவத்தை தடுக்க இலங்கையில் எந்த நடைமுறைகளும் இல்லை. பல்வேறு ஊடகங்களுக்கு இடையே காணப்படும் உரிமத்துவத்தை தடுக்க அனுமதி உரிமங்களின் எண்ணிக்கை, பாவனையாளர் பங்கு, நாளொன்றில் விற்பனையாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கை, பங்கு மூலதனம், வாக்களிக்கும் உரிமை மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த உச்ச வரம்புகளும் ஊடக சட்டங்களில் காணப்படவில்லை.

  • ஊடக உரிம செறிவினைக் கட்டுப்படுத்துவதற்கு என இலங்கையில் எந்த சட்டமும் இல்லை. ஏற்கனவே காணப்படும் சட்டங்களிலும் ஊடக உரிம செறிவிற்கு எந்தவிதமான விளக்கமும் குறிப்பிடப்படவில்லை. ஏகபோகம் மற்றும் செறிவு குறித்து பேசும் ஊடக சம்பந்தமான சட்டங்களும் அது குறித்து விரிவாகவோ அல்லது ஊடகச் செறிவு எவ்வாறு மதிப்பிடப்பட வேண்டும் என்றோ, நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அல்லது பல் ஊடக உரிமச் செறிவு குறித்த விடயங்களை குறிப்பிடவில்லை.
  • அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கான சட்டங்களில் மாத்திரம் ஏகபோகம் மற்றும் போட்டிக் கட்டமைப்பு குறித்து சுருக்கமாக பேசப்படுகின்றது. எனினும் அது குறித்த மேலதிக விளக்கங்கள் வழங்கப்படவில்லை. ஊடகச் செறிவின் வகைகள் மற்றும் அதன் படிநிலைகளை  மதிப்பீடு செய்வதற்கான முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.
  • போட்டித்தன்மையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பொதுச்சட்டங்களிலும் செறிவு மற்றும் ஏகபோகம் குறித்த வரையறை இல்லை. உதாரணமாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 2003 ஆம் ஆண்டுக்கான ஒன்பதாவது இலக்கச் சட்டம்.

ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு நடைமுறை புள்ளிகள்:
8 புள்ளிகளுக்கு பூச்சியம் - அதிக ஆபத்து (ஒழுங்குவிதி: 0 %)

பல் ஊடக உரிமத்துவம் விபரம்ஆம்இல்லைஆம்/இல்லைMD
ஊடகச் சட்டமானது பல் ஊடக உரிமத்துவத்தை தடுக்க அனுமதி உரிமம், பார்வையாளர் பங்கு, நாளொன்றில் விற்பனையாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கை, பங்கு மூலதனம், வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் வருமானம் ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட அளவூகோல்கள் அல்லது உச்ச வரம்புகளைக் கொண்டிருக்கின்றதா? 

பல் ஊடக உரிமத்துவத்திற்கு எதிராக ஏற்கனவே உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து (துறை சார்ந்த) இந்தக் கேள்வி ஆராய்கின்றது.

  0

குறித்த உச்ச வரம்புகளை பின்பற்றுகின்றதா என்பதை கண்காணிக்கும் மற்றும் புகார்களை கேட்கும் நிர்வாக அமைப்பு அல்லது நீதி அமைப்பு காணப்படுகின்றதா? (உதாரணமாக ஊடக அதிகாரசபை -௧, போட்டி அதிகார சபை = 0.5 )

ஓலிஒளிபரப்புத் துறையில் சட்டம் / விதிகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி முறையை வழங்குகின்றதா என இது ஆராய்கின்றது

  0

உச்ச வரம்புகளை மதிக்காவிட்டால், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த அமைப்பிற்கு சட்டம் அதிகாரங்களை வழங்கியூள்ளதா?

சட்டமானது துறை சார் அமைப்புக்களுக்கு தடைகளை விதிக்க அனுமதிக்கின்றதா என ஆராய்கின்றது. உதாரணமாக,
- மேலதிக உரிமங்களை வழங்க மறுத்தல்
- இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைவது அல்லது கொள்வனவு செய்யப்படுவதை தடுத்தல் 
- மூன்றாம் தரப்பு நிரலாக்கங்களை கேட்டறிதல்
- பிற ஊடகத் துறைகளில் உரிமங்கள் மற்றும் செயற்பாடுகளை விட்டுக்கொடுத்தல் 
- நிறுவனத்தை விற்பனை செய்தல்/மூடுதல்

  0

இந்த அதிகாரங்கள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா? 

கட்டுப்பாடுகளினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுகளின் செயல்திறனை மதிப்பிடுவதே இந்த கேள்வியின் நோக்கமாகும். 

குறைந்த ஆபத்து: குறித்த அதிகாரசபை அனைத்து சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துகின்றது.
நடுத்தர ஆபத்து: அதிகாரசபையின் அதிகாரங்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எப்பொழுதும் பயன்படுத்தப்படவில்லை. 
உயர் ஆபத்து: அதிகாரசபை எப்பொழுதும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவது இல்லை.0

பல்வேறு ஊடகங்களுக்கு இடையே உள்ள பல் ஊடக உரிமத்துவமானது நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை தடுப்பது அல்லது போட்டிச் சட்டங்களினால் கட்டுப்படுத்த முடியுமா?

உதாரணமாக, பல் ஊடக உரிமத்துவத்தை போட்டிச் சட்டத்தினால் தடை செய்ய முடியும்.
- நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அல்லது கொள்வனவின் போது ஊடக அதிகாரசபையின் தலையீடு (ஊடக அதிகாரசபையின் யோசனையை போட்டி அதிகாரசபை கேட்கவேண்டிய கடப்பாடு)
- ஊடக பன்முகத்தன்மைக்காக செறிவிற்கான அனுமதியை போட்டி அதிகாரசபை இரத்துச் செய்வதற்கான சாத்தியம் (அல்லது பொதுநலனைக் கருத்தில் கொண்டு):
- குறிப்பாக ஊடகத்திற்கு மட்டுமான விதிகள் சட்டத்தில் இல்லாத போதும் - அதன் பயன்பாட்டில் ஊடகத்துறைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியதில்லை

  0

நிர்வாக அமைப்பு அல்லது நீதி அமைப்பு காணப்படுகின்றதா? (உதாரணமாக ஊடகம், போட்டி அதிகார சபை)

ஓலிஒளிபரப்புத் துறையில் நிறுவனங்கள் ஒன்றிணைவதை கட்டுப்படுத்துவது அல்லது போட்டி விதிகளை பயன்படுத்துவதில் சட்டம் / விதிகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி முறையை வழங்குகின்றதா என இது ஆராய்கின்றது.       0

உச்ச வரம்புகளை மதிக்காவிட்டால், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த அமைப்பிற்கு சட்டம் அதிகாரங்களை வழங்கியுள்ளதா?

சட்டமானது துறை சார் அமைப்புக்களுக்கு தடைகளை விதிக்க அனுமதிக்கின்றதா என ஆராய்கின்றது. உதாரணமாக,
- மேலதிக உரிமங்களை வழங்க மறுத்தல்
- இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைவது அல்லது கொள்வனவு செய்யப்படுவதை தடுத்தல் 
- மூன்றாம் தரப்பு நிரலாக்கங்களை கேட்டறிதல்
- பிற ஊடகத் துறைகளில் உரிமங்கள் மற்றும் செயற்பாடுகளை விட்டுக்கொடுத்தல் 
- நிறுவனத்தை விற்பனை செய்தல்/மூடுதல்

  0
இந்த அதிகாரங்கள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா?   

கட்டுப்பாடுகளினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுகளின் செயல்திறனை மதிப்பிடுவதே இந்த கேள்வியின் நோக்கமாகும். குறைந்த ஆபத்து: குறித்த அதிகாரசபை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துகின்றது. 

