This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/20 at 14:18
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

சுமதிபால குடும்பம்

சுமதிபால குடும்பம்

திலங்க சுமதிபால என்றும் அறியப்படும் உடுவட்டுவகே ஜனத் பிரிய திலங்க சுமதிபால ஒரு பாராளுமன்ற

உறுப்பினராவார். அவர் 1994 இல் சுமதி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டைத் தாபித்தார். இக்கம்பனி

2008 இல் லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் என்று பெயர் மாற்றப்பட்டது. தனது அரசியல்

வாழ்க்கையை மேம்படுத்துமுகமாக அவர் லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளர்

சபையிலிருந்தும் அதன் தலைவர் பதவியிலிருந்தும் 2010 இல் இராஜிநாச் செய்தார். முன்னர் பின்வரும் பதவிகளை

வகித்தமைக்காக அவர் நன்கறியப்பட்டவராக உள்ளார்: இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகர், முன்னாள் திறன்விருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி பிரதி அமைச்சர், மேல் மாகான சபை முன்னாள் உறுப்பினர் மற்றும் இலங்கைப் பத்திரிகைச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். #

 

திலங்க ஒரு வர்த்தக ஜம்பவானாகிய யு.டப்ளியு சுமதிபால மற்றும் கொடை வள்ளல் மிலினா சுமதிபால ஆகியோரின் இளைய மகனாவார். யு.டப்ளியு சுமதிபால லக்பிம நியூஸ்பேப்பர்ஸின் தாய்க் கம்பனியான சுமதி குளோபல் கொண்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் ஸ்தாபகராக உள்ள அதேவேளை, மிலினா சுமதிபால அவரது கணவர் காலமானதன்பின்னர் அதன் தலைவராகப் பணியாற்றினார். திலங்கவிற்கு ஜகத் சுமதிபால என்ற ஒரு சகோதரரும் ஐந்து சகோதரிகளும் உள்ளனர். ஜகத் தற்போது சுமதி குளோபல் கொண்சிலிடேட்டட் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவராகவும் லக்பிம நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெடின் CEO மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் இருக்கிறார்.

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
ஊடக நிறுவனம்
விடயங்கள்

வியாபாரம்

வெளியிடுதல்

குடும்பமும் நண்பர்களும்

குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்

ஜகத் சுமதிபால - திலங்க சுமத்திபலவின் சகோதரர். லக்பிம நெவ்ப்பபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இதன் தாய் நிறுவனமான சுமதி குளோபல் கன்சொலிடேட்டட் பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர்.
ஜகத் சுமதிபால 50 வீத பங்குகளை கொண்டுள்ளார்.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

சுமதிபால குடும்பத்தின் விபரங்கள் அவர்களின் தனிப்பட்ட இணையத்தளங்களிலிருந்து பெறப்பட்டன.
கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்தும் பெறப்பட்ட 2017 ம் ஆண்டிற்கான ஆண்டு வருமான அறிக்கையின் படி, மிலினா சுமதிபால பங்குதாரராக பட்டியலிடப்பட்டுள்ளார். அனால் அவர் 2016 ல் இறந்துவிட்டார்.
2018 ஜனவரி 25 ல் MOM குழுவினர் லக்பிம நியூஸ்பெபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் தகவல் கோரியது. அனால், நிறுவனம் பதில் தரவில்லை.

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