ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனம்
வரையறுக்கப்பட்ட EAP ஒலி, ஒளிபரப்பு நிறுவனம், முன்னர் 2013 ஆம் ஆண்டுவரை EAP நெட்வர்க்ஸ் என அறியப்பட்டது, தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களைக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் தொலைக்காட்சி நிலையங்கள் ஸ்வர்ணவாஹினி மற்றும் ETV. அதேவேளை ஸ்ரீ FM E FM மற்றும் ரன்வன் FM ஆகிய வானொலிகளும் உள்ளன. 2016இல் இந்நிறுவனத்தின் கணிசமான பங்குகள் EAP நிறுவனங்களின் குழுமத்துக்குள்ளேயே உள்ள ஒரு நிதி நிறுவனமான ETI நிதி நிறுவனத்துக்கு(பினான்ஸ் லிமிட்டடுக்கு) மாற்றப்பட்டன. எவ்வாறாயினும் 2017 மார்ச்சில் ETI பினான்ஸ் லிமிட்டட் இலங்கை ரூபாய் மதிப்பில் 17.5 பில்லியன் நிதிப்பற்றாக்குறை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக, இலங்கை மத்திய வங்கி தாய் நிறுவனமான EAP ஹோல்டிங்சை இந்த வருடத்தின் முற்பகுதியில் பொறுப்பேற்றுக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக EAP ஹோல்டிங்சின் EAP ஒலி, ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில துணை நிறுவனங்கள் விற்கப்பட்டன.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட வரையறுக்கப்பட்ட ஸ்ட்ரெயிட்ஸ் கிரிட் நிறுவனம் சார்பில் ஜெயா சுதிர் ஜெயரட்ணம் விற்பனை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், EAP ஒலி, ஒளிபரப்பு நிறுவனம் வரையறுக்கப்பட்ட பென் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட வரையறுக்கப்பட்ட ப்ளூ சம்மிட் கப்பிட்டல் மனேஜ்மென்ட் நிறுவனத்துக்கும் விற்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட பென் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அலெக்சிஸ் இந்திரஜித் லவேல் என்பவருக்குச் சொந்தமானது. இதேவேளை போர்த்துக்கலைத் தளமாகக் கொண்ட பெட்டிகோ கொமெர்சியோ இன்டெர்நசியனால் நிறுவனம் வரையறுக்கப்பட்ட ப்ளூ சம்மிட் கப்பிட்டல் மனேஜ்மென்ட் நிறுவனத்தை உரித்துடையது.
2015இல் பெட்டிகோ கொமெர்சியோ இன்டெர்நசியனால் நிறுவனம் சட்ட உரித்துகள் மூலமாக லைக்காமூவி.கொம் என்ற இணையத்தள (டொமெய்ன்) பெயரைத் தன்னுடையதாக மீட்டெடுத்தது.(உரிமைக் கோரிக்கை இல - FA1507001627362). இந்த இணையத்தள பெயரானது பெட்டிகோ கொமெர்சியோ இன்டெர்நசியனால் நிறுவனத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள பல வணிகக் குறியீடுகளில் ஒன்றாகும்.ஏனைய வணிகக் குறியீடுகள் லைக்காமொபைல், லைக்கா, லைக்காஃபிளை ஆகியனவையும் உள்ளடக்கியுள்ள.லைக்காமொபைல், லைக்கா ஆகியன ஐக்கிய ராஜ்ஜியத்தைத் தளமாகக் கொண்ட கைபேசிச் சேவைகளையும் தொலைத் தொடர்பு சேவைகளினதும் வணிகக் குறியீடுகளாகப் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. சுபாஸ்கரன் அல்லிராஜா லைக்காமொபைல்,லைக்காமொபைல் சுவீடன், லைக்கா என்டெர்டெயின்மென்ட் யூரோப் ஆகியவற்றின் பணிப்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளார். அவரே இந்நிறுவனங்களின் பெரும்பான்மைப் பங்குதாரருமாவார்.
தாய் நிறுவனம்
பென் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ப்ளூ சமிட் பிரைவேட் லிமிடெட்
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
வியாபாரத்துறை
தொலைக்காட்சி, வானொலி சேவை.
தனி உரிமையாளர்
அலெக்சிஸ் இந்திரஜித் லொவெல் - ஈஏபி ஒளிப்பரப்புக் கம்பனி லிமிட்டட்டின் 59 . 99 வீத பங்குகளை வைத்துள்ளார். தற்போது இவர், நஷனல் அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் மற்றும் யூனியன் வங்கியின் தலைவராகவுள்ளார். அத்துடன், அஸோசியேட்டட் எலெக்ட்ரிக்கல் கோப்பரேஷன் லிமிடெட் மற்றும் ரியல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளராகவும் உள்ளார்.
