ஊடகம்
இலங்கையின் பொது மொழிகளான சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த 46 நிலையங்களின் சுயவிவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசானது நான்கு வகையான ஊடகங்களின் குறுக்கேயும் ஒரு குறிப்பிடத்தக்க பிடியை கொண்ட செயட்பாட்டாளராக இருக்கின்ற நிலையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள போட்டி தனியார் நிறுவனங்கள் பார்வையாளர்களின் பங்குகளை பெற அனுமதிக்கின்றது.
மத உள்ளடக்கத்திற்கு வழங்கப்படும் இடம் சில ஊடகங்கள் முழுவதும் காணப்படும் மற்றொரு பொதுவான அம்சமாகும். எனினும்,MOM செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் மீது கவனம் செலுத்தியதால், மத நிறுவனங்கள் முற்றிலும் இந்த ஆய்வின் வரம்பிற்குள் உள்ளடக்கப்படவில்லை . இதுமட்டுமல்லாமல் FM Derana மற்றும் Hiru FM போன்ற நன்கு அறியப்பட்ட செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பு மத உள்ளடக்கத்தைத் தொடர்ந்து தங்கள் அன்றாட நிகழ்ச்சிகளைத் தொடங்குகின்றன.
சட்ட ரீதியான சூழலமைவாய்ப் பொறுத்தவரையில், ஊடக உரிமையாளர்களுக்கான வரம்புகளை வரையறுக்கும் எந்த குறிப்பிட்ட விசேட வரையறைகளும் இலங்கையில் இல்லை. இதன் விளைவாக, அரசியல்வாதிகள் ஊடகங்களின் பங்குகளை வைத்திருக்க முடியும் – இது அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு வெகுஜன ஊடகங்களின் கட்டுப்பாட்டாளராகவும் உரிமையாளராகவும் பங்கு வகிக்கும் நிலையில் அரசியல் தொடர்புகளும் புலப்படுகின்றன.
இந்த இணையதளத்தின் தகவல்கள் வழக்கமான மீளாய்வுக்கு உட்படுபவை. இலங்கையில் எந்தவொரு அபிவிருத்தியையும் நோக்குகின்றபோது, இணையத்தளத்தில் காட்டப்பட்டுள்ள தகவல்கள் அதற்கேற்றவாறு மாற்றப்படும்.