எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனம் 1970 ம் ஆண்டு தனியார் நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டது. இது பிரபலமான தமிழ் பத்திரிக்கையாகிய வீரகேசரி பத்திரிகையை பிரசுரிக்கின்றது.
இந்நிறுவனம் தற்போது பல தமிழ் மொழிமூல வெளியீடுகளையும் இணையதளங்களையும் இரண்டு ஆங்கில மொழிமூல வெளியீடுகளையும் பிரசுரிக்கின்றன. டெய்லி எக்ஸ்பிரஸ், வீக்லி எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் மொழிமூல தமிழ் டைம்ஸ் என்பன வெளிநாடுகளில் பிரசுரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம், தினக்குரல் மற்றும் உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளை பிரசுரிக்கும் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் 59 . 99 வீத பங்குகளை வைத்துள்ளது.
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
வியாபாரத்துறை
அச்சிடுதல், வெளியிடுதல்
ஏனைய அச்சு நிறுவனங்கள்
மெட்ரோ (தினசரி) (0.42%)
மெட்ரோ (வாரவெளியீடு) (தரவுகள் கிடைக்கவில்லை)
விடிவெள்ளி(வார வெளியீடு) (0.31%)
விடிவெள்ளி (தினசரி) (0.28%)
டெய்லி எக்ஸ்பிரஸ் (தரவுகள் கிடைக்கவில்லை)
வீகெண்ட் எக்ஸ்பிரஸ் (தரவுகள் கிடைக்கவில்லை)
சூரியகாந்தி (தரவுகள் கிடைக்கவில்லை)
சியதெச (தரவுகள் கிடைக்கவில்லை)
பினான்சியல் டைஜெஸ்ட் (தரவுகள் கிடைக்கவில்லை)
நாணயம் (தரவுகள் கிடைக்கவில்லை)
மாலை எக்ஸ்பிரஸ் (தரவுகள் கிடைக்கவில்லை)
தமிழ் டைம்ஸ் (தரவுகள் கிடைக்கவில்லை)
மித்திரன் (தரவுகள் கிடைக்கவில்லை)
கலைக்கேசரி (0.16%)
ஜீனியஸ் (தரவுகள் கிடைக்கவில்லை)
சுகவாழ்வு (தரவுகள் கிடைக்கவில்லை)
சோதிடகேசரி (தரவுகள் கிடைக்கவில்லை)
சுட்டிகேசரி (தரவுகள் கிடைக்கவில்லை)
அழகி (0.10%)
ஏனைய இணைய வெளியீடுகள்
http://www.virakesari.lk/
http://thirumanam.lk/
http://aboutcolombo.lk/
http://metronews.lk/
http://mithiran.lk/
http://vidivelli.lk/
ஊடக வியாபாரம்
வெளியீடு
ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (59.99%)
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1930
நிறுவுனரின் ஈடுபாடுகள்
பி.பி.ஆர் சுப்பிரமணியம் செட்டியார் இந்தியாவின் தமிழ் நாடு ஆவனிப்பட்டி கிராமத்திலிருந்து வந்த ஒரு
தொழில்முயற்சியாளரும் பத்திகையாளருமாவார். இந்தியாவிலிருந்து பிரித்தானிய கொலனியான இலங்கைக்கு வந்து இந்தியத் தொழிலாளர்களின் நிலைமையை கண்ட அவர் அவர்களுக்கு நீதியையும் சமத்துவத்தையும் மேம்படுத்துவதற்காக ஒரு செய்திப் பத்திரகையை தாபிக்கத் தீர்மானித்தார். எனவே, 1930 இல் சுப்பிரமணியம் வீரகேசரியைத் தாபித்து அதன் பிரதம பத்திரிகையாசிரியராகப் பணியாற்றினார். மேலும், சுப்பிரமணியம் மலேசியாவில் இறப்பர் தோட்டங்களைத் தாபித்ததோடு, சிங்கப்பூரில் காணி சொத்துகளில் முதலீடு செய்தார்.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
Express Newspapers (Ceylon) (Pvt) Limited
No. 185, Grandpass Road, Colombo 14
Tel: +94117322700, +94117322777
Website: www.virakesari.lk
வரி / அடையாள இலக்கம்
PV3125
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
5.44 Mio. $ / 830 Mio. LKR
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
குமார் நடேசன் என்றும் அறியப்படும் சிவகுமார் நடேசன் - இலங்கை பத்திரிகை நிறுவகத்தின் தற்போதைய தலைவராகும். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர். பணிப்பாளர் - ஏசியன் மீடியா பப்பிளிகேஷன் (பிறைவேட்) லிமிட்டெட்.
