This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/12/08 at 16:43
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

அசோசியேட்டட் நியூஸ்பேப்பேர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டட் (லேக் ஹவுஸ்)

அசோசியேட்டட் நியூஸ்பேப்பேர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டட் (லேக்  ஹவுஸ்)

இலங்கையின் பழமையானதும், பாரியதுமான பத்திரிகை நிறுவனங்களில் ஒன்று தான் லேக் ஹவுஸ் குழுமம் என அறியப்படும் அசோசியேட்டட் நியூஸ் பேர்ப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட் (ஏ.என்.சி.எல்). தற்போது நான்கு நாளேடுகள் (டெய்லி நியூஸ், தினமின, தினகரன் மற்றும் ரெச) மற்றும் மூன்று வார வெளியீடுகளை (சன்டே ஒப்சேவர், சிலுமின மற்றும் வாரமஞ்சரி) சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடுகின்றது. இந்த நிறுவனம் 1926 ஆம் ஆண்டு டி.ஆர்.விஜேவர்த்தன அவர்களினால் தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. அவரின் பெயர் சூட்டப்பட்ட வீதியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு அவருடைய மறைவின் பின்னர், பத்திரிகை அவருடைய மருமகன் எஸ்மன்ட் விக்கிரமசிங்கவினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1973 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (சிறப்பு விதிகள்) சட்டம் இல. 28 இன் மூலம் தேசியமயமாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராக ஏ.கே.பிரமேதாச அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது, பொதுநம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களம், 10 நிறுவனங்கள் மற்றும் 88 தனிநபர்கள் உட்பட 99 பங்குதாரர்கள் உள்ளனர். இந்த தனிநபர்கள் ஏ.என்.சி.எல் ஸ்தாபகர்களின் உறவினர்களும், தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர் அதில் பங்குகளை வைத்திருந்தவர்களும் ஆவார்கள். இவர்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அவர் 0.19 வீதமான பங்குகளை வைத்திருக்கின்றார். விஜய பத்திரிகையின் உரிமையாளர் ரஞ்சித் சுஜிவ விஜேவர்த்தன 0.57 வீதமான பங்குகளை வைத்திருக்கின்றார். 87.56 வீதமான பங்குகள் அரசாங்கத்தின் சார்பாக பொதுநம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தின் வசம் உள்ளது. இது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கண்காணிப்பில் வருகின்றது. ஏ.என்.சி.எல் சட்டமானது இந்தப் பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பொதுநம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்திற்கு அனுமதியளிக்கின்றது. கூட்டுறவு சங்க சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், சங்க கட்டளைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், தொழிற்சங்க கட்டளைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள், பொது நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், நிறுவனங்களில் பணி புரிபவர்கள் இதில் அடங்குவர். எனினும், அச்சு மற்றும் பத்திரிகை பிரசுர வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் பங்குகளை வாங்க முடியாது. மேலும் எந்தவொரு தனிநபரும் 2 வீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்க முடியாது. இதன் மூலம் ஒருவரோ அல்லது ஒரு சில நபர்களோ அதிகாரத்தை கையில் வைத்திருப்பதை தடை செய்கின்றது. எனினும், சட்டத்திற்கு அமைவாக உரிமைத்துவத்தை பரவலாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழங்குகள் தொடுக்கப்பட்ட போதும், ஊடகத்துறை அழுத்தம் விடுத்த போதும் இதுவரை பொதுநம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தில் இருந்து பொதுமக்களுக்கு பங்குப் பரிமாற்றம் நடைபெறவில்லை. பாரிய செய்தி நிறுவனம் ஒன்றின் உரிமைத்துவத்தை அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. (மேலதிக தகவல்களுக்கு சட்ட மதிப்பீடுகளைப் பார்க்கவும்)

பிரதான விடயங்கள்

வியாபார வடிவம்

அரசுடையது

சட்ட வடிவம்

பொது வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்

வியாபாரத்துறை

அச்சிடுதல், வெளியிடுதல்

உரிமையாண்மை

தனி உரிமையாளர்

அரசாங்கம்

பொது நம்பிக்கை திணைக்களம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் வருகின்றது. பொதுமக்களுக்கும் பயனாளிகளுக்கும் உச்சப்பயன் கிடைக்கும் படியாக சட்டரீதியான திட்டங்களை மேற்கொண்டு வழங்குநர்களினதும் முடிவுறுத்துனர்களினதும் நோக்கங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் என பொது நம்பிக்கை நிதியம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

