This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/23 at 11:44
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

வென்சலஸ் குடும்பம்

வென்சலஸ் குடும்பம்

வென்சலஸ் குடும்பம் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் 15.97 வீத

பங்குகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். 2016 ஜூன் மாதம் காலமான மைக்கல் ஞானப்பிரகாசம் வென்செஸ்லோஸ் எக்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரும்ரூபவ் நிர்மல் பேப்பர் கென்வேட்டர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் நிர்மல் பிறிண்டர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றின் முன்னாள் தலைவருமாவார். அவரது மனைவி செலின் அருந்ததிக்கும் அவருக்கும் மூன்று மகள்மார் உள்ளனர்: நிர்மலாரூபவ் ஷியமலா மற்றும் பிரேமிலா. நிர்மலா அலோசியஸ் (கன்னிப் பெயர் வென்செஸ்லோஸ்) நிர்மலா பிறிண்டர்ஸின் தற்போதைய தலைவராவார். அவர் ஜெப்றி அலோசியசை திருமணம் செய்தார். அவர்களது மகன் அர்ஜூன அலோசியஸ் பேப்பச்சுவல் ட்றெசரீஸ் லிமிட்டெட்டின் உரிமையாளராவார். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் அர்ஜூன அலோசியஸ் மற்றும் அவரின் மாமனாரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான அர்ஜூன மகேந்திரன் ஆகியோர் 'பிணைமுறி மோசடி' காரணமாக கொழும்பு நீதவானினால் மேலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்னர். தற்போது, இவ்விருவரும் அரசுககு USD 11 மில்லியன் நட்டம் ஏற்படுத்தியதாகக கூறப்படும் 2015 – 2016விற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிணைமுறி ஏலத்தை தங்கள் விருப்பபடி கையாண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். மைக்கல் ஞானப்பிரகாசம் வென்செஸ்லோஸ் மற்றம் செலீன் அருந்ததி தம்பதியினரின் இரண்டாவது மகளான ஷியமலா அமிர்தராஜ் புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரரும் நடிகருமான விஜய் அமிர்தராஜை திருமணம் செய்துள்ளார். ஷியமலாவிற்கும் அமிர்தராஜிக்கும் பிரகாஷ், விக்ரம் என்ற இரண்டு மகன்மார் உள்ளனர். தனது தந்தையின் அடிச்சுவட்டைப் பினபற்றி பிரகாஸ் அமிர்தராஜூம் ஒரு புகழ்மிக்க டென்னிஸ் வீரராகத் திகழ்கிறார். செலீன் மற்றும் மைக்கல் வென்செஸ்லோஸ் தம்பதியினரின் மூன்றாவது மகள் பிரேமிளா வென்செஸ்லோஸ் அசோக் ஒரு மருத்துவராவார்.

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
ஊடக நிறுவனம்
விடயங்கள்

குடும்பமும் நண்பர்களும்

குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்

மைக்கல் ஞானப்பிரகாசம் வென்செஸ்லோஸ் - எக்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரும், நிர்மல் பேப்பர் கென்வேட்டர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் நிர்மல் பிறிண்டர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றின் முன்னாள் தலைவருமாவார். 2016 ஜூன் மாதம் காலமான இவர், எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸின் முன்னாள் பங்குதாரர்.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

வீரகேசரி பத்திரிகை மற்றும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின்
உத்தியோகபூர்வ வலைத்தளம் அப்பத்திரிகையின் ஸதாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவன கட்டமைப்பு ஆகியனபற்றிய எவ்வித விபரங்களையும் தருவதில்லை. எனவே, இரணடாம் நிலை மூலங்களும் கம்பனியினால் வழங்கப்பட்ட பதில்களும் இவ்வாராய்ச்சி நடைமுறையின்போது உசாத்துணைகளாகப் பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டேர்ன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அவை வீரகேசரியின் வார மஞ்சரி மற்றும் நாளிதழ் ஆகியவற்றின் தொகையாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பதிலளித்தது.

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