லைக்காமொபைல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரரும், தலைவருமாக உள்ளவர் அல்லிராஜா
சுபாஸ்கரன். லைக்கா மொபைல் குழுமத்தின் ஸ்தாபகரான அவர், லைக்காமணி, லைக்காடெல் மற்றும்
லைக்காஃபிளை நிறுவனங்களின் தலைவரும் ஆவார். சர்வதேச அழைப்பு அட்டை நிறுவனமாக ஆரம்பமான
அல்லிராஜாவின் லைக்கா மொபைல் ஐரோப்பாவின் 23 நாடுகளுக்கு பரவியது. 2010 ஆம் ஆண்டில் தாயார்
ஞானாம்பிகை அல்லிராஜா மற்றும் மனைவி பிரேமா (பிரேமதர்ஷினி) சுபாஷ;கரனுடன் இணைந்து
ஞானம் அறக்கட்டளையை ஆரம்பித்தார். பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் மற்றும் கல்வி
நடவடிக்கைகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இந்த அறக்கட்டளை நிதியுதவி வழங்குகின்றது.
ஈ.ஏ.பி நிறுவனத்தை கொள்வனவு செய்வதில் அல்லிராஜா சுபாஸ்கரனின் பங்கு தொடர்பில் 2018 இல்
பல பத்திரிகைகள் பதிவு செய்துள்ளன. நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஈ.ஏ.பி
நிறுவன வருடாந்த அறிக்கையின் பிரகாரம் 39.99 வீதப் பங்குகளை புளு சமிட் கெப்பிட்டல்
மனேஜ்மென்ட் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதை அறிய முடிகின்றது. 2017 ஆம் ஆண்டில் புளு சமிட்
கெப்பிட்டல் மனேஜ்மென்ட் நிறுவனம் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நஷனல் நிறுவனத்திற்கு
சொந்தமானது. இது அல்லிராஜாவின் மனைவி பிரேமதர்ஷினிக்கு சொந்தமானது.
ஏனைய தொலைக்காட்சி நிலையங்கள்
ஈ ரி வி
ஏனைய வானொலி நிலையங்கள்
ஈ எவ் எம் (0.70)
ரன்வன் எவ் எம் (0.70)
வியாபாரம்
லைக்கா குரூப்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
தரவுகள் கிடைக்கவில்லை
நிறுவுனரின் ஈடுபாடுகள்
சுவர்ணவாஹினி தொலைக்காட்சியை நிர்வகிக்கும், ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனம் எதிரிசிங்க குடும்பத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது. 1930 ல் ஈ.ஏ.பி எதிரிசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈ.ஏ.பி ஹோல்டிங்ஸ் லிமிடெட் ( ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனத்தின் தாய் நிறுவனம்), ஆரம்பத்தில் நகை அடகு பிடிப்பதில் ஈடுபட்டது. பின்னர், அந்நிறுவனம், தனது கிளைகளை விரிவாக்கி வேறு பல துறைகளில் கவனம் செலுத்தியதுடன், சரவணா பைனான்ஸ் மற்றும் எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (ETI) லிமிடெட் ஆகிய இரு நிதி நிறுவனங்களை ஸ்தாபித்தது. அத்துடன், ஒலிபரப்பு, விருந்தோம்பல், தங்கநகை, மற்றும் திரையரங்கு ஆகியவற்றிலும் ஈடுபட்டது. 1974 ல் ஈ.ஏ.பி எதிரிசிங்க இறந்தபின்னர், அவரின் மனைவி சோயா எதிரிசிங்க 25 துணை நிறுவனங்களை கொண்ட நிறுவனத்தை பொறுப்பெடுத்தார். இவர், லயன்ஸ் கழகத்தின் முதலாவது பெண் ஆளுநராக பதவி வகித்தார்(2003 - 2004). அத்துடன், ஜனசர பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து பணி செய்தார். இவர் 2015 ல் இறந்தார். அதன் பின்னர், ஜீவக, நாலக, அசங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் பொறுப்பெடுத்தனர்.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
EAP Broadcasting Company Limited
No.676 A2, Galle Road, Colombo 3
Tel: +947 534 534
Website: www.eapholdings.lk
வரி / அடையாள இலக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
தோமஸ் மத்தியூ - கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட 2018 ம் ஆண்டுக்கான ஆண்டு வருமான அறிக்கையின்படி பிரதான நிறைவேற்று அதிகாரியாக மலேசியாவை சேர்ந்த தோமஸ் மத்தியூ குறிப்பிடப்பட்டுள்ளார்.
