This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/10/07 at 22:14
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

செயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்

ஊடக உரிமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையின் நிரலில் இலங்கை எங்கே இருக்கிறது?

ஊடகங்களின் உரிமைத்துவத்தில் இருக்கும் வெளிப்படைத்தன்மையானது பொதுமக்களின் ஆர்வத்துக்குரிய ஒரு பேசுபொருளாக, இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்றம் கண்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை ஆகியவற்றைப் பற்றிய அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் பின்னணியில் உருவாகியுள்ளது. ஊடகங்களின் உரிமை பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதலுக்கான சாத்தியமிருந்தாலும், இந்த விடயத்தில் அதிகளவான வெளிப்படைத்தன்மையைத் தேடும்போது அங்கே அதிகளவு நிதிச் செலவு உள்ளது. ஊடக உரிமையாண்மை கண்காணிப்பு (MOM) குழுவின் கண்டுபிடிப்புக்கள் வெளியே அறியத்தர இலக்கு வைத்துள்ள : (1) ஊடகங்களின் உரிமை பற்றிய வெளிப்படைத்தன்மையின் நன்மைகள் மற்றும் (2)ஊடக உரிமைத்துவத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் வழிமுறைகள், இவற்றோடு அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகளும். மேலதிகமாக, எங்களது கண்டுபிடிப்புக்கள் கற்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஊடக நிறுவனங்களினதும் வெளிப்படைத்தன்மையின் சுட்டியையும் உள்ளடக்கியுள்ளன. 

(1) ஊடக உரிமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையின் நன்மைகள்

ஊடக உரிமைத்துவ சட்டங்கள் பற்றிய மிகச்சரியான மற்றும் மிக சமீபத்திய இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடித்தல் ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை நோக்கிய ஒரு முக்கியமான படிக்கல் ஆகும். ஊடக உரிமைத்துவம் பற்றிய பகிரங்க அறிவானது ஊடக உரிமையாளருக்கும் பொதுமக்களுக்கும் பரஸ்பர அனுகூலங்களைத் தரக்கூடியதாகும். ஊடக உரிமைத்துவ வெளிப்படைத்தன்மையின் சில அனுகூலங்களாவன :

1.நம்பகத்தன்மையும் பதில் சொல்லும் பொறுப்புடையதுமான உறவுமுறைகளை தகவல்களை வழங்குவோருக்கும் பொதுமக்களின் அங்கத்தவருக்கும் இடையில் ஏற்படுத்தல்;

2. ஒழுங்குமுறைப்படுத்துவோர், ஊடக உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கிடையே ஊடக செறிவாக்கம் மற்றும் பன்மைத்தன்மை போன்ற பொருளடக்கங்களில் விவாதங்களை ஏற்பாட்டு செய்தல், மற்றும்

3.செறிவாக்கத்தின் மேல் அர்த்தபூர்வமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான, போட்டித்தன்மை கொண்ட சந்தையை ஊக்குவிப்பதும், ஊழலைக் குறைப்பதும்.

(2) ஊடக உரிமைத்துவம் பற்றிய தகவல்களை அணுகுதல்

MOM குழுவானது இலங்கையில் ஊடக உரிமைத்துவங்களின் தகவல்களை அணுகுவதற்காக மூன்று வழிமுறைகளை அடையாளம் கண்டு மதிப்பிட்டது :

(a) ஊடக நிறுவனத்திடமிருந்தே தகவல்களைக் கோரல்

b) நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களத்திடமிருந்து (ROC) தகவல்களைக் கொள்வனவு செய்தல்  மற்றும்  (c) தகவல் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கோரிக்கையை முன்வைத்தல்.

இந்த செயன்முறையில் காணப்படும் சாதக பாதகங்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளன:

a) ஊடக நிறுவனத்திடமிருந்து தகவல்களைக் கோரல் 

ஒரு ஊடக நிறுவனத்திடமிருந்து தகவலைக் கோரும்போது அதன் விருப்பத்தின் அடிப்படையில் நிறுவனரீதியான வெளிப்படைத்தன்மை பொதுவாக உணரப்படக்கூடிய ஒன்றாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில், ஒன்றில் உரிமையாளர்கள் தத்தமது நிறுவனங்கள் மூலமாக தமது உரிமையை பகிரங்கமாக வெளிக்காட்டலாம், அல்லது பொதுமக்கள் கோரிக்கைகள் மூலமாக தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குதல்.

சாதகங்கள் : தங்களது தகவல்களை பொது மக்களுக்கு வெளிப்படுத்த விருப்பத்தைக் கொண்ட உரிமையாளர்கள், உரிமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினால் பெறப்படும் நன்மைகளுக்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்துகின்றனர். இது பொது மக்களுக்கு மூல முதலான ஆதாரத்திலிருந்தே தகவல்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்வதுடன் நேரடித் தகவல் பரிமாற்றமாக அமைகிறது.

பாதகங்கள் : உரிமைத்துவம் பற்றிய தகவல்களை பெறுவதற்கு மிக உகந்த வழியாக இது இருந்தாலும் கூட, உரிமையாலகளுக்கு தெரிந்தெடுத்த விபரங்களை மட்டும் வெளியிடக்கூடிய இடமுள்ளது. உதாரணமாக, ஒரு ஊடக நிறுவனமானது பல்வேறு வேறு நிறுவனங்களினால் சொந்தமாக்கப்;படும்போது, பொது மக்கள் இயற்கையான உரிமையாளர் யாரென்பதை அறியார், அதாவது குறிப்பிட்ட பங்குடைமை கொண்ட நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் 'உண்மையானா உரிமையாளர்கள்.