குறைந்த ஆபத்து: குறித்த அதிகாரசபை அனைத்து சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துகின்றது.
நடுத்தர ஆபத்து: அதிகாரசபையின் அதிகாரங்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எப்பொழுதும் பயன்படுத்தப்படவில்லை. 
உயர் ஆபத்து: அதிகாரசபை எப்பொழுதும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவது இல்லை.0
மொத்தம் (இரண்டு துணைக்கு குறிகாட்டிகள்) 
  
    0

Legal Assessment

உரிமைத்துவ வெளிப்படைத்தன்மை

முடிவு: நடுத்தர ஆபத்து

ஊடக பன்முகத்தன்மையை நடைமுறைப்படுத்துவதற்கு உரிமைத்துவ வெளிப்படைத்தன்மை என்பது முக்கியமானது. எனவே ஊடக உரிமையாளர்களின் அரசியல் தொடர்புகளைப் பற்றிய தரவுகளின் வெளிப்படைத்தன்மையை இந்த சுட்டி மதிப்பிடுகின்றது.

ஏன்?

ஊடக நிறுவனங்கள் உரிமத்துவம் தொடர்பான விபரங்களை அவர்களுடைய இணையத்தளங்களிலோ அல்லது அச்சாகும் பிரசுரங்களிலோ வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு இல்லை. உரிமையாளர் தொடர்பான விபரங்கள் அநேகமானவை நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் அரசியல்வாதிகள் ஊடக நிறுவனங்களில் உரிமையாளர்களாக இருப்பதை வெளிப்படுத்த வேண்டும் எனக்கூறும் சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.அதேபோன்று, அரசியல்வாதிகள் ஊடக நிறுவனம் ஒன்றை வைத்திருப்பதை தடுக்கும் சட்டமும் இல்லை. எனினும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தங்களுடைய ஊடக நிறுவனங்களை நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இலங்கையின் கம்பனிகள் சட்டம் 2007 ஆம் ஆண்டின் 7 ஆவது பிரிவின் பிரகாரம், அனைத்து நிறுவனங்களும் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்வதன் மூலம், அனைத்து நிறுவனங்களும் உரிமையாளர் விபரங்கள், உறுப்பினர்களின் பெயர்களை வருடாந்தம் ‘படிவம் 15’ (வருடாந்த அறிக்கை) மூலம் சமர்ப்பிக்கவும், நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் அவற்றை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதியளிக்கின்றன. நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

அரசுக்கு சொந்தமான பத்திரிகை நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (ஏ.என்.சி.எல் அல்லது லேக் ஹவுஸ்), அரசுக்கு சொந்தமான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு ஆகியவற்றின் கோப்புக்கள் நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் உள்ளன. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தரவுகள் நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் இல்லை. ரூபவாஹினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை. எனவே நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம், ஏ.என்.சி.எல் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆரம்பத்தில் தனியார் நிறுவனங்களாக இருந்து பின்னர் அரசுடைமையாக்கப்பட்டவை. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு மற்றும் லேக் ஹவுஸ் ஆரம்பிக்கப்பட்ட போது அவை முறையே விக்கிரமசிங்க குடும்பம் (ஷான் விக்கிரமசிங்க) மற்றும் விஜேவர்த்தன குடும்பம் (டீ.ஆர்.விஜேவர்த்தன) அவர்களினால் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களாக ஆரம்பிக்கப்பட்டன.

நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் கோப்புக்கள் காணப்படுகின்ற போதும், பணம் செலுத்த வேண்டியுள்ளதுடன், நேரத்தையும் செலவிட்டே இந்த தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது. சில சமயங்களில் கிடைக்கும் தரவுகள் சமீபத்திய தரவுகளாக இல்லாமலும் இருக்கும். சில நிறுவனங்கள் சுமார் ஒரு தசாப்த காலமாக வருடாந்த அறிக்கையை பதிவு செய்யாமலும் இருக்கின்றன. மேலும், நிறுவன பதிவாளர் திணைக்களம் நிறுவன கோப்புக்களின் தரவுகளை இணையத்தில் பராமரிப்பதும் இல்லை. எனவே, யாராவது (இலங்கையில் அல்லது வெளிநாட்டில் வாழ்பவர்) நிறுவனங்களின் உரிமையாளர் தொடர்பான தகவல்களை திரட்ட விரும்பினால் அவர்கள் கொழும்பிலுள்ள நிறுவனப் பதிவாளர் திணைக்களத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். மேலதிகமாக, நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் கம்பெனிகள் சட்டத்தின் பிரகாரம் நிதி நிலைமைக் கூற்றுக்கள்இ சந்தைப் பங்குகள் மற்றும் பாவனையாளர் எண்ணிக்கை குறித்து தகவல்களை வெளியிடத் தேவையில்லை.

நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், ஊடக உரிம கண்காணிப்பு குழு (MOM) அந்த நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மையை ‘தரவுகள் பொதுவெளியில் கிடைக்கின்றன’ என்ற தரவரிசை குறியீட்டை பயன்படுத்தும். இணைய ஊடக நிறுவனங்களின் தரவுகள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட போதும், இந்த தரவுகள் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் கிடைக்கப்பெற்றவை என்பதுடன், அவற்றின் உரிமையாளர் குறித்த விபரங்களும் இல்லை.

ஊடக உரிம கண்காணிப்பு குழு (MOM) வெளிப்படைத்தன்மை செயல்திட்டத்தில் பங்கேற்று தகவல்களைத் தருமாறு ஜுலை முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் ஊடக உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஊடக உரிம கண்காணிப்பு குழு (MOM) 46 ஊடக நிலையங்கள், 19 ஊடக நிறுவனங்கள் மற்றும் 23 தனிநபர்களை மாதிரியாகக் கொண்டு விசாரணை செய்திருந்தது. 
அதன் முடிவுகள் கீழ் வருமாறு:

  • வேண்டுகோளுக்கு இணங்க வெளிப்படைத்தன்மை - வேண்டுகோள் விடுத்தால் இலகுவாக உரிமையாளர் தொடர்பான தகவல்கள் நிறுவனம் அல்லது அலைவரிசை மூலம் கிடைத்தல். 9 ஊடக நிலையங்கள், 3 ஊடக நிறுவனங்கள் மற்றும் 9 தனிநபர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வெளிப்படைத்தன்மை உள்ளவர்களாக தரப்படுத்தப்படுகின்றார்கள். அதாவது மொத்த மாதிரியில் 23.86 வீதம். ஊடக உரிம கண்காணிப்பு குழு விடுத்த கோரிக்கைக்கு இந்த நிறுவனங்கள், நிலையங்கள் மற்றும் தனிநபர்கள் விரிவான பதில்களை வழங்கியிருந்தன.
  • தரவுகள் பகிரங்கமாக கிடைக்கின்றன - உரிமத்துவம் தொடர்பான தகவல்கள் பிற மூலங்கள் மூலம் இலகுவாக கிடைக்கின்றன. உதாரணமாக பொதுப்பதிவூகள். 35 ஊடக நிலையங்கள்இ 16 நிறுவனங்கள் மற்றும் 14 தனிநபர்கள் இவ்வாறு தரப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது உரிமையாளர்கள் யார் என்ற விபரம் இணையத்தளத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாத போதும்இ அந்த தகவல்கள் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படைத்தன்மை தரப்படுத்தல் 73.86 வீதமாக காணப்படுகின்றது.
  • தரவூகள் கிடைக்கவில்லை - உரிமையாளர் தொடர்பான தரவூகள் பொதுவெளியில் இல்லை. நிறுவனம் அல்லது அலைவரிசை தகவல்களை வெளியிட மறுப்புத் தெரிவிக்கின்றது அல்லது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. மொத்த மாதிரியில் 2.27 வீதமானவை தரவுகள் கிடைக்கவில்லை என நிரல்படுத்தப்படுகின்றது. 2 ஊடக நிலையங்களின் தரவுகள் கிடைக்கவில்லை. கொஸிப் லங்கா மற்றும் லங்கா சி நியூஸ் எனப்படும் இரண்டு இணைய செய்தி தளங்களின் தரவுகளே கிடைக்கவில்லை.
  • ஊடக உரிம கண்காணிப்புக் குழுவின் தகவல்கள் திரட்டும் விண்ணப்பம் பதிவு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டதுடன், ஆராய்ச்சிக் காலப்பகுதியில் நினைவூட்டல் மின்னஞ்சல்களும் தொடர்ந்து அனுப்பப்பட்டன.  எனினும், 3 நிறுவனங்கள் மாத்திரமே எங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக பதில் அனுப்பிவைத்தன. அந்த நிறுவனங்கள்: எக்ஸ்பிரஸ் பத்திரிகை (சிலோன்) நிறுவனம்இ, ஆஸ்க் (ASK) மீடியா மற்றும் விஜய நியூஸ்பேப்பர்ஸ்.
குறைவுநடுத்தரம்அதிகம்

