This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/10/08 at 01:41
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 1990 ம் ஆண்டு பிரித்தானியவைத் தளமாக கொண்ட உருவாக்கப்பட்டது. சன்ரைஸ் ரேடியோ குழுமத்தினால் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்நிறுவனமானது, ரேய்னர் சில்வாவினால் வாங்கப்பட்டபின், வரையறுக்கப்பட்ட ரேய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு

அங்கத்தவராகப் பட்டியற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திக்கீழ் ஹிரு எவ் எம், ஷா எவ் எம், கோல்ட் எவ் எம், சன் எவ் எம், சூரியன் எவ் எம் என் ஐந்து வானொலி நிறுவனங்களை செயல்படுத்துகின்றது. ஹிரு ரி வி யினையும் இந்நிறுவனம் மேற்பார்வை செய்கின்றது.

2007 ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதின் அனுமதியை இலங்கை அரசாங்கம் இரு வேறு குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து இரத்துச் செய்தது. முதலாவது, நிறுவனம், 1995 நவம்பர் 27 பதிவு செய்யப்பட்ட அதேவேளை, இதற்கான அனுமதி 1995 நவம்பர் 17 அன்று வழங்கப்பட்டமை. இரண்டாவது, இலங்கையின் ஆயுத மோதலின்போது தவறான செய்திகளை ஒலிபரப்பியதாக. நிறுவனம், மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது. ஆனால், அரசாங்கம், பேச்சு சுதந்திரத்தை மீறியதாக குற்றம் சாட்டியது. இதன் விளைவாக உயர் நீதிமன்றம், நிறுவனத்தின் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நிராகரித்தது. அத்துடன், நிறுவன உரிமையாளரை ரூபா. 250,000 பிணைப்பணமாக செலுத்தும்படி கட்டளையிட்டது. இச் செயலை பல ஊடகம் சார் அமைப்புக்கள் குறிப்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பன கண்டித்தன.

பிரதான விடயங்கள்

தாய் நிறுவனம்

ரேய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் லிமிடெட்

வியாபார வடிவம்

தனியாருடையது

சட்ட வடிவம்

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்

வியாபாரத்துறை

தொலைக்காட்சி, வானொலி சேவை;

உரிமையாண்மை

தனி உரிமையாளர்

ஊடக நிறுவனங்கள்
Other Media Outlets

ஏனைய வானொலி நிலையங்கள்

சன் எவ் எம் (0.32%)

ஏனைய இணைய வெளியீடுகள்

http://www.hirunews.lk/

விடயங்கள்

வியாபாரம்

வீட்டு மனை வியாபாரம்

ஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிடெட்

நவ நாகரிகம்

வைட் லோட்டஸ் பஷன் (பிரைவெட்) லிமிடெட்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1995

நிறுவுனரின் ஈடுபாடுகள்

ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் ஆரம்பத்தில் சன் ரைஸ் வானொலி குழுமத்தால் 1990 ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், ரெய்ன சில்வாவினால் உடமையாக்கப்பட்டது. இவர், இலங்கையின் ஒளிபரப்புத்துறையில் ஒரு பிரபலமான வர்த்தகராவார். ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் நாட்டில் வானொலி வலையமைப்புகளின் மிகப் பெரியவற்றுள் ஒன்றாக விளங்குகின்றது.
ரெய்னரின் சகோதரர் வின்சன் சில்வா ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டின் தற்போதைய பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இதனிடையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும், ரெய்ன சில்வாவின் சகோதரர் ஆவார். துமிந்த சில்வா தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலைக்காக தனக்கும் வேறு நான்கு பேருக்கும் எதிராக தூக்குத் தண்டனையை விதித்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்கின்றார்.

தொழிலாளர்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தொடர்பு

Asia Broadcasting Corporation (Pvt) Limited

35th Floor, East Tower, World Trade Center, Colombo 1

Tel: +94 11 2 337 555

Fax: (+94) 112 346 870

E-mail: md@asiabroadcasting.lk

Website: www.asiabroadcasting.lk

வரி / அடையாள இலக்கம்

PV16452

நிதிசார் தகவல்கள்

வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

முகாமைத்துவம்

நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்

சமந்தா ரெய்னர் சில்வா - உரிமையாளர் - வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

நிறுவனத்தில் தாக்கம்செலுத்தும் ஏனைய நபர்களும், அவர்களின் ஆர்வங்கள்

பிரசாத் கருணாரத்ன வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர்.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பற்றிய தகவல்கள் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடாகவும் பெறப்பட்டன. நிறுவனத் தலைவர் ரெய்னர் சில்வா பற்றிய தகவல்கள், ரெய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டன. நிறுவன கட்டமைப்பு மற்றும் பணிப்பாளர் சபை பற்றிய தகவல்கள், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.
நிதி பெறுமதிகள் மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி கணிக்கப்பட்டன. (2007 ல் 1 அமெ. டொலர் = ரூபா 110 .62).

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