லங்காதீப
வாராந்த ஞாயிறு லங்காதீப மற்றும் அதன் நாளிதழ் லங்காதீப ஆகியன ரஞ்சித் விஜேவர்தனவிற்குச் சொந்தமானதும் அவரால் நிருவகிக்கப்படுவதுமான ஒரு ஊடகக் குழுமமான விஜேய நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட்டினால் வெளியிடப்படுகின்றன. இறிதா லங்காதீப 27.15 வீத வாசகர் பலத்துடன் நாட்டில் மிக அதிகமாக வாசிக்கப்பபடும் செய்திப் பத்திரிகையாகும் என்பதோடு, லங்காதீபவின் நாளாந்த வெளியீடு 5.26 வீதமான வாசகர்களைச் சென்றடைகிறது. இப்பத்திரிகைகள் பிரதானமாக உள்நாட்டு அரசியல், பொருளாதாரம், வரத்தகம், விளையாட்டு மற்றும் களிப்பூட்டல் முதலிய உள்நாட்டு விடயங்களில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. ஞாயிறு லங்காதீப மற்றும் லங்காதீப ஆகியன விஜய இலச்சினைகொண்ட சிங்கள மொழி வெளியீடுகளாக இருக்கும் அதேவேளை, தருனய, விஜேய, பிலிந்து, அத மற்றும் சிறிசெத்த ஆகியனவும் சிங்கள மொழி வாசகர்களின் தேவையைப் பூர்த்திசெய்கின்றன. மேலும், லங்காதீப பத்திரிகையின் சகோதர வெளியீடான விஜேய தமிழ் மொழி வாசகர்கரகளின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அதேவேளை, டெயிலி மிரர், சண்டே டைம்ஸ் மற்றும் டெயிலி பினான்சியல் டைம்ஸ் ஆகியன ஆங்கில மொழி வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
நுகர்வோர் வீதம்
32.41%
உரிமையாண்மையின் வகை
Private
பிராந்திய உள்ளடக்கம்
National
உள்ளடக்கத்தின் வகை
Paid Content
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
The Wijewardene family is the majority of shareholder of Wijeya Newspapers Limited. Ranjit Wijewardene, Sujan Wijewardene, Ruwan Wijewardene, Irushi Neela Bulathsinhala and Ranjini Wijewardene collectively own 99.98 percent of the company. Meanwhile, Sarathi Limited, a company affiliated with the Wijeya Group of Companies, also holds shares at Wijeya Newspapers Limited. Besides members of the Wijewardene family, Anandi Balasingham owns a lesser percentage of shares at Wijeya Newspapers Limited. However, Anandi Balasingham serves as the Estate Administrator for Sarathi Limited which, as stated above, is affiliated with the Wijeya Group of Companies.
வாக்களிக்கும் உரிமை
இந் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமையானது பங்காளர்கள் வைத்திருக்கும் பங்குகளின் அளவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ரஞ்சித் விஜேவர்த்தன – 89.99 வீதம், சுஜான் விஜேவர்த்தன - 10 வீதம், ருவான் விஜேவர்தன – 0.0002 வீதம், இருசி நீலா புலத்சிங்கள – 0.0002 வீதம், ரஞ்சினி நீலா விஜேவர்த்தன – 0.0002 வீதம், சாரதி லிமிடட் - 0.0002 வீதம், ஆனந்தி பாலசிங்கம் - 0.0002 வீதம்
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1986 – Irida (Sunday) Lankadeepa / 1991 – Lankadeepa (daily)
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ரன்ஜித் விஜேவர்தன என்றும் அழைக்கப்படும் ரன்ஜித் சுஜீவ விஜேவர்தன அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்(லேக் ஹவுஸ் என்றும் அறியப்படும் ANCL) 1973 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தினால் தேசியமயமாக்கப்பபடுவதற்கு முன்னர் 1926 இல் அதனை நிறுவியவரான இலங்கை ஊடக உரிமையாளர் டீ.