ஊடக உரிமத்துவம் தொடர்பான தகவல்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் கிடைக்கும் தன்மையை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள்?
வெளிப்படைத்தன்மை உள்ளது – 0 % 
வேண்டுகோளுக்கு இணங்க வெளிப்படைத்தன்மை– 23.86% 
தரவுகள் பகிரங்கமாக கிடைக்கின்றன – 73.86% 
தரவுகள் கிடைக்கவில்லை – 2.27% 
உண்மையான உரிமையாளர் விபரம் மறைக்கப்பட்டுள்ளது - 0 % 

ஊடக உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் பகிரங்கமாக கிடைப்பதுடன், வெளிப்படைத்தன்மையும் காணப்படுகின்றது.
(வெளிப்படைத்தன்மை உள்ளது)


மொத்த மாதிரியில் > 75%  ; இந்தக் குறியீடு பொருந்தும்.

ஊடக உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்களின் விசாரணைகளின் போது அல்லது வேண்டுகோளுக்கு இணங்க கிடைக்கப்பெறுகின்றது. 
(வேண்டுகோளுக்கு இணங்க வெளிப்படைத்தன்மை, பகிரங்கமாக கிடைக்கின்றன)


மொத்த மாதிரியில் > 50% இந்தக் குறியீடு பொருந்தும். 

ஊடக உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு இலகுவாக கிடைப்பதில்லை. 
ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களினாலும் இந்த தகவல்களை வெளிக்கொண்டுவர முடிவதில்லை.
 (தரவுகள் கிடைக்கவில்லை, உண்மையான உரிமையாளர் விபரம் மறைக்கப்பட்டுள்ளது)

மொத்த மாதிரியில் < 50%  தகவல்கள் கிடைத்தால் இந்த குறியீடு பொருந்தும்.


மூலம்:

Companies Act, No.07 of 2007 [Translate to Tamil:] Accessed on 22 October 2018

ஊடக ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள்: உரிமைத்துவ வெளிப்படைத்தன்மை

முடிவு: அதிக ஆபத்து

இந்த சுட்டியானது ஊடக உரிமத்துவம் மற்றும் / அல்லது கட்டுப்பாட்டின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் மதிப்பிடுகின்றது.

ஏன்?

  • அரச ஊடகங்களை உருவாக்கும் சட்டங்கள் மற்றும் பிரிவு 1.2 (கே) யில் விவாதிக்கப்பட்டுள்ள விடயங்களினால் அரச ஊடக நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது குறித்த சட்டங்கள் வழக்கமாக பணிப்பாளர் குழுவினை அமைப்பது தொடர்பான விபரங்கள், நிதி ஆதாரங்கள் மற்றும் நிதி அறிக்கைகள் குறித்த விபரங்களை கொண்டிருக்கும். மேலும், பாராளுமன்றம் ஒதுக்கும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலமே முக்கியமாக முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருடாந்தம் நிதி அமைச்சு வெளியிடும் வரவுசெலவுத் திட்ட வரைபில் இது அறிக்கையிடப்பட்டிருக்கும். அரச ஊடகங்களின் வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதி தொடர்பான தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எனினும், இந்த தகவல்கள் பொதுமக்களினால் இலகுவாக புரிந்துகொள்ள முடியாத வகையில் தொழில்நுட்பமானது. வரவுசெலவுத்திட்டம் தொடர்பான தகவல்கள் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் பிரசுரிக்கப்படும். இது வரவுசெலவுத்திட்ட விவாதத்திற்கு முன்னர் நிதி அமைச்சினால் வெளியிடப்படும். கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் கணக்காய்வாளர் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
  • தனியார் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர், முதலீடு மற்றும் வருமான மார்க்கங்கள் குறித்த விடயங்களில் வெளிப்படைத்தன்மை குறைவாகவே காணப்படுகின்றன. அனைத்து தனியார் நிறுவனங்களும் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். எனவே கம்பெனிகள் சட்டத்தின் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. தனியார் ஊடக நிறுவனங்கள் பணிப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் தகவல்களை வழங்க வேண்டும். இந்த தகவல்கள் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் பொதுமக்கள் பார்வைக்காக கிடைக்கும். இந்த கோப்பினை பொதுமக்கள் பார்வையிட முடியும் என்றாலும், அது அவ்வளவு இலகுவானது அல்ல. இந்தக் கோப்பானது நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் மாத்திரமே பார்வையிட முடியும். மேலும், இதனை பார்வையிடுவதற்கு ரூபா.1150 (6.69 அமெரிக்க டொலர்களை) செலுத்தி அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் முதலீடு மற்றும் வருமானம் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் தனியார் ஊடக நிறுவனங்களுக்கு இல்லை.
  • அச்சு ஊடக நிறுவனங்களைப் பொறுத்தவரை அங்கு வெளிப்படைத்தன்மை சிறிதளவு நிலவுகின்றது. ஏனென்றால் அவை மேலதிகமாக இலங்கை பத்திரிகை பேரவையில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து பத்திரிகைகளும் உரிமையாளர். பிரசுரிப்பவர். பத்திரிகை ஆசிரியர் மற்றும் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் தகவல்களை வருடாந்தம் (பத்திரிகை பேரவையின் (பொது) விதிகள் 1973) வெளியிட வேண்டும். உரிமையாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் தகவலில் ஏதாவது மாற்றம் இருந்தால் பொறுப்பேற்றுக்கொண்ட 14 நாட்களுக்குள் புதிதாக நியமனம் பெற்றவர்களின் பெயர்கள் பத்திரகை பேரவையில் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த தகவல்கள் பத்திரிகை பிரசுரங்களின் உரிமையாளர்கள் யார் என்ற தகவலை பெற்றுக்கொள்ள உதவும்.
  • அனைத்து பொது நிறுவனங்களும் 2016 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டவை. எனினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட சில கோரிக்கைகளுக்கு தகவல்களை வழங்குவதில் சில பொது நிறுவனங்கள் சிறப்பாக செயற்படவில்லை. இலங்கையில் கடந்த காலங்களில் பொது நிறுவனங்கள் ரகசியத்தன்மையுடன் செயற்பட்டு வந்த நிலையில், இவ்வாறான மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கால அவகாசமும், மாற்றமும் தேவைப்படும். 

ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு நடைமுறை புள்ளிகள்: 

20 புள்ளிகளுக்கு 8 – அதிக ஆபத்து (ஒழுங்குவிதி 40%) 

வெளிப்படைத்தன்மைக்கான ஏற்பாடுகள் விளக்கம்ஆம்இல்லைஆம்/இல்லைMD
ஊடக நிறுவனங்கள் உரிமையாளர்  விபரங்களை தங்களது இணையத்தளத்தில் அல்லது பொதுமக்கள் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும்; வெளிப்படைத்தன்மை அல்லது வெளிப்படுத்தல் விதிகளை தேசிய (ஊடகம், நிறுவனம், வரி..) சட்டம் கொண்டுள்ளதா? குடிமக்கள், பாவைனயாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான வெளிப்படைத்தன்மையின் ஒழுங்குமுறை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்வதே இந்த கேள்வியின் நோக்கம் ஆகும்.0.5
ஊடக நிறுவனங்கள் உரிமையாளர்  விபரங்களில் மாற்றம் ஏற்பட்டால் அதனை அதிகார சபைகளுக்கு (உதாரணமாக ஊடக அதிகார சபை) அறிவிக்க கடமைப்பட்டிருக்கும் வெளிப்படைத்தன்மை அல்லது வெளிப்படுத்தல் விதிகளை தேசிய (ஊடகம், நிறுவனம், வரி..) சட்டம் கொண்டுள்ளதா?பொது அதிகாரசபைகள் மீதான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறலின் ஒழுங்குமுறை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்வதே இந்த கேள்வியின் நோக்கம் ஆகும்.0.5
உரிமையாளர் கட்டமைப்பில் ஒவ்வொரு தடவையும் மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டிய கடமைப்பாடு தேசிய சட்டத்தில் காணப்படுகின்றதா?சட்டமானது ஊடக உரிமத்துவம் தொடர்பில் சரியானதும்இ புதியதுமான தகவல்கள் பொதுவெளியில் கிடைக்கும் வகையில் விதிகளைக் கொண்டுள்ளதா என ஆராய்வதே இந்த கேள்வியின் நோக்கம் ஆகும். வெளிப்படைத்தன்மைக்கு இது முக்கியமானதொன்றாகும். 0.5
இந்த தகவல்களை வெளிப்படுத்த தவறும் பட்சத்தில் அதற்கான தடைகள் உள்ளனவா?தடைகளை விதிப்பதன் மூலமாக ஊடக உரிமத்துவ வெளிப்படைத்தன்மையை செயல்படுத்த முடியூமா என ஆராய்வதே இந்தக் கேள்வியின் நோக்கமாகும்.  0
ஊடக நிறுவனம் எந்த நிறுவனம் அல்லது எந்த நபருக்குச் சொந்தமானது என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் இந்த விதிகள் உறுதிசெய்கின்றனவா? ஊடக உரிமத்துவ வெளிப்படைத்தன்மைக்கான சட்டங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதுடன், ஊடக நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கின்றார்களா என்பதை ஆராய்வதே இந்தக் கேள்வியின் நோக்கமாகும்.குறைந்த ஆபத்து: உண்மையான உரிமையாளர்கள் யார் என்பது பொதுமக்களுக்குத் தெரியும்.
நடுத்தர ஆபத்து: சில உரிமையாளர்கள் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. 0.5
அதிக ஆபத்து: உண்மையான உரிமையாளர்கள் இன்னும் மறைந்துள்ளனர். 
மொத்தம்2

Ceylon Broadcasting Corporation Act, No. 37 of 1966 Accessed on 22 October 2018
Sri Lanka Rupavahini Corporation Act, No. 6 of 1982 Accessed on 22 October 2018
Associated Newspapers Of Ceylon Limited, Act No. 35 of 1981 Accessed on 22 October 2018
Regulation 6 of Gazette No. 63/5 of 12th June 1973 – Press Council (General) Regulations Accessed on 22 October 2018
Legal Assessment

ஊடகங்கள் மற்றும் விநியோக வலையமைப்புக்கள் மீதான (அரசியல்) கட்டுப்பாடுகள்

முடிவு: அதிக ஆபத்து

இந்த சுட்டியானது ஊடக நிறுவனங்கள் மற்றும் விநியோக வலையமைப்புக்கள் மீதான அரசியல் கட்டுப்பாட்டின் ஆபத்தை ஆராய்கின்றது. அத்துடன் அரசியல் தொடர்புடைய ஊடக விநியோக வலையமைப்பின் மீதான பாகுபாட்டினையூம் ஆராய்கின்றது. விநியோக வலையமைப்பை அணுகுவதில் ஊடகங்களுக்கு தடையை ஏற்படுத்துதல் அல்லது சாதகமற்ற விலையை தெரிவிப்பது என்பன பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு உதாரணமாகும். அரசியல் தொடர்பு என்பது ஒரு ஊடக நிலையமோ அல்லது நிறுவனமோ கட்சி, கட்சிக்கு ஆதரவான குழு, கட்சித்தலைவர் அல்லது கட்சி ஆதரவாளர் ஒருவருக்கு சொந்தமானது என அர்த்தப்படும். 

ஏன்?

அதிக ஆபத்து பத்திரிகைத் துறையில் காணப்படுவதுடன், அரசியல் தொடர்புள்ள உரிமையாளர்கள் 79.4 வீத வாசகர்களைக் கொண்டுள்ளனர். தொலைக்காட்சியில் அரசியல் தொடர்புகள் உள்ள உரிமையாளர்கள் 54.8 வீத பார்வையாளர்களைக் கொண்டிருப்பதால் அங்கும் அதிக ஆபத்து நிலவுகின்றது. வானொலியைப் பொறுத்தவரை இந்த ஆபத்து நடுத்தரமாக உள்ளது. அரசியல் தொடர்புடைய உரிமையாளர்கள் 45.59 வீதமான நேயர்களைக் கொண்டுள்ளனர். எனினும், விநியோக வலையமைப்புக்களில் அரசியல் ரீதியிலான கட்டுப்பாடுகள் பத்திரிகைத்துறையில் குறைவாக உள்ளது. ஆனால் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இது அதிக ஆபத்தாக உள்ளது. அனுமதி உரிமங்களை வழங்குவதில் சுயாதீன மற்றும் வெளிப்படைத்தன்மை அற்ற நிலை காணப்படுகின்றது.

அரசியலுக்கும் ஊடகத்திற்கும் நடுவே உள்ள கோடு எப்பொழுதும் கண்டறிய முடியாதுள்ளது. முரண்பாடுகள் இங்கு பொதுவானது. இலங்கையின் சட்டமானது அரசியலில் உள்ளவர்கள் ஊடக நிறுவனத்தை ஆரம்பிப்பதை தடுக்கவில்லை. அத்துடன் ஊடக நிறுவனம் ஒன்றை பதிவு செய்யூம் போது தங்களுக்கு உள்ள அரசியல் தொடர்பை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. பிற நாடுகளில், பதில் (புரொக்ஸி) உரிமையாளர்கள் - பல சந்தர்ப்பங்களில் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், ஊடகம் மற்றும் பிற தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள். வர்த்தகங்கள் இலாபத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அதன் உரிமையாளர்கள் அரசியல் ரீதியிலான தொடர்புகளை பேண வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஊடகங்களைப் பொறுத்தவரை சமூக பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களை நடுநிலை தவறாத செய்தியாக வழங்குவதில் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அரசியல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடும் முக்கிய புள்ளிகளைப் பொறுத்தவரை தங்களது செல்வாக்கை உயர்த்துவதற்கு ஊடகம் ஒரு முக்கியமான கருவியாகும். இதனை எந்த சான்றுகளினாலும் கண்டுபிடிக்க முடியாது. அரசியல் தொடர்புகளை வரையறுக்க சில பிரிவூகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, அரசியல் கட்சிகளை வைத்திருக்கும் தனிநபர்களின் நேரடி அல்லது மறைமுக கட்டுப்பாட்டில் ஊடகம் இருந்தல், ஆனால் இது ஊடகம் மற்றும் வர்த்தகத்துடன் அரசியல் எவ்வாறு தொடர்படுகின்றது என்பதின் ஒரு பகுதியை மட்டுமே காட்டுகின்றது.