மேலதிகமாக, பதிலி(பிரதியீட்டு) உரிமையாளர்கள் இயற்கை உரிமையாளர்களாகப் பட்டியல்படுத்தப்பட்டிருந்தால்,ஊடக நிறுவனம் ஒன்றின் 'உண்மையான' உரிமையாளர் யாரெனக் கண்டறிவதில் சிரமமிருக்கும்.

b)    நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களம் (ROC)

சுழுஊயே இலங்கையில் ஊடக நிறுவனங்கள் உட்பட, தனியார் நிறுவனங்களை பதிவுசெய்வதை மேற்பார்வை செய்கின்ற ஒரே நிறுவனமாக இருக்கிறது. ஒரு அரசாங்க நிறுவனமாக நிறுவனங்களின் உரிமை தொடர்பான தகவல்களைத் திரட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதோடு,இதற்கு பின்வரும் முக்கியமான தகவல்களை வழங்குவதற்கான உரிமைகள் கட்டாயமும் ஆக்கப்பட்டுள்ளது : நிறுவனமயமாக்கப்பட்டுள்ள விபரங்கள், பங்குகளின் பதிவுகள் மற்றும் பணிப்பாளர்கள் பதிவுத்திரட்டுகள்.

இந்தத் தகவல்கள் ROC குக் குறிப்பிட்ட கட்டணம் ஒன்று செலுத்தப்படுவதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படலாம்.

சாதகங்கள் : அரசாங்க நிறுவனமொன்றில் ஊடாக வழங்கப்படுவதனால், ROC யிடமுள்ள தகவல்கள் நம்பகமானவை எனக் கருதப்படுகிறது. மேலும்,குறித்த நிறுவனங்களின் பதிவு இலக்கங்களும், தொடர்புடைய கோப்புகளும் பார்வைக்கு கிடைப்பனவாகவும் இருந்தால்,தகவல்கள் ஒரே நாளில் கைமுறையாக அணுகக்கூடியதாகவிருக்கும்.

பாதகங்கள் : இலங்கையில் வசிக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ளோர் பற்றிய உரிமைத்துவ விபரங்கள் கொழும்பிலுள்ள ROC யில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்;

நிறுவனக் கோப்புக்களை பார்வையிட உண்டாகும் செலவு இலங்கை ரூபாய் 1150 (USD 7.28).ஒரு கோப்பிலுள்ள ஒற்றை படிவம் ஒவ்வொன்றினதும் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் ஒவ்வொன்றும் அதேயளவு பெறுமதியுடன் குறைந்தபட்சம் 4-5 நாட்கள் எடுக்கும்.

ROC யினால் பேணப்படும் கோப்புக்கள், வருடாந்த வருவாய் விபரங்கள் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்குத் தாக்கல் செய்யப்படாதிருத்தலால், பலவேளைகளில் புதிய தகவல்கள் அற்ற பழைய தகவல்களையே கொண்டிருத்தல்.

கோப்புக்கள் மிக மோசமான நிலையிலேயே சேமித்து வைக்கப்பட்டிருப்பதால்,சில படிவங்கள் காணாமல் போயிருப்பதும், கோப்பின் உள்ளடக்கங்கள் குலைந்திருப்பதும் பூச்சிகள் அரித்து சேதமடைந்திருப்பதும்;

நிழற்படங்கள் எடுக்க மற்றும் ஸ்கான் செய்யப்படக்கூடாது என இறுக்கமான கட்டுப்பாடுகள் இருப்பதன் காரணமாக, தரவுகள்  யு4  தாள்களில் பென்சில்களாலேயே எழுதப்படவேண்டும்.

இந்த முழுமையான செயற்பாடு சிக்கலானதும் நேரம் அதிகம் எடுப்பதுமாகும், அது மட்டுமன்றி கையெழுத்துக் குறிப்புக்களாக இவை இருப்பதால் சந்தேகப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

 உ) தகவல் உரிமைச் சட்டம் (RTI)

ஊடக உரிமைத்துவத் தகவல்களை ஊடக நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவோ, அல்லது சுழுஊயின் வழக்கமான செயன்முறை மூலமாகவோ பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிமுறையொன்று தகவல் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்வதாகும்.

சாதகங்கள் : அரசினால் ஒதுக்கப்படும் அலைவரிசைகளைப் பயன்படுத்துவதனால், வானொலிகள் மற்றும் தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் உரிமைத்துவ தகவல்களைப் பெற்றுக்கொள்ள RTI கள் பயன்படலாம்.

பாதகங்கள் : RTI விண்ணப்பங்கள் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சி முதலாய ஊடகங்களின் உரிமைத்துவ தகவல்களைப் பெற்றுக்கொள்ளப் பயன்படக்கூடிய அதேவேளை, அச்சு ஊடகங்களுக்கு முடியாது. இதற்கான காரணம், பத்திரிகை வெளியீடுகள் அரசாங்க அச்சு சேவைகளை தங்கியிருப்பதில்லை.

 இந்த வழியைக் கடைக்கொள்ளுவதானது விண்ணப்பதாரியை சுழுஊயின்  நிதியியல் கட்டுப்பாடுகளையும் கையெழுத்து மூலமான பிரதிகளையும் தாண்டிச்செல்ல அனுமதிக்காது.

இந்த வழிமுறையானது நேரம் எடுத்துக்கொள்ளக் கூடியது (குறைந்தபட்சம் 2 வாரம் முதல் 6 மாதங்கள் வரை ).

இலங்கையின் வெளிப்படைத்தன்மைக்கான தரப்படுத்தல்கள்

MOM குழுவானது அனைத்து அச்சு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களுக்கான வெளிப்படைத்தன்மையையும் MOM ஆராய்ச்சிமுறை  தரப்படுத்தியது. அந்த 46 நிறுவனங்களினதும் முடிவுகள் கீழ்வருமாறு :

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