Data Privacy Policy
தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் எமது இணையத்தளத்தைப் பயன்படுத்த முடியும். எமது இணையதளத்தின் குறிப்பிட்ட சேவைகள் தொடர்பில் வேறுபட்ட வரையறைகள் காணப்படுகின்றன. இருப்பினும், அவை தனியாக கீழே விளக்கப்படுத்தப்பட்டுள்ளன. ஜேர்மனிய தகவல் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு அமைவாக, நாம் உங்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை பெறுகின்றோம். விசேஷமாக போலியற்ற நபர்கள் தொடர்பான தகவல்கள் தனிப்பட்ட தரவுகளாக கொள்ளப்படும். தகவல் பாதுகாப்புச் சட்டம் சார்ந்த வரையறைகள் ஜேர்மனிய மத்திய தரவு பாதுகாப்புச் சட்டம் (BDSG) மற்றும் தொலைக்காட்சி ஊடக சட்டம் (TMG) ஆகியவற்றில் காணப்படுகின்றன. பெற்றுக்கொள்ளும் தகவல்களின் அளவு, முறை, நோக்கம் மற்றும் பயன்படுத்துதல் ஆகியன தொடர்பான தகவல்களைக் கீழ்வரும் சட்டப் பிரிவுகள் வழங்குகின்றன.
domainfactory GmbH
Oskar-Messter-Str. 33
85737 Ismaning, Deutschland
Tel: +49 89 998 288 026
இணையத்தளத்தில் தரவுகளை பரிமாறுவது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடியது என்பதாலும் மூன்றாம் நபர்களினால் தரவுகளைப் பயன்படுத்தும் அச்சுறுத்தல் உள்ளதால் தயவுசெய்து அவதானமாக இருங்கள்.
தரவு வழங்கி
நீங்கள் பயன்படுத்தும் இணையத் தேடல் பொறி எமக்கு வழங்கும் கீழ்வரும் தரவுகள் தொழிநுட்பக் காரணங்களுக்காக திரட்டப்படுகின்றன.
-நீங்கள் பயன்படுத்தும் இணையத் தேடல் பொறியின் வகையும் அதன் பாதிப்புருவும்
-செயற்பாட்டு முறைமை
-எமது இணையத்தளத்துடன் உங்களை இணைக்கும் இணையத்தளம் (இணைய முகவரி)
-நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள்
-இணையத்தளத்தை பார்வையிட்ட நேரமும் திகதியும்
-உங்களது இணையத்தள நெறிமுறை முகவரி
இவ் அனாமதேய தரவுகள் தனிப்பட்ட தகவல்களிலிருந்து வேறாக சேமிக்கப்படுகின்றன. ஆகவே, ஒரு குறிப்பிட்ட நபருடன் இவற்றை இணைப்பது தவிர்க்கப்படுகின்றது. இத் தரவுகளாவன எமது இணையதளத்தை முன்னேற்றுவதற்கும் எமது சேவைகளை மேம்படுத்துவதற்கும் புள்ளிவிபரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இணையதள பகுப்பாய்வு சேவையின் பயன் (Matomo)
எமது இணையத்தளம், இணையதள பகுப்பாய்வு சேவையினைப் பயன்படுத்துகின்றது. இப் பகுப்பாய்வுக்காக இணையதள பகுப்பாய்வு சேவை தரவு வழங்கியினால் இணையத்தேடுபொறிக்கு வழங்கப்படும் தகவல்களை பயன்படுத்துகின்றது. நீங்கள் பார்வையிட்ட இணையதளங்கள் பற்றிய தரவுகள் உங்கள் கணனியில் சேமிக்கப்படுவதையும் அவைசார்ந்த பகுப்பாய்வை வழங்குவதையும் இது குறிக்கும். இவற்றினாலேயே நீங்கள் இணையதளத்தை பயன்படுத்திய நேரம், இடம், பயன்படுத்திய தடவைகள், உங்கள் கணனியின் முகவரி என்பன இணையதள பகுப்பாய்வு சேவைக்கு அனுப்பப்பட்டு சேமிக்கப்படுகின்றன. இச் செயட்பாட்டின் ஒரு அங்கமாக, உங்கள் கணனியின் முகவரி அநாமதேயமாக்கப்படுகின்றது. நீங்கள் எமது இணையத்தளத்தைப் பயன்படுத்தும் தரவுகள் மூன்றாம் நபர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
தகவல்/இரத்துச் செய்தல்/அழித்தல்
ஜேர்மனிய மத்திய தரவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், நீங்கள் இலவசமாக தொடர்புகொண்டு, சேகரிக்கப்படும் உங்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் தொடர்பில் மாற்றங்கள் செய்வதற்கோ, அவற்றை அழிப்பதற்கோ அல்லது பயன்படுத்தாது தடுப்பதற்கோ எம்மை அணுக முடியும். உங்களால் தவறான தரவுகளை சரிசெய்யவும், தனிப்பட்ட தரவுகளை அழிப்பதற்கும் உங்களுக்கு உரிமையுள்ளது. இது எந்த விதத்திலும் தடைசெய்யப்படவில்லை.
சட்ட அலுவலகத்தால் வழங்கப்பட்ட தரவு தனியுரிமைக் கொள்கை அறிக்கை மாதிரி இவ் இணையத்தளத்தில் காணப்படும் தகவல்கள், பொதுவெளியில் கிடைக்கக்கூடிய மற்றும் சிறந்த முயற்சிகள் அடிப்படையில் விசாரித்தறியக் கூடிய மூலங்களிலிருந்து பெறப்பட்டவை. பாவனையாளர்கள் ஏதாவது தவறுகளை இனங்காணும் சந்தர்ப்பத்தில் அல்லது தகவல்கள் விடுபட்டிருந்தால் அவை தொடர்பான விளக்கத்தைப் பெறவோ, தகவலை மேம்படுத்தவோ கீழ்காணும் இணைப்பினூடாக Verité Research ஆய்வு நிறுவனத்தை அணுக முடியும்.
இத்தளத்தில் காணப்படும் தகவல்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு உரியதோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவதோ அல்ல. அதன் அடிப்படையில், Verité Research க்கு எதிராக பொறுப்பு கூறுவதற்கு வலியுறுத்த முடியாது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் (RSF) இலங்கையின் ஊடக உரிமைத்துவக் கண்காணிப்புக் குழு (MOM) மற்றும் Verité Research ஆகியன Creative Commons Attribution - NoDerivatives 4.0 சர்வதேச அனுமதிப்பத்திரத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ளன.