அலெக்சிஸ் இந்திரஜித் லொவெல்
அலெக்சிஸ் இந்திரஜித் லொவெல் ஒரு பட்டயக் கணக்காளர். இவருக்கு பிரித்தானியாவின் மரியாதைக்குரிய எம் பி ஈ விருது வழங்கப்பட்டது. 2012 ல், யூனியன் வங்கியின் சபை அங்கத்தவராக நியமிக்கப்பட்டார். இவர் த வன் (the one ) என்ற நாமம் கொண்ட கட்டட நிர்மாண சொகுசு மடிமனை அமைக்கும் இவர்கள் வீட்டு மனைகளை வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கும் விற்பனை செய்கிறார்கள். அலெக்சிஸ் இதன் பங்குதாரர். ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியை நிர்வகிக்கும் ஈ ஏ பி ப்ரொட்காஸ்டிங் கம்பெனியின் அறுபது வீத பங்குகளை அண்மையில் கொள்வனவு செய்த பென் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குதாரர். லொவெல் யாழ்ப்பாண பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்.
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
ஈ ஏ பி யின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த இரு மாதங்களாக மீளுருவாக்கப்பட்டு வருகின்றது. இதனால், நிறுவனத்தின் தற்போதைய உரிமையாண்மையை உறுதிப்படுத்துவது கடினமாகவுள்ளது. கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்தும் பெறப்பட்ட 2017 ம் ஆண்டிற்கான ஆண்டு வருமான அறிக்கையின் உதவியுடனும், பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகளின் உதவியுடன் நிறுவன பங்குகள் மாற்றப்பட்ட தகவல்கள் MOM குழுவினரால் பயன்படுத்தப்பட்டன. பங்குகள் மாற்றப்பட்ட தகவல்கள் 2017 ம் ஆண்டு பிந்திக்கிடைத்த தரவாகும். பென் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கும், ப்ளூ சமிட் காப்பிடல் பிரைவேட் நிறுவனத்திற்கும் மாற்றிய பங்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய 2018 ம் ஆண்டிற்கான அறிக்கை இன்னமும் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தில் கோவையில் அடக்கப்படவில்லை. 2018 ஜனவரி 25 ல் MOM குழுவினர் நிறுவனத்திடம் தகவல் கோரியது. அனால், நிறுவனம் பதில் தரவில்லை.