இலங்கையில் அரசியலுக்கும், ஊடகத்துக்கும் இடையிலான உறவு பல சந்தர்ப்பங்களில் நேரடியான உரிமத்துவத்துடன் கூடியதாக இருக்கின்றது. ஏனென்றால் அதனை தடுக்கும் எந்தவிதமான சட்டமும் கிடையாது. எனினும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இது நடப்பது இல்லை. குறிப்பாக, அரசியல் தொடர்புகள் நடுவர்கள் ஊடாக மேற்கொள்ளப்படலாம். உதாரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஊடக நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கலாம். நாம் ஆய்வு செய்த 23 உரிமையாளர்களில் எட்டு பேர் அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, அரசியல் தொடர்புள்ள தனிநபர்கள் தங்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக ஊடகங்களை பயன்படுத்தும் ஆபத்து உள்ளது. எனினும், நிறுவனத்தின் அரசியல் தொடர்புகள் அதன் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடாத சந்தர்ப்பங்களும் உள்ளன. உதாரணமாக, டெய்லி மிரர் பத்திரிகை விஜேவர்த்தன குடும்பத்திற்கு சொந்தமானதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் பிரதமரின் நடவடிக்கையை விமர்சித்து கண்டனம் வெளியிட்டிருந்தது. எனவே, அரசியல் உறவுகள் ஊடக நடவடிக்கைகளில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிய வேண்டியூள்ளது.

ஊடக உரிமையாளர்களின் அரசியல் தொடர்புகள்:

  • ரெய்னர் (ஹிரு தொலைக்காட்சி, ஹிரு  எஃப்.எம், ஷா எஃப்.எம், கோல்ட் எஃப்.எம், சன் எஃப்.எம், சூரியன் எஃப்.எம்) - வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றுகின்றார். இது இலங்கையின் பாரிய வானொலி வலையமைப்பாக கருதப்படுகின்றது. அவருடைய சகோதரர் துமிந்த சில்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவைக் கொலை செய்தமைக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • வருணி (தெரண தொலைக்காட்சி, தெரண எஃப்.எம், அத தெரண) - அவருடைய தந்தையார் சரத் அமுனுகம தற்போது விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆராய்சி, திறன் விருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் கண்டிப் பாரம்பரிய அமைச்சராக கடமையாற்றுகின்றார்.
  • விஜேவர்த்தன குடும்பம் (விஜய பத்திரிகை) - விஜய பத்திரிகையின் தலைவரான ரஞ்சித் விஜேவர்த்தன, பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் உறவினர். மேலும் ரஞ்சித் விஜேவர்த்தனவின் மகன் ருவான் விஜேவர்த்தன தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக உள்ளார்.
  • வெல்கம குடும்பம் (உபாலி பத்திரிகை) - உபாலி பத்திரிகையின் முகாமைத்துவ பணிப்பாளரான நிமல் வெல்கமவின் சகோதரர் பாரளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம என்பது குறிப்பிடத்தக்கது. அவர் லக்மனி வெல்கமவைத் திருமணம் செய்துள்ளதுடன் நிறுவனத்தின் 90.52 வீத பங்குகளைக் கொண்டுள்ளார்.
  • அலெஸ் குடும்பம் (சிலோன் நியூஸ்பேப்பர்ஸ்) - சிலோன் நியூஸ்பேப்பர்சின் ஸ்தாபகரும், தலைவரும் டிரான் அலெஸ் ஆவார். அவர் நிறுவனத்தின் 49.99 வீத பங்குகளைக் கொண்டுள்ளார். டிரான் முன்னாள் ஜனநாயகத் தேசிய முன்னணியின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார்.
  • சுமதிபால குடும்பம் (லக்பிம) - சுமதிபாலவின் குடும்பம் லக்பிம பத்திரிகைக்கு சொந்தக்காரர்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூலமாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் திலங்க சுமதிபால. அவர் 1994 ஆம் ஆண்டு சுமதி நியூஸ்பேப்பர்சை ஆரம்பித்ததுடன், பின்னர் அதனை 2008 ஆம் ஆண்டில் லக்பிம என பெயர் மாற்றம் செய்தார். அன்றிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக லக்பிம பத்திரிகையின் பணிப்பாளர் குழாமில் இருந்து பதவி விலகினார்.
  • சரவணபவன் குடும்பம் (உதயன்) - நியூ உதயன் பத்திரிகையின் ஸ்தாபகரும், தலைவரும் ஈ.சரவணபவன் என அழைக்கப்படும் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆவார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
  • அரசாங்கம் (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் ஸ்ரீலங்கா) - இவை அனைத்தும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கண்காணிப்பில் வருகின்றது. இந்த நிறுவனங்களின், முக்கியமாக ஒழுங்குபடுத்தும் அமைப்புக்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தின், பணிப்பாளர் குழாமிற்கான புதிய நியமனங்கள் மற்றும் நீக்கங்களுக்கான அதிகாரம் தற்போது அமைச்சின் வசம் உள்ளது. இந்த நியமனங்களுக்கான தகைமைகள் குறிப்பிடப்படாத நிலையில் இந்த நியமனங்களில் அரசியல் தலையீடுகள் நிலவு கின்றன.
ஊடக உரிமையாளர்கள்  தொலைக்காட்சி பாவனையாளர் செறிவு  வானொலி பாவனையாளர் செறிவு பத்திரிகை பாவனையாளர் செறிவு 
ரெய்னர் சில்வா 18.1 %: ஹிரு தொலைக்காட்சி (18.1%)24.72%: ஹிரு  எஃப்.எம்(10.31%),  சூரியன் எஃப்.எம் 47%), ஷா எஃப்.எம் (3.93%), கோல்ட் எஃப்.எம்(0.69%), சன் எஃப்.எம் (0.32%) 
வருணி அமுனுகம பெர்னான்டோ 19.8%: தெரண தொலைக்காட்சி(19.5%), அத தெரண 24 /7 (0.3%) 14.31%: எஃப்.எம் தெரண(14.31%) 
விஜேவர்த்தன குடும்பம்   இரிதா லங்காதீப(27.15%), லங்காதீப(5.26%), விஜய(5.95%) சிறிகதா (3.47%), சன்டே ரைம்ஸ்
(1.27%), அத (1.19%), விஜே (1.03%), டெய்லி மிரர்(0.55%), டெய்லி FT (0.08%), வீக் என்ட் FT (0.14%), தருணய (0.31%) தேஷய சன்டே(0.22%), தமிழ் மிரர்(0.17%), பரிகானக (0.23%),  LW (0.07%), GO (0.05%), Hi! (0.02%), ஈஸி கையிட் 
(0.02%)
வெல்கம குடும்பம்  10%: திவயின சன்டே (6.88%), திவயின டெய்லி (1.25%), சன்டே ஐலன்ட (0.57 %), தி ஐலன்ட் (0.13%), நவலிய (0.27%), விதுசர (0.90%)
அலெஸ் குடும்பம் 8.44%: மௌபிம சன்டே (7.09%), மௌபிம டெய்லி (0.87%), சிலோன் ருடே சன்டே எடிஷன் (0.37%), சிலோன் ருடே(0.11%)
சுமதிபால குடும்பம்  2.7%: லக்பிம (2.56%), ரெஜினா  (0.14%)
சரவணபவன் குடும்பம் 1.25%: உதயன்  (1.01%), சுடர்ஒளி ஞாயிறு பிரசுரம்
 (0.13%), சுடர் ஒளி டெய்லி (0.11%)
அரசாங்கம்16.9%: எஸ்.எல்.ஆர்.சி மற்றும் ஐ.ரி.என்: ரூபவாஹினி (4.3%), ஐ ஃநேத்ரா (3.2%),ஐ.ரி.என்  (7%), வசந்தம் தொலைக்காட்சி (2.4%)   6.56%: சிட்டி எஃப்.எம்(0.20%), தேசிய சேவை (1.31%), தேசிய வர்த்தக சேவை (0.63%), றேடியோ ஸ்ரீலங்கா (0.12%), விதுல (0.01%), யாழ் எஃப்.எம்(0.00%), ரஜரட்டை (0.09%), ருஹுணு (0.14%), ஊவா (0.05%), வயம்ப (0.01%), கந்துரட்ட (0.1%), தென்றல் (0.41%), பிறை (0.03%), தேசிய (1.62%), ஐ.ரி.என் எஃப்.எம்(0.48%), வசந்தம் எஃப்.எம்(1.36%), 9.83%: ஏ.என்.சி.எல் (லேக் ஹவூஸ்)  – 
சன்டே ஒப்சேவர்(2.18%), சிலுமின(1.92%), தினமின (0.73%), தருனி (1.71%), டெய்லி நியூஸ் (0.57%), தினகரன் (0.27%), தினகரன் வாரமஞ்சரி(0.36%), ஆரோக்யா (0.11%), சரசவிய (0.17%), புதுசரண  (0.89%), மஞ்சு (0.31%), சுபசெத  (0.21%), சித்மின(0.14%), மிஹித்ரு (0.17%), வண்ண வானவில்(0.09%)
மொத்தம்54.8%45.59%79.4%
குறைவுநடுத்தரம்அதிகம்
ஊடக நிலையங்களின் அரசியல்மயமாக்கல் 
அரசியல் தொடர்புடைய தொலைக்காட்சி ஊடகங்களின் வீதம் என்ன?

