This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/12/08 at 17:11
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

லங்காதீப இணையத்தளம்

லங்காதீப ஒன்லைன் சிங்கள மொழியில் உள்ள செய்தி இணையத்தளம். நாட்டிலுள்ள பாரிய பிரசுர நிறுவனங்களில் ஒன்றான விஜய நியூஸ்பேப்பர் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. வாராந்தம் மற்றும் நாளாந்த லங்காதீப பத்திரிகைகளில் வெளியாகும் பல செய்திகள் இணையத்தில் மீள்பிரசுரிக்கப்படுகின்றன. இந்த இணையமானது ஈ - பேப்பரில் இருந்து வேறுபடுகின்றது. பேப்பரை படிப்பதற்கு சந்தா செலுத்த வேண்டும். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு என பல பிரிவுகளில் லங்காதீப ஒன்லைன் செய்திகள் இடம்பெறுகின்றன. இணையம் மூலமான வாசிப்பு குறித்த தரவுகள் இதுவரை வெளியாகவில்லை.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

தரவுகள் கிடைக்கவில்லை

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

சர்வதேசம்

உள்ளடக்கத்தின் வகை

இலவசம்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டட்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

விஜேரத்ன குடும்பமே விஜேய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டின் பெரும்பான்மை பங்குதாரராகும். ரஞ்சித்விஜேவர்தன சுஜான் விஜேவர்தன ருவான் விஜேவர்தன இருசி நீலா புளத்சிங்கள மற்றும ரஜனி விஜேவர்தன
ஆகியோர் கூட்டாக இககம்பனியின் 99.98 வீத பஙகுகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். இதனிடையே விஜேய
கம்பனிகள் குழுமத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்பனியான சாராதி லிமிட்டெட்டும் விஜேய நியூஸ்பேப்பர்
லிமிட்டெட்டின் பங்குகளைக் கொண்டிருக்கிறது. விஜேவர்தன குடும்ப உறுப்பினர்களைத் தவிர அனந்தி பாலசிங்கம் விஜேய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் ஒரு குறைந்த வீதத்திலான பங்குகளைக் கொண்டிருக்கிறார்;. எனினும், மேலே குறிப்பிடப்பட்டவாறு விஜேய கம்பனிகள் குழுமத்தோடு இணைக்கப்பட்டுள்ள சாரதி லிமிட்டெட்டில் அனந்தி பாலசிங்கம் சொத்து முகாமையாளராகப் பணியாற்றுகிறார்.

வாக்களிக்கும் உரிமை

இந் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமையானது பங்காளர்கள் வைத்திருக்கும் பங்குகளின் அளவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ரஞ்சித் விஜேவர்த்தன – 89.99 வீதம், சுஜான் விஜேவர்த்தன - 10 வீதம், ருவான் விஜேவர்தன – 0.002 வீதம், இருசி நீலா புலத்சிங்கள – 0.002 வீதம், ரஞ்சினி நீலா விஜேவர்த்தன – 0.002 வீதம், சாரதி லிமிடட் - 0.002 வீதம், ஆனந்தி பாலசிங்கம் - 0.002 வீதம்

தனி உரிமையாளர்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

தரவுகள் கிடைக்கவில்லை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

லங்காதீப ஒன்லைன் சிங்கள மொழியில் உள்ள செய்தி இணையத்தளம். நாட்டிலுள்ள பாரிய பிரசுர நிறுவனங்களில் ஒன்றான விஜய நியூஸ்பேப்பர் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.

ரன்ஜித் விஜேவர்தன என்றும் அழைக்கப்படும் ரன்ஜித் சுஜீவ விஜேவர்தன அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்(லேக் ஹவுஸ் என்றும் அறியப்படும் ANCL) 1973 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தினால் தேசியமயமாக்கப்பபடுவதற்கு முன்னர் 1926 இல் அதனை நிறுவியவரான இலங்கை ஊடக உரிமையாளர் டீ.ஆர். விஜேவர்தனவின் மகனாவார். ரஞ்சித் விஜய நியூஸ்பேப்பரஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபக தலைவராக செயற்படுவதோடுரூபவ் அதன் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருப்பவராகவும் உள்ளார். இக் கம்பனி விஜய பப்ளிகேஷன்ஸ் லிமிட்டெட் என்ற பெயரில் 1979 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதெனினும், 1986 லில் அது ஞாயிறு லங்காதீப்ப வார பத்திரிகையையும் அதன் பின்னர் 1991 இல் லங்காதீப்ப நாளிதழையும் வெளியிடத் தொடங்கியது. ரன்ஜித் ANCL இல் 0.57வீத பங்குகளையும் கொண்டிருக்கிறார்.

விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் தலைவர் பதவியை வகிப்பது மாத்திரமின்றிரூபவ் ரன்ஜித் லேக்ஹவுஸ் பிறிண்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் லிமிட்டெட்டில் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும், லேக்ஹவுஸ் புக்ஷொப் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும், எல்எச் பிளாண்டேஷன் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும், ரன்வெளி ஹெலிடே வில்லேஜ் லிமிட்டெட்டில் தலைவராகவும், சாரதி லிமிட்டெட்டில் தலைவராகவும், ஸ்டேம்போட் லேக் (பிறைவேட்) லிமிட்டெட்டில் தலைவராகவும், விஜய கிராபிக் லிமிட்டெட்டில் தலைவராகவும் அத்துடன் இலங்கை பத்திரிகைச் சங்கத்தில் தலைவாராகவும் இருக்கிறார். ரஞ்சித் புரூயஅடன்பேக் எண்ட் கம். (சிலோன்) லிமிட்டெட்டினதும் ஆர்.எஸ். பிறிண்டெக் (பிறைவேட) லிமிட்டெட்டினதும் தலைவராகவும் உள்ளார்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

ரஞ்சித் சுஜீவ விஜேவர்தன லங்காதீப இணையதளத்தை நடத்தும் விஜய நியூஸ்பெபேர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

ஆரியனந்த தொம்பகஹவத்த வாரப் பத்திரிகையான இரிதா லங்காதீபவின் பிரதான செய்தியாசிரியர். அத்துடன், ஆரியனந்த, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின்கீழ் இயங்கும் இலங்கை பத்திரிகை பேரவையின் பணிப்பாளர் குழு அங்கத்தவராகவும் பணியாற்றுகின்றார். 2009 ம் ஆண்டு சுதந்திர பத்திரிகையாளர் அமைப்பு, இலங்கை பத்திரிகையாளர் சங்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை பத்திரிகை சமூகம் மற்றும் தென் ஆசிய சுதந்திர ஊடக சம்மேளனம் என்பன இணைந்து ஆரியனந்தவின் நியமனம் அரசியல் சார்ந்தது எனக் கூறி அவரை குழுமத்திலிருந்து அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான ஆரியனந்தவின் தொடர்பு பற்றிய பத்திரிகைகள் கேள்வி எழுப்பின. மறுபுறத்தில், ஆரியரத்ன ஊடகத்துறைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

பிரேமகீர்த்தி ரணதுங்க - இணை ஆசிரியர் - ஞாயிறு லங்காதீப

தொடர்பு

Wijeya Newspapers Limited

No.08, Hunupitiya Cross Road, Colombo 02, Sri Lanka.

General: +94 11 247 9479 , +94 11 231 4714

Fax: +94 11 244 8323

Email: newslankadeepa@gmail.com

Website: www.lankadeepa.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

லங்காதீப ஒன்லைனின் செய்திப் பிரிவுகள் குறித்த தகவல்கள் நேரடியாக அதன் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், லங்காதீப ஒன்லைன் மற்றும் விஜய பத்திரிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அதன் ஸ்தாபர், நிர்வாகக் குழு மற்றும் நிறுவன கட்டமைப்பு குறித்த தகவல்கள் காணப்படவில்லை. அதன் காரணமாக பொதுவெளியில் காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தகவல்கள் திரட்டப்பட்டன. நிறுவனம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக ஊடக உரிம கண்காணிப்பு குழு விஜய பத்திரிகைக்கு 2018 ஜுலை 20 ஆம் திகதி கோரிக்கை விடுத்தது. அதற்கு அந்த நிறுவனம் 2018 ஓகஸ்ட் 17 ஆம் திகதி பதில் அளித்திருந்தது. நிறுவன கட்டமைப்பு தொடர்பான தகவல்களுக்கு இந்த அறிக்கை ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. பங்குதாரர்களின் விபரம் நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் இருந்து திரட்டப்பட்டது.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