ஆர். விஜேவர்தனவின் மகனாவார். ரஞ்சித் விஜய நியூஸ்பேப்பரஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபக தலைவராக செயற்படுவதோடுரூபவ் அதன் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருப்பவராகவும் உள்ளார். இக் கம்பனி விஜய பப்ளிகேஷன்ஸ் லிமிட்டெட் என்ற பெயரில் 1979 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதெனினும் ரூபவ் 1986 லில் அது ஞாயிறு லங்காதீப்ப வார பத்திரிகையையும் அதன் பின்னர் 1991 இல் லங்காதீப்ப நாளிதழையும் வெளியிடத் தொடங்கியது. ரன்ஜித் ANCL இல் 0.57வீத பங்குகளையும் கொண்டிருக்கிறார். விஜய நியூ;ஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் தலைவர் பதவியை வகிப்பது மாத்திரமின்றிரூபவ் ரன்ஜித் லேக்ஹவுஸ் பிறிண்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் லிமிட்டெட்டில் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் ரூபவ் லேக்ஹவுஸ் புக்ஷொப் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும் ரூபவ் எல்எச் பிளாண்டேஷன் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும்ரூபவ் ரன்வெளி ஹெலிடே வில்லேஜ் லிமிட்டெட்டில் தலைவராகவும், ரூபவ் சாரதி லிமிட்டெட்டில் தலைவராகவும்ரூபவ் ஸ்டேம்போட் லேக் (பிறைவேட்) லிமிட்டெட்டில் தலைவராகவும்ரூபவ் விஜய கிராபிக் லிமிட்டெட்டில் தலைவராகவும் அத்துடன் இலங்கை பத்திரிகைச் சங்கத்தில் தலைவாராகவும் இருக்கிறார். ரஞ்சித் புரூயஅடன்பேக் எண்ட் கம். (சிலோன்) லிமிட்டெட்டினதும் ஆர்.எஸ். பிறிண்டெக் (பிறைவேட) லிமிட்டெட்டினதும் தலைவராகவும் உள்ளார். #
உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் ஸ்தாபகரான உப்பாலி விஜேவர்தன ரஞ்சித்தின் மாமனாவார். இதனிடையே இலங்கையின் தற்போதைய பிரதமந்திரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக) தலைவருமாகிய ரனில் விக்கிரமசிங்க ரஞ்சித்தின் மருமகனாவார். #
ரஞ்சித் விஜேவர்தன இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகவிருந்த டீ. எஸ் சேனாநாயக்கவின் பேத்தியான ரஞ்சித் நீலா சேனாநாயக்கவை மணமுடித்தார். ரஞ்சித்தின் ஏனைய குறிப்பிடத்தகுந்த குடும்ப உறுப்பினர்களுள்இலங்கையின் இரண்டாவது பிரதம மந்திரியான டட்லி சேனாநாயக்க (மாமனார்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க ஆகியோர் அடங்குவர். ரஞ்சித்திற்கு தற்போதைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் விஜேவர்தன குழுமத்தோடு இணைந்துள்ள ஒரு கம்பனியான லேக் ஹவுஸ் பிறிண்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் லிமிட்டெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சுஜான் விஜேவர்தன அடங்கலாக மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
ரஞ்சித் சுஜிவ விஜேவர்தன விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் தலைவராக செயற்படுகின்றார் (மேலும் படிக்க மேலே பார்க்கவும்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
அரியானந்த தொம்பகாவத்த - வாராந்த ஞாயிறு லங்காதீபவின் தற்போதைய பிரதான பத்திரிகையாசிரியராவார். மேலும், அரியானந்த நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகார வரம்பினுள் வருவதும் பிறஸ் (LINK) அமைப்பினால் விமர்சிக்கப்பட்டதுமான ஓர் அமைப்பான இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஒரு சபை உறுப்பினராக பணியாற்றுகிறார். 2009 இல் சுதந்திர ஊடக அமைப்பு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம், இலங்கை தமிழ் ஊடக கூட்டணி, இலங்கை பத்திரிகைச் சங்கம் மற்றும் தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம் ஆகியன தொம்பகாவத்த அரசியல் ரீதியாக நியமிக்கப்படடவர் என்று கூறி அவர்
