This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/29 at 15:17
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் பிரகாரம், 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு றேடியோ ஆசியாவின் முதலாவது வானொலி நிலையம் ஆகும். பின்னர் 1949 ஆம் ஆண்டில் 'றேடியோ சிலோன்' எனும் பெயரில் தேசிய ஒலிபரப்பாக மாற்றப்பட்டது. இது ஒரு அரசாங்கத் திணைக்களமாக உருவாக்கப்பட்டது. பின்னர், 1967 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சட்டம் (1966 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கம்) ஊடாக அரச கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் சிலோன் என்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. இதன் காரணமாக சிலோன் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் என்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்றது. அன்று முதல் அரச கூட்டுத்தாபனமாக இருந்து வரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தற்போது தகவல் மற்றும் ஊடக அமைச்சின் கீழ் உள்ளது. 7 தேசிய வானொலி நிலையங்கள், 6 பிராந்திய வானொலி நிலையங்கள் மற்றும் 4 சமூக வானொலி நிலையங்கள் மூலம் சேவைகளை வழங்கி வருகின்றது.

பிரதான விடயங்கள்

வியாபார வடிவம்

அரசுடையது

சட்ட வடிவம்

பொது/வர்த்தக கூட்டுத்தாபனம்

வியாபாரத்துறை

தொலைக்காட்சி, வானொலி சேவை; தனியார் தொலைக்காட்சி அனுமதி பத்திரம் வழங்குதல்

உரிமையாண்மை

தனி உரிமையாளர்

அரசாங்கம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் அரசுக்கு சொந்தமான வானொலி நிலையங்களை நிர்வகிக்கின்றது.
இது நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் வருகின்றது.

100%
ஊடக நிறுவனங்கள்
Other Media Outlets

ஏனைய வானொலி நிலையங்கள்

சிட்டி FM (0.26%)

ஏனைய இணைய வெளியீடுகள்

http://www.slbc.lk/

விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1925 ல் ஸ்தாபிக்கப்பட்டது. 1967 ல் பதிவு செய்யப்பட்டது.

நிறுவுனரின் ஈடுபாடுகள்

எட்வெட் ஹாப்பர் கொழும்பு ரேடியோவை ஸ்தாபித்தார். அது பின்னர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமாக மாறியது. இலங்கையின் ஒலிபரப்புத்துறையின் தந்தை என அறியப்படும் எட்வெட் ஒரு பிரித்தானிய பொறியியலாளர். இவர், ஒரு தந்தி அனுப்பும் பொறியியலாளராக பணியாற்றியுள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் 1966 ம் ஆண்டு 37 ம் இலக்க சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டது.

தொழிலாளர்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தொடர்பு

SLBC

PO BOX 574, Colombo 7

Tel: +94 112 697 491

Fax: +94 112 691 568

Website: www.slbc.lk

வரி / அடையாள இலக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

நிதிசார் தகவல்கள்

வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)

8.99 Mio. $ / 1.371 Mio. LKR

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

0.49 Mio. $ / 75 Mio. LKR

விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

முகாமைத்துவம்

நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்

சித்தி மொகமட் பாருக், தேசிய சேவையை மேற்பார்வை செய்யும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக 2017 ல் நியமிக்கப்பட்டார். ஊடகத்துறையில் ஒரு வணிகராக இவர் வர்ணிக்கப்பட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைய முன்னர், இவர், பான் ஏசியா வங்கியின் CEO வாக பணியாற்றியுள்ளார். இவர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்.

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

the amounts into USD.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நிறுவன முகாமைத்துவம் பற்றிய மிகக் குறைவான தரவுகளே பதியப்பட்டுள்ளன. இதனால் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடக தரவுகளை பெறப்பட்டன. அத்துடன் ஒவ்வொரு வானொலிச்சேவைக்கும் தனித்தனியான இணையதளங்கள் காணப்படவில்லை. பதிலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எல்லா வானொலிச் சேவை நிலையங்களின் விபரங்கள் பதியப்பட்டுள்ளன. 2014 ம் ஆண்டிலிருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என நிதி அமைச்சு தனது 2017 ம் ஆண்டிற்கான அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதின் சட்ட அலுவலருடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தப்பட்டது. நிதி பெறுமதிகள் மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி கணிக்கப்பட்டன. (1 அமெ. டொலர் = ரூபா152,45).

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