வீதம்: 54.8%

<30% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)<50மூ - >30% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)>50% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)
அரசியல் தொடர்புடைய வானொலி ஊடகங்களின் வீதம் என்ன? 

வீதம்: 45.59%

<30% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)<50மூ - >30% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)>50% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)
அரசியல் தொடர்புடைய பத்திரிகைகளின் வீதம் என்ன? 

வீதம்: 79.4%

<30% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)<50மூ - >30% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)>50% பார்வையாளர் பங்கினைக் கொண்டிருக்கும் ஊடகம் குறிப்பிட்ட அரசியல் கட்சி, அரசியல்வாதி, அரசியல் ரீதியிலான குழு அல்லது அரசியல் தொடர்புடைய உரிமையாளருக்கு சொந்தமானது (கட்டுப்பாட்டில் உள்ளது)


ஊடக விநியோக வலையமைப்புகளில் அரசியல் தலையீடு

ஊடக பன்முகத்தன்மைக்கு ஊடக நிலையங்கள் மற்றும் விநியோக வலையமைப்புக்களில் அரசியல் தலையீடுகள் அதிக ஆபத்தை விளைவிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னணியில் உள்ள விநியோக வலையமைப்பானது தேசிய சந்தையில் 15 வீதத்திற்கும் அதிகமான வலையமைப்புக்களை கொண்டுள்ளதாக கருதப்படுகின்றது.

முடிவு: அதிக ஆபத்து

ஏன்?

அச்சு பிரசுரங்களுக்கான விநியோக வலையமைப்பு பல ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளிலும் சுயாதீன பத்திரிகை முகவர் நிலையங்களாக (மற்றும் துணை முகவர் நிலையங்கள்) இயங்கி வருகின்றன. இந்த முகவர் நிலையங்கள் குறிப்பிட்ட எந்தவொரு பத்திரிகைக்கும் மட்டும் அல்லாது, அனைத்து பத்திரிகை நிறுவனங்களுக்காகவும் தரகு அல்லது சந்தா அடிப்படையில் வேலை செய்கின்றன. வானொலி மற்றும் தொலைக்காட்சி வலையமைப்பு விநியோகம் அரச அமைப்பான தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வழங்கிய அலைக்கற்றையில் தங்கியுள்ளன. ஆணைக்குழுவிற்கு அரசியல் ரீதியிலான நியமனங்களை வழங்கியதாக தொலைத்தொடர்பு ஆணைக்குழு மீது விமர்சனங்கள் உள்ளன. உதாரணமாக, தற்போதைய தலைவர் உதய செனவிரத்ன ஜனாதிபதி செயலாளராகவும் கடமையாற்றுகின்றார். உயர்மட்டத்தில் உள்ளவர்களின் ஆணைக்கு இணங்க அலைபரப்பிகளை மூடுதல், இணையத்தளத்தினை முடக்குதல் மற்றும் அனுமதி உரிமங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைவுநடுத்தரம்அதிகம்
முன்னணியில் உள்ள அச்சு ஊடகத்திற்கான விநியோக வலையமைப்புக்களின் நடத்தை தொடர்பில் நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? 
முன்னணியில் உள்ள விநியோக வலையமைப்புக்கள் அரசியல் தொடர்பு அற்றவர்கள் அல்லது எந்தவிதமான பாரபட்ச நடடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள். முன்னணியில் உள்ள விநியோக வலையமைப்புக்களில் குறைந்தது ஒருவராவது அரசியல் தொடர்புடையவர்கள் அல்லது எப்பொழுதாவது பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.முன்னணியில் உள்ள அனைத்து விநியோக வலையமைப்புக்களும் அரசியல் தொடர்புடையதுடன், மீண்டும் மீண்டும் பாரபட்ச நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்.
முன்னணியில் உள்ள வானொலி ஊடகத்திற்கான விநியோக வலையமைப்புக்களின் நடத்தை தொடர்பில் நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?
முன்னணியில் உள்ள விநியோக வலையமைப்புக்கள் அரசியல் தொடர்பு அற்றவர்கள் அல்லது எந்தவிதமான பாரபட்ச நடடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள். முன்னணியில் உள்ள விநியோக வலையமைப்புக்களில் குறைந்தது ஒருவராவது அரசியல் தொடர்புடையவர்கள் அல்லது எப்பொழுதாவது பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.முன்னணியில் உள்ள அனைத்து விநியோக வலையமைப்புக்களும் அரசியல் தொடர்புடையதுடன், மீண்டும் மீண்டும் பாரபட்ச நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்.
முன்னணியில் உள்ள தொலைக்காட்சி ஊடகத்திற்கான விநியோக வலையமைப்புக்களின் நடத்தை தொடர்பில் நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?
முன்னணியில் உள்ள விநியோக வலையமைப்புக்கள் அரசியல் தொடர்பு அற்றவர்கள் அல்லது எந்தவிதமான பாரபட்ச நடடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள். முன்னணியில் உள்ள விநியோக வலையமைப்புக்களில் குறைந்தது ஒருவராவது அரசியல் தொடர்புடையவர்கள் அல்லது எப்பொழுதாவது பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.முன்னணியில் உள்ள அனைத்து விநியோக வலையமைப்புக்களும் அரசியல் தொடர்புடையதுடன், மீண்டும் மீண்டும் பாரபட்ச நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்.

 

 

Radio listenership data: RAP (Jan-Nov) 2017 Kantar LMRB
TV viewership data: PMS 2017 Kantar LMRB
Print readership data: NDMS Sri Lanka (Sep-Dec) 2017 Kantar LMRB

ஊடக நிதி மீதான (அரசியல்) கட்டுப்பாடு

முடிவு: அதிக ஆபத்து

ஊடக சந்தை இயங்குவதில் அரசாங்கத்தின் செல்வாக்கை இந்த சுட்டி ஆராய்கின்றது. குறிப்பாக அரச விளம்பரங்களை வழங்குவதில் உள்ள பாகுபாடு குறித்து கவனம் செலுத்துகின்றது. அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயற்படுவது அல்லது அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணுவது அல்லது அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை தண்டிப்பது என்ற வகையில் இந்த பாகுபாடு காட்டப்படுகின்றது. அரசாங்கங்கள் (தேசியம், பிராந்தியம், உள்ளுர்) மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் பணம் செலுத்தி முன்னெடுக்கும் விளம்பரங்கள் அரச விளம்பரங்களாக கருதப்படும்.

