This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/20 at 12:42
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

வரையறுக்கப்பட்ட கபிட்டல் மகாராஜா நிறுவனம்

வரையறுக்கப்பட்ட கபிட்டல் மகாராஜா நிறுவனம்

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனமானது சுப்பிரமணியம் மகாதேவன் மற்றும் சின்னத்தம்பி

ராஜேந்திரம் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது. மகாதேவன் மற்றும் ராஜேந்திரம் ஆகியோர்

பீர் அன்ட் கோ நிறுவனத்தில் தரகர்களாக பணியாற்றி வந்தனர். 1935 ஆம் ஆண்டில் பீர்

அன்ட் கோ நிறுவனம் டொட்ஜ் அன்ட் செய்மொர் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட போது,

மகாதேவன் முகாமையாளராக நியமிக்கப்பட்டார். இலங்கையில் டொட்ஜ் அன்ட் செய்மோர் நிறுவனம் தனது

சேவைகளை நிறுத்திக் கொண்ட போது, மகாதேவன் மற்றும் ராஜேந்திரம் ஆகிய இருவரும் மகாதேவன்

லிமிடெட், ராஜேந்திரம் லிமிடெட், ஸ்டெர்லிங் புரொடக்ஸ், மஹாராஜா டிஸ்ரிபியுஷன் என பல

நிறுவனங்களை ஆரம்பித்தார்கள்.

1957 ஆம் ஆண்டில் மகாதேவன் மறைவிற்கு பின்னர் சின்னத்தம்பி ராஜேந்திரம் நிறுவனப்

பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் 1965 ஆம் ஆண்டில் சின்னத்தம்பி

ராஜேந்திரம் அவர்களின் மகன்கள் ராஜேந்திரம் மஹாராஜா மற்றும் ரஜேந்திரம் ராஜமகேந்திரன்

(ஆர்.ராஜமகேந்திரன்) நிறுவனத்தின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். 1959 ஆம் ஆண்டில்

நாட்டில் இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அடுத்து, பார்க்கர் குயிக் இங்க், பொண்ட்ஸ்

கொஸ்மெட்டிக், கெம்வே மற்றும் எஸ்-லோன் பிவிசி என பல நிறுவனங்களை அவர்கள் ஆரம்பித்தனர்.

தற்போதுள்ள கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் முன்னோடிகளாக இந்த நிறுவனங்கள் விளங்கின.

1930 ஆம் ஆண்டில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டாலும், 'தி கெப்பிட்டல் மஹாராஜா ஒர்கனைசேசன் லிமிட்டெட்' என்ற பெயர் உத்தியோகபூர்வமாக 1967 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.

எம் பி சி நெட்வெர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எம் ரி வி சேனல் பிரைவேட் லிமிடெட் என்பன மகாராஜா குழுமத்தின் இணை நிறுவனங்கள். எம் பி சி நெட்வெர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் கீழ் யெஸ் எவ் எம், வை எவ் எம், லெஜெண்ட் எவ் எம் என்பன செயற்படுகின்றன. சிரச எவ் எம்12 . 88 வீத நேயர்களை லொண்டுள்ளது.  யெஸ் எவ் எம் 0.20, லெஜெண்ட் எவ் எம் 0.20 வீத நேயர்களையும் கொண்டுள்ளது. தமிழ் மொழி சக்தி எவ் எம் 5.94 வீத நேயர்களை கொண்டுள்ளது. சிங்கள - ஆங்கில மொழி வை எவ் எம் 3.70 வீத நேயர்களை கொண்டுள்ளன.

எம் ரி வி சேனல் பிரைவேட் லிமிடெட் தொலைக்காட்சி அலைவரிசைகளை செயல்படுத்துகின்றது. சக்தி ரி வி, சிரச ரிவி, ரி வி 1 என்பனவே அவை. சிங்கள மொழி அலைவரிசை சிரச ரிவி, 15.4 வீத பார்வையாளர்களை கொண்டுள்ளது. சக்தி ரி வி 6.1 வீத பார்வையாளர்களை கொண்டுள்ளது. புதிய அலைவரிசை ரி வி 1 0.7 வீத பார்வையாளர்களை கொண்டுள்ளது.

தற்போது கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனமானது ராஜேந்திரம் ராஜமஹேந்திரன், அவரின் மகன் சசிதரன் ராஜமஹேந்திரன் ஆகியோருக்கு சொந்தமானது.

