ஞானம் குடும்பம்

ஞானம் குடும்பம் தனிப்பட்ட பங்குகள் மூலமாகவும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் பங்குகளைக் கொண்டுள்ள ஏனைய கம்பனிகள் மூலமாகவும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் 16.70 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரராக உள்ளது. ஞானம் குடும்பத்தின் மூன்று சகோதரர்கள் அதாவது சைமன் ராஜசீலன் ஞானம் அருள் செல்வராஜ் குணசீலன் மற்றும் ஏலையா ஜெயசீலன் ஞானம் ஆகியோர் இக்கம்பனியில் 0.15 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். எனினும் தெற்காசிய முதலீட்டு (பிறைவேட்) லிமிட்டெட் ஊடாக அவர்கள் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் 16.55 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர்.
இந்தியாவிலிருந்து இலங்கை சந்தையில் முதலீடு செய்த ஞானம் குடும்பத்தினர் பல்வேறு வியாபாரத் துறைகளில் பரந்து காணப்படும் ஒரு குழுமத்தைத் தாபித்தனர். தற்போது ஞானம் குடும்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினர் இலங்கையில் இவ்வியாபாரத்தை நிருவகிக்கின்றனர். இரண்டாவது உலக யுத்தத்தின்போது அருளானந்தம் ஞானம் ( சைமன் அருள் மற்றும் ஏலையா ஆகியோரின் தந்தை) பழைய இரும்பு சேகரித்து அவற்றை ஏற்றுமதி செய்ததன்மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் ஒரு கைத்தொழில் அதிபராக தனது மதிப்பை கட்டியெழுப்பிய இலங்கை சிந்தெட்டிக் புடவை ஆலை அல்லது சிண்டெக்ஸ் நிறுவனத்தைத் தாபித்தார். தனது வியாபாரத்தை விரிவுபடுத்தி அருளானந்தம் ஞானம் வன்பொருள், பிளாஸ்டிக், வானொலி உதிரிப் பாகங்கள் ஆகிய துறைகளில் பிரவேசித்ததோடு, ஏசியன் கொட்டன் மில்ஸ் நிறுவனத்தையும் ஆரம்பித்தார். புடவை உற்பத்திச் சங்கத்தின் தலைவராக தான் இருந்த காலத்தில் அருளானந்தம் உள்நாட்டு புடவை உற்பத்தி கைத்தொழிலில் சாதகமான அரச கொள்கை மாற்றங்களுக்காக போராடினார்.
வியாபாரத்தின் பரவலான விரிவாக்கம் அருளானந்தம் டோக்கியோ சீமெணட் குழுமம், சாஸ்கன் நிட்டிங், சென்ட் அந்தனீஸ் சோலர், கெப்பிட்டல் சிட்டி பாம்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் றைனோ ரூபிங் புறொடக்டஸ் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்ளை உள்ளடக்கும் ஒரு வர்த்தகக் குழுமத்தின் உருவாக்குவத்திற்கு இட்டுச் சென்றது. இக்கம்பனிகள் சிவல் பொறியியல், இயந்திரங்கள, வன்பொருள், இரசாயனம், ஓடுகள் மற்றும் துப்பரவேற்பாட்டு பொருட்கள் ஆகிய துறைகளிலான கைத்தொழில்களைக் கையாண்டன. கைத்தொழில்மீதான அவரது அற்பணிப்பிற்காகவும் சேவைக்காகவும் 1986 இல் அவருக்கு தேசபந்து விருதும், 1996 இல் தேசமானிய விருதும், 1996 இல் விஸ் வபிரசாதினி விருதும் வழங்கப்பட்டன. அருளானந்தம் ஞானம் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவராகவும் பணியாற்றினார். ஞானம் குடுமபத்தின் இரண்டாம் தலைமுறையினரான அவரது மகன்மார் செண்ட் அந்தனீஸ் குழுமத்தின் துணைக் கம்பனிகள் உள்ளிட்ட பல கம்பனிகளை நிருவகிக்கின்றனர்.