ஏன்?

அரச விளம்பரங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை. மேலும், அரசாங்க விளம்பரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை கண்காணிக்க எந்த விதிகளும் கிடையாது. 2016 ஆம் ஆண்டு ஊடக மறுசீரமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் ஊடகத்துறையை ஆராய்ந்ததில் அந்தத் துறையின் மொத்த விளம்பரத்தில் சுமார் 30 வீதமானவை அரச விளம்பரங்கள். இந்த வீதமானது ஒவ்வொரு வருடமும் வித்தியாசப்படலாம். அரசாங்கமானது பத்திரிகையின் விற்பனை எண்ணிக்கை மற்றும் தொலைக்காட்சி மதிப்பீடுகளை கணக்கில் கொள்ளாமல் அரசுக்கு சொந்தமான அச்சு மற்றும் தொலைக்காட்சிகளுக்கு குறிப்பிட்ட அளவு விளம்பரங்களை வழங்கி பாகுபாடு காட்டுவதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.

மேலும்,  அரச விளம்பரங்கள் வழங்கப்பட மாட்டாது என பயமுறுத்தி தனியார் ஊடக நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் தங்களது அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவூம் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, குறிபிட்ட ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்களை விட சுயாதீன தொலைக்காட்சி அதிக விளம்பரங்களை ஒளிபரப்பியதாக பொது நிறுவனங்கள் ஆணைக்குழுவின் நான்காவது அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. மேலும், குறித்த வேட்பாளர் தவிர்த்த மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரிடம் விளம்பரங்களுக்கு இரு மடங்கு பணம் சுயாதீன தொலைக்காட்சி வசூலித்ததாகவும் தெரியவருகின்றது.
அரச விளம்பரங்களை பகிர்ந்தளிப்பது குறித்த தரவுகள் கிடைப்பதில் உள்ள சிக்கல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை அல்லது அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையினால் ஊடக சந்தையில் அரச நிதியின் செல்வாக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறைவுநடுத்தரம்அதிகம்
அரச விளம்பரங்கள் ஊடகங்களின் பார்வையாளர்களின் பங்கிற்கு அமைய பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா? தரவு இல்லை
அரச விளம்பரங்கள் ஊடகங்களின் பார்வையாளர் பங்கிற்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படுகின்றது.அரச விளம்பரங்கள் முறையாக (பார்வையாளர் பங்கிற்கு ஏற்ப) பகிர்ந்தளிக்கப்படுவதில்லை.அரச விளம்பரங்கள் குறிப்பாக சில ஊடக நிலையங்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றது. இது நாட்டிலுள்ள முக்கிய ஊடக நிலையங்களை கருத்தில் கொள்வதில்லை.
அரச விளம்பரங்கள் பகிர்ந்தளிப்பதன் விதிகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீடுகள்?
அரச விளம்பரங்கள் வெளிப்படைத்தன்மை விதிகளுக்கு அமைய ஊடக நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.அரச விளம்பரங்கள் ஊடக நிலையங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கு அமைவாக பகிர்ந்தளிக்கப்படும் போது, அது வெளிப்படைத்தன்மை உடையதா என்பது தெளிவில்லை.அரச விளம்பரங்களை ஊடக நிலையங்களுக்கு வழங்குவதில் எந்தவொரு விதியும் பின்பற்றப்படவில்லை
அரச விளம்பரங்களின் முக்கியத்துவம்    

தொலைக்காட்சி, வானொலி, அச்சு மற்றும் இணையம் என முழுமையான விளம்பர சந்தையில் அரச விளம்பரங்களின் வீதம் என்ன?

மதிப்பு: தரவு இல்லை 

முழுமையான சந்தையில் அரச விளம்பரங்களின் பங்கு <5 %முழுமையான சந்தையில் அரச விளம்பரங்களின் பங்கு
5% -10% 
முழுமையான சந்தையில் அரச விளம்பரங்களின் பங்கு >10% 

ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு நடைமுறைகள்: இணைய நடுநிலைமை

முடிவு: அதிக ஆபத்தானது

இணைய நடுநிலைமை என்பது பாவனையாளர்கள், உள்ளடக்கம், தளங்கள் மற்றும் பயன்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமல் இணையத்தில் காணப்படும் அனைத்து தரவுகளும் சமமாக பேணப்பட வேண்டும் என்பதாகும். ஊடக பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டுமானால், இணைய நடுநிலைமையை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் தகவல்கள், கருத்துக்கள், கண்ணோட்டம் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கும், பரப்புவதற்கும் சமமான திறனை உறுதிசெய்கின்றது. இது ஊடக பன்முகத்தன்மைக்கு அவசியமானது. இந்த சுட்டியானது இணைய நடுநிலைமையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் மற்றும் இணைய நடுநிலைமையில் கவனம் செலுத்தும் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பு பொறிமுறைகள் குறித்து ஆராய்கின்றது. 

ஏன்?

இணைய நடுநிலைமை குறித்தான சட்டங்கள் மற்றும் இணைய நடுநிலைமையைக் குறிக்கும் கட்டுப்பாட்டு பொறிமுறைகள் எதுவும் இலங்கையில் இல்லாமையினால்  இலங்கையின் ஊடகப் பன்முகத்தன்மைக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என இந்த சுட்டி மதிப்பிடுகின்றது. 

இணைய நடுநிலைமை குறித்து சட்டம் எதுவும் விளக்கம் அளிக்காத போதும், இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டம் 1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்கத்தின் 17 ஆவது பிரிவு “குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகை காட்டுதல் அல்லது குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு பாரபட்சம் காட்டுதல் என்பன சேவை வழங்குனருக்கு தடை செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடுகின்றது. மேலும்இ இணைய சேவை வழங்குனர்களுக்கு வழங்கப்படும் அனுமதி உரிமத்தில் இந்த நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் அனுமதி உரிமத்தை மீளப்பெற தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் இணைய சேவை வழங்குனர்கள் இணையத்தில் காணப்படும் உள்ளடக்கங்கள் அனைத்தையும் சமமாக கருதுவதுடன், எந்தப் பாகுபாடும் காட்டாமல் நடக்க உதவும்.

மேலும், பிரசுரம் உட்பட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்து இலங்கையின் அரசியலமைப்பின் 14 ஆவது குறிப்பு தெரிவிக்கின்றது. இதை விரிவாக ஆராய்ந்தால், இணைய நடுநிலைமைக்கு ஆதரவானதாக இதனைக் கருதலாம். எனினும், இணையத்தைக் ஒழுங்குபடுத்துவதற்கான குறிப்பான விதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால், இது முற்றுமுழுதாக ஒழுங்குபடுத்தப்படாத பகுதி என கூறப்படுவதால், இந்தப் பிரச்சினையாது தேசியச் சட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை.

இணைய நடுநிலைமை கொள்கைகளை கவனத்தில் கொள்ளாது அதற்கு எதிராக இணைய சேவை வழங்குனர்கள் நடந்துகொண்ட பல்வேறு சம்பவங்கள் உள்ளன. உதாரணமாக, 2018 ஆம் ஆண்டு மே மாதம் விஜய பத்திரிகை குழுமம் ஏர்டெல் நிறுவனத்துடன் பங்காளராக இணைந்து கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் டெய்லி மிரர், லங்காதீப மற்றும் தமிழ் மிரர் ஆகியவற்றின் ஒன்லைன் பிரசுரங்களை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவசமாக வாசிக்கும் அனுமதி கிடைத்தது. இதன் மூலம் குறித்த செய்தி இணையங்களுக்கான உத்தியோகபூர்வ முன்னுரிமை மற்றும் இணையத்தளங்களை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிறப்பு சலுகையூம் கிடைத்தது.