87.56%

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பாராளுமன்றத்தில் 1961ம் ஆண்டு 28ம் இலக்கக் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இது, இலங்கையின் தேசிய எண்ணெய் மற்றும் வாயு நிறுவனமாக விளங்குகின்றது

1.75%
ஊடக நிறுவனங்கள்
Other Media Outlets

ஏனைய அச்சு நிறுவனங்கள்

டெய்லி நியூஸ் (0.57%)

ஏனைய இணைய வெளியீடுகள்

http://www.lakehouse.lk/

விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1926

நிறுவுனரின் ஈடுபாடுகள்

டீ.ஆர். விஜேவர்தன என்றும் குறிப்பிடப்படும் டொன் ரிச்சட் விஜேவர்தன லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை தாபித்து இலங்iகையின் சுதந்திர போராட்ட இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். அவர் இலங்கை தேசிய சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் 1913இல் அரசியல் அரங்கில் பிரவேசித்தார். 1914 இல்,
விஜேவர்தன தனது சகோதரனோடு சேர்ந்து ஒரு சிங்கள மொழிப் பத்திரிகையான தினமினவை பெற்றுக் கொண்டதோடு, அதன்பின்னர் ஆங்கில மொழி நாளிதழான த சிலனீஸ் பத்திகையைக் கையேற்று, அதனை 'சிலோன் டெயிலி நியூஸ்' என்று பெயர் மாற்றினார். இதனைத் தொடரந்து ஒரு தமிழ் மொழி நாளிதழான தினகரன் வெளியிடப்பட்டது. 1926 இல், இப் பத்திரிகைகள் அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டின் (ANCL) கீழ் வலுப்படுத்தப்பட்டன. இந்நிறுனம் தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமாக உள்ளதோடு, டெயிலி நியூஸ், தினமின, தினகரன், றேசா, சண்டே ஒப்சேவர், சிலுமின மற்றும் வார மஞ்சரி என்ற ஏழு பத்திரிகைகளை வெளியிடுகிறது.
பின்வரும் பிரபல பேராளர்கள் விஜேவர்தனவிற்கு உறவினர்களாவர்:

ரஞ்சித் விஜேவர்தன டீ.ஆர். விஜேவர்தனவின் மகனும் விஜேய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபகரும் அதன்
CEO வுமாவார்.

தொழிலாளர்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தொடர்பு

Associated Newspapers of Ceylon Limited

No 35, D.R. Wijewardena Mawatha, Colombo 10

General: +9411 2 429 429, +9411 2 421 181, +9411 2 331 181

Email: info@lakehouse.lk

Website: www.lakehouse.lk

வரி / அடையாள இலக்கம்

PB114

நிதிசார் தகவல்கள்

வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)

0.14 Mio. $ / 20.6 Mio. LKR

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)

0.02 Mio. $ / 2.54 Mio. LKR

முகாமைத்துவம்

நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்

கிரிஷாந்த பிரசாத் கூரே - அசோசிட்டேட் நியூஸ்பெபேர்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர். கப்பிடல் மகாராஜா நிறுவனத்தில் நிறைவேற்று அதிகார பதவி வகித்து, நிறுவனத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை மேற்பார்வை செய்தார். ரிச்சட் பீரிஸ் குழுமத்தின் கீழ் ரிவிர மீடியா கோபெரேஷன் பிரைவேட் லிமிடேட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியதுடன், அதன் ஸ்தாபக பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பநோயற்றியுள்ளார். த நேஷன் மற்றும் ரிவிர என்பன இவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டவை. இருந்தபோதும் ரிவிர, இதன் ஆங்கில பதிப்பாகிய த நேஷன் ஐ 2017 ல் நிறுத்திக்கொண்டது.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்(லேக் ஹவுஸ் என்றும் அறியப்படும் ANCL) இன் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களே காணப்படுகின்றன. பணிப்பாளர் சபை பற்றிய சில தகவல்கள் இங்கு காணப்பட்ட போதும், இரண்டாம் தர தகவல் மூலங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. பங்குதாரர் பற்றிய தகவல்கள், கம்பெனி பதிவாளர் திணைக்களத்திலுள்ள ஆண்டு வருமான அறிக்கையிலிருந்து பெறப்பட்டன. வாசகர் எண்ணிக்கை வீதம், இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனம் 2017 ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளிலிருந்து பெறப்பட்டன.
ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆய்வு அணி 2018 யூலை 20 ஆம் திகதி இக்கம்பனி பற்றிய தகவல்களை முறையாகக் கோரி அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்டை அணுகியபோது அக்கம்பனி மேலே குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