அப்பேரவையிலிருந்து நீக்கப்படவேண்டுமென கூட்டாக கோரிக்கை விடுத்தன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான தொம்பகாவத்தயின் அரசியல் தொடர்பு ஊடக வெளியீடுகளில் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் அரியானந்த பத்திரிகைத் துறையில் விருதுகளோடு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.#
சிறி ரனசிங்க - லங்காதீப்ப (தினப்பத்திரிகை) இல் பிரதான பத்திரகையாசிரியர். விஜேய நியூஸ் பேப்பர்ஸ்
லிமிட்டெட்டில் ஒரு பணிப்பாளராகவும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் ஓர் உறுப்பினராகவும்
பணியாற்றுகிறார். மேலும் இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கத்தைத் தொடக்கியவர்களுள் ஒருவராகவும் சிறி குறிப்பிடப்படுகிறார். சிறி பின்னர் பல தடவைகள் இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். லங்காதீப்பயைப் பொறுத்தவரை இப்பத்திரிகையை ஞாயிறு லங்காதீபவாக 1986 இல் புத்துயிரூட்டியதாக மதிக்கப்படுகிறார். முன்னதாக, தினமின பத்திரிகையின் ஒரு பத்திரிகையாளராக சிறி பணியாற்றினார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
பிரேமகீர்த்தி ரணதுங்க - இணை ஆசிரியர் - ஞாயிறு லங்காதீப
பீ.பீ இளங்கசிங்க மற்றும் பிரசன்னா சஞ்சீவ தென்னக்கோன் - பிரதி இணை ஆசிரியர்கள் - ஞாயிறு லங்காதீப
சாந்தகுமார் விதான – கட்டுரை எழுத்தாளர் ஞாயிறு - லங்காதீப
இந்திராணி பீரிஸ் மற்றும் லயனல் பெரேரா - இணை ஆசிரியர்கள் - லங்காதீப
சந்திரிகா விஜேசுந்தர - இணை ஆசிரியர் - லங்காதீப
யு. ஹனநாயக்க - பிரதி ஆசிரியர் (கட்டுரை) - லங்காதீப
டபிள்யு. ஜி. குணரட்ண - மாகாண செய்தியாசிரியர் - லங்காதீப
தமிந்த விஜேசூரிய – செய்தியாசிரியர்-விளையாட்டு - லங்காதீப
சமந்த யகம்பத் - செய்தியாசிரியர் (கட்டுரை) - லங்காதீப
காமினி அபேசேகர - செய்தியாசிரியர் (புகைப்படம்) - லங்காதீப
தொடர்பு
[Translate to Tamil:] Wijeya Newspapers Limited
No.08, Hunupitiya Cross Road, Colombo 2
General: +94 11 247 9479 , +94 11 231 4714
Fax: +94 11 244 8323
Email: newslankadeepa@gmail.com
Website: www.lankadeepa.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
The official websites of Lankadeepa and Wijeya Newspapers Limited do not provide any details about its founder, board of directors or its organisational structure. As such, publicly available secondary sources were referenced. Although, many publicly available secondary sources provide adequate information on the newspaper, in certain instances the information gathered was conflicting. For instance, the official designation of Sujan Wijewardene is stated in three different forms as Deputy Chairman, CEO and Director at Wijeya Newspapers Limited. #
While the Media Ownership Monitor research team reached out to Wijeya Newspapers Limited by formally requesting for the company’s information on 20 July 2018, the company responded to the aforementioned request on 17 August 2018. From the response received, the team was unable to use the market share provided (75%) as the team did not have access to the figures used to arrive at this percentage. However, information on the organisational structure was cited from the response provided by the company as well as from the Department of Registrar of Companies. Readership data was obtained from the Kantar Lanka Market Research Bureau (LMRB) for the year 2017.