புள்ளிகள்: 11 புள்ளிகளுக்கு 3 – அதிக ஆபத்து  (27.3 % ) 

வெளிப்படைத்தன்மைக்கான ஏற்பாடுகள்விளக்கம்ஆம்இல்லை ஆம்/இல்லைMD
ஊடக நிறுவனங்கள் உரிமையாளர்  விபரங்களை தங்களது இணையத்தளத்தில் அல்லது பொதுமக்கள் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மை அல்லது வெளிப்படுத்தல் விதிகளை தேசிய (ஊடகம், நிறுவனம், வரி..) சட்டம் கொண்டுள்ளதா?இணைய நடுநிலைமை உள்நாட்டு சட்டங்களினால் பாதுகாக்கப்படுகின்றதா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் போன்று நாடுகளுக்கு இடையே ஏதாவது ஒப்பந்தங்கள் இருக்கின்றனவா என்பதை இந்தக் கேள்வி ஆராய்கின்றது. 0.5
இணையத்தளங்கள் அல்லது இணையத்தில் கருத்துக்களை தடைசெய்வதை தடுக்கும் விதிமுறைகள் தேசிய சட்டத்தில் உள்ளனவா?வலுவான இணைய நடுநிலைமை கட்டமைப்பின் முக்கிய அங்கமான இணைய வேகத்தை கட்டுப்படுத்துவதை தடுக்க ஒரு நாட்டின் இணைய நடுநிலைமை விதிமுறைகள் எந்த அளவுக்கு காணப்படுகின்றன என்பதனை இந்தக் கேள்வி ஆராய்கின்றது. 0.5
ஓன்லைனில் வழங்கப்படும் சேவைகள் அல்லது கருத்துக்களை முடக்குவதை தடை செய்யும் விதிமுறைகள் தேசிய சட்டத்தில் உள்ளனவா?வலுவான இணைய நடுநிலைமை கட்டமைப்பின் முக்கிய அங்கமான இணைய வேகத்தை கட்டுப்படுத்துவதை தடுக்க ஒரு நாட்டின் இணைய நடுநிலைமை விதிமுறைகள் எந்த அளவுக்கு காணப்படுகின்றன என்பதனை இந்தக் கேள்வி ஆராய்கின்றது. 0.5
பூச்சிய மதிப்பீடு  மற்றும் / அல்லது கட்டணம் செலுத்தி முன்னுரிமையைப் பெற்றுக்கொள்வதை தடைசெய்யும் நெறிமுறைகளை தேசிய சட்டம் கொண்டிருக்கின்றதா?நடுநிலைமை கட்டமைப்பின் முக்கிய அங்கமான பூச்சிய மதிப்பீட்டை (கட்டணம் செலுத்தி முன்னுரிமை பெறுவது இதன் முக்கியமான வடிவம் ஆகும்) தடுக்க ஒரு நாட்டின் இணைய நடுநிலைமை விதிமுறைகள் எந்த அளவுக்கு காணப்படுகின்றன என்பதனை இந்தக் கேள்வி ஆராய்கின்றது. 0.5
இணைய நடுநிலைமை சட்டத்தினால் பாதுக்காப்படும் போது, சட்டரீதியான கட்டமைப்பு ஏதாவது விதிவிலக்குகளை அங்கீகரிக்கின்றதா? இணைய நடுநிலைமை பாதுகாப்பில் நியாயமான கட்டுப்பாடுகளை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் பிற கட்டுப்பாடுகள் இதன் பயன்பாட்டை குறைத்து மதிப்பிடும் போது இந்தக் கேள்வி எழுகின்றது.0.5
பூச்சிய மதிப்பீட்டை தடைசெய்யூம் அல்லது கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன: பணம் செலுத்தி முன்னுரிமை பெறும் நடவடிக்கை இடம்பெறவில்லை.சட்டத்தினால் தடை செய்யப்பட்டிருந்தாலும், நடைமுறையில் கட்டணம் செலுத்தி முன்னுரிமை பெறுவது எவ்வளவு தூரம் நடைபெறுகின்றது என்பதனை இந்தக் கேள்வி ஆராய்கின்றது. சில நாடுகளில் கடுமையான பூச்சிய மதிப்பீடு பாதுகாப்பு இருந்தாலும், பணம் செலுத்தி முன்னுரிமை பெறுவது நடந்து கொண்டு தான் இருக்கின்றது. சட்டத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள வித்தியாசத்தை இது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.X
பூச்சிய மதிப்பீட்டை தடைசெய்யும் அல்லது கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன: வேறுவகையிலான பூச்சிய மதிப்பீடு நடைபெறவில்லை.மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போன்றுX
நெறிமுறைகள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன: இணைய வேகத்தை கட்டுப்படுத்துவது மற்றும் / அல்லது முடக்குவது போன்ற செயற்பாடுகள் நடைபெறவில்லை.இணைய நடுநிலைமையை பாதுகாப்பதற்கான சட்ட அமைப்பு இணைய வேகத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் முடக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளின் போது எவ்வாறு செயற்படுகின்றது என்பதனை இந்தக் கேள்வி ஆராய்கின்றது. 0
இணைய நடுநிலைமையை பாதுகாப்புக்களை ஒழுங்குபடுத்த அல்லது கண்காணிப்பதுடன், அவற்றை செயற்படுத்த அமைப்புக்கள் உள்ளனவா?இணைய நடுநிலைமை பாதுகாப்பினை அமுல்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்புக்கள் உள்ளனவா என இந்தக் கேள்வி ஆராய்கின்றது0.5
இணைய நடுநிலைமை பாதுகாப்புக்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவை மீறப்பட்டால் அதற்காக தடை விதிக்கப்பட்டுள்ளனவா?இணைய நடுநிலைமை நெறிமுறைகள் மீறலானது சட்டத்தினால் எந்த அளவிற்கு தீவிரம் காட்டப்படுகின்றது என்பதனை இந்தக் கேள்வி ஆராய்கின்றது.X
இணைய நடுநிலைமை விதிகள் மீறப்பட்டால் அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக காணப்படும் பொறிமுறைகள் பயனுள்ளதா?இணைய நடுநிலைமை நெறிமுறைகள் உண்மையில் அதற்கான இலக்குகளை அடைகின்றனவா என்பதனை இந்த கேள்வி மதிப்பீடு செய்கின்றது.X
மொத்தம் (ஆநயn ழக டு-ந ரனெ டு-ஐ ளரடி-iனெiஉயவழசள)

3 / 27.3%

மேலதிக தகவல்இது தொடர்பான திட்டவட்டமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு போதுமான சான்றுகள் இல்லை. இணைய நடுநிலைமையானது சட்டத்தினால் பாதுகாக்கப்படவில்லை. எனவே, சில கேள்விகள் இங்கு பொருந்தாது. விதிகளுக்கு விரிவான விளக்கங்கள் தேவை. இதற்கான உதாரணங்கள் பத்திரிகை கட்டுரைகள் மூலம் பெறப்பட்டுள்ளன.
(ழூணுநசழ-சயவiபெ என்பது இணையத்தை இலவசமாக எந்தவித கட்டணமும் இன்றி பயன்படுத்தும் வசதியைக் கொடுப்பதாகும். உதாரணமாக ஒரு சில வலைத்தளங்களை மாத்திரம் இலவசமாக பயன்படுத்த முடியூம்இ விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் இது சாத்தியப்படுகின்றது.)

Legal Assessment

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