பிரதான விடயங்கள்

வியாபார வடிவம்

தனியாருடையது

சட்ட வடிவம்

தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்

வியாபாரத்துறை

தொலைக்காட்சி, வானொலி சேவை; இறப்பர்; பொதியிடல்; இலத்திரனியல்; இரசாயனம்; தனிநபர் சார் நுகர்வோர் பொருட்கள்; தேயிலை; ஊடகம்; பொழுதுபோக்கு; தொலைத்தொடர்பு; தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்

உரிமையாண்மை

தனி உரிமையாளர்

ஊடக நிறுவனங்கள்
Other Media Outlets

ஏனைய வானொலி நிலையங்கள்

யெஸ் எவ் எம் (0.20%)

ஏனைய இணைய வெளியீடுகள்

http://sirasatv.lk/

விடயங்கள்

ஊடக வியாபாரம்

ஊடக வியாபாரம்

தொலைக்காட்சி ஒளிபரப்பு | எம் ரி வி சனல் பிரைவேட் லிமிடெட் #
வானொலி சேவை | எம் பி சி நெட்வெர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்

வியாபாரம்

தொலைக்காட்சி ஒளிபரப்பு

எம் ரி வி சனல் (பிரைவெட்) லிமிடெட்

வானொலி சேவை

எம் பி சி நெட்வெர்க்ஸ் (பிரைவெட்) லிமிடெட்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1938

நிறுவுனரின் ஈடுபாடுகள்

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனமானது சுப்பிரமணியம் மகாதேவன் மற்றும் சின்னத்தம்பி ராஜேந்திரம் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது. மகாதேவன் மற்றும் ராஜேந்திரம் ஆகியோர் பீர் அன்ட் கோ நிறுவனத்தில் தரகர்களாக பணியாற்றி வந்தனர். 1935 ஆம் ஆண்டில் பீர் அன்ட் கோ நிறுவனம் டொட்ஜ் அன்ட் செய்மொர் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட போது, மகாதேவன் முகாமையாளராக நியமிக்கப்பட்டார். இலங்கையில் டொட்ஜ் அன்ட் செய்மோர் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்திக் கொண்ட போது, மகாதேவன் மற்றும் ராஜேந்திரம் ஆகிய இருவரும் மகாதேவன் லிமிடெட், ராஜேந்திரம் லிமிடெட், ஸ்டெர்லிங் புரொடக்ஸ், மஹாராஜா டிஸ்ரிபியுஷன் என பல நிறுவனங்களை ஆரம்பித்தார்கள்.

தொழிலாளர்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தொடர்பு

The Capital Maharaja Organisation Limited

No. 146, Dawson Street, Colombo 2

Tel: + 94 11 4792 600, +94 11 2448 354, +94 11 2430 037

Fax: +94 11 2447 308

Email: info@maharaja.lk

Website: www.capitalmaharaja.com

வரி / அடையாள இலக்கம்

PB295

நிதிசார் தகவல்கள்

வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

முகாமைத்துவம்

நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்

ராஜேந்திரம் ராஜமகேந்திரன் - கெப்பிட்டல் மகாராஜா ஒகனைசேஷன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் உரிமையாளர். இவர், சசிதரன் ராஜமகேந்திரனுடன் இணைந்து கெப்பிட்டல் மகாராஜா ஒகனைசேஷன் லிமிடெட்டின் பங்குதாரரான ஏனைய நிறுவனங்களின் உரிமையாளராகவுள்ளார். ராஜேந்திரம் ராஜமகேந்திரன் மஹாராஜா குழுமத்தின் பல நிறுவனங்களின் பணிப்பாளராகவுள்ளார்.

நிறுவனத்தில் தாக்கம்செலுத்தும் ஏனைய நபர்களும், அவர்களின் ஆர்வங்கள்

ருத்ராணி பாலசுப்ரமணியம் கப்பிடல் மகாராஜா நிறுவனத்துடன் இணைந்த பல நிறுவனங்களில் பணிப்பாளராகவும் நிறுவன செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கப்பிடல் மகாராஜா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இவர் தற்போதும் பணிப்பாளராக உள்ளதாக குறிப்பிடுகின்றது.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

கப்பிடல் மகாராஜா நிறுவனத்தின் வலைத்தளம் அதன் தாபகர் பற்றியோ அல்லது கம்பனியின் கட்டமைப்பு பற்றியோ எவ்விதத் தகவலும் வழங்குவதில்லை. பதிலாகரூபவ் அது, அதன் துணை நிறுவனங்கள், பணிப்பாளர் சபை மற்றும் தொடர்பு கொள்ளல் பற்றிய தகவல்களை வழங்குகின்றது. மகாராஜா இந்நிறுவனத்தின் கீழ் உள்ள 18 நிறுவனங்கள் ஆய்யுக்குட்படுத்தப்பட்டன. இந் நிறுவனங்கள் ஒன்றை மற்றொன்றை உடமையாக கொண்டுள்ளன. ஆனால், கிட்டத்தட்ட அனைத்து அனைத்து நிறுவனங்களும் எதோ ஒரு வகையில் ராஜேந்திரன்களுக்கு நேரடியாக சொந்தமான கப்பிடல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை உள்ளடங்குகின்றன. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் சிலவேளைகளில் கிளி மகேந்திரன், ஆர். மகேந்திரன் எனவும் அழைக்கப்படுகின்றார்.

பங்குதாரர் கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. கிடைக்கும் மிக அண்மைய தகவல் 2017 ஆம் ஆண்டுக்குரியதாகும். மாற்றீடாக 2017 ஆம் ஆண்டிற்கான பாவனையாளர் பற்றிய தரவுகள் இலங்கைச் சந்தை ஆராய்ச்சிப் பணியகத்திடமிருந்து (LMRB) பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி கப்பிடல் மகாராஜா இந்நிறுவனத்தை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