வியாபாரம்
கட்டட நிர்மாணம் மின்சார விநியோகம்
செயின்ட் அந்தனீஸ் ஹார்ட்வெர் (பிரைவெட்) லிமிடெட்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
சிமோன் ராஜசீலன் ஞானம் - மூத்த சகோதரர்; டோக்கியோ சிமெண்ட் குரூப் இன் முகாமைத்துவ பணிப்பாளர், தலைவர் ஒரீஎண்ட் லிமிடெட், சவுத் ஏசியன் இன்வெட்மென்ட் பிரைவேட் லிமிடெட், சென் அந்தனிஸ் ஹார்ட்வெயார் பிரைவேட் லிமிடெட், கபிட்டல் சிட்டி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் அலெக்ஸாண்ட்ராஇண்டஸ்ட்ரீஸ் (சிலோன்) லிமிடெட். முகாமைத்துவ பணிப்பாளர் - சென் அந்தனிஸ் கொன்சாலிடேட்டட் பிரைவேட் லிமிடெட், சென் அந்தனிஸ் ஹைட்ரோ பவர் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோபியா ஹொஸ்பிடலிட்டி பிரைவேட் லிமிடெட்.
அருள் செல்வராஜ் குணசீலன் ஞானம் - இரண்டாவது சகோதரர்; தற்போதைய முகாமைத்துவ பணிப்பாளர் - சென் அந்தனிஸ் இண்டஸ்ட்ரீஸ் குரூப் பிரைவேட் லிமிடெட், தலைவர் - ரைனோ ரூபிங் ப்ரொடக்ட் லிமிடெட்; பணிப்பாளர்- பல நிறுவனங்கள் பின்வருவன உள்ளடங்கலாக: டோக்கியோ சிமெண்ட் குரூப், டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்
எலிஜா ஜெயசீலன் ஞானம் - ஞானம் குடும்பத்தின் இளைய சகோதரர்; பணிப்பாளர்- டோக்கியோ சிமெண்ட் குரூப், முகாமைத்துவ பணிப்பாளர் - சவுத் ஏசியன் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட், ஒரீஎண்ட் சிட்டி குரூப், ரைனோ ரூபிங் குரூப்
ஜீவன் ஞானம் - அருளானந்தம் ஞானத்தின் பேரர்களில் ஒருவர்; முகாமைத்துவ பணிப்பாளர் - டிஜிட்டல் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட், எஸ் ஏ நொலேச் சேவிஸஸ் பிரைவேட் லிமிடெட்; ஸ்தாபகர், பணிப்பாளர் - ஒரீஎண்ட் சிட்டி குரூப், லங்கன் ஏன்ஜெல் நெட்வெர்க், பணிப்பாளர் கிரௌட் ஐலண்ட் பிரைவேட் லிமிடெட், லூப்ஸ் டிஜிட்டல் மாக்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்; ஸ்தாபகர்- ஹச் ஸ்ரீ லங்கா; தலைவர்- ஸ்ரீ லங்கா அசோசியேஷன் ஒவ் சாப்ட்வேர் அன்ட் சேவிஸ்ஸ் கம்பெனீஸ், CEO - நிறைவேற்று பணிப்பாளர் - சென் அந்தனிஸ் இண்டஸ்ட்ரீஸ் குரூப்
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
வீரகேசரி பத்திரிகை மற்றும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின்
உத்தியோகபூர்வ வலைத்தளம் அப்பத்திரிகையின் ஸ்தாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவன கட்டமைப்பு ஆகியனபற்றிய எவ்வித விபரங்களையும் தருவதில்லை. எனவே, இரணடாம் நிலை மூலங்களும் கம்பனியினால் வழங்கப்பட்ட பதில்களும் இவ்வாராய்ச்சி நடைமுறையின்போது உசாத்துணைகளாகப் பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டேர்ன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அவை வீரகேசரியின் வார மஞ்சரி மற்றும் நாளிதழ் ஆகியவற்றின் தொகையாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பதிலளித்தது.