ஊடக உரிமையாண்மையின் முக்கியத்துவங்கள்
வெகுஜன ஊடகங்கள் சமூகத்தில் உண்மை வெளிப்படுத்தப்படும் விதம் விவாதிக்கப்படும் உண்மை வெளிப்படுத்தப்படும் விதத்திலும் விவாதிக்கப்படும் விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஊடக சுதந்திரத்தின் பன்முகத்தன்மையும், பொது மக்கள் கருத்துக்களும் - விமரிசனங்களுமே ஒரு ஆரோக்யமான ஜனநாயகத்தின் பாதுகாப்பு. கண்காணிப்பு மற்றும் உரிமையின் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்துவதானது சுதந்திரத்தையும், தெரிவு செய்யும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் முதற்படியாகும்.
மக்கள் தாம் பெரும் தகவல்களின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்ய அதை யார் வழங்குகிறார்கள் என அறியாமல் எவ்வாறு செய்ய முடியும்? ஊடகவியலாளர்கள் தாம் வேலை செய்யும் இடங்கள் நிறுவனங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன என்று அறியாமல் எவ்வாறு சரியாக வேலை பார்ப்பது? ஊடக அதிகாரிகள் ஊடக இயக்காழியின் பின்னால் யார் உள்ளனர் என அறியாமல் அதிகளவிலான ஊடக செறிவைப்பற்றி எவ்வாறு உரையாற்றுவார்கள்?
உரிமையாண்மைக் கட்டமைப்பு ஊடகத் துறை அதன் வளங்களை நிர்வகிக்கும் விதத்தையும் பாதிக்கலாம். இது ஊடகத் துறையின் பொருளாதார வலிமை மற்றும் செயல்திறனை வடிவமைக்கின்றது. இது குறிப்பாக சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு ஆர்வமாக உள்ளது.
இந்த கேள்விகளை தொகுப்பதன் மூலம், ஊடக உரிமையாளர் மேற்பார்வை இலங்கையில், பார்வையாளர்கள் பகிர்ந்துகொள்ளும் அச்சு , வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் சில உரிமையாளர்களுக்கிடையே செறிந்து காணப்படுகின்றன. ஊடக நிறுவனங்கள் அவற்றின் உரிமையாண்மைக் கட்டமைப்புகளில் அரசியல் தொடர்புகளில் இருந்து விடுபடவில்லை. பொதுவாக, ஊடக உரிமையாளர் கட்டமைப்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மையும் தரவு அணுகலும் உள்ளன.
'ஊடகங்களின் உரிமையர்கள் யார்?' என்பவை பற்றிய மேலதிக தகவல்களை எங்கள் தரவுத்தளத்தில் கண்டறியுங்கள்.
இந்த இணையதளத்தின் தகவல்கள் வழக்கமான மீளாய்வுக்கு உட்படுபவை. இலங்கையில் எந்தவொரு அபிவிருத்தியையும் நோக்குகின்றபோது, இணையத்தளத்தில் காட்டப்பட்டுள்ள தகவல்கள் அதற்கேற்றவாறு மாற்றப்படும்.