This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/16 at 08:19
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

கோல்ட் எவ் எம்

கோல்ட் எவ் எம் ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிடெட்டினால் நிர்வகிக்கப்படுகின்றது. இது 1998 இல் உருவாக்கப்பட்டது. ரெய்னர் சில்வாவினால் உருவாக்கப்பட்ட சூரியன் எவ் எம் வானொலி நிலையத்தின் சகோதர வானொலி நிலையங்கள் ஹிரு எவ் எம், ஷா எவ் எம், சூரியன் எவ் எம், மற்றும் சண் எவ் எம் ஆகியன. இவ் அலைவரிசையானது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டினால் (ABC) நிருவகிக்கப்படுகிறது. ABC ஆனது பின்னயதன் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஒரு துணைநிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் ஊடாக பேராளர் ரெய்ன சில்வாவிற்கு சொந்தமானதாகும். அவரது சகோதரர் துமிந்த சில்வா ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார். ரெய்ன சில்வாவின் சகோதரர் ஆவார். துமிந்த சில்வா தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலைக்காக தனக்கும் வேறு நான்கு பேருக்கும் எதிராக தூக்குத் தண்டனையை விதித்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்கின்றார். இதனிடையே ரெய்னின் சகோதரர் வின்சன்ட் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்)லிமிட்டட்டின் CEO ஆக பணியாற்றுகிறார்.

 

 

 

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

0.69%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசிய

உள்ளடக்கத்தின் வகை

இலவச ஒலிபரப்பு

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

கோல்ட் எவ் எம் என்பது ரேய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு
அங்கத்தவராகவுள்ள வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானது.
நிறுவனத்தின் எல்லாப் பங்குகளும் ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டடிற்குச் சொந்தமானது.
ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டட் முழுவதும் சில்வா குடும்பத்திற்குச் சொந்தமானது. ரேய்னர் சில்வா 33 .33 வீதம், அவரது தயார் 33 .33 வீதம் அவரது தந்தை 33 .33 வீத பங்குகளை வைத்துள்ளனர்.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

தனி உரிமையாளர்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1998

நிறுவுனரின் ஈடுபாடுகள்

இவ்வானொலி நிலையம், ரெய்னர் சில்வாவிற்குச் சொந்தமான ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடினால் உருவாக்கப்பட்டது.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

வின்சன்ற் சில்வா ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், நிறுவனத்தின் தலைவர் ரெய்நர் சில்வா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் சகோதரர். துமிந்த சில்வா, மறைந்ந பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீரப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளார். வின்சன்ற், 2018ம் ஆண்டுவரை ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடின் தனி உடைமையைக் கொண்டிருந்த ஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்ரேட் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் உள்ளார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

தரவுகள் கிடைக்கவில்லை

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

பிரசாத் கருணாரட்ண ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடின் பொது முகாமையாளர்

தொடர்பு

Asia Broadcasting Corporation (Pvt) Limited

35th Floor, East Tower World Trade Center, Colombo 1

Tel: +94 11 2 337 555

Fax: (+94) 112 346 870

E-mail : md@asiabroadcasting.lk

Website: www.goldfm.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

கோல்ட் எவ் எம் பற்றிய தகவல்கள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்தும் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடாகவும் பெறப்பட்டன. நிறுவனத் தலைவர் ரெய்னர் சில்வா பற்றிய தகவல்கள் ரெய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டடின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படுகின்றன. நிறுவன உரிமையாண்மை அமைப்பு பற்றிய தகவல்கள் பற்றிய தகவல்கள் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கப்பெற்ற ஆண்டு வருமான அறிக்கையிலிருந்து பெறப்பட்டன. நேயர் தரவு வீதம் இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தால் 2017ம் ஆண்டு தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் இருந்து பெறப்பட்டது . ஜுலை மாதம் 20ம் திகதி 2018 அன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாண்மை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர், ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை அணுகிய நிலையிலும் அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