அசங்க சிறிமால் எதிரிசிங்க - ஸ்வர்ணவாஹினி பைனான்சியல் சேர்விசெஸ் பி எல் சி யின் நிறைவேற்று பணிப்பாளர். இவர் ஈ ஏ பி குழுமத்துடன் இணைந்த பதினைந்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளராகவுள்ளார். 2018 ல், அசங்க சிறிமால் எதிரிசிங்கவுடன் மேலும் மூவருக்கு நாட்டை விட்டு வெளியேற, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன தடை விதித்ததாக கூறப்படுகின்றது 2018 ஜூலை 10 ல், இலங்கை மத்திய வங்கி, மேற்குறிப்பிட்டவர்களின் சொத்து விபரங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் தகவல் கோரியிருந்தது.
2018 ல் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தரவுகளில், இவர் பணிப்பாளராகவுள்ளதாக பதியப்பட்டுள்ளது.
அஞ்சலி தீபா எதிரிசிங்க - ஈ ஏ பி குழுமத்தின் முன்னைய நிர்வாகியான மறைந்த சோமா எதிரிசிங்கவின் புதல்வி. அசங்க சிறிமால் எதிரிசிங்கவை போன்று இக் குழுமத்தின் பல நிறுவனங்களின் பணிப்பாளர். 2017 ல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில், உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். இவர், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். இவருக்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டது. ஈ ஏ பி ப்ரொட்காஸ்டிங் கம்பெனியின் பணிப்பாளராக கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இவரின் பெயர் பதியப்பட்டுள்ளது.
ஒமர் சிராஜ் கான்டீல் - சுவிற்சர்லான்டை தலமாக கொண்ட ப்ளூ ஒச்சட் நிறுவனத்தின் பணிப்பாளர் குழு உறுப்பினர். கம்பெனியின் பணிப்பாளராக கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இவரின் பெயர் பதியப்பட்டுள்ளது.
டொன் சிறில் ரொட்ரிகோ - சிறில் ரொட்ரிகோ என் அறியப்படுபவர். சிங்கப்பூரை தலமகா கொண்ட எஸ் நெட் பிரெய்ட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஸ்தாபகராக, CEO வாக உள்ளார். முன்னர், கத்தி பசுபிக் நிறுவனத்தில், கார்கோ வியாபார முகாமையாளராக பணியாற்றியுள்ளார். கம்பெனியின் பணிப்பாளராக கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தில் 2018 ல் இவரின் பெயர் பதியப்பட்டுள்ளது.
போல் சேவியர் கெலி - முதலீட்டு முகாமையாளராக, கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இவரின் பெயர் பதியப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
ஈஏபி ஹோல்டிங்ஸ் இன் உத்தியோகபூர்வ வலைத்தளம் இரண்டு மாதங்களுக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதனால் கம்பனியின் தற்போதைய உரித்தாண்மை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. எனவே MOM ஆய்வு, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டன்களில் இருந்து விபரங்களை சேகரிப்பதற்கு மேலதிகமாக, பல செய்திப் பத்திரிகை அறிக்கைகளையும் உசாவியது. 2017 ஆம் ஆண்டிற்கான தரவுகள் கிடைக்கக் கூடிய மிகவும் அண்மைக்கால தரவுகளாகும். எனினும் பங்குகளின் கைமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் 2018 ஆம் ஆண்டிற்குரியவையாகும். மேலே குறிப்பிடப்பட்டவாறு, புளு சமிட் கெப்பிட்டல் (பிரைவேட்) லிமிட்டட் மற்றும் பென் ஹோல்டிங் (பிரைவேட்) லிமிட்டட் ஆகியவற்றிற்கான பங்குகள் கைமாற்றத்தின் பின்னர் ஈஏபி ஒளிபரப்புக் கம்பனி லிமிட்டட்டினால் ஒரு வருடாந்த ரிட்டன் சமர்ப்பிக்கப்படவில்லை. புளு சமிட் (பிரைவேட்) கெப்பிட்டல் லிமிட்டட்டிற்கும் ஒரு உத்தியோகபூர்வ வலைத்தளம் இல்லை. புளு சமிட் கெப்பிட்டல் (பிரைவேட்) லிமிட்டட் தொடர்பான தகவல்கள் சிங்கப்பூர் கம்பனி பதிவாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. 2017 ஆம் ஆண்டிற்கான சுவர்ணவாஹினியின் வாசகர் தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகம் (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 25 ஆந் திகதி
ஈஏபி ஒளிப்பரப்புக் கம்பனி லிமிட்டட்டை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு
பதிலளிக்கவில்லை.
The Immigrant Phone Card Seller Making The Bollywood Movie You Have To See by Forbes (2017), Accessed on 22 September 2018