ஹரிஹரன் செல்வநாதன் - பக்கிட் டரா, கார்சன் கம்பர்பாட்ச், கார்சன்ஸ் மனேஜ்மென்ட் சேவைகள், அக்ரோ ஹரப்பன் லெஸ்டரி நிறுவனங்களில் தலைவராக உள்ளார். அத்துடன் குட்ஹோப் ஏசியா
ஹோல்டிங்சில் துணைத் தலைவராக உள்ளார். கார்சன்ஸ் குழுமத்தில் உள்ள பல துணை நிறுவனங்களில்
பணிப்பாளராகவும் உள்ளார். மேலும், ஸ்ரீகிருஷ்ணா நிறுவனம் மற்றும் எக்ஸ்பிரஸ்
நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனங்களில் பணிப்பாளராக உள்ளார். தேசிய வர்த்தக சம்மேளனத்தின்
முன்னாள் தலைவராகவும், சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
மனோகரன் செல்வநாதன் - ஸ்ரீ கிருஷ்ணா, சிலோன் பினான்ஸ் அன்ட் செக்கியூரிட்டிஸ் மற்றும்
செலின்சிங் நிறுவனங்களின் தலைவர்.
காளிஅப்பாப்பிள்ளை சவுந்தரராஜன் - எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட்டின் நேரடி பங்குதாரராகவுள்ளார். அத்துடன், கே எம் கே ஹோல்டிங்ஸ் மற்றும் காலை அப்பாப்பிள்ளை அண்ட் கம்பெனி லிமிடெட்டின் பணிப்பாளராகவுள்ளார்.
சைமன் ராஜசீலன் ஞானம் - எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட்டின் 16.69 வீத பங்குகளை வைத்துள்ள ஞானம் குடும்பத்தின் உறுப்பினர்.
மனோகரன் செல்வநாதன் - ஹரிஹரன் செல்வநாதனின் பதில் பணிப்பாளர் - எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட். மனோஹரனும் அவரின் சகோதரர் ஹரிஹரனும் இணைந்து எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்துள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி ராஜபதர் ரவீந்திரன் - கிருஷ்ணமூர்த்தி ரத்னம் ரவீந்திரனின் பதில் பணிப்பாளர்
ஹரிஹரன் செல்வநாதன் - சிவகுமார் நடேசனின் பதில் பணிப்பாளர்
சரவணன் சவுந்தரராஜன் - ஏசியன் மீடியா பப்பிளிகேஷன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளரான காளியப்பப்பிள்ளை சவுந்தர்ராஜனின் பதில் பணிப்பாளர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நிறுவன ஸ்தாபகர் பற்றிய மிகக் குறைவான தரவுகளே பதியப்பட்டுள்ளன. இருப்பினும், அச்சு பதிப்பு மற்றும் இணையதள வெளியீடுகள் பற்றிய விபரங்கள் நிரட்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், நிறுவன கட்டமைப்பு மற்றும் பணிப்பாளர் சபை பற்றிய தகவல்களும் காணப்படவில்லை. இதனால் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடாக தரவுகள் ஆராச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. பெற்றுக் கொள்ளப்பட்டன. பங்குதாரர் மற்றும் பணிப்பாளர் சபை பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்டினை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளித்திருந்தது.. நிதி பெறுமதிகள் மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி கணிக்கப்பட்டன. (1 அமெ. டொலர் = ரூபா 152 .45).
Sri Lankan Dhammika Perera's Master Plan by Forbes, Accessed on 28 September 2018